BREAKING NEWS
Search

ஜனவரி 11-ம் தேதி விஸ்வரூம்… கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஜனவரி 11-ம் தேதி விஸ்வரூம்… கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!


சென்னை:  கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படத்தை மூன்று மொழிகளில் வெளியிடுகிறார் கமல்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான விளம்பரங்கள் இன்று வெளியாகியுள்ளன.

கமல்ஹாஸன் எழுதி இயக்கி நடித்து தன் ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்துள்ள படம் இந்த விஸ்வரூபம். கடந்த ஓராண்டு காலமாக தயாராகி வந்தது.

இந்தப் படத்தின் பாடல்கள் வரும் டிசம்பர் 4-ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ரிலீஸ் தேதியை அந்த விழாவில் அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில், இப்போதே அதுபற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜனவரி 11-ம் தேதி விஸ்வரூபம் வெளியாகிறது.

இந்தப் படத்துடன் அமீரின் ஆதி பகவன், விஷாலின் மதகஜராஜா, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படங்களும் வெளியாகவிருக்கின்றன.

-என்வழி சினிமா செய்திகள்




7 thoughts on “ஜனவரி 11-ம் தேதி விஸ்வரூம்… கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

  1. Kokki Kumar

    Sharajini says:

    November 28, 2012 at 8:45 pm

    ஹேராம் புரியலை விருமாண்டி புரியலை இந்தப்பட டிரைலரைப் பார்த்த நம்ம கேபி சாரே என்னக் கேட்கிறார் தெரியமா? புரியிரா மாதிரி தானே எடுத்திருக்கே? என்று வேனும்னா நெட்ல பாருங்க
    ////

    அதுக்கு அண்ணே கொஞ்சம் மூளை வேணும்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *