BREAKING NEWS
Search

‘அப்பாடா.. நல்ல வேளை’… மருதநாயகம் பத்தி ரஜினியிடம் கமல் பேசவில்லையாம்!

‘நல்லதாப் போச்சி’… மருதநாயகம் பத்தி ரஜினியிடம் கமல் பேசவில்லையாம்! – சொல்கிறார் கமல் பிஆர்ஓ

ருத நாயகம் படத்தில் ரஜினி நடிக்கப்போவதாக மும்பை பத்திரிகை வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்றும், கமல் அடுத்து தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறார் என்றும் கமலின் பிஆர்ஓ நிகில் தெரிவித்துள்ளார் (‘அப்பாடா.. நல்ல வேளை’ – இது ரசிகனின் குரல்!)

நடிகர் கமலஹாசன் 1997-ல் மருதநாயகம் என்ற படத்தை தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இதன் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் நிதி நெருக்கடி காரணமாக பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இப்படம் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர் வீரன் யூசுப்கானை பற்றிய கதை.

பிரமாண்ட சரித்திர அரங்குகள், போர் வீரர்கள் உடைகள் என இதற்கு ரூ. 150 கோடி செலவாகும் என்பதாலும், அந்த அளவு பணம் செலவிட யாரும் தயாராக இல்லாததாலும் படத்தைக் கைவிட்டார். தற்போது மீண்டும் “மருத நாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் இதில் ரஜினியும் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் கமல் மும்பையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்திருந்தார்.

இதனை மும்பையின் முன்னணிப் பத்திரிகையான மும்பை மிரர் செய்தியாக வெளியிட்டிருந்தது.

நேற்று மாலை இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார், கமலின் பிஆர்ஓ நிகில் முருகன்.

அதில், “மருதநாயகம்” படப்பிடிப்பை துவங்கப் போவதாகவும் ரஜினியும் அதில் நடிப்பார் என்றும் கமல் மும்பையில் பேட்டியளித்ததாக வெளியான செய்தி உண்மையல்ல. எப்போதோ கொடுத்த பேட்டியை இப்போது புதிதாக வெளியிட்டுள்ளனர். ரஜினியிடம் கமல் இதுபற்றிப் பேசவில்லை.

கமல் தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படம் முடிந்ததும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்,” என்றார்.

கமல் பேட்டி கொடுத்தாரா இல்லையா, ரஜினி நடிக்கிறாரா என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.

மும்பை மிரர் பரபரப்பான பத்திரிகை. அந்த நகரின் நம்பர் ஒன் டேப்ளாய்ட் அது. டைம்ஸ் குழுமத்திலிருந்து வருகிறது. ஒரு பழைய செய்தியை போடும் அளவுக்கு மறதிக்காரர்களா அவர்கள்…?

சில மாதங்களுக்கு முன் நடிகர் சூர்யா ஈழப் போராட்டம் செத்துப் போன சமாச்சாரம். இனி அதைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என பெங்களூர் மிரருக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதை இங்கே தமிழில் நாம்தான் வெளியிட்டோம். உடனே சூர்யா மறுக்க, பெங்களூர் மிரர்காரர்கள் அதற்கான ஆடியோ டேப் ஆதாரமிருப்பதாக செய்தி வெளியிட, சூர்யா அமைதியாகிவிட்டது நினைவிருக்கலாம்.

இன்னொரு பக்கம், மருதநாயகம் வகை தகவல்கள் எந்த வகையில் மீடியாவை எட்டும் என்பது நமக்கும் தெரியும்.  ‘ஒரு கல் விட்டுப் பார்ப்போமே’ என்ற வகையிலான செயல்கள் இவை.

இந்த செய்தியால் மக்கள் மறந்தே போன மருதநாயகத்தை மீடியா உயிர்ப்பித்து விட்டதுதான் ஹைலைட். இதற்காகத்தானே ஆசைப்பட்டார்கள்?!

-என்வழி செய்திகள்
6 thoughts on “‘அப்பாடா.. நல்ல வேளை’… மருதநாயகம் பத்தி ரஜினியிடம் கமல் பேசவில்லையாம்!

 1. Rajmohan.K

  இன்னொரு பக்கம், மருதநாயகம் வகை தகவல்கள் எந்த வகையில் மீடியாவை எட்டும் என்பது நமக்கும் தெரியும். ‘ஒரு கல் விட்டுப் பார்ப்போமே’ என்ற வகையிலான செயல்கள் இவை.

  To whom u r pointing out?

  What is the necessity to this at now?

 2. Gopi

  நம்ம என்வழி கமெண்ட்ஸ் படிச்சு இருப்பாங்க போல, அதான் முடிவு மாறியாச்சு… எல்லாம் நல்லதே!

 3. enkaruthu

  //மும்பை மிரர் பரபரப்பான பத்திரிகை. அந்த நகரின் நம்பர் ஒன் டேப்ளாய்ட் அது. டைம்ஸ் குழுமத்திலிருந்து வருகிறது. ஒரு பழைய செய்தியை போடும் அளவுக்கு மறதிக்காரர்களா அவர்கள்…?//

  அதானே சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு.குழந்தை கூட நம்பாது நிக்ஹில் முருகன் அவர்களே. எப்படி இப்படி எல்லாம் கமல் மாற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒன்னும் இல்லை நண்பர்களே நமது தலைவர் ரசிகர்கள் இந்த விசயத்துக்கு கொடுத்த கமெண்டை பார்த்துதான் பல்டி அடித்துவிட்டார்.பல்டி அடித்தாலும் நல்ல நியூஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *