BREAKING NEWS
Search

‘இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்… தலைவர் அமைதியா இருக்கார்… என்னதான் நடக்குது?’ – கேள்வி பதில் 34

கமல் அரசியலும் தலைவர் ரஜினியின் மவுனமும்… கேள்வி பதில் 34

thalaiva2

டந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலம், கைபேசி வழியே அல்லது நேரில் பார்க்கும்போதெல்லாம் மன்றத்து நிர்வாகிகள் தொடங்கி, தீவிர ரசிகர்கள் வரை என்னிடம் கேட்கப்படும் கேள்விகள் இவைதான்.

தெரிந்தவரை பதில்களைக் கூறிவிட்டேன். ஆனாலும் கேள்விகள் தொடர்கின்றன. இப்போதைக்கு இதுதான் பதில்.

கமல் ஹாஸன் ஒரு அரசியல் கூலியாகிவிட்டார். எப்போது தலைவர் ரஜினி அரசியலுக்கு வருவது 200 சதவீதம் உறுதி என்பதை அரசியல் களத்திலிருப்பவர்கள் புரிந்து கொண்டார்களோ, அப்போதிலிருந்து ட்விட்டரில் மனம் போன போக்கில் எழுத ஆரம்பித்து, அதை அரசியல் புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தினார். அவருக்குப் பின் சில அரசியல் சக்திகள் இருக்கின்றன. அவர்களுக்கு ரஜினியின் வருகையை எப்படியேனும் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அரசியல் பிழைப்பு அம்பேலாகிவிடும்.

கமல் ஹாஸனுக்கு ரஜினியை முந்த வேண்டும் என்ற பொறாமை இன்று நேற்றல்ல… 35 ஆண்டுகளாக இருக்கிறது. அதை அரசியல் மூலம் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்.

அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்றார். ஆனால் இப்போது அரசியலில்தான் வந்து நிற்கிறார்.

ரஜினி மீது சேறு வாரி பூச மாட்டேன் என்றார். சொல்லி நான்கு நாட்களில் பாஜகவுடன் கோர்த்துவிட்டு சாக்கடையைப் பூசிவிட்டார். அடுத்த நாள் புதிதாக வேறு பல்டி அடித்தது வேறு கதை.

கமலின் ஒரே நோக்கம், ரஜினி வருகையைத் தடுக்க வேண்டும் என்பதுதான். இது மக்களுக்கு மட்டுமல்ல, இப்போதும் நண்பன் என்றே நினைக்கும் ரஜினிக்கும் புரிந்திருக்கிறது.

கமல் ஹாஸனின் அரசியல் என்பது தினசரி உளறல் என்பது அம்பலத்துக்கு வந்துவிட்டது. அவர்தான் ரஜினி பெயரை தேவையில்லாமல் இழுக்கிறார்.. தன் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்துகிறார். தனியாகச் சொன்னால் கண்டுகொள்ள எவருமில்லை என்பதால், ரஜினி பெயரைப் பயன்படுத்தி தன் அரசியல் நுழைவை அறிவித்தார். குறைந்தபட்சம், ஒரு அறிவிப்புக்கே அவருக்கு ரஜினி பெயர்தான் தேவைப்படுகிறது. ஆரம்பத்தில் இந்தாளு ஏதோ பண்ண விரும்புகிறார் என நினைத்தவர்களுக்கு கமலின் நோக்கம் தெளிவாகப் புரிந்துவிட்டது. தினசரி ஒரு சேனல் அல்லது செய்தித் தாளில் முன்னுக்குப் பின் முரணாக உளறி தன்னை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளார் கமல். நமக்கு வேலை மிச்சம்.

தினமும் ரஜினி பெயரை கமல் பயன்படுத்துகிறார். ஆனால் ரஜினி? கண்டு கொள்ளவே இல்லை. அமைதியாக இருந்தே எதிராளியைக் காலி பண்ணுகிறார். எதிர்த்துப் பேசிப் பேசி வாய் ஓய்ந்து நிற்கும் சீமான் போன்றவர்களின் வரிசையில் இன்று சேர்ந்துவிட்டார் கமல் ஹாஸன்.

21686349_1189210244512007_8471603859938178467_n
கமல் தன் இயல்பை, குணத்தைக் காட்டிவிட்டார். ரஜினி தன் பெருந்தன்மை மற்றும் அமைதி மூலம் அதை ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளி, அரசியலில் இமயமாய் நிற்கிறார்.

சரி.. கமலின் அரசியல் செல்லாக்காசு… போகட்டும்… தலைவர் ஏன் இத்தனை அமைதி காக்கிறார்… ஏதாவது அறிவிக்கலாமே?

இத்தனை ஆண்டுகள் ரஜினியுடன் பயணிக்கும், கவனித்து வரும் நாம் அவரைப் புரிந்து கொண்டது இவ்வளவுதானா? ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்ன ரசிகர் மன்றம் ஆரம்பிப்பது போன்றதா? அதற்கு எவ்வளவு அடிப்படைக் கட்டுமானங்கள் செய்ய வேண்டும்? சட்ட ரீதியான வேலைகள் பார்க்க வேண்டும்? கொள்கைகள் வகுக்க வேண்டும்? கமல் ஹாஸனுக்கு வேண்டுமானால் ட்விட்டரே போதுமானதாக இருக்கலாம்… ஆனால் ஆளப் போகிறவர் எத்தனைக் கோணங்களில் திட்டமிட வேண்டும்? அதைத்தான் தலைவர் அமைதியாக செய்து கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் நேரமிருக்கிறது. நாளைக்கே இந்த ஆட்சியைக் கலைக்கப்போவதில்லை. எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். தலைவர் முழுமையாக அரசியலுக்கு வர இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும் என்பதுதான் உண்மை. அதற்கு முன் ரசிகர் சந்திப்பில் ஏதாவது அறிவிப்பு அல்லது அறிக்கை இருக்கலாம்.

அதற்கு முன் ரசிகர் மன்றத்தினர் வீணாக கமல் அரசியல் பற்றி அலட்டிக் கொண்டிருக்காமல் அவரவர் பகுதியில் மன்றங்களை வலுவாக்கலாம். பொது மக்களை ரஜினிக்கான வாக்காளர்களாக மாற்றலாம். ஏரிகள், ஆறுகள், சுற்றுப்புறங்களைச் சுத்தப்படுத்துதல் போன்ற, மக்கள் விரும்பும் பணிகளில் ஈடுபடலாம். அதுதான் நமக்கான அரசியல் ஆரம்பம். கட்சி ஆரம்பிப்பது, நிர்வாகிகளை அறிவிப்பதெல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்
8 thoughts on “‘இந்த கமல் இஷ்டத்துக்கும் பேசறார்… தலைவர் அமைதியா இருக்கார்… என்னதான் நடக்குது?’ – கேள்வி பதில் 34

 1. Sen

  Dear Vino – thanks much for your explanation / rationale/ clarification. It has been frustrating the last few days but your message makes us feel better for sure. Thanks!

  Victory to Thalaivar !

  Sen

 2. jagan n

  பொதுவாக ரஜினி கமல் கலந்து கொள்ளும் விழாக்களில் கமல் முதலில் பேசுவார் அது முடிந்தவுடன் ரஜினி பேசி அதிகமான கைதடடல்களை பெறுவார் .அரசியலியிலும் அதுவே நடக்கும்

 3. Shankar

  You have a very good understand of what’s happening, hopefully all of thalaivar fans understand it too.

 4. prabha

  Athu sari Kamal indhamathrinnu therinchu thane seeman anbumani ellam avarvarattum aana rajin venamnnu sollaranga. Thavalai than vayale kedumnu oru visayakanth pola ivarum komali arasiyal pannuvarrunuvedikakai support vera.yenna ivar katchi aarambikka tamil naatu jananga kaasu tharuvaangalaam. ethaiyum plan paani seyyurar pola athatvathu katchi aarambikka kaasu pichai podungamma apparam muthalvar aana nanga paaththukkovommnu.

  Ada kamal maatumma edhugai monai karadi padal veliyeeetu vilaavula andha thansikaavai pottu vaanugrennuttu kabali vetriya paathu polambithallinadhum kamaloda same blood.
  Endhiran isai veliyeetu vilavula rajiniya marandhuttu pona iswarya rayai sinna sirippodu patharame irundha thalaivar enge indha medai nagarigmnnuttu mannippu kettum vidama than vai chavadalai kaatuna karadi enge?

 5. அ.செந்தில்குமார்

  அண்ணா சிவாஜி சிலை மணிமண்டபம் திறப்புவிழாவில் ரஜினி சார் பேசியதில் இருந்து என்ன முடிவுக்கு வந்திருப்பார்.அரசியலுக்கு வருவாரா அண்ணா,?

 6. R. Hari hara kroshnan

  வினோ! சிவாஜி விழாவில் தலைவர் பேசி 4நாள் ஆச்சு update இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *