BREAKING NEWS
Search

கோச்சடையான் படம் பார்த்தார் கமல்… சவுந்தர்யாவுக்கு பாராட்டு!

கோச்சடையான் படம் பார்த்தார் கமல்… சவுந்தர்யாவுக்கு பாராட்டு!

BofOxEuCQAACht9

லைவர் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் படத்தை நேற்று மாலை பார்த்துப் பாராட்டினார் கமல் ஹாஸன்.

கோச்சடையான் படம் நாட்டிலேயே முதல் முறையாக மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் இந்தியத் திரையுலகின் அடுத்த கட்ட பயணத்துக்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. புதிய முயற்சிக்கு ஆதரவு எப்படி இருக்குமோ என்று முதலில் திரையுலகினர் தயங்கினர். ஆனால் படம் வெளியானதும் கிடைத்த தாறுமாறான வரவேற்பு, அந்தத் தயக்கத்தை உடைத்தெறிந்தது.

உலகம் முழுவதும் இந்தப் படம் பெரும் வரவேற்பும் வசூலும் பெற்று ஓடிக் கொண்டுள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களின் காதலனான கலைஞானி கமல் ஹாஸன் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார்.

அவருக்காக தி நகரில் உள்ள ரியல் இமேஜ் அரங்கில் இந்தப் படத்தைத் திரையிட்டார் சவுந்தர்யா ரஜினி.

unnamed (3)

கமலும் கவுதமியும் இந்தப் படத்தை நேற்றுப் பார்க்க வந்தனர். உத்தம வில்லன் படப்பிடிப்பிலிருந்து நேராக படம் பார்க்க வந்திருந்தார் கமல். எனவே உடன் நடிக்கும் நடிகை பூஜா குமார், நடிகர் ரமேஷ் கண்ணா உள்பட சிலரும் வந்திருந்தனர். அவர்களை வரவேற்று தியேட்டருக்கு அழைத்துப் போய், கோச்சடையானைத் திரையிட்டார் சவுந்தர்யா.

ஆர்வத்துடன் படம் பார்க்க கமல், படம் முடிந்ததும் சவுந்தர்யாவைப் பெரிதும் பாராட்டினார். படம் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் வந்திருப்பதாகத் தெரிவித்து வாழ்த்தினார்.

இந்திய சினிமாவுக்கு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி முயற்சி போற்றக்கூடியது என பாராட்டினார் கமல்.

-என்வழி




2 thoughts on “கோச்சடையான் படம் பார்த்தார் கமல்… சவுந்தர்யாவுக்கு பாராட்டு!

  1. VASU

    இது தான் உண்மையான நட்புக்கு எடுத்துகாட்டு. தலைவர் மற்றும் கலைஞானி தவிர வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்று, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வரவேற்கும் பண்பு இந்த இருவர் தவிர வேறு யாருக்கும் கிடையாது

  2. Thalaivar fan

    Ithu friendshiplam onnum kidaiyathu.
    Kamal’s pro hv been spreading rumours n critisizing the film in social media.
    Just bcoz that he went n watch the film to avoid getting bad name for himself.
    Till now, he never praised Rajini.
    Just like how he praised shankar but ignored Rajini when Endhiran was released,
    this time too he never even mentioned Rajini.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *