BREAKING NEWS
Search

கமல், விஜய், அஜீத்… இது தலைவர் சூப்பர் ஸ்டார் ஏரியா… தள்ளிப் போய் விளையாடுங்க!

டியர் கமல், விஜய், அஜீத் ரசிகர்களே.. உங்கள் எல்லை எதுவோ அதற்குள் நின்று விளையாடுங்கள்!

01-469-copy

இந்திய சினிமாவின் இணையற்ற ‘பாட்ஷா’!

தீபாவளி, பெருமழை, மின்சாரம் -இணையத் தொடர்பின்மை என பல காரணங்களால் சில தினங்கள் என்வழியில் எதுவும் எழுத முடியவில்லை.

இணையத்தைத் திறந்தால் தீபாவளிப் படங்களான தூங்காவனம், வேதாளம் குறித்து  ‘பூராப் பயலும் பொய்யா பேசிட்டுத் திரியறான்!’

ஒரு மக்குப் பிள்ளை, வேதாளம் படம் வெளியான அன்றே இந்த சாதனை செய்தது, அந்த சாதனை செய்தது என இஷ்டத்துக்கும் அடித்துவிட்டிருந்தது. அதை அப்படியே அத்தனை இணையதளங்களும் ஈயடிச்சான் காப்பியாக அடித்து வைத்திருந்தன. விசாரித்து, சுயமாக எழுதத் தெரிந்த செய்தியாளர்கள் பஞ்சத்தால் வந்த வினை இது.

அடுத்த நாளே இந்தப் படம் 50 கோடியை வசூலித்தது, 100 கோடியைத் தொட்டுவிட்டது என்றெல்லாம் பீத்திக் கொண்டிருந்தார்கள் அஜீத் ரசிகர்கள். என்ன செய்வது.. அவர்களின் நிறைவேற முடியாத ஆதங்கம்.

கமல், விஜய், அஜீத் போன்றவர்களின் படங்கள் வரும்போதெல்லாம் இப்படி ஒரு கூட்டம் கிளம்பி பொய்யாய் செய்திகள் பரப்பும். என்ன கொடுமை என்றால், இந்த ஹீரோக்களின் ஒவ்வொரு படம் வரும் போதும், அவை எந்திரனைத் தாண்டும், சிவாஜியை மிஞ்சும், லிங்காவைத் தாண்டும்.

நியாயமாக அடுத்து அவர்களின் படங்களைத்தானே மிஞ்ச வேண்டும்? மீண்டும் மீண்டும் எதற்காக சிவாஜி, எந்திரன், லிங்கா ஒப்பீடு?

இவர்கள் சொல்வது எத்தனைப் பெரிய பொய் என்பது, அந்த ஹீரோக்களின் படங்கள் வருவதற்குள் மறந்து தொலைத்துவிடுகிறார்கள்!

ஒவ்வொரு முறை நான் இப்படி எழுத நேரும்போதெல்லாம், மற்ற ஹீரோக்களின் படங்கள் இவ்வளவு வசூலித்தால் உங்களுக்கென்ன வந்தது? ரஜினி படம் மட்டுமே வசூலிக்க வேண்டுமா? என்று சிலர் கேட்பது வழக்கம். இப்போதும்கூட கேட்பார்கள்.

தாராளமாய் வசூலிக்கட்டும். ஆனால் அது உண்மையானதாய் இருக்க வேண்டும்.

விஜய் நடித்த புலி படம் ஒரே வாரத்தில் ரூ 78 கோடியை வசூலித்தது என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் பத்தாவது நாளில் அறிக்கை தந்தார். அடுத்த ஒரு வாரத்தில் இன்னொரு அறிக்கை தந்தார். அதில் ‘படம் மிகப் பெரிய தோல்வி, பைசா தேறவில்லை. சிம்பு தேவன் சொதப்பிவிட்டார். இந்த லட்சணத்தில் ஸ்ரீதேவி கூடுதல் சம்பளம் கேட்கிறாரே’ என மூன்று பக்கங்களுக்கு புலம்பித் தள்ளியிருந்தார்.

இதுதான் இந்த ஹீரோக்களின் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்.

ஆரம்பம் படம் மூன்றே நாளில் ரூ 100 கோடி வசூல் என சில ஆர்வக் கோளாறுகள் அடித்துவிட, அடுத்த நாளே தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டது வருமான வரித்துறை. உண்மையில் அந்தப் படம் மொத்தமே ரூ 50 கோடியைக் கூடத் தாண்டவில்லை. ஏஎம் ரத்னத்தின் கடன்கள் முழுமையாக அடையாத நிலையில்தான், அடுத்த படமான என்னை அறிந்தாலுக்கு கால்ஷீட் தந்தார் அஜீத். அந்தப் படத்தின் வசூல் நிலவரம் அனைவருக்கும் தெரிந்ததே. அவ்வளவு ஏன், என்னை அறிந்தாலுக்கு முந்தைய படமான வீரம், அதன் தயாரிப்பாளர் விஜயா புரொடக்ஷன்ஸுக்கு மொத்தமாக ரூ 8 கோடி கடனை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அஜீத் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட தன்னிடம் விசாரிக்கவில்லையே என்றும் அதன் உரிமையாளர் வெங்கட்ராம ரெட்டி புலம்பியிருந்தார். இந்த விவரங்களையெல்லாம் நாம் இதுவரை எங்கும் எழுதியதில்லை. ஆனால் பக்குவமற்ற அஜீத் ரசிகர்கள் எழுத வைத்துவிட்டார்கள். அவர்கள் ஆத்திரத்தை மறந்து, அறிவோடு சிந்திக்க வேண்டிய நேரம் இது.

இப்போது வெளியாகியுள்ள வேதாளம் படம் நன்றாக ஓடுகிறது.. அஜீத் கேரியரில் பெரிய வெற்றி என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சந்தோஷம். தாராளமாக ஜெயிக்கட்டும். ரஜினியின் தாசனாக தன்னை மாற்றிக் கொண்ட அஜீத்துக்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவும் கணிசமாக உள்ளது. ஆனால் உடனே இவர்தான் அடுத்த ரஜினி என இணையத்தில் பினாத்த ஆரம்பித்துவிடுகிறார்கள் சில ரசிகர்கள். அதற்கு இவர்களே ஒரு காரணத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். தமிழ் திரையுலகில் எந்திரனுக்கு அடுத்து அதிக வசூல் குவித்த படம் என்று வேதாளத்தைக் குறிப்பிட்டு, பொய்யான புள்ளி விவரங்களை வேறு துணைக்கு அழைக்கிறார்கள்.

இது தெரியாமல் நடக்கும் தவறு அல்ல.. தப்பு. தெரிந்தே செய்யும் தப்பு. அதை அனுமதிக்கக் கூடாது, முடியாது!

குறைந்தபட்ச அடிப்படை அறிவு கூட இல்லாமல் வேதாளத்தை எந்திரனோடு ஒப்பிடுவது எத்தனை பெரிய முட்டாள்தனம்.

முதலில் தியேட்டர் கணக்காவது தெரியுமா இவர்களுக்கு?

எந்திரன் வெளியானது 2885 அரங்குகளில். தமிழகத்தில் மட்டும் 600 அரங்குகள். முதல் மூன்று தினங்களில் 720 அரங்குகள். தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் மொத்த வசூல் ரூ 23 கோடி (செபியில் சமர்ப்பிக்கப்பட்ட வசூல் விபரம் இது.)  இந்தியாவில் முதல் நாள் வசூல் ரூ 33.8 கோடி. ஆந்திராவில் மொத்தம் ரூ 50 கோடி.  அனைத்து வருமானங்களுடன் சேர்த்து எந்திரன் மொத்த வசூல் ரூ 375 கோடி. இதுவும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுதான்.

ஆனால் இந்த புள்ளி விவரங்களெல்லாம் எவருக்கும் நினைவில் இல்லை போலிருக்கிறது. அஜீத்தின் வேதாளம் ரூ 15.4 கோடியை வசூலித்து எந்திரனைத் தாண்டியது என்று பொய்யாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். வேதாளம் வெளியானதே மொத்தம் 850 அரங்குகள். தமிழகத்தில் இல்லை, உலகளவில்.

2885 அரங்குகளில் வெளியான எந்திரன் வசூலை – அன்றைக்கு இருந்த அதே டிக்கெட் விலை – வெறும் 850 அரங்குகளில் வெளியான வேதாளம் முறியடிக்க வாய்ப்பிருக்கிறதா.. அதுவும் பேய் மழையால் ரசிகர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த கடந்த 8 நாட்களில்?

உண்மையில் வேதாளத்தின் வசூல் நிலவரம் என்ன?

படம் வெளியாகி 8 நாட்களில் இந்தப் படம் தமிழ் நாட்டில் ரூ 40 கோடியைத் தாண்டவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் என்னால் சொல்ல முடியும். மற்ற மாநிலங்கள், நாடுகள் அனைத்திலும் சேர்த்து ரூ 57 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இனி மிஞ்சிப் போனால் 8 முதல் 10 கோடி தேற வாய்ப்புள்ளது. இதுதான் வேதாளம் பாக்ஸ் ஆபீஸ். 99 சதவீதம் அதிகாரப்பூர்வ கணக்கு இது. இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் அஜீத்தான் என்பது கூடுதல் தகவல். ஏஎம் ரத்தினத்திடம் இன்று போனில் விசாரித்தபோது, பெரிய கும்பிடு போட்டு, ‘எல்லாம் பொய்த் தகவல் என்று மட்டும் போடுங்கள்’ என்று வேண்டினார்.

தூங்காவனத்தின் நிலை என்ன என்று சிலர் கேட்கக் கூடும். வெந்த புண்ணில் உப்புக் காகிதம் வைத்து தேய்ப்பதற்கு சமம் அது. இதுவரை ரூ 20 கோடியைத் தாண்டவில்லை அந்தப் படம். அமெரிக்காவில் மட்டும் ரூ 3 கோடியை வசூலித்துள்ளது.

டியர் கமல், விஜய், அஜீத் ரசிகர்களே.. உங்கள் எல்லை எதுவோ அதற்குள் நின்று விளையாடுங்கள். ரஜினி என்ற சூரியனோடு மோதி விளையாடும் தகுதி உங்கள் எவருக்கும் இல்லை. உங்கள் புதிய சாதனைகளை உங்கள் பழைய சாதனைகளோடு ஒப்பிட்டுக் கொண்டு சந்தோஷப்படுங்கள்.

thalaivar - smille

சில மாதங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்…

“எந்திரன் படத்தின் சாதனையை முறியடித்துவிட்டது விஜய் படம் என்று இன்றல்ல.. வேலாயுதம் படம் வெளியானதிலிருந்து பிரஸ் மீட் வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வேலாயுதம் போய், நண்பன் வந்தது. அப்போதும் அவர்கள் எந்திரன் சாதனையைத்தான் தாண்டினார்கள். வேலாயுதம் சாதித்தது என்னவென்று சொல்லவே இல்லை.

நண்பன் படத்தின் 100 கோடியை எண்ணி முடித்துவிட்டார்களா? என இதே பகுதியில் எழுதிய கட்டுரை இன்னும் அப்படியேதான் இருக்கிறது. கடைசியில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மகா கடனாளியாக ஏனாம் பக்கத்தில் அனாதையாக செத்துக் கிடந்தார் என்ற செய்திதான் வந்தது!

அடுத்து வந்த துப்பாக்கிக்கும் இப்படித்தான் எந்திரன் சாதனையை ‘முறியடித்தார்கள்’. துப்பாக்கி போய், ஜில்லா வந்தது. அந்தப் படமும் எந்திரனைத்தான் ‘முந்தியது’.
அதான் வேலாயுதத்திலேயே முந்திவிட்டீர்களே.. அப்புறம் எதற்கு மீண்டும் எந்திரன்? வேலாயுதம் சாதனையை நண்பனும், நண்பன் சாதனையை துப்பாக்கியும், துப்பாக்கி சாதனையை ஜில்லாவும், ஜில்லா சாதனையை இந்த கத்தியுமல்லவா முறியடித்திருக்க வேண்டும்?”

-என்ன நான் சொல்றது!

-விதுரன்
என்வழி ஸ்பெஷல்

Reviews

 • 10
 • 10
 • 10
 • 10
 • 10
 • 10

  Score
29 thoughts on “கமல், விஜய், அஜீத்… இது தலைவர் சூப்பர் ஸ்டார் ஏரியா… தள்ளிப் போய் விளையாடுங்க!

 1. Devaanandh

  Anna there is this @rameshlaus person on Twitter. He is the one spreading false BO reports and behaves as if he is incharge of kallaa potti. During linga he tweeted that it collected 16C just in TN (much lower than actual). Now after vedhalam was advertised to collect 15C, he suddenly discounted 2C from his original linga numbers and now quoting linga at 14C. Deepavali thallupadi pola!

  Income tax should treat him as either evidence of true or frame him for hoax for misleading after they raid rathnam sir!

 2. குமரன்

  ஆதங்கம் …..

  அஜித்தின் அடுத்த படத்துக்குத் தலைப்புக் கிடைத்து விட்டது!

  சும்மா 59 ஆவது படம், 60 ஆவது படம் என்று ஆரம்பித்துத் தலைப்புக்கு அலைய வேண்டியதில்லை !!! அ, ஆ… என்று ஆரம்பிக்கிறது, ஆறு எழுத்தில் இருக்கிறது, எல்லாம்… அடச்சீ … அல்லாம் போர்ருந்தி வருது, வைச்சிடுங்க…

 3. குமரன்

  புலம்பல் …

  அடுத்த விஜய் படத்துக்குத் தலைப்பாக வைத்துக்கொள்ளட்டும்…
  அவரும் இப்போ அப்படித்தான் படம் எண் வைத்து ஆரம்பிக்கிறாராமே?

 4. குமரன்

  இப்படி வசூலை வைத்து ஒரு நடிகரின் படத்தின் சிறப்பைப் பறைசாற்றும் வழக்கம் கண்டிக்கப் படவேண்டும்.

  ஒரு திரைப்படத்தின் படைப்பாக்கத் திறமைகள்தான் அதனை முன் நிறுத்த வேண்டும். அதுதான் நமது திரைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும். வருடத்துக்கு நான்கைந்து லட்சம் பொறியாளர்களை உருவாக்கும் தமிழகமாக மாறிய பின்னரும் தரை டிக்கட் காலத்தை விட்டு நகராமல், அப்படிப் பொறியாளர்களாக மாறியவரும், தொழில்நுட்பத்தால் உருவான கருவிகளை …. கணினி, கைப்பேசி …. உபயோகிக்கும் திறனை அடைந்தவர்களும் இன்னமும் அதே தரை டிக்கட் நிலையில் சிந்திப்பதுதான் வேதனை. பகுத்தறிவின் பரிணாமம் இன்னொரு தளத்தில் வேலை செய்கிறது.

  இந்திரன் வசூலில் சாதித்ததி விடவும், ஒரு திரைப்படமாகச் சாதித்தது எவர் கண்ணிலும் படவே இல்லை என்பதுதான் அதைவிடவும் பெரிய வேதனை.

  இந்திரன் ஒரு நவீனத் தொழில்நுட்பத்தை அடிப்படைக் கதைக் கருவாகக் கொண்ட படம்.

  அறிவியல் கற்பனைக் கதை. Science Fiction.
  அதிலும் வியப்பை மையமாக வைத்த அறிவியல் கதை. Fantasy… Science Fiction … Fantasy… Scientific Fantasy…..Fantastic Science Fiction.
  பிரம்மாண்டம்…. Massive production … Graphics …. Huge sets …. Matching costumes …. suitable Back ground Music …. Classy Cinematography…. Superb editing….Dialogues …. Natural Portrayal by the actors……. what not ……

  தமிழ்த் திரை வரலாற்றில் இந்திரன் ஒரு மைல்கல். திரைப்படத்தை நேசிக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் இந்த மைல்கல்லை எட்ட முயன்றால் அன்றித் தமிழ்த் திரைஉலகம் முன்னேற முடியாது. பணம் இரண்டாம் பட்சம், வசூல் இரண்டாம் பட்சம். நல்ல திரைப்படத்தைத் தயாரித்தால் பணம் தானே வசூலாகும்.

  ரஜினி என்ற Brand value வை நினைத்து நானும் ரவுடிதான் வடிவேலு பாணியில் சூடு போட்டுக் கொள்வது எள்ளல் கலந்த நகைப்பைத்தான் வரவழைக்கும்.

  ஆக்கபூர்வமாகச் சிந்தித்து இப்படிப்பட்ட விஷயங்களில் ஒருமிக்க இந்திரனை ஒரு குறிக்கோளாக வைத்துப் படம் எடுத்து முந்துங்கள்… உங்களுக்கும், திரைப்படத் துறைக்கும் பயன்படும்.

  மே……………. மே………….. என்று உதட்டோரம் ஒரு எள்ளலுடன் கூடிய புன்சிரிப்புடன் எவராவது ஒரு நடிகரைச் சொல்லச் சொல்லுங்கள், அவர் சிறந்த நடிகர் என்று ஒப்புக் கொள்கிறோம். முக பாவனைகளில்

 5. குமரன்

  அது எந்திரன், இந்திரன் என்பது தட்டச்சுப் பிழை. பொறுக்கவும்.

 6. jegan N

  U r right Anna…fans in twitter spreading fake நியூஸ்..

  but a small correction vedalam is released more than 850 theatres I’ll over world….
  Everytime they are dragging thalaivars name to show their star power….

  Waiting for kabali to create a new benchmark in thalaivars carreer.after enthiran…

 7. srinivasan

  எங்கள் LIC UNIT ரஜினி பக்தர்கள் சார்பாக தங்களுக்கு உளமார நன்றி கூறுகிறோம். மிக அருமையான பதிவு

 8. இளவரசன்

  தலைவர் ரஜினி அவர்களின் பட சாதனையை முறியடிக்க எவனும் பிறக்கவில்லை. பிறக்க போவதுமில்லை. சாதிக்க மட்டுமே இந்த மண்ணில் அவதரித்த எங்கள் சூப்பர் ஸ்டார் சாதனை மன்னன் வசூல் சக்ரவர்த்தி ரஜினி அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே .

 9. sankaranarayanan

  மிக தெளிவா எழுதியிருக்கீங்க,எல்லாருக்கும் இது தெரியும்னாலும் சிலர்-அந்த ரசிகர்கள்-தூங்கறா மாதிரியே நடிப்பாங்க.புள்ளி விவரத்தோட அசத்திட்டீங்க.

 10. Rajagopalan

  I accept this..
  I already thought that Linga got the highest number of screens till date as far as tamil movies are concerned. So vedalam cannot beat Linga first day collections.
  But one thing i want to convey is there are no tantrums for Thoongavanam like Vedalam…
  Press is hyping only Vedalam…

 11. Sekar

  எந்திரனின் வசூல் சாதனையை அதற்கு பின்பு வந்த வேலாயுதம் மற்றும் 7-ம் அறிவு முறியடித்து விட்டதாக சொன்னார்கள். ஆனால், வேதாளம் படம் வரை எந்திரனின் வசூல் சாதனை முறியடிக்க படவில்லை என்பது நீரூபணம் ஆகி உள்ளது., அடுத்து, லிங்கா படத்தின் வசூல் சாதனையை அடுத்து வந்த “என்னை அறிந்தால்” முறியடித்து வந்ததாக சொன்னார்கள். இப்போது மீண்டும், வேதாளம் படம் லிங்கா வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக சொல்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் எந்த ஒரு படத்தின் வசூல் சாதனையையும் யாரும் முறியடிக்கவில்லை. முறியடிக்க முடியாது. அன்றும் இன்றும் என்றும் வசூல் மன்னன், எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தான்.

 12. Badru

  சரி வினோ அவர்களே…! நீங்கள் பணிபுரியும் தளத்தில் இதை ஏன் அனுமதிக்றீர்கள்?

  வேறு யாரோ ஒருவர் போட்ட ட்விட்டை உண்மை நிலை அறியாமல் போடுவது என்ன பத்திரிகை தர்மம்?

 13. arulnithyaj

  அண்ணா சூப்பர்.. நண்பர் குமரன் அவர்களின் பின்னூட்டத்தை வழி மொழிகிறேன் ..இன்னும் சொல்லபோனால் குடும்பத்துடன் பார்க்கிற மாதிரி கடந்த 1 வருடத்தில் லிங்கா போன்று எந்த மாஸ் ஹீரோ படமும் வரவில்லை ..விட்டு கொடுத்தல், உண்மையாய் இருத்தல்..நல்லதே செய்தல் என்று இன்னமும் பல நல்ல விஷயங்களையே சொன்ன படம் .. என் குழந்தைகளுக்கு மிக பிடித்த படங்களில் ஒன்று லிங்கா

 14. MK

  நண்பர் விதுரன் really superb
  தலைவரின் வசூலை தங்கள் சொம்ப படங்களோடு ஒப்பிட்டு தான் ஜெயித்து விட்டதாக காட்டிக் கொள்ளும் சல்லி நா….தாரிகளுக்கு சரியான செருப்படி. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 10 அடி தார்கோல, படம் எந்திரன முந்திட்டுன்னு சொன்னவன் சூ… ல ஓங்கி சொருவுனது போல் உள்ளது.
  இதுக்கெல்லாம் ஆரம்ப சுழி போட்டவன் அந்த காமெடி பீசு நா…தாரி விஜயும் அவன் அப்பனும்தான்.

  அவனைப்போலவே தறு தலயின் ரசிகர்களும் கொம்பு சீவ ஆரம்பித்தார்கள்.

  ஆனால்,இந்த பன்னாடைகளை விட , தலைவரோடு பலமுறை மோதி அடி வாங்கி அலுத்து போயிருக்கும் அர லூசு, ஒலக நாயகனின் ரசிகர்களும் எந்திரனொடு ஒப்பிடுவத்தான் joke of the year
  என்றுமே தலைவர் ரஜினி தான் ரசிகர்களை அன்பு செய்வதில், அரவணைப்பதில், வசூலில் ராஜாதி ராஜா

 15. raghul

  அட விடுங்க பாஸ் !! இவனுக பொழப்பே இப்படித்தான் !!!

  லிங்கா – வெற்றிப்படம் இல்ல என்று சொன்னவுனுக்கும் அது தான் இன்று “benchmark”..

  சிதிரைக்காக நித்திரையின்றி காத்திருப்போம் நண்பா……

 16. sk

  Excellent post.Thanks for the details..

  if u do a quick assessment within your family, friends you will find that 90% of them watche thalivar movie in theatres and most of them watch it within first 3 days. Atleast 30% of them watch the movie more than once.
  However thats not the case for other actor’s movies….most of them wait for reviews. so its hardly 20- 30% of of them who would watch it in theatres in inital days and definitely not more than once
  This is my rough estimate which would tell the story of average collections of each actors.
  Am sure this is the case for most of us if you look around within ur family & friends circle.

 17. மிஸ்டர் பாவலன்

  தூங்காவனம் படம் வசூலில் சாதனை படைப்பதாக ஒரு
  சிறு பத்திரிகையில் படித்தேன்… த்ரிஷா நடிப்பு மிகவும்
  அருமை.. ஆனால் த்ரிஷாவிற்கு பாட்டு இல்லை..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 18. kumaran

  அஜித் க்கு நல்ல விளம்பரம் , மற்றபடி NO 1 status க்கு வாய்ப்பு இல்ல

 19. srikanth1974

  இந்த கட்டுரைக்காக வெளியிடப்பட்ட இரண்டு தலைவர் புகைப் படங்களில்
  ஒன்று தலைவர் தலையில் அடித்துக்கொண்டு சிரிப்பது போல் உள்ள படத்தை
  பார்த்தீர்கள் அல்லவா?. அது அந்த ஆதங்கம்,புலம்பல், நடிகர்களின்
  ரசிகர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்துதானோ என நினைக்கத் தோன்றுகிறது.

  திரு.குமரன் சார் அவர்கள் அந்த இரண்டு நடிகர்களின் அடுத்த படங்களுக்கு
  மிகப் பொருத்தமான பெயர் வைத்துள்ளார்.
  அவரைத் தொடர்ந்து அந்த இரண்டு பேரின் படங்களுக்கு நான்
  வைக்கும் பெயர் இதோ

  அஜித்தின் அடுத்த படத்துக்கு – ‘பாதாளம்’
  விஜய்யின் அடுத்த படத்துக்கு – ‘சனி’
  பன்ச் வசனம் பேச வசதியா இருக்கும்.

  பாசத்துக்கு முன்னால நான் பனி
  எம்மூஞ்சிய பாத்தாலே புடிச்சுரும் சனி

  தலைவருக்கு எதிராவோ,சவாலவோ,
  வரனும்னு நினைக்கிறவன் சனி புடிச்சு
  அதல பாதாளத்தில் வீழ்வான்.

 20. srikanth1974

  வாய்க் கூசாமல் வசூல் கணக்கை அள்ளி விடும்
  தல நடிகரின் தவத் தம்பிகளே!. இங்கு கீழே தரப்பட்டுள்ள [link] பார்க்கவும்.
  உங்கள் அசல் முகம் அழகாக காட்டப்படும் இந்த
  கண்ணாடியில் .

  http://mlife.mtsindia.in/nd/?pid=825224

 21. Rjakumar

  தலைவர் இன்னும் மழையால் பாதித்த தமிழக மக்களுக்கு ஆறுதல் கூறாதது சற்று உறுத்தலாக உள்ளது.அவருடைய மவுனம் கவலை அளிக்கிறது.

 22. gunasekar

  http://indiatoday.intoday.in/story/vedalam-the-ajith-starrer-enters-the-rs-100-crore-club/1/526633.html
  http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Ajiths-Vedalam-joins-100-crore-club/articleshow/49842521.cms?from=mdr
  http://www.ibtimes.co.in/vedalam-box-office-collection-ajiths-film-beats-kaththi-become-fastest-rs-100-crore-grosser-655538
  http://www.hindustantimes.com/regional-movies/ajith-s-vedalam-romps-home-with-rs-100-crore/story-chNC9UEIpy1Gxst9U0T81J.html

  __________
  All fake reports. Go and ask the producer of the movie. He only the responsible person to announce this.

  -Envazhi

 23. rajaram

  டியர் பிரிண்ட்ஸ்,

  ப்ளீஸ் தினக் அபௌட் லிங்கா.

  ரஜினி இஸ் ஹுமன்பெஇங்க் நாட் எ ………..

 24. Siva

  நாம் ஏன் முட்டாள் ஆகி கொண்டிருக்கிறோம்

  சென்னை வெள்ளத்துக்கு சினிமாகரன் பணம் ரொம்ப குறைவா கொடுக்கிறான்
  என்று அனவைரும் அவர்களை எவளு முடியுமோ அவளு காரி துப்பி கொண்டு இருக்கிறோம். அவனுகளுக நாம எல்லாரும் ஒட்டு போட்டோம்? நம்ம ஏரியா கவுன்சிலேர்கிட்ட போய் தட்டி கேட்கறதுக்கு நம்மளுக்கு தைரியம் இல்லை என்பது உண்மை. எங்கோயோ இருக்கிற அவனுகள திட்றோம். முதல்வர், 234 MLA ,40 MP எராளமான எதிர்கட்சிகள், ஏரியா வரியா கவுன்சிலேர், ராஜயசபா MPs , லோக்சபா MPS மற்றும் அரசாங்க உழியர்கள் இப்படி எவலோவோ அரசாங்க சம்பத்தப்பட்டவர்கள் இருக்க, சம்மதமே இல்லாத சினமா காரன்கிட்ட இருந்து எல்லாத்தையும் எதிர்பாகுற நாமளா என்னவென்று சொல்ல? அப்படி எதிர்பாகுற எல்லாரும் முட்டாள்களே.. மேலே சொன்னவர்களை தட்டி கேட்க நம்மளுக்கு தைரியம் இருக்கா? இப்படி சோசியல் வெப்சைட்ல கிளிச்சி தொங்கவிட முடியுமா? அப்புறும் எல்லாரும் வெறும் 5 இல்ல 10 லட்சம் மட்டும் கொடுகிரங்கேனு இன்னொரு எதிர்ப்பு. உங்க மனச தொட்டு சொல்லுங்க அவங்க கொடுக்கிற எல்லா பணமும் அப்படியே பாதிகப்பட்ட மக்களும் போய் சேரும்னு? அப்படி இருக்க அவர்கள் கோடி கோடிய கொடுத்தாலும் யார் யார் அத திருடுவாங்குனு எல்லாரும்கும் தெரியும். அவங்கே எல்லாரும் சென்னைல தான் இருகங்கேனு தெரியும். மழை யாரையும் விட்டு வைகல.. அவர்களும் அதில் அடுங்கவார்கள்.. சினிமாவ சினிமாவ நாம பார்கல.. அதன் உண்மை.சரியான தலைப்பு என்று நம்புகிறேன்..

 25. முத்துசாமி ஆறுமுகம்

  எவன் ரசிகனாக இருந்தாலும் முதலில் தமிழனாக இருங்கள்.
  தமிழ் மொழி அழிவது உண் தாய் மடிவதற்கு சமம்.முதலில் உண் மொழியை காப்பாற்ற முயற்சி செய் பிறகு அடித்துகொள் எவனுக்ககா வேண்டுமனாலும்…
  திருந்துங்கள் தமிழ்மொழிக்ககா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *