BREAKING NEWS
Search

கமல் ஹாஸன், வைரமுத்து உள்பட 24 பேருக்கு பத்மபூஷண் விருது!

கமல் ஹாஸன், வைரமுத்து உள்பட 24 பேருக்கு பத்மபூஷண் விருது!

unnamed

டெல்லி: நடிகர் கமல்ஹாஸன், கவிஞர் வைரமுத்து உள்பட 24 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 24 பேருக்கு பத்ம பூஷண் விருது, 101 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது என மொத்தம் 127 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் மஷேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், கர்நாடக இசைக்கலைஞர் பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் பண்டாரி மற்றும் அனிதா தேசாய், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சினிமா நட்சத்திரம் பரேஷ் ராவல், வித்யா பாலன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், இந்திய மகளிர் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, கபடி வீரர் சுனில் தபாஸ், தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய்குமார் பரிடா, தொழில்துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன், மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த தேனும்கல் போலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெறுபவர்களில் 27 பேர் பெண்கள் ஆவர். தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் இந்தாண்டு பத்ம விருதுகள் பெறுகின்றனர்.

கமல் அறிக்கை

Padma Bhushan press release - Tamil (1)
பத்மபூஷண் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பல துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன்.

அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது. நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு, பத்மபூஷண் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் முக்கியமாக என் நண்பர் வைரமுத்துக்கும் வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

-என்வழி செய்திகள்




4 thoughts on “கமல் ஹாஸன், வைரமுத்து உள்பட 24 பேருக்கு பத்மபூஷண் விருது!

  1. மிஸ்டர் பாவலன்

    உலக நாயகன் கமல் ஹாசன் பத்மபூஷன் விருது பெற்றது
    கேட்டு மிகவும் மகிழ்ச்சி. விரைவில் பாரத் ரத்னா விருது
    பெற்று தமிழகத்திற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் பெருமை
    சேர்க்க நமது வாழ்த்துக்கள்!

    “ரஜினி இன்னும் வாழ்த்தவில்லையே?” என்ற கேள்விக்கு
    “ரஜினி எப்போதும் நிதானமாகத் தான் செயல்படுவார்,
    அவர் கடைசியாக வாழ்த்தினாலும் அது எனக்கு முதல்
    வாழ்த்துப் போல” என்று கமல் கூறிய பதில் கண்கலங்க
    வைத்தது. சிறந்த பண்பாளர், நண்பர் கமல்ஹாசன்! நன்றி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  2. Dev

    ோவ் ! ஜினிக்கு Padma புஷன் அவரது 2000 லியே குடுத்துட்டாங்க….அப்போ எங்கயட போனா உங்கள் ஆளுக்கு நாயகன்?

  3. srikanth1974

    திரு.கமல்ஹாசன்.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

  4. s.sudha

    உலகநாயகனுக்கும் கவிப்பேரருசுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *