மருதநாயகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி! – கமல் பேட்டி
Thursday, February 16, 2012 at 3:17 pm | 2,151 views
ரஜினியை வைத்து மருதநாயகத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் கமல்!
மருதநாயகம்… நினைவிருக்கிறதா.. கிட்டத்தட்ட தமிழ் ரசிகர்கள் மறந்தேபோன இந்தப் படத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சி நடக்கிறது.
ஆனால் யாரை வைத்து தெரியுமா… ‘உலக சூப்பர் ஸ்டார்’ ரஜினியை வைத்து!
அட… இது வதந்தி இல்லை. கமல்ஹாஸனே மும்பை மிர்ரர் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சொல்லியிருப்பது.
அப்படின்னா ஹீரோ தலைவர்தானே? என்ற கேள்வியை நீங்கள் கேட்பது புரிகிறது.
பதிலை கமல் வார்த்தைகளிலேயே பார்க்கலாம்:
“ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் இந்தப் படத்தில் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் ஆரம்ப காலத்தில் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு (ரஜினி – கமல் சேர்ந்து நடிக்கும் படம்) யோசிச்சிக்கிட்டிருந்தாங்க… அதை நானே கட்டப்போறேன்” (“Yes there is a role that is ideal for him. We’ve done 10 films together in the beginning of our career, but none recently. No one has come up with a project worthy of us. It’s up to me to bell the cat!”),” என்று கூறியுள்ளார் கமல்.
1997-ம் ஆண்டு இந்தப் படத்தை சென்னையில் பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிபெத் முன்னிலையில் தொடங்கினார் கமல்ஹாஸன். அந்த விழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
அன்று இந்தப் படத்துக்கு பட்ஜெட் ரூ 50 கோடிக்குள் என்றார். ஆனால் ட்ரெயிலர் மட்டும்தான் வந்தது. பின்னர் தன்னை நம்பி யாரும் இவ்வளவு பணத்தை முதலீடு செய்ய தயாராக இல்லை என்று கூறி, படத்தைக் கைவிட்டார்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தப் படத்தை மறுபடியும் ஆரம்பிப்பது குறித்து பேசுவது கமல் வழக்கம். முதலீடு செய்ய யாரும் முன்வருவார்களா என்பதற்கான தூண்டிலாக இதைப் பயன்படுத்தி வந்தார். அதை அவர் மறுக்கவும் இல்லை.
இப்போது ரூ 150 கோடி இருந்தால் இந்தப் படத்தை முடித்துவிடலாம் என்கிறார். ஆனால் தன்னை மட்டும் நம்பி இவ்வளவு பெரும் தொகையை யாரும் முதலீடு செய்யமாட்டார்கள் என்ற உண்மை அவருக்குப் புரிந்துவிட்டதால், வேறு வழியை யோசித்தவர், கடைசியாக ரஜினி எனும் அஸ்திரம் கிடைக்குமா என்ற முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினி நடிப்பாரா? ஒருவேளை அவர் ஒப்புக்கொள்ளவும் செய்யலாம். அவர் மனசு அப்படி. ஷாரூக்கானுக்கு உதவியது போல, ஒரு காட்சியில் அவர் தோன்றுவதாக இருந்தால் யாருக்கும் பிரச்சினையிருக்காது.
ஆனால் ஹீரோ மருதநாயகமாக கமலும், ஒரு முக்கிய வேடத்தில் ரஜினியும் என்றால்…? ரஜினி – கமல் ரசிகர்களுக்கு இப்போது வந்திருக்கும் பக்குவத்தோடு இந்த விஷயத்தை அணுகுங்கள் கமல் சார்!
…மற்றவற்றை ரசிகர்கள் சொல்லட்டும்!
-என்வழி ஸ்பெஷல்







அபூர்வ ராகங்கள் முதல் கோச்சடையான் வரை.. தொடர் ஆரம்பம்




No Need. If Kamalahasan dream is to bring out this movie. Let him give the role of Marudhanayagam to thalaivar and himself can act in the other role. I don’t like his intention.
No. Thalaivar Do Not Accept it.
No. Our fans do not accept this.
தலைவர் இதுக்கு சமதிககுடாது ….Mr Pavalan கரத்து என்ன ???
இதை ஒரு போட்டியாக பார்க்க வேண்டாம். தலைவரிடம் கேட்டால் நிச்சயம் ஒத்துக்கொள்வார். ஒரு பிரமாண்ட திரைப்படத்தினை தலைவரால் மட்டுமே கொடுக்க முடியும் என்பது தற்போது தான் கமலஹாசன் அவர்களுக்கு தெரிந்துள்ளது போல. பரவாயில்லை. வரவேற்போமே!
No,Thalaivar should not accept this vino ji.
இதில் போட்டியெல்லாம் இல்லை. ஆனால் தற்போதைய நிலவரப்படி குசேலனில் தலைவர் கொஞ்சம் கவுரவ ரோல் எடுத்தது போல, “ரா” வில் கவுரவ ரோல் எடுத்தது போல மீண்டும் மீண்டும் ஒவ்வொருவராக தலைவரை அவரது நல்ல மனதைப் பயன்படுத்தி தங்களது பாக்கெட்டை நிரப்பப் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் யோசித்தால் போகிறவர் வருகிறவர் எல்லாம் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவரைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிகிறது.
எனவே மருத நாயகத்தில் சின்ன ரோலைத் தலைவர் செய்யக் கூடாது.
ரொம்ப சந்தோஷமான செய்தி…
இதில் தலைவர் நடிச்சா ரொம்ப நல்லா இருக்கும்…
காரணம் கமல் ஒன்னும் விவரம் இல்லாதவர் இல்ல..
அவருக்கு நம்ம தலைவர் இமேஜும் தெரிஞ்சவர்ன்றதால நிச்சயம் நல்ல ரோல் கொடுப்பார்… நிச்சயம் தலிவரும் இதுக்கு சம்மதம் தெரிவிப்பார் (தெரிவிக்கணும்).. இது ஒரு நல்ல நட்புக்கு எடுத்துகாட்டா இருக்கும்…
வாழ்க தலைவர்…..
ஷா ரூக் நடித்த ரா.ஒன் படம் அடிப்படையில்
குழந்தைகளுக்காக robot வைத்து எடுக்கப்பட்ட
ஒரு science fiction படம். மருதநாயகம் படம்
அப்படி அல்ல. கதை, காட்சிகள் வன்முறையாக
இருக்கிறது. கமல் ஒரு காட்சியில் நிர்வாணமாக
நடித்திருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். இப்படிப்
பட்ட படத்தில் சத்யராஜ் போன்றவர்களே நடிக்க
யோசிக்கும் போது தலைவர் நடிக்கணுமா என்று
கேட்டால் – வேண்டாம் – என்று தான் தோன்றுகிறது.
-=== மிஸ்டர் பாவலன் ===-
நட்பை வைத்து வியாபாரம் செய்ய நினைக்கிறார் போலும்
தலைவர் முடிவுதான் நம் முடிவாக இருக்க வேண்டும். தன் நண்பருக்காக அவர் நடிப்பார் என்றே தோன்றுகிறது அதை உள் வாங்கிக்கொண்டு நாமும் அதை ரசிக்கலாமே. தலைவருக்கு இனி போட்டி யாருமே இல்லை இதை இந்த உலகமே அறியும். தலைவரை விட்டால் அந்த ரோலில் யாருமே நடிக்க முடியாது என்று கமலே சொல்லும்பொழுது நாமும் அதை ஏற்று வாழ்த்துக்கள் கூறலாமே. சத்தியமாக இருவரையும் இன்னொரு படத்தில் பார்க்க மிக்க ஆவலாக இருக்கிறது.
அன்புடன் ரவி.
தலைவர் நிச்சயம் நடிக்க கூடாது. கமல்ஹாசன் தன் சக நடிகர்களுக்கு எம் மாதிரி வாய்ப்பு (ஆப்பு) கொடுப்பார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். பாவலன் கூறியது போல் நிர்வாண காட்சி அல்லாமல் மேலும் பல கேள்விக்குரிய சமுதாய கருத்துகளும் உண்டு.
கமல்ஹாசன் கேட்டால் நட்புக்காக தலைவர் நிச்சியம் நடிப்பார். ஆனால் ரசிகர்களாகிய நமக்கு இது சந்தோஷம் அல்ல. இருவரும் சமமான கதாபத்திரம் கிடைத்து நடித்தால் நல்லது.
இந்த செய்தியைப் படித்து முதலில் அதிர்ச்சியடைந்தேன். கமலின் வியாபார உத்திதான் இது. தலைவர் இதில் நடிக்க வேண்டாம்.தசாவதாரத்தில் நெப்போலியனை கேவலப்படுத்திய மாதிரிதான் தலைவரையும் செய்வார். அவரை எப்படி அவமானப்படுத்துவது என வாய்ப்பு தேடும் நபர் கமல்.
எப்படியோ, அவர் எதிர்ப்பார்த்த ஓசி விளம்பரம் அந்தப் படத்துக்கு கிடைத்துவிட்டது. இனி யாராவது தியாகி தயாரிப்பாளராக வருவார். லாபம் கமலுக்கு. பெயர் கெடுவது ரஜினிக்கு. நஷ்டம் தயாரிப்பாளருக்கு.
(ஸாரி முதலில் கமெண்டை மாத்தி போத்துட்டேன்)
Vino I never expect this kind of artical from your site. This article is totally degrading the thalaivar’s friend Kamalahaasan. Very disappointed.
குமரன் says:
February 16, 2012 at 7:19 pm
இதில் போட்டியெல்லாம் இல்லை. ஆனால் தற்போதைய நிலவரப்படி குசேலனில் தலைவர் கொஞ்சம் கவுரவ ரோல் எடுத்தது போல, “ரா” வில் கவுரவ ரோல் எடுத்தது போல மீண்டும் மீண்டும் ஒவ்வொருவராக தலைவரை அவரது நல்ல மனதைப் பயன்படுத்தி தங்களது பாக்கெட்டை நிரப்பப் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொஞ்சம் யோசித்தால் போகிறவர் வருகிறவர் எல்லாம் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவரைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிகிறது.
எனவே மருத நாயகத்தில் சின்ன ரோலைத் தலைவர் செய்யக் கூடாது.
………..100 % true..
நண்பர்களே
தலைவரை சரியாகப் புரிந்து கொண்ட இயக்குநர்களில் முதன்மையானவர் எஸ்பிஎம் சார். அடுத்து மறைந்த ராஜசேகர். இவர்களுக்குப் பின் நம்ம ஷங்கர் சார்தான். நீங்கள் மேக்கிங் ஆப் எந்திரன் பாருங்கள். அதில் ஒரு காட்சியில் தலைவர் தன் மேல் ஊற்றப்படும் கெமிக்கல் குழம்புகளை சகித்துக் கொண்டு அசைவின்றி உட்கார்ந்திருப்பார். அப்போது நம்ம ஷங்கர் சாரும் தலைவரும் பார்த்துக் கொள்வார்கள். இருவரும் ஒரு லேசான புன்முறுவல் பூப்பார்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள். அந்த புரிதலோடுதான் இனி நம் தலைவர் பணியாற்ற வேண்டும்.
ஈகோ, திமிர், தானே முன்னிலையில் இருக்க வேண்டும் என சிறு பிள்ளைத்தனம் கொண்ட கமலுடன் என் தலைவன் பணியாற்றுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
கடவுளே, இது கமலின் ஆசையாக, வெறும் செய்தியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!
Saravanan_atps
நீங்கள் அதிருப்தியடைய இதில் என்ன இருக்கிறது? கமல் இத்தனை காலம் இல்லாமல் இப்போது ரஜினியை நாடுவது ஏன்? அதற்கான காரணத்தை அவர் கவுரவமாக ஒப்புக் கொண்டு ரஜினியை ஹீரோவாக்கினால் ரஜினி ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்களே. கமல் ஹீரோ, ரஜினிக்கு கவுரவ வேடம் என்றால் என்னப்பா அர்த்தம்?
ரஜினி ரசிகரான நீங்கள் இதைக் கூடவா புரிந்து கொள்ளவில்லை. ரஜினி எந்தப் படத்தில் நடித்தாலும் அவரது ரசிகர்கள் ஆதரவு வந்துவிடாது. மனதில் கொள்ளுங்கள். ரஜினி – கமல் என்ற நிலை எப்போதும் நீடிக்கும். அதை கமல் – ரஜினி என மாற்ற உங்களைப் போன்றவர்கள் துணை போக வேண்டாம்.
வேண்டாம் தலைவா..என் தலைவனை சிறுமை படுத்துவதை நான் விரும்பவில்லை
நண்பர்களே.. ரஜினி நடிக்கக் கூடாது என்ற
உங்கள் கருத்தை நான் மிகவும் வரவேற்கிறேன்.
இது நாள் வரை “ரஜினிக்கு சரியான பாத்திரம்
இந்தப் படத்தில் இல்லை” என சொல்லிவந்தவர்
திடீர் என ட்ராக் மாறி ரஜினியை நடிக்க வைக்க
முயற்சிப்பது வியாபார நோக்கமே தவிர வேறு
இல்லை. கமல் படங்களில் மற்ற நடிகர்களுக்கு
நல்ல scope இருக்கும் என நினைப்பது கற்பனையே.
(அவரே தயாரிப்பு, இயக்கம், கதை என்றாலே
படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என்பது நாம்
அறிவோம்.) அவார்டு நோக்கத்தில் (ஆஸ்கார்)
எடுக்கப் பட்டு நின்றிருக்கும் படம் இது. நன்றி.
-=== மிஸ்டர் பாவலன் ===-
@ Saravanan_atps
1997ல ஆரம்பித்த படத்திற்கு 2012ல ஒரு பாத்திரம் இருக்காம். அத நாம கேட்டு சந்தோஷபடனுமாம்.
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
மனித உள்ளங்களை மதிக்க தெரிந்த மாமனிதர் திரு ரஜினி அவர்கள், திரையுலகில் திரு ரஜினி திரு கமல் இருவரும் தொடக்க காலத்திலிருந்து நட்புக்கு இலக்கணம் தந்து வாழ்பவர்கள். இருவரும் இணைவார்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன் திரையுலகில் புதிய திருப்பம் ஏற்படுவது உறுதி.
//1997ல ஆரம்பித்த படத்திற்கு 2012ல ஒரு பாத்திரம்
இருக்காம். அத நாம கேட்டு சந்தோஷபடனுமாம்.//
(கணேசன் நா)
கேட்கறவன் கேணைன்னா என்ன வேணும்னாலும்
அளந்து விடலாம்
//முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை/// (Kural 448)
முதல் இலார்க்கு = முதல் இல்லாத வணிகர்க்கு
ஊதியம் இல்லை = அதனால் வரும் வருவாய் (ஊதியம்) இல்லை
மதலையாம் சார்பு = தாங்கி நிற்கும் தூண் போன்ற பெரியவர்கள்
இலர் = இல்லாத அரசு (ஆட்சி)
நிலை = நிலைமை ஆகும்
சாலமன் பாப்பையா உரை:
முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம்
இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப்
பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும்
பயனும் இல்லை.
நடேசன் என்ன சொல்லி இருக்கிறார்னு உங்களுக்கு
தெரியும் என நினைக்கிறேன்.
மருதநாயகத்தில் முதலும் இல்லை, சார்பும் இல்லை.
தலைவர் ஒதுங்கி விடுவது நல்லது என்கிறார் நண்பர்.
நாளை சந்திக்கலாமா?
-== மிஸ்டர் பாவலன் ==-
————————————————————————————————————————–
Breaking Flash News :
Super Star Rajinikanth accepts to do a Roll in Kamalahasan’s Marudhanayagam – “I’m eager to work with my Friend Kamal after a long time and I will do whatever the role he had created for me” Super Star said.
————————————————————————————————————————–
இப்படி ஒரு நியூஸ் ஒரு நாள் எல்லா மீடியாவிலும் வரும்.
ஒரு சிறந்த நட்புக்கு அடையாளமாக இதை செய்ய நினைப்பார் நம் தலைவர்.
அதேபோல், தலைவரின் ரசிகர்கள் யாரும் கமல் அவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்கள் மனதில் உள்ள ஒரு ஆதங்கம் “விஜய் நடித்த நண்பன் திரைப்படம் பார்ப்பவர்க்கு, தன் ‘நண்பன்’ நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தைபற்றி ஒரு வார்த்தை கூட விடவில்லையே?”
இதில் தலைவருக்கு தான் பெரும் பாடு. நடித்து கொடுத்தால் – அது ஒரு பிரச்சனை, நடிக்க மறுத்தால் – அடுத்து ஒரு பிரஸ் மீட் – அதில் – கமல் அவர்கள் சொல்வார் “நடிகர்கள் வந்து ஒரு வட்டத்துக்குள்ளேயே இருக்காங்க. அது கூடாது. அத விட்டு வெளியே வந்தாதான் தமிழ் சினிமாவை வாழவைக்கமுடியும்.”
@ கணேசன் நா – இப்போதைய லேட்டஸ்ட் நியூஸ் படிங்க
@ மிஸ்டர் பாவலன்,
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.
முதல் இல்லாதவர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லாதது போல, துறை பெரியவர்களின் துணை இல்லாதவர்க்கு அந்த துறையில் நிலைத்து இருக்க முடியாது.
@நடேசன்:
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஆழ்ந்த திருக்குறள் அறிவு உடைய நீங்கள், என் வழியில்
`தினம் ஒரு குறள்’ என ஒரு பகுதியை எழுதலாம். நன்றி.
(தமிழ்ப் புத்தாண்டில் இதை நாம் launch செய்யலாம்.
நல்ல முயற்சிகளுக்கு வினோ நல்ல இடம் தருவார்!)
-=== மிஸ்டர் பாவலன் ===
Visvaroopam