BREAKING NEWS
Search

ரஜினியின் அரசியலைப் பேச கமலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? – ரசிகர்கள் கொதிப்பு

RAJINI

சென்னை: கமல் ஹாஸன் தனது அரசியல், கட்சி, கூட்டணி குறித்துப் பேசட்டும். ரஜினிகாந்தின் அரசியலைப் பேச அவருக்கு அனுமதியும் இல்லை, தகுதியும் இல்லை என்று ரஜினி ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியல் பிரவேச செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகத் தொடங்கியதிலிருந்து, அரசியல் பக்கமே வரமாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார்.

மேலும் எப்போது அரசியல் பேசினாலும், அதில் வேண்டுமென்றே ரஜினியின் பெயரை இழுத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தன்னுடைய அரசியல் பற்றிச் சொன்னால் சுத்தமாக எடுபடாது என்பது புரிந்து, தொடர்ந்து ரஜினியின் பெயரையும் சேர்த்துக் கொள்கிறார்.

ஆனால் இதுவரை கமல் பெயரை ரஜினிகாந்த் குறிப்பிட்டுப் பேசியதே இல்லை. குறிப்பாக அரசியல் பேச்சுக்களில்.

இப்போது மீண்டும் தனது விஷமத்தனமான கருத்து ஒன்றில் ரஜினிகாந்தின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். “ரஜினியின் கொள்கை குறித்து நான் பேச முடியாது. ஆனால் அவரது ஆன்மீக நம்பிக்கை போன்றவற்றை வைத்து பார்த்தால் அவர் பாஜகவிற்கு கூட்டணியாக பொருத்தமானவர். ஆனால் நானோ நாத்தீகவாதி,” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இது வேண்டுமென்றே கக்கப்பட்ட விஷம். அரசியலிலாவது ரஜினியை முந்த வேண்டும் என்று முடிவு செய்து கமல் ஹாஸன் காலைப் பிறாண்டிக் கொண்டிருக்கிறார். அத்துடன் நிற்காமல், ரஜினி மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையையும் ஆரம்பித்துள்ளார்.

பாஜக என்பது தமிழ் நாட்டைப் பொருத்தவரை ஜீவ சமாதி அடைந்துவிட்ட கட்சி. தமிழர் விரோத கட்சி என அவர்களே பெரும் முயற்சி செய்து பெயரெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் அந்தக் கட்சியோடு ரஜினியைக் கோர்த்துவிட்டு, மக்களிடம் வெறுப்பை ரஜினி பக்கம் திருப்ப முயற்சிக்கும் வேலை.

“கமல் ஹாஸன் நன்கு திட்டமிட்டு, ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்பும் வேலையை ஆரம்பித்துவிட்டார். கமல் ஹாஸன் தனது அரசியலை, கொள்கையைப் பேசட்டும். யார் கேட்கப் போகிறார்கள். ஆனால் ரஜினியின் அரசியல், அவரது கட்சி, யாருடன் கூட்டணி வைப்பார் என்பதையும் சொல்ல கமலுக்கு உரிமையுமில்லை, தகுதியுமில்லை. ரஜினி ரசிகர்களின் பெருந்தன்மையுடன் விளையாட வேண்டாம்,” என்று கொதிப்புடன் கூறியுள்ளனர் ரசிகர்கள்.

-என்வழி ஸ்பெஷல்




6 thoughts on “ரஜினியின் அரசியலைப் பேச கமலுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? – ரசிகர்கள் கொதிப்பு

  1. குமரன்

    நல்லவர், நம்மவர் போன்று வேஷம் கட்டும் கமலை நம்பவேண்டாம்.

  2. arulnithyaj

    ANNA Thats thamilil naan potta comment:

    அப்போ நீங்க DMK கூட்டணிக்கு பொருத்தமா இருப்பீர்களா ..ஆன்மீக நம்பிக்கை உள்ளவங்கெல்லாம் பிஜேபி கூட்டணிக்கு போய்டுவாங்களா ..முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ நண்பர்களும் ..காங்கிரஸ் நண்பர்களும் பிஜேபி கூட போய்டுவாங்களா ..கமலு சார் நீங்க சூப்பரான அரசியல் வியாதி ஆகிட்டிங்க ..ச்சேய்

  3. Rajagopalan

    Kamals Mission is to repair thalaivar name . that he is doing properly.
    Andava Edhirigalai nangal parthu kolgirom. Nanbargalidam erundhu thalaivarai kapatru…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *