BREAKING NEWS
Search

“ரஜினியை நான் அறிவேன்… என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்!”

“ரஜினியை நான் அறிவேன்… என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்!”

unnamed (2)

சென்னை: ரஜினியை நான் அறிவேன்… என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்.. எங்களுக்குள் அந்த புரிதல் உள்ளது, என்றார் கமல்ஹாஸன்.

சினிமா உலகில் இரு சிகரங்களாகத் திகழ்பவர்கள் ரஜினியும் கமலும். இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்பதிலும் மதிப்பதிலும் இளம் தலைமுறை கலைஞர்களுக்கே எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒருவருக்குச் சோதனை என்றாலும் கவுரவம் கிடைத்தாலும் உடனடியாக அதில் பங்கேற்கும் உன்னதமான நண்பர்களாகத் திகழ்கின்றனர்.

கடந்த முறை விஸ்வரூபம் படத்துக்கு பிரச்சினை வந்தபோது, ரூ 100 கோடியைக் கொட்டி படமெடுத்துவிட்டு, அதை வெளியிட முடியாத சூழலில் உள்ள கமலின் தவிப்பை நினைத்து மனம் கலங்குகிறேன், என அறிக்கை வெளியிட்டவர் ரஜினி.

கமல் பிறந்த நாள் அல்லது அவருக்கு விருதுகள் கிடைக்கும்போது முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்துதான் வரும்.

இப்போது கமல் பத்மபூஷண் விருது பெற்றிருப்பதால், அதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தாரா என்று நிருபர்கள் கமலிடம் கேட்டனர்.

அதற்கு கமல் அளித்த பதில், அவருக்கும் ரஜினிக்குமான அற்புதமான நட்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.

“ரஜினியை நான் அறிவேன்… என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தினாலும் எனக்கு ஒன்றே. அவருக்கும் நான் அப்படியே.  எங்களுக்குள் அந்த புரிதல் இருக்கிறது! அவர் கண்டிப்பாக வாழ்த்துவார். எதிலும் அவர் நிதானமாகத்தான் செயல்படுவார் என்பது எனக்கு தெரியும்,” என்றார்.




6 thoughts on ““ரஜினியை நான் அறிவேன்… என்னை அவர் அறிவார்.. அவர் கடைசியாக வாழ்த்தினாலும் முதலில் வாழ்த்தியதற்கு சமம்!”

  1. குமரன்

    விட்டுக் கொடுக்காமல் சொல்வதென்றால், அவர் வாழ்த்தி விட்டார் என்று சொல்லி இருக்க வேண்டும்.

    கடவுள் இல்லை என்று சொல்ல வில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன் என்று வசனம் வைப்பது போல இப்போதும் சொல்லி இருக்கிறார், குசும்பு இல்லாத வசனம் இவரிடம் கிடையாது.

  2. ramesh

    அதற்கு கமல் அளித்த பதில், அவருக்கும் ரஜினிக்குமான அற்புதமான நட்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.

  3. மிஸ்டர் பாவலன்

    //அதற்கு கமல் அளித்த பதில், அவருக்கும் ரஜினிக்குமான அற்புதமான நட்பை வெளிப்படுத்துவதாக இருந்தது.//

    அப்படி இருந்ததால் தான் வினோ அவர்கள் தனியாக கட்டுரை
    போட்டு அசத்தி இருக்கிறார்!

    குமரன் அவரது பதிலில் சறுக்கி இருக்கிறார் என நினைக்கிறேன்.
    “யானைக்கும் அடி சறுக்கும்!” என தமிழில் ஒரு பழமொழி உண்டு,
    அதனால் அவர் பதிலை, இந்த நல்ல வேளையில், நான் பெரிது
    படுத்த விரும்பவில்லை.

    தொலைக்காட்சியில் கமல், வைரமுத்து பேட்டிகளை நான்
    பார்த்தேன். கமல் நல்ல தமிழில் பேசுவார், ஆனால் அவரை விட,
    பல படி உயர்வாக, மிகத் திருத்தமான தமிழில், மிக அழுத்தமான
    தமிழில் வைரமுத்து பேசினார். பேச்சைக் கேட்டு அசந்து போனேன்!
    வைரமுத்து கவிதைகளை ஏன் உலக நாயகன், சூப்பர் ஸ்டார் ரசிக்கிறார்கள்
    என இப்போது புரிகிறது. என்னால் இது போன்ற தமிழில் பேச முடியாது.
    No chance. மலையாளம் கலந்து நான் பேசுவது யார் கேட்பார்கள் எனத்
    தெரியலை. ஹி ஹி ஹி!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  4. Ganesh

    தலைவர் ஏற்கனவே 14 வருஷத்துக்கு முன்னவே வாங்கிட்டார் !

  5. srikanth1974

    திரு.கமல்ஹாசன்.அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

    மேலும் இன்னும் பல உயரிய விருதுகள் அவருக்குக் கிடைக்க

    இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

    விரைவில் எங்கள் அன்புத்தலைவரும் திரு.கமல்.அவர்களுக்கு வாழ்த்துத்

    தெரிவிப்பார்.

  6. சுதந்திரன்

    கணேஷ், இதன் மூலம் தாங்கள் கூற வருவது என்ன?

    — சுதந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *