BREAKING NEWS
Search

கமல் ரசிகர்கள் இன்னும் பக்குவப்பட வேண்டும்…!- ஒரு ரஜினி ரசிகனின் கடிதம்

கமல் ரசிகர்கள் இன்னும் பக்குவப்பட வேண்டும்…! – ஒரு ரஜினி ரசிகனின் கடிதம்

 

மல் ஹாஸனின் ரசிகன் என்று கூறிக் கொண்டு இணையத்தில் கண்டபடி பொய்யைச் சொல்வதையே சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக தலைவர் ரஜினிக்கு எதிரான அவதூறுகளைப் பரப்புவதுதான் இந்த ஈனர்களின் வேலை.

அவர்களால் கமலுக்கு ஒரு ‘தம்பிடி’ (முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய நாணயம்) பிரயோசனமில்லை.

உண்மையில் கமல் ரசிகன் என்று கூறிக் கொள்பவனை விட, கமல் மீதும் அவர் புகழ் மீதும் அதிக அக்கறை காட்டுபவன் ஒரு ரஜினி ரசிகனே. இது 200 சதவீதம் மிகையற்ற உண்மை. ‘நம்ம தலைவரை உயர்வா பேசுறதா நினைச்சு, அவரோட மரியாதைக்குரிய போட்டியாளர் கமலை தப்பா பேசிடாதீங்கப்பா’ எனச் சொல்லி நாவடக்கம், அவையடக்கத்தோடு நடந்து கொள்பவன், ஒரு ரஜினி ரசிகன் மட்டுமே!

பத்திரிகை, மீடியாவில் கண்டபடி கமலை கலாய்த்திருப்பார்கள்.. அவர் பேச்சை கொச்சையாக வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் ரஜினி ரசிகன் அதிலும் மெய்ப்பொருள் காணப் பிரயத்தனப்பட்டிருப்பான். பக்குவமாக, ரொம்பவே ‘பாலிஷ்டாக’த்தான் அதைப் பற்றிப் பேசியிருப்பான்.

சண்டியரிலிருந்து இந்த உத்தமவில்லன் வரை, உதாரணம் ஒன்றா இரண்டா…

ஆனால் தன்னை கமலின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில ‘பன்னாடைகள்’ (கொஞ்சம் கடுமையான வார்த்தைதான்.. ஆனால் இவர்கள் இதை விட கேவலமான வார்த்தைகளுக்கு உரியவர்களே) பொறாமையில் ரஜினியை மோசமாகத் தாக்குவதை சமூக வலைத் தளங்களில் காண்கிறேன். எவர் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை.

அந்த நாதாரிகளுக்கு அதற்கான அருகதையும் இல்லை. ஒரு ரஜினி ரசிகனோடு ஒப்பிடும் அளவுக்கு தகுதி வாய்ந்தவர்களா இவர்கள்?

நெவர்!

ரஜினி ரசிகன் ஒரு ஜெம்… பகைவனுக்கும் இரங்கும் அருள் நெஞ்சம் அவனுக்கு.

ஆனால் அரைவேக்காட்டு கமல் ரசிகர்கள் சிலருக்கு, குறிப்பாக ட்விட்டர் போன்ற தளங்களில் பிதற்றித் திரியும் ‘சண்டாளர்’களுக்கு இதெல்லாம் தெரியுமா?

அடேய் அரைவேக்காடுகளே.. லிங்குசாமி என்ற அருமையான தயாரிப்பாளர், இயக்குநர்… கமலை நம்பியதால் நடுத்தெருவில் நிற்கிறார். கரைத் தேற்ற ஆளில்லை… பெருசா பேச வந்துட்டானுங்க லூசுப் பயலுக!

ஆனால்.. லிங்காவால் நஷ்டம் என்று வந்தார்களே.. அந்த மோசடிக்காரர்களை ஒரு விஷயம் மட்டும் செய்யச் சொல்லுங்கள். காலம் முழுக்க அவர்களுக்கு நான் அடிமையாய் கிடக்கிறேன்.

லிங்காவின் உண்மையான வசூல் கணக்கு.. முதல் நாளிலிருந்து, அடுத்த ஏழு நாட்கள் வரை வசூலித்த உண்மையான வசூல் கணக்கைக் காட்டும் தைரியம், நேர்மை, ஆண்மை எவனுக்காவது இருக்கிறதா? ‘ம்ஹூம்..’ சிங்காரவேலன் என்ற ‘அரைகுறை ட்ராமா ஆர்டிஸ்ட்’ உள்பட ஒருத்தனும் இப்போது வரமாட்டான்.

பாருங்க.. உத்தம வில்லன் ஓடவே இல்ல.. பெரும் நஷ்டம்… ஒரு தயாரிப்பு நிறுவனமே முடங்கி நிக்குது.

ஆனா.. நல்ல வசூலோட போன லிங்கா மீது அத்தனை அவதூறுகள்.

தமிழ் சினிமா எப்படி உருப்படும்? மொத்தமாய் அழிந்தாலும் கவலையில்லை எனக்கு என்ற மனநிலைதான் என் போன்ற ரசிகர்களுக்கு. ஆனால் அப்போதும் நம்ம கபாலிதான் கைகொடுத்து கரை சேர்க்கப் போகிறார்!

-ரஜினி ரசிகன்




10 thoughts on “கமல் ரசிகர்கள் இன்னும் பக்குவப்பட வேண்டும்…!- ஒரு ரஜினி ரசிகனின் கடிதம்

 1. arulnithyaj

  அண்ணா இவர்களை பத்தி பேசி என்ன ஆகா போகுது ..திருந்தாத ஜென்மங்கள் நாம் கமல் சார் மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம் ..சிலர் “சண்டியர்” தனமா எழுதுறோம்ணுட்டு தலைவர் பத்தி கமல் sitela தனி லிங்கே வசுருங்காங்க ..twitterla இன்னும் கேவலமா நடந்துக்குவாங்க ..சீ..அதனால தலைவர் குறைந்து விட போவதில்லை , கமல் சார் தலைவரை விட உயர்ந்து விட போவது இல்லை

 2. Tiger

  சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. கமல் பிறந்த நாள் விழா! தமிழகத்திலிருந்து பல்வேறு ஊர்களில் இருந்து திரண்டு வந்திருந்த ரசிகர்களுக்கு அறிவை புகட்டும் நோக்கத்தில் அதை ஒரு இலக்கிய விழாவாக முன்னெடுத்திருந்தார் கமல். முதல் கட்டமாக விசில் கூடாது என்று கட்டளையிடப்பட்டது. (இருந்தாலும் கமல் மேடையேறும் போது கட்டுப்படுத்த முடியாத ரசிகர்கள் மேகங்கள் கலைந்தோடுகிற அளவுக்கு விசிலடித்து தள்ளினார்கள்) அதற்கப்புறம் விழா ஸ்டார்ட் ஆனது.

  அன்றைய தினம் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பு சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தவர் பட்டிமன்ற பேச்சாளரும், சிறந்த இலக்கியவாதியுமான பாரதி பாஸ்கர். அவர் ஒரு பெண்மணி என்பதும், அது சினிமா மேடை என்பதும் ரசிகர்களை சிலரை என்ன மனநிலைக்கு கொண்டு சென்றதோ? அவரையும் ஒரு நடிகையாக பாவித்து அவர் பெயரை சொல்லும்போதெல்லாம் சற்று ஓவராகவே கைதட்டி மகிழ்ந்தார்கள். பிரச்சனை அப்போதெல்லாம் இல்லை. பாரதி பாஸ்கரை பேச அழைத்தார்கள். அவர் எழுந்து போடியம் அருகே செல்வதற்குள், மாடியில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகர், வினோதமான சற்றே கேவலமான ஒரு ஒலியை எழுப்ப, அங்கிருந்த அமைதியை கிழித்த அந்த சப்தம் எல்லாரையும் சிரிக்க வைத்துவிட்டது.

  இதுபோன்ற பல்லாயிரம் மேடைகளை பார்த்தவர் பாரதிபாஸ்கர். தன் உரையை எவ்வித தயக்கமும் இன்றி ஆரம்பித்தார். அதற்கு இடையில் கமல் செய்ததுதான் இந்த செய்தியின் சாரம்சம். அற்புதமான விஷயமும் கூட. ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த அந்த கூட்டத்தில் குறிப்பிட்ட அந்த இளைஞரை மட்டும் கண்டுபிடித்துவிட்டார். தனது ரசிகர் மன்ற தலைவரிடம் சொல்லி அவரை அழைத்து வர வைத்துவிட்டார். பாரதி பாஸ்கர் பேசி முடிக்கவும், அந்த இளைஞர் மேடைக்கு வரவும் சரியாக இருந்தது.

  மைக்கை பிடித்த கமல், “நீங்கள்லாம் விசிலடிச்சான் குஞ்சுகள் என்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காகதான் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற இலக்கியவாதிகளை அழைத்து உங்கள் பேச வைக்கிறேன். என் நோக்கத்தையே இந்த இளைஞர் சிதைத்துவிட்டார். பாரதி பாஸ்கரிடம் அவர் இப்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்பார்” என்று கூற, அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அந்த இளைஞர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார் பாரதி பாஸ்கரிடம்

 3. Gokul

  அருமை வினோ
  சில கமல் ரசிக லூசுங்க இன்டர்நெட்ல ரஜினிய பத்தி கண்ட படி எழுதுராணுக .
  இவனுங்க திருந்தவே மாட்டனுங்க

 4. Rajagopalan

  Dear Mr Shankar

  I think this article is not necessary in our site… Its my honest opinion.
  May be this is posted because of sivakarthikeyan issue i guess.
  I dont think it would had been done by kamal fans.
  Its all madeup i guess.

  ____________

  இல்லை. சிவகார்த்திகேயனுக்காக எழுதப்பட்டதல்ல இந்த கட்டுரை. இணையத்தில் கமல் ரசிகர்கள் என்ற பெயரில் பொறுக்கித்தனமாக சிலர் எழுதி வருகிறார்கல். அவர்களுக்காக.

  -என்வழி

 5. jegan N

  ரஜினிகிட்ட மோதி ஜெய்க்க முடியாத பொடுசுக இப்ப கிழடு கட்டையாகி ரஜினி முருகன் கிட்ட மோதுறாங்க #போய் சுகர் மாத்திரை போட்டுட்டு படுங்கப்பு…..

 6. Manga madayan

  “உண்மையில் கமல் ரசிகன் என்று கூறிக் கொள்பவனை விட, கமல் மீதும் அவர் புகழ் மீதும் அதிக அக்கறை காட்டுபவன் ஒரு ரஜினி ரசிகனே.”
  – Very core sir,we feel like he (Kamal) is our best friend..

 7. தமிழ்ச்செல்வன்

  திரு வினோ அவர்களே, உங்கள் கருத்தில் நான் 100% உடன்படுகிறேன்.
  ஒன்னுமில்லை, அந்த நாதாரி பயல் அசிங்கம் பிடித்த சிங்காரவேலன் நாய், ஒரு தேவாங்கு முஞ்சியிடம், தான் வாங்கிய காசுக்கு மேல குறைக்கும் போதும் நாம் அமைதி தான் காத்து வந்தோம். பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு அபிப்ராயம் உள்ளது. அது என்னவென்றால் ரஜினி ரசிகர்கள் என்றால் காட்டணுங்கள், முட்டாள்கள் என்று. அதுவே கமல் ரசிகர்கள் என்றால் அவர்கள் அறிவுஜீவி என்று பெயர் உண்டு. ஆனால், உண்மையில் ரஜினி ரசிகர்கள் தான் அன்றும் இன்றும் என்றும் நம் தலைவர் காட்டிய அமைதி வழியில் நடப்பவர்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
  (நீங்கள் சொல்ல விரும்பாததை நான் சொல்லுகிறேன். அந்த சண்டியர் கரன் என்றும் கமலை பிடித்த சனியின் வெப்சைட்-ஐ இப்போதும் யாரும் சீந்த கூடஇல்லை. கடை விரித்தார் கொள்வார் இல்லை என்ற நிலையில் உள்ளான் அந்த ****** பயல்)

 8. DEEN_UK

  நெத்தியடி பதிவு ! தமிழ் செல்வன் சொல்வதும் உண்மை! கமல் ரசிகர்கள் அறிவுஜீவிகள் ! (மெத்த)படித்தவர்கள்! ரஜினி ரசிகர்கள் படிக்காதவர்கள்! முட்டாள்கள்!! இப்படி தான் நம்மை சொல்லி வந்தார்கள்! இப்போது அதற்கு காலம் பதில் சொல்லி இருக்கிறது! யார் கண்ணியமானவர்கள் என்று!!

 9. மிஸ்டர் பாவலன்

  கமல் ரசிகர்கள் அறிவு ஜீவிகள் என்பது உண்மை.

  எத்தனையோ படங்களில் கமல் சாவது போல் க்ளைமாக்ஸ்
  அமைக்கப் பட்டிருந்தாலும் அவற்றை மாற்றாமல் அப்படியே
  வைத்து கமல் துணிந்து நடித்தார். பல சோதனை முயற்சிகளை
  கமல் அவர் படங்களை எடுத்துள்ளார். குருதிப்புனல், மகாநதி,
  குணா, ஆளவந்தான், பாபநாசம் போன்ற படங்கள் பிற நடிகர்களுக்கு
  சூட் ஆகாது. கமல் உலக நாயகன் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

  மதுரையில் சிவகார்த்திகேயன் தாக்குதல் மிகவும் கண்டனத்திற்கு
  உரியது. உண்மையான கமல் ரசிகர்கள் இது போன்ற செயல்களில்
  ஈடுபட மாட்டார்கள் !

  நன்றி !

  -== மிஸ்டர் பாவலன் ==-

 10. srikanth1974

  \\மதுரையில் சிவகார்த்திகேயன் தாக்குதல் மிகவும் கண்டனத்திற்கு
  உரியது. உண்மையான கமல் ரசிகர்கள் இது போன்ற செயல்களில்
  ஈடுபட மாட்டார்கள் !//

  திரு.மிஸ்டர் பாவலன்.அவர்களின்’கருத்து காயம் பட்ட மனதுக்கு
  ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
  திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கு -நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *