BREAKING NEWS
Search

கல்யாண சமையல் சாதம் – எதுக்கு இப்படியெல்லாம் சினிமா எடுத்து கொல்றாங்க!

கல்யாண சமையல் சாதம் – விமர்சனம்

Kalyana_Samayal_Sadham_Movie_Posters
கெட்ட வார்த்தை, அதுவும் ஆங்கிலத்தில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளை அதிகம் உபயோகித்திருக்கும் படத்தை நவீன சினிமா என கொண்டாடுவது வாடிக்கை ஆகிவிட்டது.

தமிழில் அப்படி வந்திருக்கும் மோசமான படங்களில் ஒன்றுதான் கல்யாண சமையல் சாதம்.

அருவருப்பான கதை, கேவலமான வசனங்கள், வெறுப்பேற்றும் காட்சிகள், கதாபாத்திரங்கள்… எந்த வகையிலும் பார்வையாளரைக் கவராத குப்பை இந்தப் படம்.

எந்த சாதியக் குறியீடும் இல்லாத பின்னணி, பொதுவான பாத்திரங்களைக் கொண்டே கூட எடுத்திருக்க வேண்டிய இந்தப் படத்தை பக்கா பிராமணப் பின்னணியை வைத்து எடுக்க வேண்டிய அவசியமென்னவோ… தங்கள் சுயசாதிப் பெருமையைப் பீற்றிக் கொள்ள ஒரு கூட்டம் மீண்டும் கிளம்பிவிட்டது போலிருக்கிறது!

லேகா வாஷிங்டனை எட்டுமாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகன் பிரசன்னா. ஒரு நாள் லேகாவும் பிரசன்னாவும் தண்ணியடித்துவிட்டு போதையில் தப்பு பண்ணப் பார்க்கிறார்கள்.  ஆனால் பிரசன்னாவுக்கு ஆண்மை எழுச்சி இல்லாமல் போகிறது (படத்தில் இடம்பெறும் வசனம்!)

தனக்கு ஆண்மையில்லாமல் போய்விட்டதே என்ற பயத்தில், ஜோசியன், அதிர்ஷ்டக் கற்கள் கலர் கலராக கண்டதையும் விற்பவன், சிட்டுக்குருவி லேகியன், பாலியல் மருத்துவர் என எல்லாரையும் பார்க்கிறார்.

மன அழுத்தம்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்து, அழுத்தம் குறைய ஸ்மைலி பந்தை அமுக்க ஆரம்பிக்கிறார், க்ளைமாக்ஸ் வரை.

கல்யாணம் நெருங்கும்போது பிரசன்னா – லேகா இடையில் சண்டை. அதில் ‘போடா உஸ்’ என திட்டுகிறார் லேகா. கோபித்துக் கொள்ளும் பிரசன்னா, நண்பனின் அச்சுப் பிச்சு அட்வைசுக்குப் பின், லேகாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சாரி என்கிறார். அப்படியே கல்யாணமும் முடிகிறது… பிரசன்னாவுக்கு ஆண்மை திரும்பியதா இல்லையா என்பதுதான் இந்த கேவலமான கதைக்கு க்ளைமாக்ஸ்.

பிராமண சாப்ட் வேர் மாப்பிள்ளை வேடம் பிரசன்னா. கச்சிதமாக பொருந்துகிறது என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன?  குறித்த சாதியின் அடையாளத்தோடு வலம் வரும் எவரும் சினிமாவில் குப்பை கொட்ட முடியாது. பிரசன்னாவுக்கு இது மிகவும் பொருந்தும்.

லேகா வாஷிங்டன்… இவரையெல்லாம் ஒரு ஹீரோயினாக நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. முகமும் லட்சணமாக இல்லை. இதுல மூக்குத்தி வேறு. பார்க்க சகிக்கவில்லை. இவர் சிரிக்கும் காட்சிகளைப் பார்க்க ரொம்பவே பயமாக இருக்கு!

கோபித்துக் கொண்ட இவரை சமாதானப்படுத்த சில மணி நேர இடைவெளியில் கடற்கரையையே வண்ண விளக்குகளால் அலங்கரித்து, வாண வேடிக்கை நடத்தி, தேனிலவு படகில் பயணித்து திருமணம் செய்கிறாராம் பிரசன்னா. ‘இந்த மூஞ்சிக்கு இதெல்லாம் ஓவர்டா டேய்’ என கமெண்ட் பறக்கிறது!

படத்தில் இடம்பெறும் அத்தனை பாத்திரங்களும் கிடைக்கிற கேப்பிலெல்லாம் கேவலமான அர்த்தம் தரும் வசனங்களை ஆங்கிலத்தில் பேசுகின்றன.

கடைசி காட்சி வரை ஒருவித ஒவ்வாமையைத் தருவதுபோலவே காட்சிகளும் வசனங்களும்.

நல்லா படிச்சவன், வசதியானவன், ஜாதியில உசந்தவன்னு சொல்லிக்கிறவனெல்லாம் ஏதோ ஒரு கேவலத்தை சினிமா என எடுத்துவிட்டு, அதை ‘ஆஹா எப்பேர்ப்பட்ட கலை’ என்று வியப்பவர்களாகத்தான் உள்ளார்கள்!

நாம் சொன்ன இந்த வரிகள் கல்யாண சமையல் சாதம் குழுவினருக்கு சாலப் பொருந்தும்!

-என்வழி
7 thoughts on “கல்யாண சமையல் சாதம் – எதுக்கு இப்படியெல்லாம் சினிமா எடுத்து கொல்றாங்க!

 1. ananth

  என்வழியின் சாதி வெறி உங்கள் பதிவுகளில் நன்கு தெரிகிறது. ஏன், மற்ற மோசமான படங்களை விமர்சிக்கும்போது அவர்கள் சாதிகளை விமர்சிப்பதில்லை? ஏன், பிராமணன் மட்டும் என்ன இளக்காரமா? சினிமாவை மட்டும் விமர்சித்தால் போதும் . அதுதான் உங்கள் மூஞ்சிக்கும் அழகு. பார்ப்போம் , இந்த கமெண்ட் வருகிறதா என்று .
  ___________

  நிச்சயம் வராது.

  வேறு எந்த சாதியினரும் இப்படி கேவலமாக தங்கள் சாதியை உயர்த்திப் பிடித்து படமெடுப்பதில்லை. வேறு எந்த சாதியினராலும் ஒடுக்கப்பட்டவர்கள் இந்த அளவு பாதிக்கப்பட்டதில்லை. சுயசாதிப் பெருமையை வெட்கமே இல்லாமல் இப்படி உயர்த்திப் பிடித்து படமெடுத்ததற்காகவே இவர்களை போட்டுத் தள்ள வேண்டும்.

  என்வழிக்கு சாதி வெறி ஒருபோதும் இல்லை. பாதிக்கப்பட்டவன் பிராமணனாக இருந்தாலும் அவனை ஆதரித்தே நாம் எழுதி வருகிறோம்.

  -என்வழி

 2. anbu patrison

  we are telling to update this week kumudam regarding rajini matter but you are talking about other matter this is not important for us to interfere in others matter. Same you did for ajith movie too this is not good for us and for rajini fans, cinema is a entertainment and each one will have there own ideas. Please Sir concentrate on our super star. Its my request.

 3. ananth

  ‘வேறு எந்த சாதியினரும் இப்படி கேவலமாக தங்கள் சாதியை உயர்த்திப் பிடித்து படமெடுப்பதில்லை. வேறு எந்த சாதியினராலும் ஒடுக்கப்பட்டவர்கள் இந்த அளவு பாதிக்கப்பட்டதில்லை. சுயசாதிப் பெருமையை வெட்கமே இல்லாமல் இப்படி உயர்த்திப் பிடித்து படமெடுத்ததற்காகவே இவர்களை போட்டுத் தள்ள வேண்டும்’

  – இது உங்கள் அறியாமையே காட்டுகிறது. இவை போன்ற கட்டுரைகள் வெறும் sensationilism . நீங்கள் நடுநிலயனவர் என்று கூறுவது நல்ல ஜோக்.

 4. Sankaranarayanan

  நமக்கு எதற்கு தலைவா மற்றவங்க பிரச்சனை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.

  தலைவர் பற்றி நல்ல செய்தி சொல்லுங்க……

  நன்றி

 5. துரைசிங்கம்

  அய்யருமாரு படம் எடுத்தா அய்யருங்க பாக்கட்டும்லே. தேவரு எடுத்த்த தேவமாரு பாக்கட்டும்.. நாடாரு எடுத்தா நாடாக்கமாரு பாக்கட்டும். அப்புறம் சினிமா நல்லா வெளங்கிடும்.. பொழப்பத்த பசங்களா ஏண்டா சாதிய புடுச்சி தொங்குறிய…

 6. Barath

  இதையே வேறு ஒரு சாதியை வைத்து எடுத்து இருந்தால் என்ன அய்யா சொல்லி இருப்பீர்கள்? தமிழகத்தில் ஒரு பெரிய போராட்டமே நடந்திருக்காது? பிராமணர்கள் பிள்ளை பூச்சிகள். ஆனால் தங்கள் விமர்சனம் மிகவும் கீழ்த்தரமாக போய் கொண்டு இருக்கிறது. படத்தை பற்றி மட்டும் விமர்சிக்காமல் நடிகையின் முகத்தையும் மூக்குத்தியையும் பற்றி விவரிப்பது சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகிறது. எப்பொழுது தங்களிடம் இருந்து ஒரு matured ஆன விமர்சனத்தை எதிர்பார்ப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *