BREAKING NEWS
Search

விஜய்யின் துப்பாக்கியை ‘நிறுத்திய’ புதியவர்களின் கள்ளத் துப்பாக்கி!

விஜய்யின் துப்பாக்கியை ‘நிறுத்திய’ புதியவர்களின் கள்ளத் துப்பாக்கி!

விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல… விஜய்யே கூட இந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஒரு சின்ன படம், தடாலடியாக தனது பெரிய பட்ஜெட் படத்தைத் தடுத்துவிடும் என்பதை!

தலைப்பில் இருந்த ஒற்றுமை மட்டுமல்ல… அந்த தலைப்பின் டிசைன் கூட அப்படியே நகலெடுத்த மாதிரி இருந்ததுதான் இந்த தடைக்கு முக்கிய காரணம்.

3 ஆண்டுகளுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன்.
நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர்தான் ரவிதேவன்.

படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்’ என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.

படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிட்டனர். இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்து அறிவித்தனர்.

இந்த செய்தி வெளியானதுமே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர் ரவிதேவனும் அவரது குழுவினரும். ஆனால் அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்த எஸ் ஏ சந்திரசேகரனும் துப்பாக்கி தயாரிப்பாளர் தாணுவும் இந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லையாம்.

அதன் பிறகு தங்களின் நலம் விரும்பிகளிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் அறிவுரைப்படிதான் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “நாங்கள் ஆரம்பத்திலிருந்தே துப்பாக்கி படத் தலைப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்தோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இவர்களால் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியம் அவர்களுக்கு.

கடந்த மே 1-ம் தேதி நாங்க ஒட்டின போஸ்டர்கள் மீதே அவர்கள் துப்பாக்கி போஸ்டரையெல்லாம் ஒட்டி இம்சை குடுத்தாங்க. அதுக்கப்புறம்தான் எங்களை தலையெடுக்க விடமாட்டாங்கன்னு புரிஞ்சிக்கிட்டோம். எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டது துப்பாக்கி.

வேறு வழியின்றி சட்டத்தின் துணையை நாடினோம். இரண்டு தலைப்புகள், அதன் டிசைன்களைப் பார்த்த நீதிபதி எங்கள் பக்கம் நியாயமிருந்ததை ஒப்புக் கொண்டு தடை விதித்துள்ளார். எங்கள் படம் காப்பாற்றப்பட்டுள்ளது,” என்றார்.

இப்போது விஜய்யின் தயாரிப்பாளர் தீர்ப்பை எதிர்க்கப் போகிறாரா… புதிய தலைப்பை வைக்கப் போகிறாரா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்தப் படத்துக்கு இது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல.

பிரச்சினை கள்ளத்துப்பாக்கிக்குதான். முற்றிலும் புதியவர்கள், சின்ன பட்ஜெட் படம்… ஆனாலும் இப்போதைய விவகாரம் காரணமாக கள்ளத்துப்பாக்கிக்கு பெரிய பப்ளிசிட்டி. இதைப் பயன்படுத்தி தரமான படமாக வந்தால் கள்ளத்துப்பாக்கிக்கும் நல்ல மார்க்கெட் கிடைக்கும். இல்லையேல் காணாமல் போகும்!

-என்வழி செய்திகள்
8 thoughts on “விஜய்யின் துப்பாக்கியை ‘நிறுத்திய’ புதியவர்களின் கள்ளத் துப்பாக்கி!

 1. enkaruthu

  என்ன கொடுமை சார் இது.முதலில் ஆரம்பித்தவரே கள்ளத்துப்பாக்கி என்று பெயர் வைத்திருக்கிறார்.இவர் என்னமோ license வாங்கின நல்ல துப்பாக்கி போல் பெயரை அறிவித்திருக்கிறார்கள்.

 2. enkaruthu

  சார் என்னதான் நடத்துச்சு இந்த ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்தில்.போன் பண்ணும் அனைவரும் மாணவிகளை கூட இப்படி ஈவு இறக்கம் இல்லாமல் அடிகிரார்களே என்று கேட்கிறார்கள்.இந்த பிரச்சினை ரொம்ப சென்சிடிவாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நினைக்கிறேன்.

 3. குமரன்

  நல்ல வேடிக்கை…

  கள்ளத் துப்பாக்கிக்கு நல்ல துப்பாக்கி என்று பெயர் …
  ஒரிஜினல் துப்பாக்கிக்குக் கள்ளத் துப்பாக்கி என்று பெயர் …

 4. பாவலன்

  //கள்ளத் துப்பாக்கிக்கு நல்ல துப்பாக்கி என்று பெயர் …
  ஒரிஜினல் துப்பாக்கிக்குக் கள்ளத் துப்பாக்கி என்று பெயர் …/// (குமரன்)

  எனது புதிய குறள்:
  `டப்’பாக்கி துப்பாக்கியை தப்பாக்கி கள்ளத்
  துப்பாக்கி போட்டது தடை.

  சாலமன் பாப்பையா உரை:

  ‘டப்’பாக்கி = டப்பிங் படமாக செய்து வரும் குருவியின்
  (‘டப்பா’க்கி – சிலேடை ..`டப்பா படமாகிய’ எனவும் பொருள் கொள்ளலாம்)
  துப்பாக்கியை = புதிய படமாகிய துப்பாக்கியை
  தப்பாக்கி = release செய்ய விடாமல், காப்பி அடித்ததை சுட்டிக் காட்டி
  கள்ளத் துப்பாக்கி = உலக நாயகனின் உதவியாளரின் குறும்படமாகிய
  கள்ளத் துப்பாக்கி
  போட்டது தடை = கேஸ் தாக்கல் செய்து கோர்ட் போட்டது தடை.

  நாளை சந்திப்போமா?

  -பாவலன்

 5. குமரன்

  பாவலன் நல்ல “டைமிங்” குறள்….

  எப்பாக்கி வைப்பார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
  குறள் பாக்கி வைப்பவருக்கு.

  …. என்ற வகையில் உடனடியாகக் குறளைப் பதிந்திருக்கிறீர்கள்,
  நன்றி, ஒவ்வொரு நாளும் சந்திப்போம்!

 6. பாவலன்

  குமரனின் கருத்திற்கு நன்றி.

  “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
  துப்பாயத் தூ உம் மழை”
  என்ற வான் சிறப்பு குறள் பாணியில் எழுதலாம் என முனைந்தேன்.

  “துப்பாக்கி போட்டது தடை” என்ற இரண்டாவது வரியை முதலில்
  எழுதினேன். அதனால் ‘கள்ள’ என்ற வார்த்தை நாலாவது சீரில்
  அமர்ந்தது.
  ———- ————- ———– கள்ளத்
  துப்பாக்கி போட்டது தடை.

  முதல் மூன்று சீர்களை எழுதுவது சிரமமாக இருந்தது. யோசித்ததில்
  “துப்பாக்கியை தப்பாக்கி” என எழுதினேன். அதையும் சேர்த்தேன்.

  ———- துப்பாக்கியை தப்பாக்கி கள்ளத்
  துப்பாக்கி போட்டது தடை.

  முதல் சீர்? விஜய்யின், தளபதியின், குருவியின் என எவ்வளவோ சொல்
  இருந்தாலும் ஸ்ரீமான் பாவலனுக்கு அது அழகில்லையே? உடனே வந்தது
  வார்த்தை – டப்பாக்கி. வெட்டி ஓட்டினேன். அழகாய் வந்தது குறள்
  (எதுகை மோனையுடன்).

  டப்பாக்கி துப்பாக்கியை தப்பாக்கி கள்ளத்
  துப்பாக்கி போட்டது தடை.

  பொருள் புரியவில்லை என்றால்? உடனே சாலமன் பாப்பையா
  பாணியில் உரை எழுதினேன். நான் எத்தனையோ பேரை மிமிக்ரி
  செய்ததுண்டு (பெரிய லிஸ்ட்). அவர்களில் பாப்பையா ஐயாவும் ஒருவர்!
  நன்றி.

  -பாவலன்

 7. enkaruthu

  //`டப்’பாக்கி துப்பாக்கியை தப்பாக்கி கள்ளத்
  துப்பாக்கி போட்டது தடை.//

  நல்ல கற்பனை பாவலன் அவர்களே.

 8. பாவலன்

  காவலன் படத்தைப் பற்றி பாவலன் எழுதிய பாடலிற்கு
  நாவலன் என் கருத்து அவர்களின் கருத்துக்கு நன்றி.

  -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *