BREAKING NEWS
Search

கலாம் என்றால் ‘கலகம்’ என்று பொருள்… – கருணாநிதியின் கமெண்ட்!

கலாம் என்றால் கலகம் என்று பொருள் – கருணாநிதியின் கமெண்ட்!

 

சென்னை: கலாம் என்பதற்கு தமிழில் கலகம் என்று ஒரு பொருள் உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்யும் வேட்பாளரையே திமுக ஏற்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.

இது குறித்து இன்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறாரே?

பதில்: நான் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

கேள்வி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களில் முன்னணியில் இருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங் கட்சி வெற்றி பெறுவதற்கும், மற்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி தோற்பதற்கும் என்ன காரணம்?

பதில்: வெற்றி தோல்விதான் காரணம்.

கேள்வி: சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களிலும், தற்போது ஆந்திர இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தோல்வி எதிரொலிக்குமா?

பதில்: வெற்றி தோல்வியை எதிரொலிக்க முடியாது.

கேள்வி: தே.மு.தி.க. புதுக்கோட்டையில் திமுக ஆதரவுடன் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே?

பதில்: நான் அதைப்பற்றிப் பேசத் தயாராக இல்லை.

கேள்வி: அதிமுக முன்பு தனது வேட்பாளராக சங்மா பெயரைக் கூறியது. ஆனால் நேற்று அத்வானியைச் சந்தித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து சங்மாவை தற்போது அதிமுக கைவிட்டு விட்டதாக தகவல் சொல்லப்படுகிறதே?

பதில்: தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

கேள்வி: அப்துல் கலாம் தான் வேட்பாளர் என்று மம்தா பானர்ஜி சொல்லியிருக்கிறாரே?

பதில்: கலாம் என்பதற்கு தமிழில் கலகம் என்றும் ஒரு பொருள் உண்டு. எப்படியோ குடியரசு தலைவர் தேர்தலிலும் கலகம் உருவாகியிருக்கிறது.

கேள்வி: அந்தக் கலகம் காரணமாக திமுகவின் நிலைப்பாடு என்ன ஆகும்?

பதில்: நாங்கள் ஏற்கனவே சொன்னதில் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேர்மையான மனிதர் என்று சொல்லப்படும் ஏ.கே.ஆண்டனி சென்னைக்கு வந்து என்னிடம் பேசியிருக்கிறார். சோனியா அனுப்பி அவர் என்னிடம் சொல்லிய தகவலுக்கு நான் அப்போதே ஆதரவு அளித்திருக்கிறேன். அந்த ஆதரவிலிருந்து திமுக பின் வாங்காது. முதலில் ஒருவரைச் சொல்லிவிட்டு பிறகு நாங்கள் மாற மாட்டோம் என்றார் கருணாநிதி.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முதலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கருணாநிதியுடன் தான் ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் சார்பில் பிரணாப் முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன. இதில் சோனியா யாரை முடிவு செய்தாலும் ஓ.கே. என்று கருணாநிதி, ஆண்டனியிடம் கூறியிருந்தார்.

இதையடுத்து நிலைமை மாறியது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்களை முன் மொழிந்து குழப்பம் ஏற்படுத்தினார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் திருவாரூரில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் குழப்பம் நிலவுகிறது. இதனால் எங்களது ஆதரவு யாருக்கு என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.

இந் நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்தார் கருணாநிதி அளித்த பேட்டியில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு யாருக்கு என்று என்னைச் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் சொல்லியிருக்கிறேன். அன்றைக்குச் சொன்ன சொல்லில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக அந்தோனி மூலமாக சோனியா காந்தி எனக்குச் சொல்லியிருந்தார். அதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. யார், எவர் என்று என்னைக் கேட்காதீர்கள். அப்போது நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார் கருணாநிதி.

அதே போல காங்கிரஸ் முடிவு செய்யும் வேட்பாளரை ஆதரிப்போம் என சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

-என்வழி செய்திகள்

 




53 thoughts on “கலாம் என்றால் ‘கலகம்’ என்று பொருள்… – கருணாநிதியின் கமெண்ட்!

  1. அமானுல்லா, துபாய்

    இஸ்லாமியர்களுடைய பெயர்கள் அனைத்துமே அரேபிய சொல்லை
    அடிப்படையாக கொண்டு தான் அமைந்திருக்கும் என்பதில் யாருக்கு
    எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. அதே போல் தான் அப்துல் கலாம்
    என்பதும் அரேபிய சொல் தான். அப்துல் என்ற அரேபிய சொல்லுக்கு
    “பணிவானவன்/தாழ்மையானவன்” என்று பொருள். கலாம் என்ற
    வார்த்தைக்கு “பிரசங்கம் செய்பவன்/பேச்சாளன்” என்று பொருள். ஆக
    அப்துல் கலாம் என்ற அரேபிய சொல்லுக்கு “பணிவாக பிரசங்கம்
    செய்பவன் / பணிவான பேச்சாளன்” என்று தான் உண்மையான தமிழ்
    பொருள்.

    கடந்த 45 ஆண்டுகளாக இசுலாமியர்களை பசப்பான வார்த்தைகளால் பேசி
    நம்ப வைத்து அவர்களுடைய வாக்குகளை பெருவாரியாக தொடர்ந்து
    பெற்று வரும் கருணாநிதி காயிதே மில்லத் காலத்திலிருந்து இசுலாமிய
    இயக்கங்களை ஒற்றுமையாக செயல்பட விட்டதில்லை. இவ்வளவு
    நாட்களாக இசுலாமியர்களின் முதுகுக்கு பின்னால் துரோகம் செய்து
    வந்தவர் இன்று ஒரு இசுலாமிய பெயரினை இழித்து கூறியதன் மூலம்
    எங்கள் முகத்தில் கரியினை பூசிவிட்டார். கருணாநிதியின் மூச்சு காற்றில்
    கூட ஆயிரமாயிரம் சுயநல வாடை கலந்து இருக்கும் என்பதை
    துரைமுருகன் போன்றவர்களின் மனசாட்சி நிச்சயம் மறுக்காது.
    அது போல தான் இது போன்ற கருத்தினையும் சாட்சாத் தனக்காகவும்
    கண்டிஷன் பெயிலில் உள்ள தன் மகளுக்காகவும் தான் நிச்சயம்
    கூறியிருப்பார்.

    நண்பர்கள் யாரும் நான் மத வாதத்தினை கையில் எடுக்கிறேன் என
    தவறாக எண்ண வேண்டாம். அப்துல் கலாம் என்பவர் இந்த நாட்டின்
    சொத்து. அனைத்து தரப்பட்ட மக்களின் அன்பை பெற்றவர்.

    கருணாநிதிக்கு அப்துல் கலாம் மீது தனிப்பட்ட வெறுப்பு இருக்கலாம்.
    அதற்காக அவரை தூற்றுகிறேன் என்று இசுலாமியர்களுடைய
    பெயர்களை புண்படுத்த வேண்டாம்.

    -அமானுல்லா, துபாய்

  2. மு. செந்தில் குமார்

    நண்பர்கள் யாரும் நான் மத வாதத்தினை கையில் எடுக்கிறேன் என
    தவறாக எண்ண வேண்டாம். அப்துல் கலாம் என்பவர் இந்த நாட்டின்
    சொத்து. அனைத்து தரப்பட்ட மக்களின் அன்பை பெற்றவர்.

    – உங்கள் உணர்வு நியாயமானதுதான். தவறாக எண்ண ஒன்றுமில்லை.

  3. Ganesh Shankar

    தமிழின உணர்வு இவருக்கு உண்மையிலயே நிறைய இருக்கிறது.
    ஒருவருக்கு தான் ஆதரவு தரவில்லை என்றாலும் கூட சும்மா இல்லாமல் இதே மாதிரி கேவலமான,நாகரீகமற்ற செயலை செய்ய கூடிய ஒரே தன்மான தமிழர் இவர் தான்.

    ஆயிரம் முறை,வட நாடு,வட நாட்டவர்கள் என்று வெறியை தனது(தனது குடும்பம்) சுயலாபத்துக்கு தூண்டி விட்டு அதன் மூலம் தமிழன் முன்னேற வேண்டும் அது,இது என்று மாயை செய்பவர்,இன்று என்ன சொல்லுகிறார் பாருங்கள் ஒரு தமிழரை பற்றி.

    இப்போது இவர் ஆதரவு தரும் பிரணாப் பாவம் தென் இந்திய,சுயமரியாதை இயக்கத்திலே வளர்த்தெடுத்த பிள்ளை போலவும்.

    என்ன செய்வது எல்லா விடயத்திலும் இவருக்கு இருக்கும் இரட்டை நாக்கு.
    அதுவும் மக்களின் உணர்ச்சி கலந்த விடயங்கள் எல்லா வற்றிலுமே இவருக்கு இரு நிலைப்பாடு இல்லாமல் இல்லை.
    அது எதுவாக இருக்கட்டும்.
    தமிழை சார்ந்ததாக இருக்கட்டும்,நாட்டை சார்ந்ததாக இருக்கட்டும்,மதத்தை சார்ந்ததாக இருக்கட்டும்.எதை எடுத்தாலும்.

    எப்பேர்பட்ட மனிதர் கலாம்,அவரை மதம் சார்ந்தோ,மொழி சார்ந்தோ கூட பார்க்காமல் சாதரணமாகவே நம் நாடு மனிதர்கள் எல்லாரும் வாழும் நல்லவராக பார்பவரை,இவ்வளவு விஷமத்தனமாக நையாண்டி செய்ய முயல்கிறார்.எவ்வளவு கொடூர புத்தி இந்த வயதில்.
    மாமனிதரின் பெயரை எவ்வளவு கேவலபடுத்த பார்க்கிறார்.

    இதிலிருந்து எல்லாம் பொது மக்களும், நடு நிலையலர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்,இவர் எப்படி நாகரீகத்தை கடைபிடிக்கிறார் பொது இடத்தில என்று.

  4. பாவலன்

    ///எப்பேர்பட்ட மனிதர் கலாம்,அவரை மதம் சார்ந்தோ,மொழி சார்ந்தோ கூட பார்க்காமல் சாதரணமாகவே நம் நாடு மனிதர்கள் எல்லாரும் வாழும் நல்லவராக பார்பவரை,இவ்வளவு விஷமத்தனமாக நையாண்டி செய்ய முயல்கிறார். ./// (கணேஷ் ஷங்கர்)

    எல்லாம் பதவி படுத்தும் பாடு !!!

    உங்கள் கருத்தையும், நண்பர் அமானுல்லா கருத்தையும் நான் ஏற்கிறேன்.

    கலைஞர் ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் போட்டிக்கான
    leading candidate, திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு பிராமணர்
    என்பதை இந்த வலையில் திராவிடர்-ஆரியர் என எழுதி வரும்
    ‘என் கருத்து’ போன்றவர்களுக்கும் நான் நினைவுபடுத்துகிறேன்.

    -பாவலன்

  5. Krishna

    திடீரென்று உலகம் புகழும் விஞ்ஞானியை இப்படி பேசுவானேன்? இதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். கலைஞருக்கு தன்னைத் தவிர வேறு எந்த தமிழனும் உயர் பதவி பெறுவது பிடிக்காது. 1997-ல் மூப்பனார் பிரதமராவதை தடுத்தார். அதை சிதம்பரம் போன்றவர்களே அப்போது ஒப்புக் கொண்டார்கள். இவர் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது இவருக்கும், இவர் கட்சிக்கும், ஏன் – தமிழகத்துக்கும் கூட நல்லது. அதை விடுத்து ஓய்வுக்கு ஓய்வு கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இது போன்ற மொக்கை அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தால் மக்களிடமிருந்து இவரும் இவர் கட்சியும் நிரந்தரமாக அன்னியப்பட்டுவிடுவார்கள். இப்படியே இவர் போய்க்கொண்டிருந்தால் ஆன்மீகத்தில் ஒரு நித்தி போல் அரசியலில் ஒரு கலைஞர் கருணாநிதி என்று மக்கள் பேசும் காலம் வரும்.

  6. குமரன்

    கிருஷ்ணா

    ஒரு நல்ல ஐடியா கொடுத்தீர்கள்

    கருணா”நித்தி” !

    கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது!

  7. enkaruthu

    இங்கே சில நண்பர்களின் கருத்துக்களை பார்த்தால் இவர்களுக்கு அப்துல் கலாம் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையை விட கருணாநிதியை எப்படியாவது திட்ட வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் தெரிகிறது.

    அப்படி என்ன கலைஞர் சொல்லிவிட்டார்.கலாமை வைத்து டெல்லியில் அன்றைய தினம் பரபரப்பாக நடந்த கலகத்தை பார்த்துதான் அன்று ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு அப்படி சொன்னார்.

    மேலும் கலாம் என்கின்ற ஒரு முஸ்லிம் மத பெயருக்கு கலகம் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை.அதைவிடவும் நிருபர் கேட்ட கேள்வி ஒன்றும் முஸ்லிம் மதத்தை பற்றியது அல்ல ஜனாதிபதி தேர்தலை பற்றி.

    இன்று இதை தினமலரிலும் ,காலை கதிரிலும் கலாம் என்றால் கலகம் ஆத்திரத்தில் கலைஞர் என்று வந்த தலைப்பை பார்த்த என்னுடன் வாக்கிங் வந்த முஸ்லிம் நண்பர்கள் மூன்று பேரும் சொன்னது இதுதான் ஆகா என்ன அக்கறை நம் மசூதியை இடித்தவர்களுக்கு ஆதரவு கொடுத்து எழுதும் இவர்கள் கலைஞர் என்றவுடன் அப்படியே நமக்காக கொந்தளிக்கிறார்கள் எல்லாம் வெளி வேஷம்.எனக்கும் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தோன்றுகிறது.

    என்கருத்து என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் கலைஞர் எந்த நோக்கில் அந்த இடத்தில அப்படி சொல்லிருப்பார் என்று தெரியும்.பேசியது கலைஞர் ஆயிற்றே அதனால் இவர்களுக்கே உரிய கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாக சொல்வதாகத்தான் நினைக்கிறேன். இதுவே ஜெயலலிதா மட்டும் இப்படி சொல்லிருந்தால் தினமலர் போன்றோர்கள் அப்பொழுது மட்டும் அவர் ஏன் அப்படி சொன்னார் ,எதற்காக சொன்னார் என்றெலாம் ஒரு மிக பெரிய அலசல் கட்டுரையை எழுதிருப்பார்கள்.

  8. enkaruthu

    //திடீரென்று உலகம் புகழும் விஞ்ஞானியை இப்படி பேசுவானேன்?//

    ஏனென்றால் இந்த உலகம் புகழும் விஞ்ஞானி ஒன்னும் கலைஞரிடம் இவரை அமைச்சர் அந்தோணி பார்த்து பிரணாப் முகர்ஜிக்கு அதரவு கேட்பதற்கு முன்பே, தனக்கு இப்படி ஒரு பதவி ஆசை இருக்கு என்று இவர் சொல்லிருந்து இதை கண்டுகொள்ளாமல் இப்படி பேசிருந்தலாவது அவரின் தமிழ் பற்றை குறை சொல்லாம்.

    நான் உண்மையாக சொல்கிறேன் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றி பேச்சு எழுந்தவுடனே கலாம் என்ன பண்ணிருக்கவேண்டும் எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்று சொல்லிருக்கவேண்டும்.அல்லது அப்படி ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கலைஞரிடம் சொல்ல வேண்டும்.அதை விடுத்து ஆரம்பம் முதல் நல்லவர் போல் அமைதியாக இருந்து விட்டு அப்புறம் குழப்பினால் அதற்க்கு பெயர் கலகம் அல்லாது வேறு என்ன. கலைஞர் கூட்டணி தர்மத்திற்காக பிரணாபை சொல்லியதில் என்ன தவறு இருக்கு .

    நண்பர்களே கொஞ்சம் கவநீதீர்களா இந்த கூட்டம் என்னமோ ஜெயா அப்துல் கலாமுக்கு ஒத்துகொண்டதைபோலவும் கலைஞர் என்னமோ அதற்க்கு முட்டுக்கட்டை போடுவதுபோலும் போடுகிறார்கள்.கலைஞர் என்றவுடன் என்னமோ கிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் கலாம் கலாம் என்று நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.

    கலைஞர் தவறு, சரி முதலில் ஜனாதிபதியின் வேட்பாளருக்கு சங்மாவை ஆதரிக்கிறேன் என்று சொன்னவர் ஜெயலலிதா.அதை அவர் அறிவிக்குமுன்பு கலாம் ஏன் ஜெயாவுக்கு நினைவிற்கு வரவில்லை.இதை மட்டும் விமர்சிக்காமல் கலைஞர் என்றவுடன் கருத்து சொல்வது ரொம்ப கேவலம்.

  9. enkaruthu

    //கலைஞருக்கு தன்னைத் தவிர வேறு எந்த தமிழனும் உயர் பதவி பெறுவது பிடிக்காது. //

    அடேயப்பா கலைஞர் என்றவுடன் கிருஷ்ணன் அவர்களுக்கு எவ்வளவு ஒரு பெரிய தமிழ் பற்று வந்துவிட்டது.ஆனால் அதையே ஜெயா சொல்லிருந்தால் இதே தமிழ் பற்று கொண்ட கிருஷ்ணன் அவர்கள் தமிழனுக்கு விலைவாசி உயர்வை ஏற்படுத்தி கொடுத்த ஜெயாவை பற்றி கேட்டால் இவர் சப்பைக்கட்டு கட்டுவதுபோல் யாருக்குமே உதவாத cag ரிப்போர்ட் பற்றி எல்லாம் சொல்லி ஜெயாவுக்கு பம்மாத்து பண்ணிருப்பார்.

  10. Krishna

    //நான் உண்மையாக சொல்கிறேன் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றி பேச்சு எழுந்தவுடனே கலாம் என்ன பண்ணிருக்கவேண்டும் எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்று சொல்லிருக்கவேண்டும்.அல்லது அப்படி ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கலைஞரிடம் சொல்ல வேண்டும்.அதை விடுத்து ஆரம்பம் முதல் நல்லவர் போல் அமைதியாக இருந்து விட்டு அப்புறம் குழப்பினால் அதற்க்கு பெயர் கலகம் அல்லாது வேறு என்ன. கலைஞர் கூட்டணி தர்மத்திற்காக பிரணாபை சொல்லியதில் என்ன தவறு இருக்கு .//

    அப்துல் கலாம் முதலில் இருந்தே consensus இருந்தால் தான் போட்டியிடுவேன் என்று சொல்லியிருந்தார். எனவே அவர் கருணாநிதி உட்பட யாரிடமும் கெஞ்ச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல் அவர் நல்லவராக நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை – ஏனெனில் அவர் கடந்த முறை குடியரசு தலைவராக இருந்தபோது நல்லவராகவே நடந்து கொண்டார். அதனால் தான் ஊழல் காங்கிரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறார். அவர் குடியரசுத்தலைவராக இருந்த போது மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். அந்தப் பதவியின் மூலம் எந்த வகையிலும் தனக்கோ தன் குடும்பத்துக்கோ லாபம் பார்க்க முனைய வில்லை. தனது பதவிக்காலம் முடிந்தவுடன் ஒரே ஒரு சூட்கேசுடன் வெளியேறினார். இப்போதையவர் போல் 30 லாரி சாமான்களுடன் வெளியேறவில்லை. இவரைப் போன்ற நல்லவர்களுக்கு பதவி ஆசை வந்தால் அதில் தவறே இல்லை, ஏனெனில் இவரைப்போன்றவர்கள் உயர் பதவிக்கு வந்தால் அது மக்களுக்கு தான் லாபம்.

    //இன்று இதை தினமலரிலும் ,காலை கதிரிலும் கலாம் என்றால் கலகம் ஆத்திரத்தில் கலைஞர் என்று வந்த தலைப்பை பார்த்த என்னுடன் வாக்கிங் வந்த முஸ்லிம் நண்பர்கள் மூன்று பேரும் சொன்னது இதுதான் ஆகா என்ன அக்கறை நம் மசூதியை இடித்தவர்களுக்கு ஆதரவு கொடுத்து எழுதும் இவர்கள் கலைஞர் என்றவுடன் அப்படியே நமக்காக கொந்தளிக்கிறார்கள் எல்லாம் வெளி வேஷம்.எனக்கும் அவர்கள் சொல்வதுதான் சரி என்று தோன்றுகிறது//
    ஜெயலலிதாவை ஆதரிக்கிறவர்கள் எல்லாம் மசூதி இடிப்பை ஆதரிக்கிறார்கள் என்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை. அவர் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் ஜவாஹிருல்லா போன்றவர்களும் மசூதி இடிப்பை ஆதரிக்கிறார்களா என்று சொல்லுங்கள். யாரும் கலைஞர் என்பதற்காக கொந்தளிக்கவில்லை, கருணாநிதிக்கு தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவைப் பற்றி பேச உரிமை இருக்கிறது – ஆனால் எந்த அரசியல் தலைவரைப் பற்றியும் எந்த ஒரு வார்த்தையும் சொல்லாத அப்துல் கலாமை பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?

    //இதுவே ஜெயலலிதா மட்டும் இப்படி சொல்லிருந்தால் தினமலர் போன்றோர்கள் அப்பொழுது மட்டும் அவர் ஏன் அப்படி சொன்னார் ,எதற்காக சொன்னார் என்றெலாம் ஒரு மிக பெரிய அலசல் கட்டுரையை எழுதிருப்பார்கள்.//

    2002 செப்டெம்பரில் டில்லிக்கு சென்ற ஜெயலலிதா பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் சோனியா ஒரு வெளி நாட்டுக்காரர், அவர் நம் நாட்டின் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது வெட்கக்கேடு என்று சொன்ன போது, தினமலர் அதைப்பற்றி கடுமையாக விமரிசனம் எழுதியிருந்தது. ஆனால் 2004 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதும் அவுட்டான பிறகு அவர் இது போன்ற கடுமையான விமரிசனத்தை தவிர்த்து வருகிறார்.

    //நண்பர்களே கொஞ்சம் கவநீதீர்களா இந்த கூட்டம் என்னமோ ஜெயா அப்துல் கலாமுக்கு ஒத்துகொண்டதைபோலவும் கலைஞர் என்னமோ அதற்க்கு முட்டுக்கட்டை போடுவதுபோலும் போடுகிறார்கள்.கலைஞர் என்றவுடன் என்னமோ கிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் கலாம் கலாம் என்று நீலி கண்ணீர் வடிக்கிறார்கள்.//

    நானோ அல்லது குமரன், பாவலன் அவர்களோ யாருக்காகவும் நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவுக்கு எப்படி சங்கமா பெயரை முன்மொழிய உரிமை இருக்கிறதோ அது போல் கருணாநிதிக்கும் பிரணாப் பெயரை (முன்மொழியாவிட்டாலும்) வழிமொழிய உரிமை இருக்கிறது. பிரச்சினை என்னவெனில் கலாம் என்றால் கலகம் என்ற கருணாநிதியின் loose talk தான். அது தான் per se கண்டனத்துக்குரியது. மற்றபடி யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்க உரிமை இருக்கிறது.

    //அடேயப்பா கலைஞர் என்றவுடன் கிருஷ்ணன் அவர்களுக்கு எவ்வளவு ஒரு பெரிய தமிழ் பற்று வந்துவிட்டது.ஆனால் அதையே ஜெயா சொல்லிருந்தால் இதே தமிழ் பற்று கொண்ட கிருஷ்ணன் அவர்கள் தமிழனுக்கு விலைவாசி உயர்வை ஏற்படுத்தி கொடுத்த ஜெயாவை பற்றி கேட்டால் இவர் சப்பைக்கட்டு கட்டுவதுபோல் யாருக்குமே உதவாத cag ரிப்போர்ட் பற்றி எல்லாம் சொல்லி ஜெயாவுக்கு பம்மாத்து பண்ணிருப்பார்.//

    இதையே ஜெயா சொல்லியிருந்தால் என்று ஏன் நீங்கள் நடக்காத ஒன்றை கற்பனை செய்ய வேண்டும்? கருணாநிதிக்கு தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை விமரிசிக்க உரிமை இருக்கிறது. ஆனால் யாரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூட தவறாக பேசாத கலாமைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? விலைவாசி உயர்வுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

    ஒரு வகையில் பார்த்தால் கருணாநிதியின் பேச்சு அநாகரீகம் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ராஜாஜியிலிருந்து ஜெயலலிதா வரையிலும் தமிழகம் கண்ட முதல்வர்களிலேயே சிறந்த முதல்வராக இன்றும் நினைக்கப்படும் காமராஜரையே அண்டங்காக்காய், அமாவாசை இருட்டு என்றும், ராஜாஜியை குல்லுக பட்டர், குள்ள நரி என்றும், பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது “பக்தவத்சல குரங்கு, பதவியை விட்டு இறங்கு” என்றும், இந்திரா காந்தியை கிராப் வெட்டிய பாப்பாத்தி என்றும் கேவலமாக ஏசியவர் தான் கருணாநிதி. அதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது “கலாம் என்றால் கலகம்” என்பது ஒரு தரக்குறைவான பேச்சே அல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

  11. Ganesh Shankar

    //இங்கே சில நண்பர்களின் கருத்துக்களை பார்த்தால் இவர்களுக்கு அப்துல் கலாம் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையை விட கருணாநிதியை எப்படியாவது திட்ட வேண்டும் என்ற ஆசைதான் அதிகம் தெரிகிறது.//(என்கருத்து)

    இங்கே விவாத பொருள் கருணாநிதியின் கருத்து.
    கலாம் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை பற்றி இங்கே பலருக்கு எண்ணம் இருக்கணுமா,இல்லையா என்பது இங்கே விவாத பொருளே இல்லை.அது வேற கருத்து பொருள்.அகவே இரண்டையும் தொடர்பு படுத்துவது தேவை இல்லை.

    மற்றொன்று,அவருடைய கட்சி முடிவையோ,இல்லை தனிப்பட்ட முடிவையோ யாரும் குற்றம் சொல்ல வில்லை.
    மாறாக அவர் கூறிய வார்த்தை எவ்வளவு விஷமத்தனமானது என்பது தான் கேள்வியே.

    அதுவும் ஒருவருடைய பெயர் என்பது அவருடைய தனிப்பட்ட விடயம்,அதை எல்லாம் சபை நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாமல்(இல்லை அவருக்கு சபை நாகரீகம் இருக்கிறது என்று ஒத்து கொண்டால்-தெரிந்தே கேவலபடுத்த விரும்பும் மனிதர்) பேச இந்த வயதில் எப்படி தான் தோன்றுகிறதோ.

    மிகவும் தூற்றபடவேண்டியவர்,கேவலமான மனிதராக இவரை விட இன்றைய அரசியல் தலைவரை பார்க்க முடியாது.

    இவருடைய தனிப்பட்ட விடயத்தை எடுத்தால் ஆயிரம் கேவலங்கள் இருக்கும்.இவருக்கு என்ன தகுதி இருக்கிறது கலாமின் பெயரை பார்த்து கிண்டல் செய்வதற்கு??

    தனக்கு திறமை பற்றி சொல்ல முடியாமல்,தமிழை ஆயுதமாக வைத்து பல முறை முன்னிலை படுத்தி வரும் வழக்கத்தை இன்றும் கடைபிடிப்பவர் கருணாநிதி.இப்போது அவருக்கு அந்த பற்று எங்கே போனது??
    தமிழ் பற்றை பற்றி யாரும் கூறாமல்,அதை மட்டுமே வைத்து அரசியலை ஒட்டி மேலும் அவரே அதற்கு இரையும் ஆனவரான கருணாநிதியை கண்டிப்பாக கேட்பது சரி தான்.

    //என்கருத்து என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் கலைஞர் எந்த நோக்கில் அந்த இடத்தில அப்படி சொல்லிருப்பார் என்று தெரியும்.பேசியது கலைஞர் ஆயிற்றே அதனால் இவர்களுக்கே உரிய கலைஞர் மீதான வெறுப்பின் காரணமாக சொல்வதாகத்தான் நினைக்கிறேன். இதுவே ஜெயலலிதா மட்டும் இப்படி சொல்லிருந்தால் தினமலர் போன்றோர்கள் அப்பொழுது மட்டும் அவர் ஏன் அப்படி சொன்னார் ,எதற்காக சொன்னார் என்றெலாம் ஒரு மிக பெரிய அலசல் கட்டுரையை எழுதிருப்பார்கள்.//(என்கருத்து )

    இதெல்லாம்,ஒரு யூகத்தின் அடிபடையில் எழுதுவது.ஆனால்,இங்கே ஒரு உண்மை கண் முன்னே இருக்கிறது.ஆகவே,யுகத்துக்கே இவ்வளவு காரணம் சொல்லி,நியாயம் இல்லை என்று சொல்லுவது கற்பனை.
    ஆனால்,இங்கே உண்மையான நிகழ்வுக்கு அப்போது தெளிவான,தீர்கமான தவறு,விஷமத்தனம் என்பது சாலச்சிறந்தது.

    //கலைஞர் ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் போட்டிக்கான
    leading candidate, திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு பிராமணர்//(பாவலன்)

    இது வேறயா,அப்படி போடு சக்க. இந்த விடயம் எனக்கு இப்போது தான் தெரியும்.
    அஹா,இப்போது எங்கே போனது கருணாநிதியின் திராவிடம்.
    அது பின்னர் வேறு ஒரு நிகழ்வில் அவருக்கும்,கட்சிக்கும்(குடுமபதிற்கும்) லாபம் வேண்டும் என்றால் அப்போது எழுந்து அவருடைய வாயில் இருந்து வரும்.அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.

    இதில் எல்லாம் நடுநிலயனவர்கள்,பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எப்படி பட்டவர் இவர் என்று.

  12. பாவலன்

    //கலைஞர் ஆதரவு கொடுத்த குடியரசுத் தலைவர் போட்டிக்கான
    leading candidate, திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் ஒரு பிராமணர்//(பாவலன்)

    ///இது வேறயா,அப்படி போடு சக்க. இந்த விடயம் எனக்கு இப்போது தான்
    தெரியும். ஆஹா,இப்போது எங்கே போனது கருணாநிதியின் திராவிடம்.//
    (கணேஷ் ஷங்கர்)

    திரு கணேஷ் ஷங்கர் அவர்களே, நண்பர்களே:

    பிரணாப் முகர்ஜியின் ஜாதியைப் பற்றி எழுதியதற்கு முதலில்
    வருத்தம் தெரிவிக்கிறேன். அதை எந்த context-ல் எழுதினேன் என
    நண்பர்கள் அறிந்து கொண்டால் நல்லது. இந்த வலையில் சில நண்பர்கள்
    கலைஞரின் தாக்கத்தால் (influence) பாதிக்கப்பட்டு பிராமணர்கள் ஒரு
    கூட்டணியாக செயல்படுவதாகவும், பிராமணர்களை (ஜெயலலிதா
    போன்ற தலைவர்களை) கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகவும்
    (தவறான ஒரு எண்ணப் போக்கில்) எழுதி வருகிறார்கள். கிராமப்
    பக்கம் போய் பார்த்தால் விலை வாசி உயர்வு, மின்வெட்டு, மின் விலை
    உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என சாதி மத
    பேதம் இன்றி மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவி வருகிறது.

    விஷயத்திற்கு வருகிறேன். முதல்வர் ஜெயலலிதா ஆதரிக்கும்
    candidate சங்கமா பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். கலைஞர்
    கருணாநிதி ஆதரிக்கும் candidate பிரணாப் முகெர்ஜி ஒரு பிராமணர்.
    அதனால் இவர்கள் தேர்விற்கு ஜாதி காரணம் அல்ல. அவர் அவர்களுக்கு
    என்ன ஆதாயமோ (political gain) அதன்படி அவர்கள் கூட்டணி, தேர்வு
    அமைகிறது. எல்லாம் பதவி படுத்தும் பாடு! சுயநலமே அதன் சுவடு!

    அதனால் தலைவர்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்காமல்,
    சிந்தித்து செயல்பட்டால் நாமும் ஜாதி வலையில் சிக்காமல், மனிதனை
    (நிறை-குறைகள் கொண்டவனை) மனிதனாக பார்த்து நடந்து கொண்டால்
    அதுவே சிறந்த வழி! ஜாதியை வைத்து எடை போடுவதை
    விட்டொழிப்போம். நன்றி, வணக்கம்!

    -பாவலன்

  13. enkaruthu

    //அப்துல் கலாம் முதலில் இருந்தே consensus இருந்தால் தான் போட்டியிடுவேன் என்று சொல்லியிருந்தார். //

    இது பொய். அந்தோணி கலைஞரை அந்தோணி பார்க்கும் முன்பு வரை கலாம் அவர்கள் இப்படி சொல்லாமல் மலுப்பிகொண்டே வந்தார்.சரி ஏன் திடீர் தமிழ் பாசம் கொண்ட ஜெயலலிதா அவர்கள் அப்துல் கலாமை விட்டுவிட்டு சங் மாவை ஏன் ஆதரிக்கவேண்டும்.அதையும் விமர்சியுங்கள் நண்பர்களே.

  14. தினகர்

    ”கிராமப் பக்கம் போய் பார்த்தால் விலை வாசி உயர்வு, மின்வெட்டு, மின் விலை உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என சாதி மத
    பேதம் இன்றி மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவி வருகிறது.”

    2014 பொதுத்தேர்தலை கொஞ்சம் முன்னால் வரவைத்தால் தமிழகத்தில் ஐக்கிய முண்ணனி 39 க்கு 39 வாங்கி௦ மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும் போலிருக்கிறதே…

  15. பாவலன்

    ///2014 பொதுத்தேர்தலை கொஞ்சம் முன்னால் வரவைத்தால்
    தமிழகத்தில் ஐக்கிய முண்ணனி 39 க்கு 39 வாங்கி௦ மீண்டும்
    ஒரு சரித்திரம் படைக்கும் போலிருக்கிறதே…/// (தினகர்)

    இன்றைய நிலை வேறு, 2014 நிலை வேறு. மின் உற்பத்தி
    அபிவிருத்தி அடைந்து மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு,
    தொழிற்சாலைகள் மின்வெட்டால் (கோவை இதர நகரங்களில்)
    அவதிப்படும் நிலை மாறி, மின் கட்டணம் குறைக்கப்பட்டு,
    பால் கொள்மான விலை, பஸ் கட்டணம் இவை ஏற்றப்படாமல்
    அதே நிலையில் வைத்து, அமைச்சர்களும் செயல்பட்டு (!!),
    நல்ல நிர்வாகம், ஆட்சி இவை நடந்தால் தான் ஜெயலலிதாவின்
    பிரதமர் கனவிற்கு ஏதாவது அர்த்தம் இருக்கும். அவர் சங்கமா
    அவர்களை குடியரசுத் தலைவர் பதவிக்கு முயற்சி செய்ததே
    இந்தக் கனவினால் தான். தே.மு.தி.க. கட்சி வேறு வோட்டுக்களைப்
    பிரிக்க தயாராக இருக்கிறது. கலைஞர் கேப்டன் கட்சியை வளர்த்து (!)
    விடுவதே பார்லிமென்ட் தேர்தலில் கேப்டனை தனியே நிற்க
    வைத்து வோட்டுக்களைப் பிரித்து அவரை எல்லா தொகுதிகளிலும்
    தோற்க வைத்து, பெரும் அளவில் தொகுதிகளை வென்று மத்தியில்
    நல்ல பேரம் (negotiations) பேசுவதற்குத் தான்.

    கலைஞர், ஜெயலலிதா இருவரும் “திண்ணியர்”. நிறைய “எண்ணுபவர்”.
    இதில் யார் “எண்ணிய எண்ணியாங்கு எய்துபர்” என்பது அவர்களுடைய
    கூட்டணி பலத்தில் இருக்கிறது. எனக்கு அரசியல் சார்பு இல்லை என்றாலும்
    AIADMK மீது sympathy இருப்பதால் காங்கிரசிற்கு 39-ல் 20 தொகுதிகளாக
    ஒதுக்கப்பட்டால் அந்த இடங்களை AIADMK வெல்வதற்கு அதிக
    வாய்ப்புக்கள் இருக்கின்றன என நினைக்கிறேன். CBI வழக்குகள் சூடு
    பிடித்தால் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்கலாம்.
    யார் கண்டது? மத்தியிலும் ஒரு அரசியல் சாணக்கியன் இருக்கிறார்!

    -பாவலன்

  16. Krishna

    //இது பொய். அந்தோணி கலைஞரை அந்தோணி பார்க்கும் முன்பு வரை கலாம் அவர்கள் இப்படி சொல்லாமல் மலுப்பிகொண்டே வந்தார்.சரி ஏன் திடீர் தமிழ் பாசம் கொண்ட ஜெயலலிதா அவர்கள் அப்துல் கலாமை விட்டுவிட்டு சங் மாவை ஏன் ஆதரிக்கவேண்டும்.அதையும் விமர்சியுங்கள் நண்பர்களே.//

    இந்தியாவிலியே அப்துல் கலாமால் பாதிக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அது ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, மம்தாவோ, முலாயமோ அல்ல. அன்னை தியாக திருவிளக்கு சொக்க தங்கம் சோனியா தான். ஒருமுறை அல்ல – இருமுறை பாதிக்கப்பட்டுள்ளார். முதலில் பிரதமராக முடியாமல் போனது, இரண்டாவது, இரண்டு ஆண்டுகளிலேயே “office of profit” விவகாரத்தில் தன் எம்.பி. பதவியையே பறிகொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏனெனில் இந்த மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் அப்துல் கலாம் சோனியாவின் எம்.பி. பதவிக்கு நேரடியாகவே வெட்டு வைத்து விட்டார். சோனியாவுக்கு ராஜீவ் காந்தி பௌண்டேஷன் தலைவர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. மீண்டும் ரே பரேலியில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையெல்லாம் பார்க்கும் போது சோனியாவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் அப்துல் கலாம் வர விடாமல் தடுத்து விட்டதே தவிர வேறு எந்த காரணங்களும் அல்ல.

  17. Krishna

    //கலைஞர் கேப்டன் கட்சியை வளர்த்து (!)
    விடுவதே பார்லிமென்ட் தேர்தலில் கேப்டனை தனியே நிற்க
    வைத்து வோட்டுக்களைப் பிரித்து அவரை எல்லா தொகுதிகளிலும்
    தோற்க வைத்து, பெரும் அளவில் தொகுதிகளை வென்று மத்தியில்
    நல்ல பேரம் (negotiations) பேசுவதற்குத் தான்.//

    பாவலன் அவர்களே, எப்பொழுதுமே மூன்றாவது அணி என்று ஒன்று வந்தால் அது ஆளும் கட்சிக்கு தான் லாபம். 2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தால் பாதிக்கப்பட்டது திமுக தான். அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான anti-incumbency ஓட்டுகளை பிரித்ததால் தான் திமுகவால் வெற்றி பெற்றும் 100 சீட்டுகள் கூட கிடைக்கவில்லை. அதிமுகவோ 65 சீட்டுகள் பெற்று பலமான எதிர்க்கட்சியாக வந்தது. இதே நிலைமை 2009 நாடாளுமன்ற தேர்தலில் தலைகீழாக மாறியது. விஜயகாந்த் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து அதிமுகவுக்கு வேட்டு வைத்தார். 2014 தேர்தலில் ஆளும் கட்சியால் அதிருப்தி அடைந்தவர்களில் சிலர் திமுகவுக்கும் சிலர் தேமுதிகவுக்கும் போடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதனால் பலனடையப்போவது அதிமுக தான் என்று தோன்றுகிறது.

  18. தேவராஜன்

    //இதையெல்லாம் பார்க்கும் போது சோனியாவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் அப்துல் கலாம் வர விடாமல் தடுத்து விட்டதே தவிர வேறு எந்த காரணங்களும் அல்ல.//

    -படுமுட்டாள்தனமான, தனிநபர் விரோத காழ்ப்பு மிக்க கருத்துரையை மட்டுமே இந்த நபர் தொடர்ந்து இங்கே எழுதி வருகிறார். இவருக்கு உலகிலேயே ஜெயலலிதா மட்டும்தான் சொக்கத்தங்கம். அந்த அளவு அடிவருடித்தனம் மிக்கவர்கள், மற்ற தலைவர்கள் பற்றி பேசவோ விமர்சிக்கவோ தகுதியற்றவர்கள். ஜெயா செய்த, செய்துவரும் கேவலங்கள் ஒன்றைக்கூட இதுவரை இந்த நபர் இங்கே விமர்சித்தததில்லை. அப்படி விமர்சனங்கள் வந்தால், அதை திசை திருப்ப சோனியா, கருணாநிதியை இழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

    கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சோனியாவுக்கு என்ற வேகிறது? எதிராளியிடம் போய், திரும்பத் திரும்ப எனக்கு வாய்ப்பு கொடு என்று கெஞ்சுவது போலிருக்கிறது. சோனியாவோ காங்கிரஸ் கூட்டணியோ ஆதரிக்காது என்று வெளிப்படையாகத் தெரிந்ததுதானே. அப்புறம் எதற்கு சோனியா ஆதரவை வேண்டி நிற்கிறீர்கள்?

    ஜெயலலிதா, நிதீஷ், பாஜக, போதாக்குறைக்கு தில்லுமுல்லு காங்கிரஸ் மமதா இருக்கிறார்களே.. அவர்களை உங்கள் ஆட்டத்தை ஆடிப் பார்ப்பதுதானே நியாயம்? அதைவிட்டுவிட்டு சோனியா உதவவில்லை என்று புலம்புவது பெட்டைத்தனமாக தெரியவில்லை.

    அய்யா வினோ அவர்களே, தயவுசெய்து இந்த மாதிரி வெத்துவேட்டு, விதண்டாவாத கமெண்டுகளை அனுமதிக்க வேண்டுமா என்ன?

  19. Krishna

    //படுமுட்டாள்தனமான, தனிநபர் விரோத காழ்ப்பு மிக்க கருத்துரையை மட்டுமே இந்த நபர் தொடர்ந்து இங்கே எழுதி வருகிறார். இவருக்கு உலகிலேயே ஜெயலலிதா மட்டும்தான் சொக்கத்தங்கம். அந்த அளவு அடிவருடித்தனம் மிக்கவர்கள், மற்ற தலைவர்கள் பற்றி பேசவோ விமர்சிக்கவோ தகுதியற்றவர்கள். ஜெயா செய்த, செய்துவரும் கேவலங்கள் ஒன்றைக்கூட இதுவரை இந்த நபர் இங்கே விமர்சித்தததில்லை. அப்படி விமர்சனங்கள் வந்தால், அதை திசை திருப்ப சோனியா, கருணாநிதியை இழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.//

    இதில் நான் கருணாநிதியை இழுக்கவில்லையே. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழிக்கேற்ப இன்று நாட்டிலேயே அதிக MLA மற்றும் MP வைத்திருக்கும் ஒரு கட்சியின் கையில் தானே நம் நாட்டின் தலைஎழுத்து இருக்கும். அவர்கள் கலாமோ அல்லது அவரைப்போல் அரசியல் சாராத ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் பிரச்சினையே இல்லையே.

    //கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சோனியாவுக்கு என்ற வேகிறது? எதிராளியிடம் போய், திரும்பத் திரும்ப எனக்கு வாய்ப்பு கொடு என்று கெஞ்சுவது போலிருக்கிறது. சோனியாவோ காங்கிரஸ் கூட்டணியோ ஆதரிக்காது என்று வெளிப்படையாகத் தெரிந்ததுதானே. அப்புறம் எதற்கு சோனியா ஆதரவை வேண்டி நிற்கிறீர்கள்?//

    கலாமை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று சோனியாவுக்கு ஏன் வேகிறது என்று கேட்பதன் மூலம் ஒரு நல்ல வேட்பாளரை ஆதரிக்க சோனியா தயாராக இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள் – நன்றி.

    //ஜெயலலிதா, நிதீஷ், பாஜக, போதாக்குறைக்கு தில்லுமுல்லு காங்கிரஸ் மமதா இருக்கிறார்களே.. அவர்களை உங்கள் ஆட்டத்தை ஆடிப் பார்ப்பதுதானே நியாயம்? அதைவிட்டுவிட்டு சோனியா உதவவில்லை என்று புலம்புவது பெட்டைத்தனமாக தெரியவில்லை.//

    ஜெயலலிதா, நிதிஷ், பாஜக மற்றும் மம்தாவை ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது. இவர்கள் எல்லோரும் வேறு வேறு துருவங்கள். ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. இவர்கள் எல்லோரும் பிரிந்து இருக்கும் இந்த நேரத்தில் அதிக வாக்குகள் கொண்ட கட்சியின் தலைவரான சோனியா ஆதரித்தால் இந்த சிறு சிறு கட்சிகளுக்கு வேறு வழியே இல்லாமல் போய் இருக்கும். அவ்வளவு ஏன், ஜெயலலிதா insignificant factor ஆகி இருப்பாரே.

    நான் சோனியாவை கண்மூடி தனமாக எதிர்க்க வில்லை. கடந்த காலங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் மற்றும் அவரின் செய்கைகள் விமரிசனத்துக்கு வருவது இயற்க்கை தானே. இதில் நான் உண்மையை சொல்கிறேனா அல்லது இல்லாத ஒன்றை இட்டுகட்டி பொய் சொல்கிறேனா என்று மட்டும் பாருங்கள். கலாம் குடியரசு தலைவர் ஆவது பற்றிய செய்திக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஜெயலலிதா ஆட்சியை பற்றிய விமரிசனத்தை அந்த செய்தி என்வழியில் எங்கு வருகிறதோ, அங்கு என் கருத்தை தெரிவிக்கிறேன்.

    //அய்யா வினோ அவர்களே, தயவுசெய்து இந்த மாதிரி வெத்துவேட்டு, விதண்டாவாத கமெண்டுகளை அனுமதிக்க வேண்டுமா என்ன?//

    ஒருவரின் கமெண்டுகளை போடக்கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள்? உங்கள் கமெண்டுகளையோ அல்லது என் நிலைப்பாடுக்கு மாற்று நிலைப்பாடு கொண்டவர்களின் கமெண்டுகளையோ போடாதீர்கள் என்று நான் சொல்வதில்லையே. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் சொற்களை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களின் கருத்தை கொச்சை படுத்தாதீர்கள்.

  20. Ganesh Shankar

    //அதனால் தலைவர்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்காமல்,
    சிந்தித்து செயல்பட்டால் நாமும் ஜாதி வலையில் சிக்காமல், மனிதனை
    (நிறை-குறைகள் கொண்டவனை) மனிதனாக பார்த்து நடந்து கொண்டால்
    அதுவே சிறந்த வழி! ஜாதியை வைத்து எடை போடுவதை
    விட்டொழிப்போம். //(பாவலன்)

    நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு சரி.நான் ஒத்து கொள்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு என் சிரம் தாழ்த்திய மரியாதை.
    அதனால் தான் என்னவோ,பிரணாப் எந்த சாதி என்பதை அறியவில்லை.
    ஒருவருடைய தனிப்பட்ட விடயமான சாதியை,மதத்தை,நிறத்தை வைத்து அடையாளம் அல்லது சம்பந்தமில்லாமல் பயன்படுத்த தோன்றுவதே கேவலம்.
    பொருளை விற்பவன்,தனது விற்கும் திறனால் விற்று விட்டு போக வேண்டியது தான் சரி.அது தான் திறமைக்கு அழகு.

    //கிராமப் பக்கம் போய் பார்த்தால் விலை வாசி உயர்வு, மின்வெட்டு, மின் விலை உயர்வு, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு என சாதி மத
    பேதம் இன்றி மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவி வருகிற//(பாவலன்)

    என்ன செய்வது,கடன் இருக்கிறதே என்று மின்சார வாரியத்தை,பேருந்து வசதிகளை மூடி விட்டு ஜப்தி செய்து போய் விட முடியாதே.
    அப்போது பொது மக்கள் நன்றாக இருப்பார்களா,இல்லையே.அது தவறு.
    அவர்களை கூடிய வரையில் சுமை இல்லாமல் காப்பது தான் அரசின் கடமை.எனவே இப்போது விலை உயர்வு அவசியமாகிறது.என்ன செய்வது.
    வேண்டும் என்றே யாரும் செய்வதில்லையே.
    நாமும் சற்று யோசிக்க வேண்டும்.
    கடை கோடியில் உட்கார்ந்து கொண்டு திண்ணையில் செய்தித்தாள்களை படித்து விட்டு,பொலம்பி கொண்டிருக்கும் நிலைமை மாறி,நாம் இப்போது ஒரு பொறுப்புள்ள,யதார்த்தாமாக அலசி ஆராய்ந்து பார்க்கும் நிலைக்கு வந்து விட்டோம் நண்பரே.
    பொது மக்களுக்கே இப்போது புரிய வைக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். சற்று யோசித்து பாருங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

  21. தினகர்

    “இப்போது விலை உயர்வு அவசியமாகிறது.என்ன செய்வது.
    வேண்டும் என்றே யாரும் செய்வதில்லையே. நாமும் சற்று யோசிக்க வேண்டும். ”

    கையாலகாதத்தனம், நீலிக்கண்ணீர் – இப்படி சொல்லிக்கொள்ளல்லாம். திறமை இருந்தால் மக்கள் தலையில் இப்படி நேரடியாக சுமையை ஏற்றாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். அதற்கு தான் அரசாங்கம் என்பது. எல்லா சுமையையும் மக்கள் தலையில் ஏற்றி வைத்து விட்டு ‘ என்ன செய்வது’ என்று புலம்பது ‘ என்னால் முடியவில்லை’ என்ற கையாலாகதத்தனம் மட்டுமேயன்றி வேறு ஏதுமில்லை..

    பேச்சு தான் எனது அரசு, நான் , என்னுடையது என்று வீராவேசமாக இருக்கிறதேயன்றி நிர்வாகத்திற்மை என்பது சுத்தமாக இல்லாத ஒரே முதல்வர் இவர் மட்டுமே.. இவரையும் வானாளவிய உயரத்திற்கு வைத்து புகழும் மக்கள் இருக்கிறார்கள்.. கட்சிக்காரர்கள் தான் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் ரோட்டில் உக்கார்ந்து, காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்றால் மற்றவர்களுக்கு என்ன பாசமோ தெரியவில்லை..

    எப்படியோ தமிழகம் நன்றாக இருந்தால் போதும்..

  22. தினகர்

    “சோனியாவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் அப்துல் கலாம் வர விடாமல் தடுத்து விட்டதே தவிர வேறு எந்த காரணங்களும் அல்ல.”

    உங்க பக்கத்து வீட்டுக்காரர், அவ்வப்போது ஏதாவது தொந்தரவு கொடுப்பவராக இருந்து, கவுன்சிலர் வேட்பாளாராக நின்றால் அவருக்கு வாக்கு போடுவீர்களா? இவன் தோற்றால் தான் அடங்குவான் என்று தானே உங்கள் மனசு சொல்லும். முதல் ஆளாக வரிசையில் நின்று எதிர்த்து வாக்களிக்க மாட்டீர்களா?

    சராசரி மக்களே இப்படி இருக்கையில் சோனியா என்ன காரணத்திற்காக அப்துல் கலாமை குடியரசு தலைவர் ஆக்க வேண்டும்? அவர் கட்சியில் வேறு ஆட்கள் இல்லையா? இதெல்லாம் கலாமுக்கு தெரிந்தும், ஒரு வித அரசியல் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டது தான் அவரது தடுமாற்றமாக தெரிகிறது.

  23. Krishna

    // கையாலகாதத்தனம், நீலிக்கண்ணீர் – இப்படி சொல்லிக்கொள்ளல்லாம். திறமை இருந்தால் மக்கள் தலையில் இப்படி நேரடியாக சுமையை ஏற்றாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். அதற்கு தான் அரசாங்கம் என்பது. எல்லா சுமையையும் மக்கள் தலையில் ஏற்றி வைத்து விட்டு ‘ என்ன செய்வது’ என்று புலம்பது ‘ என்னால் முடியவில்லை’ என்ற கையாலாகதத்தனம் மட்டுமேயன்றி வேறு ஏதுமில்லை..//
    திறமை இருந்தால் என்கிறீர்கள். திறமை இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் சிறுமை அந்த திறமையை உபயோகிக்க விடாமல் தடுக்கிறது. மத்திய அரசு தமிழகத்தை எப்படியெல்லாம் பழி வாங்குகிறது என்பதை Deccan Chronicle, Indian Express, Financial Times போன்ற பத்திரிகைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    //பேச்சு தான் எனது அரசு, நான் , என்னுடையது என்று வீராவேசமாக இருக்கிறதேயன்றி நிர்வாகத்திற்மை என்பது சுத்தமாக இல்லாத ஒரே முதல்வர் இவர் மட்டுமே.. இவரையும் வானாளவிய உயரத்திற்கு வைத்து புகழும் மக்கள் இருக்கிறார்கள்.. கட்சிக்காரர்கள் தான் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் ரோட்டில் உக்கார்ந்து, காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்றால் மற்றவர்களுக்கு என்ன பாசமோ தெரியவில்லை.//

    இவருக்கு திறமை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் முன்னவர் போல் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன், பொன்னர் சங்கர், சுய தம்பட்ட செம்மொழி மாநாடு, பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா, அந்த பாராட்டு விழா சிறப்புற நடைபெற்றதற்கு ஒரு பாராட்டு விழா என்று பட்டவர்தனமாக ஒன்றும் செய்யாமல் இருந்தது போல், இருக்கவில்லை. எதோ நீங்களே சொல்வது போல் பாவனையாவது செய்கிறார்.

    திமுக ஐந்து ஆண்டுகள் செய்துவிட்ட குளறுபடிகளை சரி செய்ய 10 ஆண்டுகளாவது தேவை படும். ஆங்கில நாளேடுகளை புரட்டி பார்த்தால் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியும்.

  24. Ganesh Shankar

    //கையாலகாதத்தனம், நீலிக்கண்ணீ//(தினகர்)

    அவ்வாறு இல்லை நண்பரே.
    ஆயிரம் கோடி கணக்கில் கடன் இருக்கும் போது,அதற்கு வட்டி குட்டி போடும் போது,அதை ஒரு வருடத்திலோ இல்லை அரை வருடத்திலோ,இல்லை விலையை ஏற்றமலோ யாராலும் சரி செய்ய முடியாது.எங்கும் கடன் கொடுக்க ஆள் இல்லை.மேலும் மூடாமல் கடனிலேயே இன்னும் ஓடினால்,அவ்வளவு தான் நம் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை மீதும் லட்சத்தில் கடன் இருக்கும்.

    சிறந்த மனிதன் என்றால் இன்று பிறந்து,நாளைக்கே புத்தர் ஆகி விட வேண்டும் என்றால் இயலாது.
    அது அல்ல,தனக்கு கடினம் இருந்தாலும்,பெரிய நலனை முன் வைத்து சிறிய கடினமான காரியமாக இருந்தாலும்,அதற்காக அந்த கடினத்தை அனுபவித்து அந்த பெரிய நலனை காலம் வரும் போது அடைபவன் தான் சிறந்த மனிதன். அது போல் தான் சிறந்த நிர்வாகியும்.

    இங்கே இவர் சிறந்த நிர்வாகியா இல்லையா என்பதை நாம் ஒரு,இரு ஆண்டுகளுக்கு பின் முடிவு செய்யலாம்,செயல் பாட்டை பொறுத்து.

    குடும்பத்தில் வேலை செய்து கடன் இருந்து,அது குட்டி போட்டு அளவுக்கு அதிகமாக போகும் போது,முடிந்த வரை தனது செலவுகளை குறைத்து கொண்டு,ஏன் பல சிரமங்கள் பட்டு,குடும்ப உறுபினர்கள் மீது,ஏன் சிறு பிள்ளைகளின் ஆசைகளின் மீது திணித்து தானும் கஷ்டப்பட்டு தான் மீண்டு வருவார்கள்.
    நடு தர வர்கத்தில் கண்டிப்பாக இது நடக்கும்,புரியும்.
    சிரமங்கள் இல்லாமல் பெரிய கடனை அடைக்கவே இயலாது.
    வாழ்கையில் இருந்து நழுவாமல்,அந்த சிரமத்தை ஏற்று அதில் வென்று காட்டுபவன் தான் சிறந்த குடும்ப நிர்வாகி.
    சிரமமே இல்லாமல்,முன்பு எவ்வாறு இருந்தேனோ அப்படியே இருந்து கொண்டு இருந்து அதை சரி செய்யவே முடியாது.அவ்வாறு ஒருவன் செய்தால் அதில் ஏதோ செய்யகூடத தொழில் அல்ல ஏமாற்று பொழப்பு நடக்கத்தான் இருக்கும்.

    இந்த அளவுக்கு கடன் கொண்டு செல்லப்படாமல் இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்.என்ன செய்வது,சென்று விட்டது.இனிமேல் செய்ய வேண்டியதை தான் பார்க்க வேண்டும்.

    நண்பரே,சற்று நீங்களே யதார்த்தை யோசித்து பாருங்கள்.
    எவ்வளவோ பொருளாதார வீழ்ச்சிகள் நடந்திருகின்றன இதை எல்லாம் எடுக்க தவறியதால்.
    பல புத்தகங்களிலும்,பல நிகழ்வுகள் உலக அளவில் இருக்கின்றன.எனக்கும் ஒன்றும் முழுவதும் தெரியாது.அதை தெரிந்து கொள்ள முற்பட்டு,இப்போது தான் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்.என்ன செய்வது,இப்போது வருத்தத்தில் இருக்கிறேன் இவ்வளவு வருடங்கள் விட்டுவிட்டு,கழித்து இப்போது பொருளாதாரம் பற்றி தெரிந்து கொள்ள முற்படுகின்றேனே என்று.
    நீங்களும்,அதை எல்லாம் முயற்சி செய்யலாம்.தெரிந்து கொள்ளலாம்..ஏன்,நீங்கள் என்னை விட பல விடயம் தெரிந்து கொள்வதில் சிறந்தவராக கூட இருக்கலாம்.

  25. தினகர்

    “ஆயிரம் கோடி கணக்கில் கடன் இருக்கும் போது,அதற்கு வட்டி குட்டி போடும் போது,அதை ஒரு வருடத்திலோ இல்லை அரை வருடத்திலோ,இல்லை விலையை ஏற்றமலோ யாராலும் சரி செய்ய முடியாது.”

    ரொம்பவும் மூளையை கசக்கிகொள்ள வேண்டாம். லல்லு பிரசாத் யாதவ், ரயில்வே துறையை சீரமைத்து லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாக மாற்றினாரே. அது ஒன்றே போதும் நிர்வாக திறமையை பற்றி சொல்வதற்கு. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரயில் கட்டணம் பிப்ரவரி தோறும் உயர்த்துவது தான் என்ற நிலையிலிருந்து , கட்டண உயர்வு இல்லாமலேயே ரயில்வே துறை லாபம் எப்படி சம்பாதித்தது?

    ”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.”

    மேலாண்மை குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே வள்ளுவர் சொல்லியிருக்கிறார்
    :
    எல்லாவற்றிலும் நான் தான் என்று ’எஜமான் நெப்போலியன்’ மாதிரி சொல்லிக்கொண்டிருந்தால் எந்த காரியமும், எத்தனை வருஷம் ஆனாலும் நடக்கபோவதில்லை.

    // இவர் சிறந்த நிர்வாகியா இல்லையா என்பதை நாம் ஒரு,இரு ஆண்டுகளுக்கு பின் முடிவு செய்யலாம்,//

    ஏன் முந்தைய பத்தாண்டு கால ஆட்சியை ரப்பர் வைத்து அழித்து விட வேண்டுமா?. அப்போவும் இப்படித்தான் ஒரேயடியாக கட்டணங்களை ஏற்றி வைத்தார்..

    இன்னொரு உதாரணம் – ஒரு சென்னை நிறுவனம் மோசமான நிர்வாகியால் நிதி நிலைமை சீரழிக்கப்பட்டு, கடன் தொல்லையில் சிக்கித்தவித்தது. இன்னொரு சிறந்த நிர்வாகி வந்தவுடன், அனைத்தும் சீரமைக்கப்பட்டு லாபம் என்ற நிலைக்கு மாறியது.. இரண்டு நிர்வாகத்திலும், இருவரது மாறுபட்ட நிர்வாகத்திறனையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

    நீங்கள் சொல்லும் நிதி, கடன் விவகாரம் குறித்து எனக்கும் நன்றாகவே தெரியும். அதிலிருந்து எப்படி மீள்வது என்ற வழிமுறையும் தெரியும். வளரும் பொருளாதாரத்தில் கடன் என்பது ஒரு பொருட்டே அல்ல.( உடனே நமது பொருளாதாரம் வீழ்ச்சி என்று புலம்பவேண்டாம். அப்படி ஒன்றும் நிலைமை இல்லை, இன்னும் வளர்ச்சி நிலையில் தான் இருக்கிறது. வளர்ச்சி வீதம் சற்று பின்னடைந்துள்ளது. அது இயல்பானதுதான்.. )

    தமிழகத்தில் நடப்பது அனைத்தும் நிர்வாக கோளாறு, நிர்வாக திறமையின்மையினால் மட்டுமே.. நீங்கள் சொல்லும் அனைத்து காரணங்களும் வெறும் சப்பைகட்டு தான். . முதல்வரை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாய நிலை எடுத்து விட்டு பேசினால் அப்படித்தான் இருக்கும்

    குறைந்தபட்சம் இந்த அரசு எடுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளை நியாயப்படுத்தி ஆதரவு தெரிவிக்காமலாவது இருங்கள். உங்க குடும்பத்திற்கே புண்ணியமாகப் போகும்.

  26. தினகர்

    ”திறமை இருக்கிறது. ஆனால் மத்திய அரசின் சிறுமை அந்த திறமையை உபயோகிக்க விடாமல் தடுக்கிறது”

    ”திமுக ஐந்து ஆண்டுகள் செய்துவிட்ட குளறுபடிகளை சரி செய்ய 10 ஆண்டுகளாவது தேவை படும். ”

    இது தான் கையாலாகதத்தனம் என்பது.. தனக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் தான் ஒருவன் அடுத்தவன் மீது குறை சொல்லிக் கொண்டே இருப்பான். இப்படி அடுத்தவர்களை குறை சொல்லி சொல்லியே முந்தைய பத்தாண்டு காலமும் ஆட்சி செய்தார். இந்த தடவையும் விதிவிலக்கல்ல என்பது உங்களைப்போன்ற தீவிர ஆதரவாளர்களின் கருத்துக்களில் இருந்தே தெரிகிறது..

    தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் விடிவுகாலம் வராமலா போய்விடும்…. ஒரு நாள் கண்டிப்பாக விடியும்..

  27. பாவலன்

    ///தமிழகத்தில் நடப்பது அனைத்தும் நிர்வாக கோளாறு, நிர்வாக திறமையின்மையினால் மட்டுமே.. ///

    1) நிர்வாக கோளாறு என்பது இரண்டு கழக ஆட்சிகளுக்கும் பொருந்தும்.

    2 ) இலவசம் என்ற பெயரில் வாக்கு வங்கியை பிடிக்க முதலில்
    அடிச்சுவடு இட்ட பெருமை மாபெரும் அரசியல் சாணக்கியன்
    கலைஞருக்கே சாரும். அதிலும் இலவச டி.வி. எனக் கொடுத்து
    அதில் சன்TV, KTV சந்தா கட்ட பணம் என்று கோடிக்கணக்கில் கலைஞர்
    குடும்பம் லாபம் சேர்த்தது. அந்த TV-யை switch on செய்தாலே கலைஞர்
    படத்துடன் தான் ஒளிபரப்பு துவங்கும். மற்றபடி விளம்பரம் எதுவும்
    கலைஞருக்குப் பிடிக்காது.

    3) கலைஞரின் இலவசங்களுக்கு போட்டியாக இலவசங்கள் கொடுக்க
    வேண்டிய நிர்ப்பந்தம் ஜெயலலிதாவிற்கு இருந்தது. அவர் பதிலுக்கு
    இலவசங்கள் அறிவிக்க வில்லை என்றால் பிரச்சாரம் செய்யாமல்
    அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க. வென்றிருக்கும். நம்முடைய
    மக்கள் மனநிலை அப்படி. ஜெயலலிதாவும் இலவசங்கள் அறிவித்தார்.
    தங்கம், ஆடு, மாடு, கணினி என எல்லாம் இலவசம். அடுத்த
    தேர்தலில் இரு கழங்களும் இன்னும் எவ்வளவு எவ்வளவு இலவசங்கள்
    தரலாம், எப்படி ஆட்சிக்கு வரலாம் என்று தான் கணக்கிட்டு
    வருகின்றன. இது யார் பணம்? மக்கள் வரிப் பணம். மத்திய அரசு
    திட்டக் கமிஷன் ஒதுக்கீடு செய்யும் பணம். இத்தனை இலவசங்களுக்கு
    மிஞ்சி தான் மின் நிலையங்கள், பிற திட்டங்கள், PSU போன்றவை
    செய்ய மாநிலம் முனைகிறது. கிருஷ்ணா, கணேஷ் ஷங்கர் குஜராத்தில்
    மோடி எதுவும் இலவசங்கள் தராமல் ஆட்சியை தொடர்கிறார் என்பது
    கருத்தில் கொள்ள வேண்டும். அங்கு கலைஞர் பாணியில் காங்கிரஸ்
    அறிவித்த இலவச முயற்சிகள் பனால் ஆகி விட்டது.

    4) தமிழக அரசு கோர்ட்டில் தோல்வி அடைந்ததை இந்த வலையில்
    highlight செய்யும் நண்பர்கள் வெற்றி பெற்ற ஒன்றை கணக்கில் கொள்ள
    வேண்டும். கலைஞர் கட்டிய புதிய சட்டசபைக்கு (தண்ணீர் தொட்டி
    பாணியில்) மாறாதது தவறு என்று வீரமணி, பொதுநல வழக்கு
    தொடுத்த சிலர் (பின்னணியில் தி.மு.க. என்பதில் சந்தேகம் வேண்டாம்)
    இவை அனைத்தும் ஹை கோர்ட்-லும் சுப்ரீம் கோர்ட்டிலும் தோல்வி
    அடைந்துள்ளன. மின் திட்டங்களை அடிக்கல் நாட்டி விட்டு அவற்றை
    இயக்குவதற்கு முடியாமலும், தொடக்கப் பணிகளே கூட ஆரம்பிக்காத
    சில இடங்களில் இருந்த நிலையிலும், இந்த தண்ணீர் தொட்டி
    கட்டிடத்தை மட்டும் அவசர அவசரமாக கட்டியதையும், திறப்பு
    விழாவிற்கு Dome பாணியில் தோட்டா தரணி சினிமா சூட்டிங்குகளில்
    போடுவது போல் செட் அமைத்துக் கொடுத்ததும் நகைப்பிற்கு இடமாக
    இருந்தன. சுப்ரீம் கோர்ட்டின் முடிவு நிறைவு தருகிறது.இதில்
    நமக்குள் மாற்றுக் கருத்து இருக்கலாம். என் கருத்தை நான் தருகிறேன்.

    5) பார்லிமென்ட் தேர்தலில் பல அரசியல் மாற்றங்கள் நிகழும் எனத்
    தோன்றுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடும்
    நிலையில் (பிரதமர் பதவிக்கு), தமிழகத்தில் தொகுதி பங்கீடு
    அவர் நேரிடையாக செய்தால் அது UPA கூட்டணிக்கு சிறப்பு தேடி தரும்!

    -பாவலன்

  28. தினகர்

    ”இலவசம் என்ற பெயரில் வாக்கு வங்கியை பிடிக்க முதலில்
    அடிச்சுவடு இட்ட பெருமை மாபெரும் அரசியல் சாணக்கியன்
    கலைஞருக்கே சாரும்”

    இலவசம் கொடுத்த காரணத்தினால் நிர்வாகம் சீர்கெட்டு போய்விட்டது எப்படி சொல்லமுடியும்.. நிதி மேலாண்மையை பொறுத்த வரை அது ஒரு செலவீனம் அவ்வளவு தான். . மக்கள் மீது சுமை ஏற்றாமல் மக்களுக்கு போனஸ் கொடுத்ததாகத்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். நிதி மேலாண்மையின் அடிப்படையில் பார்த்தால், அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    வருவாய் என்பது என்னமோ பஸ்கட்டணம், மின்சார கட்டணம், பால்விலை மூலம் மட்டுமே வருகிறது என்ற நினைப்பு மூடத்தனமானது.

    இந்த துறைகளில் நட்டம் வந்தாலும், மற்ற் துறைகளில் வரும் லாபத்தை வைத்து ஈடுகட்ட முடியும். சரக்கு கட்டணத்தை சீரமைத்து, பயணிகள் கட்டணத்தை கட்டுக்குள் வைத்து லல்லு பிரசாத் யாதவ் எளிதாக எல்லோருக்கும் புரியும் வகையில் இதை செய்து காட்டினார்.

    கலைஞரும் அதே போல் மற்ற வருவாய் ஆதாரங்களை அதிகரித்து, மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களை கட்டுக்குள் வைத்திருந்தார்

    இது நிறுவனங்கள் உள்ளிட்ட நிதிமேலாண்மையின் சாதாரண சூட்சமம்.

    செலவு கணக்குகளை சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே. கடந்த திமுக ஆட்சியில் முந்தைய ஜெ, ஆட்சியை விட எவ்வளவு வருமானம் அதிகமாக வந்தது என்பது தெரியுமா?. கலைஞர் ஆட்சியை குறைகூறிக் கொண்டிருக்கிறாரே, முந்தைய ஆட்சியின் ஐந்து வருட வரவு செலவு விவரத்தை வெள்ளை அறிக்கையாக விட வேண்டியது தானே. கூடவே அவரது முந்தைய ஐந்து வருட விவரத்தையும் வெளியிட்டால் இன்னும் பெருமையாக சொல்லலாமே.. திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்த விவரம் மக்களுக்கு தெரிந்து விடும் என்று தானே அதை செய்யவில்லை. வருவாய் அதிகரித்து செலவும் அதிகரித்தால் தவறு இல்லையே.. ஒரு துறையில் லாபம் ஈட்டி, மக்கள் நலத்துறையில் நஷ்டம் வந்தால் என்ன தவறு ? வெறுமனே திமுக ஆட்சி செலவு நட்டம் என்று புலம்பி தனது இயலாமையை மறைக்கப் பார்க்கிறார்.

    நான், எனது, என்னுடைய என்று சொல்பவர்கள் யாரும் ஒரு கம்பெனி நிர்வாகத்தை ,நிதிமேலாண்மையை கூட திறமையாக செய்ய முடியாது.அரசாள்பவர்களே அப்படியென்றால் அந்த நாட்டின் நிலைமை பரிதாபம் தான்.

    அம்மாவை ஆதரித்தே ஆக வேண்டும் என்ற நிலை எடுத்துள்ளவர்கள் அம்மா வழியிலேயே புலம்புவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

    நிர்வாகத்தை சீர்படுத்த பத்து வருடம் வேண்டும் இருபது வருடம் வேண்டும் என்றால் ”ஒராண்டில் நூறாண்டு சாதனை ” எனப்து வெறும் வெத்து வேட்டு தானா?

  29. அமானுல்லா, துபாய்

    இந்த கருத்தை பராசக்தி வசன ஸ்டைலில் தயவு செய்து படியுங்கள். ” இந்த தமிழகம் எத்தணையோ விசித்திரமான அரசியல் தலைவர்களை சந்தித்துள்ளது. ஆனால் நான் எல்லாறையும் விட ரொம்ப விசித்தரமானவன். தொலைதொடர்பு துறையினை ஒவ்வொரு முறையும் கெஞ்சி போராடி வாங்கினேன், தம்பி ராசா மீதும் கனிமொழி மீது பொய் வழக்கு போடப்பட்டு சி.பி.ஐ. சிறையில் அடைத்த பொழுது மத்திய அரசுக்கு எதிராக பேசாமல் இருந்தேன் ராஜபக்சே அங்கு தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து கொண்டிருந்த பொழுது அதனை பார்த்து கொண்டு சும்மா இருந்தேன் நாளைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு வழிய சென்று ஆதரவு கொடுப்பேன் முதலியவைகளை தானே நீங்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு நான் அதனை மறுப்பேன் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அது தான் இல்லை…தொலைதொடர்பு துறையினை ஒவ்வொரு முறையும் கெஞ்சி போராடி வாங்கினேன் ஏன்? எங்கள் சுயநலத்துக்கா? இல்லை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டினை முதலில் வந்த நம் தம்பிகளின் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மலிவான விலைக்கு ஒதுக்கி அதன் காரணமாக மக்களுக்கு குறைந்த விலையில் தொலைபேசி சேவையினை வழங்குவதற்கு தம்பி ராசா மீதும் கனிமொழி மீது பொய் வழக்கு போடப்பட்டு சி.பி.ஐ. சிறையில் அடைத்தாலும் மத்திய அரசுக்கு எதிராக பேசாமல் இருந்தேன் ஏன்? அவர்களுக்கு பயந்தா இல்லை இன்னும் அதிகமாக ஏதாவது பேசினால் எஞ்சியிருப்பவர்களையும் திகாருக்கு அனுப்பிவிடுவார்கள் என்று. ராஜபக்சே அங்கு தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து கொண்டிருந்த பொழுது அதனை பார்த்து கொண்டு சும்மா இருந்தேனே அவர்களுக்கு அஞ்சியா? இல்லை போர் முடிந்து விட்டது என சிவகங்கை சின்ன பையன் கூறிய பசப்பு வார்த்தையினை நம்பியதால் நாளைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு வழிய சென்று ஆதரவு கொடுத்து பாலு, அஞ்சா நெஞ்சன் போன்ற தம்பிகளுக்கு வளம் கொழிக்கும் துறையினை அடம் பிடித்து கேட்டு வாங்குவேனே எங்கள் சுயநலத்துக்கா? இல்லை… நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணம் என்னிடம் இருப்பதால் என்னை தண்டிக்க வேண்டுமென்றால் முதலில் என் மீது தொடர்ந்து விமர்சனங்களை வீசும் பத்திரிக்கைகளை தண்டியுங்கள்..2ஜி வழக்கில் இம்சை கொடுக்கும் சுவாமியை தண்டியுங்கள்…என்னை பிளாக்பெயில் செய்து வரும் அன்னையை தண்டியுங்கள்..என் தம்பிகள் மீது பொய் வழக்கு போடும் அந்த அம்மையாரை தண்டியுங்கள்…அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் நித்யானந்தாவை தண்டியுங்கள்..ஸ்பாட் பிக்சிங் செய்யும் கிரிக்கெட் வீரர்களை தண்டியுங்கள்..அப்புறம் என்னிடம் வாருங்கள். அப்படியே என்னுடைய ப்ளாஸ் பேக்கை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கின்றேன்…என் பெயரோ கருணாநிதி..பெயரிலேயே நிதி உள்ள பெயர்..அதனை நிதியை ஈட்டுவதற்கு தான் வீட்டை விட்டு புறப்பட்டேன்..பிறப்பது ஓர் இடம் வாழ்வது ஓர் இடம் என்பது தானே தமிழனின் நியதி. நான் பிறந்ததோ திருக்குவளை அங்கிருந்து திருட்டு ரயில் ஏறி இந்த சென்னை பட்டணத்துக்கு வந்த நான் முதலில் பெரியாரிடம் ஓடினேன்…அவரிடம் இருந்தால் சொற்ப சம்பளம் மட்டுமே நிச்சயம் என திரைப்படத்துறையினே நோக்கி ஓடினேன்..அங்கிருந்தாலும் எத்தனை காலம் தாக்கு பிடிக்க முடியுமோ என எண்ணி அண்ணாவிடம் ஓடினேன்..சில வருடங்களில் அரசியலில் நல்ல படியாக செட்டில் ஆனேன்…கொஞ்ச நாளில் அங்கிருந்து ஈ.வி.கே. சம்பதை விரட்டினேன்..காலம் அண்ணாவை விழுங்கியதால் கழகத்தை கைப்பற்றினேன்..பிறகு எம்.ஜி.ஆரை விரட்டினேன்..நாவலரை விரட்டினேன்..மதியழகனை விரட்டினேன்..கடைசியில் வைகோவையும் விரட்டினேன்..விரட்டினேன்..விரட்டினேன்… என் வாரிசுகளுக்கு போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என சம்பந்தபட்ட அனைவரையும் விரட்டினேன். இறுதியில் தளபதிக்கும் அஞ்சா நெஞ்சனுக்கும் பேராசிரியரோ, ஆற்காடோ அல்லது துரைமுருகனோ போட்டியாக வரமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையால் விரட்டுவதை பிறகு நிறுத்தி விட்டேன். தமிழ் ஈழத்தினை கண்ட பிறகும் என் உயிர் இந்த உடலை விட்டு பிரியட்டும்…எனக்கு பிறகு எனது வாரிசுகள் இந்த கழகத்தையும் இந்த நாட்டையும் கட்டி காக்கட்டும்…..

    -அமானுல்லா, துபாய்

  30. பாவலன்

    ///தமிழ் ஈழத்தினை கண்ட பிறகு என் உயிர் இந்த உடலை விட்டு பிரியட்டும்…எனக்கு பிறகு எனது வாரிசுகள் இந்த கழகத்தையும் இந்த நாட்டையும் கட்டி காக்கட்டும்…../// (அமானுல்லா)

    கலைஞர் பேசும் டையலாக் போலவே உள்ளது..அசத்தீட்டீங்க பாஸ்!

    -பாவலன்

  31. enkaruthu

    அமானுல்லா பாயை தவிர எந்த ஒரு முஸ்லிம் நண்பர்களும் கண்டனம் இந்த தளத்தில் தெரிவிக்கவில்லையே.ஒரு வேலை என் முஸ்லிம் நண்பர்கள் சொன்னதை நான் அப்படியே கமெண்ட் போட்டதற்காக ஒரு முஸ்லிம் நண்பர் பெயரால் இந்த சூழ்ச்சி கூட்டம் ஒரு கமெண்ட் போட்டிருக்கும்.வினோ சார்தான் இந்த கமெண்ட் துபாயில் இருந்து வந்ததா அல்லது எதாவது ஒரு அக்கிரகாரத்தில் இருந்து முஸ்லிம் பெயரில் வந்ததா என்று சொல்லவேண்டும்.இதை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
    ______

    🙂 🙂 🙂
    -Vino

  32. தினகர்

    —————————————————————————————————————
    வினோ சார்தான் இந்த கமெண்ட் துபாயில் இருந்து வந்ததா அல்லது எதாவது ஒரு அக்கிரகாரத்தில் இருந்து முஸ்லிம் பெயரில் வந்ததா என்று சொல்லவேண்டும்.இதை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
    ______
    🙂 🙂 🙂
    -Vino
    —————————————————————————————————————-
    கேள்வியும், பதிலாக புன்னகையும் புதிராக இருக்கிறதே..

    மௌனம் சம்மதம் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். புன்னகைக்கு ‘ஆமாம்’ என்று அர்த்தம் உண்டோ?.

    __________________

    நண்பர் என்கருத்து கேட்டிருந்த விதத்தைப் படித்துவிட்டு ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். அதைத்தான் குறிப்பிட்டேன்!

    -வினோ

  33. பாவலன்

    இந்த வலையில் எழுதும் பலரையும் நினைத்துப் பார்ப்பதுண்டு.
    ஆனால் அவர்களில் “நேரில் ஒரு நாள் பார்க்கலாம்” என நினைப்பவர்கள்
    வெகு குறைவான சிலரே. அவர்களில் அன்பர் என் கருத்தும் ஒருவர்!
    மற்றவர்கள் பேரை எழுதினால் என் கருத்து அவர் appointment-ஐ cancel
    செய்து விடலாம் என்பதால் அவர்கள் பெயரைக் குறிப்பிடவில்லை.

    -பாவலன்

  34. பாவலன்

    “முகம் நக நட்பது நட்பன்று – நெஞ்சத்து
    அகம் நக நட்பதே நட்பு”

    நேரில் பார்க்காமலேயே சிலருக்கு நண்பராக நான் இருப்பது எனக்கே
    வியப்பாக இருக்கிறது. பிரியா விடை பல தடவை பெற்றும்
    தொடர்ந்து எழுதுவதற்கு இந்த வலையில் உள்ள நண்பர்களே
    காரணம். பயணங்கள் முடிவதில்லை.

    -பாவலன்

  35. Ganesh Shankar

    அமனுல்லா அவர்களே அருமை போங்க.
    சபாஷ் பாஸ்!!!
    உங்களின் நீண்ட சிந்தனையுள்ள மற்றும் இப்படி நகைச்சுவை உள்ள பெரு சிலவற்றை படித்து விட்டு வெகு நாள் ஆகிவிட்டது.
    உங்களின் வசனத்தை படித்து,உங்கள் திறமை வியக்க வைகிறது.

    //ஆனால் அவர்களில் “நேரில் ஒரு நாள் பார்க்கலாம்” என நினைப்பவர்கள்
    வெகு குறைவான சிலரே.//(பாவலன்)

    எனக்கும் கூட உங்களை மற்றும் சிலரை பார்க்க வேண்டும் என்று ஆசையாக தான் இருக்கிறது.
    எப்படிஉங்களை நேரில் பார்க்கலாம் என்று சொன்னீர்கள் என்றால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்,சந்திக்கலாம்.

  36. பாவலன்

    ///எப்படி உங்களை நேரில் பார்க்கலாம் என்று சொன்னீர்கள் என்றால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்,சந்திக்கலாம்./// (கணேஷ் ஷங்கர்)

    நான் பெரிதும் மரியாதை வைத்திருக்கும் சைதை குமரனும்
    ‘நேரில் பார்க்கலாம்’ என்று அழைப்பு விடுத்தும் அதை மறுத்து விட்டேன்.
    பல காரணங்களினால் நிழலாக கருத்து பதிவு செய்ய விரும்புகிறேன்.
    குமரன், நீங்கள், கிருஷ்ணா, என் கருத்து, வினோ, தினகர், தேவராஜன்,
    எழுதுவதை ரொம்ப நாட்களாக படித்து வருகிறேன். மனதளவில் தினமும்
    உங்களைச் சந்தித்தும், எழுதுவதை சிந்தித்தும் வருகிறேன். நன்றி.

    “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு.”

    இந்த திருக்குறளை விளக்கப் போனால் எனக்கு ஒரு மணி ஆகும்!
    குமரனும் நானும் தமிழை அவ்வளவு விரும்புபவர்கள். நண்பர்
    கிருஷ்ணாவிற்கும் இந்த வலையில் எழுதுபவர்கள் பலர் பண்பு
    உடையவர்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அரசியல் வேறுபாடு
    தாண்டி, அவர்கள் காட்டும் நற்பண்பை பாராட்டுகிறேன். நல்ல நூல்
    படிக்க படிக்க புதிய கருத்துக்களைத் தருவது போல், பண்புடைய
    மக்களுடம் நாம் கொண்டுள்ள நட்பு அவரோடு பழகும் போதெல்லாம்
    மகிழ்ச்சி தரும். நன்றி.

    -பாவலன்

  37. Krishna

    /வினோ சார்தான் இந்த கமெண்ட் துபாயில் இருந்து வந்ததா அல்லது எதாவது ஒரு அக்கிரகாரத்தில் இருந்து முஸ்லிம் பெயரில் வந்ததா என்று சொல்லவேண்டும்.இதை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.//

    ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சொல்லப்போனால் அவர்கள் சாதியினர் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் ஸ்ரீரங்கத்தை தவிர மற்ற தொகுதிகளில் திமுக அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு திருவல்லிக்கேணியும், கும்பகோணமும் சிறந்த உதாரணம். மயிலை தொகுதியை பொறுத்த வரையிலும் தங்கபாலு தன் மனைவியை முதலில் தேர்தலில் நிற்க வைத்து அதற்கு பிறகு அவரை வாபஸ் வாங்க வைத்து கடைசியில் தானே நிற்பதாக சொல்லி ஒரு கேவலமான நாடகத்தை அரங்கேற்றியது, ஜாதி மத வித்தியாசமின்றி மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்தது. இவரை போன்ற சொந்த கட்சியிலேயே செல்வாக்கு இல்லாத ஒருவரை நிறுத்துவதற்கு பதில் திமுகவே அந்த தொகுதியில் நின்றிருந்தால் நிச்சயம் திமுக தான் வெற்றி பெற்றிருக்கும். முன்பு பிராமண சமுதாயத்தில் அதிமுகவுக்கு ஆதரவு இருந்தது என்பது உண்மை. ஆனால் எனக்கு தெரிந்தவரையிலும் சங்கராச்சாரியார் கைதுக்கு பிறகு பிராமணர்கள் பலர் அதிமுக ஆதரவை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் நான் கேள்விப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

  38. பாவலன்

    ///எனக்கு தெரிந்தவரையிலும் சங்கராச்சாரியார் கைதுக்கு பிறகு
    பிராமணர்கள் பலர் அதிமுக ஆதரவை நிறுத்தி விட்டார்கள்
    என்பது தான் நான் கேள்விப்பட்டது. அது எந்த அளவுக்கு உண்மை
    என்று தெரியவில்லை./// (கிருஷ்ணா)

    நண்பர் கிருஷ்ணா அவர்களே:

    வெளிப்படையாகவே உங்களுக்குப் பதில் தருகிறேன்.

    தி.மு.க., தி.க. இரு கட்சிகளும் எப்போதும் மீட்டிங்குகளில் பிராமணர்களை தாக்கி வெறுப்பான பேச்சுக்களைப் பேசுவது, எல்லாப் பிரச்சினைகளுக்கும்
    பிராமணர்களையே குற்றம் சாட்டுவது (சட்ட சபை தோல்வியைக் கலைஞர்
    பார்ப்பனர்கள் செய்த சதி என்றார், துக்ளக் ஆண்டு விழாவில் சோ அவர்கள்
    இதைக் குறிப்பிட்டுப் பேசினார்) இந்த நடவடிக்கைகளால் தி.மு.க.-விற்கு
    எதிராக வாக்களிக்க பிராமணர்கள் முனைகிற போது, ஹிந்துக்களுக்கு
    ஆதரவாக ஜெயலலிதா நடந்து கொள்வது, தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு
    இருக்கும் அதிருப்தி, பயம் இவற்றால் AIADMK-க்கு வாக்களிப்பார்கள் என
    நினைக்கிறேன்.

    “காஞ்சி சங்கராச்சார்யர் கைது எல்லா பிராமணர்களையும் affect பண்ணுமா”
    எனச் சொல்ல முடியாது. பலர் ஸ்ருங்கேரி சங்கராச்சார்யா அவர்களையே
    பின்பற்றுகிறார்கள் எனக் குறிப்பிடுகிறேன்.

    -பாவலன்

  39. Krishna

    //“காஞ்சி சங்கராச்சார்யர் கைது எல்லா பிராமணர்களையும் affect பண்ணுமா”
    எனச் சொல்ல முடியாது. பலர் ஸ்ருங்கேரி சங்கராச்சார்யா அவர்களையே
    பின்பற்றுகிறார்கள் எனக் குறிப்பிடுகிறேன்.//

    பாவலன் அவர்களே, சிருங்கேரி சங்கராச்சாரியாரை பின்பற்றுகிறவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாரை வெறுப்பார்கள் என்று சொல்ல முடியாது. தவிர 2006 சட்ட சபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.வி.சேகர் வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். பிராமணர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் ஏன் உங்களுக்கு வாக்குகள் குறைந்தது என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர் சங்கராச்சாரியார் கைதால் தான் என்றும் குறிப்பிட்டார். இது அன்றைய ஏடுகளில் வந்தது. மற்றபடி நீங்கள் சொல்வதைப் போல் திமுக எப்பொழுதுமே தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்களை தான் இழுப்பார்கள் என்பதை ஒப்பு கொள்கிறேன்.

  40. பாவலன்

    ///நீங்கள் சொல்வதைப் போல் திமுக எப்பொழுதுமே தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்களை தான் இழுப்பார்கள் என்பதை ஒப்பு கொள்கிறேன்.// (கிருஷ்ணா)

    இதைப் பற்றி துக்ளக் சோ ஏற்கெனவே நிறைய எழுதி விட்டார்.
    நான் அதிகம் எழுத வேண்டியதில்லை.

    ஜெயேந்திரர் கைதானது பிராமணர்களுக்கு மிகவும் அதிர்ச்சியைக்
    கொடுத்தது. எஸ்.வி. சேகர் சொன்னது போல் மைலாப்பூரில் அவர்
    குறைந்த வித்தியாசத்தில் வென்றதற்கு இதுவும் ஒரு காரணமாக
    இருக்கலாம். நான் மறுக்கவில்லை. ஜெயேந்திரர் வழக்கு கோர்ட்டில்
    நடந்து வருவதால் என் கருத்து என தனியாக எதுவுமில்லை.

    சிருங்கேரி சங்கராசார்யாவைப் பின்பற்றுபவர்கள் காஞ்சி ஜெயேந்திரர்
    மீது அக்கறை காட்ட மாட்டார்கள் என்பதல்ல. அவர்கள் அரசியலில்
    நாட்டம் காட்டுவதில்லை. “இன்னாருக்கு வோட்டுப் போடு!” என்று
    எந்த ஸ்டேட்மென்ட்டும் சிருங்கேரி மடத்தில் இருந்து வராது. இதை
    நான் மிகவும் வரவேற்கிறேன். ஆன்மீகத்தில் உள்ளவர்கள் அரசியலில்
    இருந்து விலகி இருப்பதே நல்லது. (இதே அறிவுரையை நானும் விரைவில்
    பின்பற்றுவேன், இந்த வலையில் நீங்களும் காண்பீர்கள்).

    கோவையில் Conference நடந்தால் அதில் நான் கலந்து கொள்வேன். அங்கே சிருங்கேரி மடத்தால் நிறுவப்பட்ட சாரதாம்பாள் கோயில் அழகானது,
    அமைதியானது. அனவைரும் இங்கு வந்து செல்கின்றனர். கோவையில்
    மருதமலையும், இந்தக் கோயிலும் பிரசித்தியானவை.

    எனக்கு ஜாதிப் பற்று இல்லை. நான் “ஜாதிகள் இல்லையடி பாப்பா,
    குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின்
    வழி நடப்பவன். அதனால் தான் நான் பொது நிலையிலேயே நின்று
    உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பதில் அளித்து வருகிறேன். நன்றி.

    -பாவலன்

  41. தினகர்

    “எனக்கு ஜாதிப் பற்று இல்லை. நான் “ஜாதிகள் இல்லையடி பாப்பா,
    குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின்
    வழி நடப்பவன்.”

    மிக்க மகிழ்ச்சி பாவலன்.. இது சாதாரணமாது அல்ல.. மிகவும் மகத்துவமான விஷயம்..

  42. Krishna

    //சிருங்கேரி சங்கராசார்யாவைப் பின்பற்றுபவர்கள் காஞ்சி ஜெயேந்திரர்
    மீது அக்கறை காட்ட மாட்டார்கள் என்பதல்ல. அவர்கள் அரசியலில்
    நாட்டம் காட்டுவதில்லை. “இன்னாருக்கு வோட்டுப் போடு!” என்று
    எந்த ஸ்டேட்மென்ட்டும் சிருங்கேரி மடத்தில் இருந்து வராது. இதை
    நான் மிகவும் வரவேற்கிறேன். ஆன்மீகத்தில் உள்ளவர்கள் அரசியலில்
    இருந்து விலகி இருப்பதே நல்லது. (இதே அறிவுரையை நானும் விரைவில்
    பின்பற்றுவேன், இந்த வலையில் நீங்களும் காண்பீர்கள்).

    பாவலன் அவர்களே, நீங்கள் சொல்வது மிக்க சரி. காஞ்சி சங்கராச்சாரியார் 2000-2004 சமயங்களில் தேவையற்ற அரசியல் சம்பந்தப்பட்ட கமெண்டுகளை பேசி பல அரசியல்வாதிகளின் கோபதுக்கும் பகைக்கும் ஆளானார். அவரே அதை உணர்ந்து கொண்டு, இப்போது அரசியல் பேசுவதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் நித்தி பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். நீங்கள் சொல்வது போல் இன்னமும் ஆன்மிகம் முழுமையாக அழிந்து விடவில்லை. அவர்கள் அரசியலில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது.

  43. பாவலன்

    ///நீங்கள் சொல்வது போல் இன்னமும் ஆன்மிகம் முழுமையாக அழிந்து விடவில்லை./// (கிருஷ்ணா)

    ஆன்மிகம் வளர்ந்து கொண்டு தான் வருகின்றது (எல்லா மதங்களையும்
    சேர்த்து தான் நான் சொல்கிறேன்).

    “நான்மாடக் கூடல்” மதுரையில் ஒரு வரலாற்று நிகழ்வு. (மதுரையில்
    இருந்து படிக்கும் நண்பர்களுக்கு மேலும் தகவல் தெரியலாம். நான்
    மதுரையை விட்டு இடம் பெயர்ந்து ஆண்டுகள் நிறைய ஓடி விட்டன.)

    மதுரையில் நேதாஜி சாலை-மேலமாசி வீதி இரண்டும் சந்திக்கும்
    இடம் ஒரு முக்கியமான இடம். அங்கே தான் ஆரிய பவன் இருந்தது.
    பக்கத்தில் ஆரிய பவன் (by night). தூங்கா நகரம் மதுரை. இரவு பத்து
    மணி தாண்டி வந்தாலும் கடைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.
    இந்த மேல மாசி வீதியில் சற்று நடந்து ஆவின் கடை அருகே திரும்பி
    நடந்தால் மீனாக்ஷி கோயில் தெரியும், சென்ட்ரல் தியேட்டர் தாண்டி
    நீங்கள் நடக்க வேண்டி இருக்கும். Busy area. நாம் இப்போது பின்னால்
    நடந்து ஆரிய பவன் சிக்னலுக்கு வருவோம். எனது சிறு வயதில் இந்த
    இடத்தை அடிக்கடி மீனாட்சி கோயில் போகும் போதும், கடைகளுக்கு
    துணி வாங்கவும் அடிக்கடி வருவதுண்டு. இந்த ஆரிய பவன் ஹோட்டலின்
    மேலே நடக்கும் பம்பாய் ஷோ-ரூமில் தான் குறைந்த விலையில் எனது
    தந்தை எங்களுக்கு துணி வாங்குவார். ஒரே துணியை மொத்தமாக
    அனைத்து பிரதர்சுக்கும் வாங்குவது அவர் ஸ்டைல் (வருமானம் அப்படி).
    இந்த சிக்னலில் ஆரிய பவன் அருகே நடைபாதையில் மிகச் சிறிய காலி
    இடம் இருந்தது. அங்கே சில கற்களை வைத்து வழிபட்டனர் ரிக்சா,
    ஆட்டோ ஓட்டுபவர்கள். Public encroachment – இதை அகற்ற வேண்டும்
    என்றெல்லாம் பேச்சு வந்தது. ஒரு ஆண்டு போய் (அடுத்த தீபாவளி)
    அங்கு வந்த போது ஒரு முருகன் சிலை பார்த்தேன். அப்போது ஒரு
    பூசாரியும் இருந்தார். எனது தந்தைக்கு தமிழில் வழிபாடு மிகவும் பிடிக்கும்
    என்பதால் ‘போற்றி’ அர்ச்சனை முழுவதும் கேட்ட பின் தான் நகர்வார்.

    கொஞ்சம் கொஞ்சமாக அந்த கோவில் பிரசித்து பெற ஆரம்பித்தது.
    எனது படிப்பு பெரிதாக நான் வடநாடு சென்று, பின் பிற நாடு சென்று,
    ஆண்டுகள் ஓட (cinema direction -ல் காலெண்டரில் ஷீட்டுகள் ஓடுவது
    போல் காண்பிப்பார்கள்) நான் திரும்பி அங்கு வந்ததும் பார்த்து
    அதிர்ந்து விட்டேன். மிகப் பெரிய அளவில் அந்த கோயில் develop ஆகி
    மண்டபம் இவை எல்லாம் கட்டி (கும்பாபிஷேகம் நடந்தது என்றும்
    கேள்விப்பட்டேன்), பயங்கரமாக கூட்டத்தில் நின்று (மறைந்த எனது
    தந்தையின் நினைவு) முருகனைத் தரிசனம் செய்தேன்.

    அந்தக் கோயிலின் போட்டோ இணைப்பு, தகவல்கள் இந்த இணைப்பில்:
    http://bit.ly/KGtNZ2
    நீங்கள் உன்னிப்பாகப் பார்த்தால் பிளாட்பாரத்தில் இந்த கோயில் இருப்பது
    தெரியும்!!!!

    மதுரைக்கு நண்பர்கள் visit செல்லும் போது காரை விட்டு விட்டு எங்கும்
    நடந்து சென்றால் பொறுமையாக சுற்றிப் பார்க்கலாம். நான் Conferences
    கலந்து கொள்ள மதுரை வரும் போது மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு
    எதிரே உள்ள காதி க்ராப்டில் சுக்கு காப்பி ஒன்று cup & saucer-ல் பருகி விட்டு
    கிளம்பினால் தான் ஊர் வந்த திருப்தி இருக்கும்!

    ஹிந்து மதத்தில் நடந்த ஒரு நிகழ்வைச் சொன்னேன். இதே போல்
    கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களிலும் நம்பிக்கையின் அடிப்படையில்
    கோயில்கள் develop ஆகி இருக்கும். அதை ஆரம்பத்தில் இருந்து (since
    the inception) பார்த்தவர்களுக்கு தான் மாற்றங்கள், வளர்ச்சிகள் புரிபடும்.

    “பாரத நாடு பழம்பெரும்நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”

    -பாவலன்

  44. Ganesh Shankar

    //நான் “ஜாதிகள் இல்லையடி பாப்பா,
    குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியின்
    வழி நடப்பவன். //(பாவலன்)

    இந்த கொள்கையை தான் நானும் நம்புகிறேன்.
    நீங்கள் அவ்வறு இருப்பவர் தான் என்பதை உங்களின் தொகுப்புகளை பார்பவர்களுக்கு தெரியும்.
    மதம்,சாதி,நிறம்,மொழி,இனம் ஆகியவற்றால் மற்றவரை அடையாளம் காட்டுவது,வசைபாடுவது யாராக இருபினும் அது சரி அல்ல.
    இதை சிலர் புரிந்து கொண்டு இருகிறார்கள்,சிலர் புரிந்து கொண்டு விடுவார்கள் என்றும் நம்புகிறேன்.
    கருத்துக்கு கருத்துக்கு,விடயத்துக்கு விடயம் அது அழகு,சரி,நாகரீகம் என்பதை நான் நம்புகிறேன்.

  45. enkaruthu

    //ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவு படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. //

    இப்ப என்ன உங்கள் ஜாதியை இழிவிபடுதிவிட்டேன்.யார் போட்டார்கள் என்ற என் சந்தேகத்திற்காக வினோ சாரிடம் பதில் கேட்டேன்.இதில் ஏன் கிருஷ்ணன் உங்களுக்கு இவ்வளவு ஒரு கோபம்.நான் என்ன சொல்கிறேன் என்றால் முட்டாளான நானே இவ்வளவு கேள்வி கேட்கும்பொழுது அறிவாளியான பொதுமக்கள் எவ்வளவு கேள்வி கேட்பார்கள்.கொஞ்சம் இதையெல்லாம் சிந்தித்து சூழ்ச்சி பண்ண உங்கள் நண்பர்களுக்கு ஆலோசனை கூறுங்களேன்.

  46. enkaruthu

    //சிருங்கேரி சங்கராசார்யாவைப் பின்பற்றுபவர்கள் காஞ்சி ஜெயேந்திரர்
    மீது அக்கறை காட்ட மாட்டார்கள் என்பதல்ல. அவர்கள் அரசியலில்
    நாட்டம் காட்டுவதில்லை. “இன்னாருக்கு வோட்டுப் போடு!” என்று
    எந்த ஸ்டேட்மென்ட்டும் சிருங்கேரி மடத்தில் இருந்து வராது. //

    சூப்பர் பாவலன் அவர்களே.நல்ல புரிதல்.இதை எல்லா விஷயத்திலும் நீங்கள் பின் பற்றினால் நல்லதொரு மாற்றம் வரும்.

    இந்த ஜாதி ரீதியாக இருக்கும் நண்பர்கள் ஒரு விஷயம் சிந்தித்தால் ஒன்றை தெரிந்துகொள்ளமுடியும். ஒரு நண்பர் சொன்னார் பிரணாபும் ஒரு அய்யர்தனே என்று.அந்த நண்பருக்கு நன்றி.ஏனென்றால் நானும் சரி, இந்த தளத்தில் பிரணாபுக்கு அதரவாக கமெண்ட் போடும் நண்பர்களும் சரி, இதை பிரணாப் ஒரு தரமான வேட்பாளர்தான் என்று நமக்கு சொன்ன இந்த தளமானாலும் சரி நாங்கள் ஜாதி ரீதியாக எதையும் பார்பதில்லை என்ற சான்றிதழை கொடுத்துவிட்டார் அதற்காக.

  47. பாவலன்

    //இதை எல்லா விஷயத்திலும் நீங்கள் பின் பற்றினால் நல்லதொரு மாற்றம் வரும்.// (என் கருத்து)

    நிறைகுறைகளை உடையவன் மனிதன். என்னிடம் குறைகள் உண்டு.
    நிறைகளும் உண்டு. நிறைகளை ஏற்ற, குறைகளை மாற்ற முயற்சித்து
    வருகிறேன்.

    ஒரு கண்ணதாசன் பாடல்!

    ஆண்: (கமல்)

    இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?
    இதுவரை நடித்தது அது என்ன வேதம்? இது என்ன பாடம்?
    இலக்கணம் மாறுதோ?..

    பெண்: (ஜெயசித்ரா)
    என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
    உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
    என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
    உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

    புரியாதாதலே திரை போட்டு வைத்தேன்
    திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
    மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ?
    விளக்கி வைப்பாயோ?..

    இயக்கம் – KB.

    இதில் கரை-கறை, விலக்கி-விளக்கி என்ற சொற்களை கவிஞர்
    படத்தின் கதையுடன் பின்னியிருப்பது அருமையும் அருமை.

    இன்று வரும் பாடல்கள் – படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தமே
    இல்லாதது போல் – ஏதோ இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள்.
    இசையைப் பற்றி எழுதாமல் இருப்பதே நலம் என்று நினைக்கிறேன்.

    -பாவலன்

  48. பாவலன்

    பெண் பாத்திரத்தில் நடித்தவர் (“நிழல் நிஜமாகிறது” படத்தில்)
    சுமித்ரா என்று நினைக்கிறேன். சோடா புட்டி கண்ணாடி
    போட்டு வருவார். அதெல்லாம் ஒரு காலம்!

    கவிஞர் கண்ணதாசன் “புரியாததாலே திரை போட்டு வைத்தேன்”
    என்று அன்றே எழுதினார். அப்போதும் கமலின் படங்கள், புதுமைகள்
    புரிவதில்லை. இப்போதும் அவர் படங்கள், புதுமைகள் புரிவதில்லை.
    கமல் நீண்ட நேரம் பேசினால் அதைக் கேட்பவர்களுக்கு தலை ‘கிறு,கிறு’
    என வந்துவிடும். டி.வி.யில் பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால்
    நேரில் காணும் பத்திரிக்கையாளர்களின் நிலைமை..?!

    -பாவலன்

  49. குமரன்

    என்கருத்து

    ஒரு கட்டுரை சவுக்கு தளத்தில் வந்துள்ளது.

    உங்களுக்காக,அதில் ஒரு பகுதி இதோ.

    ///இந்த விவாதங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. கருத்துப்பரிமாற்றமும், விவாதங்களும் நம்மைப் பண்படுத்துவதற்காகவே… …

    ஆனால், ஒரு சிலரின் விவாதங்கள், நாகரீக சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக உள்ளன. பார்ப்பனீயம் சாதிக் கட்டமைவை நிறுவி அதைக் காப்பாற்றியது என்பதும், பார்ப்பனீயம் கண்டிக்கப்பட வேண்டியது என்பதும் மறுக்க முடியாதது. அதே நேரத்தில் ஒருவர் பிறப்பால் பார்ப்பனராக இருந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை இழித்துப் பேசுவதும், நீ பார்ப்பான் எனச் சாடுவதும், பிறப்பால் தலித்துகளை இழித்துப் பேசுவதற்கு ஒப்பானதே. இது போன்ற பார்ப்பனச் சாடல்கள் இச்சமூக வலைத்தளங்களில் நிரவிக் கிடக்கின்றன. ஒரு மனிதனின் செயல்பாடுகளை வைத்து மட்டுமே அவனை அளவிட முடியும். பிறப்பாலும், தோற்றத்தாலும் அவனை அளவிடத் தொடங்கினோமேயானால், அதற்கு யார்தான் தப்ப முடியும் ?

    “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்ட ளைக் கல்” என்கிறார் வள்ளுவர்.

    சாதி உணர்வையும், சாதித் திமிரையும், சாதிப்பாசத்தையும் நாம் சாடவேண்டுமா என்றால் நிச்சயம் சாடியே தீர வேண்டும். சாதியற்ற சமூகம் அமைய வேண்டும் என்று விரும்புவோர் இதை மறுக்கமாட்டார்கள். ஒருவர் சாதிப்பாசத்தோடோ, மற்ற சாதியின் மீது வெறுப்போடோ நடந்து கொள்கிறார் என்றால், அதை கண்டித்தே தீர வேண்டும். ஆனால் பிறப்பால் ஒருவர் ஒரு சாதியில் பிறந்து விட்டார் என்பதற்காகவே அவரைச் சாடுவது என்பது சாதீய மனோபாவமே ஆகும்.///

  50. பாவலன்

    நெடுமாறன் முன்பு கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தபோது
    (தினமணி) இதே திருக்குறளில் தான் முடித்திருந்தார்:

    “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்ட ளைக் கல்” (K. 505)

    ஒரு மனிதனின் பெருமையை அறிவதற்கும், சிறுமையை அறிவதற்கும்
    அவர்கள் செய்யும் வினைகள் (கருமம்) உரை கல்லாக அமையும்.

    In English: A man’s deeds are the touchstone of his greatness and littleness.

    -பாவலன்

  51. Rajkumar.V

    mayaya Kandu Mayangathinga. Srilanka issuela Kalam oda stand enna? Avar Antha sambavam nadanthapa kandichu ethum pesinara? Ipa samebathula Srilanka poi Rajapakshe va santhichutu Tamilarkal Singalam Kathukanum nu solitu. Ipa elarum nala irukaratha solitu vanthar. Rajapakshe Kalama use pani than nalavanu katunan. Srilankan issue ls DMK va Kora solara vaikal than Kalam Pugal padarinka.
    corruption issue la Avaroda stand enna? Ethum vai therakama than irukarar.
    Srilankan issuela Avar Tamilarkaluku ataharava pesiruntharuna All over india intha issuela Namaku support a irunthirukum. Manasachi oda think pani parunka. Avar matum Rajapaksheva ethirthu poratam arivcaha India fulla Namaku support pannuvanga Ean Avar pannala?
    Etho avar undu avr book sale undunu irukaravara eanpa disturb panarinka?

  52. enkaruthu

    //அதே நேரத்தில் ஒருவர் பிறப்பால் பார்ப்பனராக இருந்துவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை இழித்துப் பேசுவதும், நீ பார்ப்பான் எனச் சாடுவதும், பிறப்பால் தலித்துகளை இழித்துப் பேசுவதற்கு ஒப்பானதே. //

    அருமையான கேள்வி குமரன் அவர்களே என் கமெண்டை எல்லாம் நன்றாக படியுங்கள் அதில் ஜாதி பற்று பார்க்காத ஒரு உண்மை இருக்கும்.என் உள்ளார்ந்த ஆசை என்ன தெரியுமா நம் முன்னோர்கள்தான் விஷயம் புரியாமல் சில உழைக்காமல் பிச்சை எடுப்பவரின் பேச்சை கேட்டு எங்கள் இனம் தேவர் இனம் அதனால் இந்த சூத்திரன் மற்றும் தால்தபட்டவனை உன் மூளையை கொண்டு அவனை அடிமையாக்கு என்று சொல்வார்கள்.ஆனால் நாம் இந்த இன்டர்நெட் உலகத்தில் இருக்கிறோம் நம் ஜாதியே தவறு செய்தாலும் அது தவறு என்று சொல்லும் பக்குவம் வரவேண்டும்.அதுதான் எந்த ஜாதியை சேர்ந்தாலும் கஷ்டபடும் அனைத்து ஏழைகளுக்கும் ஒரு விடிவு காலமாக இருக்கும்.

  53. பாவலன்

    ///ஆனால் நாம் இந்த இன்டர்நெட் உலகத்தில் இருக்கிறோம்/// (என் கருத்து)

    இன்டர்நெட்டில் மட்டும் அல்ல, Conferences-களில் எனக்கு பல நண்பர்கள்
    உண்டு. அரசியல் தவிர வேறு அனைத்தையும் அவர்களிடம் கலந்து
    உரையாடுவது உண்டு. ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக சங்கீதம்,
    மேற்கத்திய கிளாசிகல் இசை இவற்றைப் பற்றியும், புண்ணிய ஸ்தலங்கள்
    பற்றியும் சுவாரசியமாகப் பேசுவது உண்டு. கிரிக்கெட், டென்னிஸ், செஸ் இவற்றைப் பற்றியும் discuss செய்வோம். டிவிட்டரில் டாக்டர் சுவாமி,
    வைத்தி இவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் உண்டு. நன்றி.

    -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *