BREAKING NEWS
Search

இந்தியப் பிரதமராக சட்டப்படி தகுதியானவர் சோனியா காந்தி! – அப்துல்கலாம் பளிச் பேட்டி!

இந்தியப் பிரதமராக சட்டப்படி தகுதியானவர் சோனியா காந்தி! – அப்துல்கலாம்


நொய்டா: பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி அனைத்து வகையிலும் சோனியா காந்தி தகுதியானவர்தான் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார்.

நொய்டாவில் திங்கள்கிழமை நடந்த மருத்துவமனை செவிலியர் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்தார் கலாம். அவரிடம் சோனியா காந்தியின் குடியுரிமை பற்றி சுப்பிரமணிய சாமி எழுப்பிய சர்ச்சை மற்றும் பிரதமராக சோனியாவுக்கு சட்டப்பூர்வ தகுதியுள்ளதாக டர்னிங் பாயின்ட்ஸ் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்தது குறித்து கேட்டனர்.

சுப்பிரமணிய சாமியின் பெயரைக் குறிப்பிடாமல், “சோனியாவின் குடியுரிமை குறித்த கேள்விக்கு இடமில்லை. அவர் இந்தியக் குடிமகளே,” என்றார் கலாம்.

மேலும் அவர் கூறுகையில், “பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன்.

சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும்.

ஆனால், சோனியா காந்தி அவ்வாறு செய்யவில்லை. அதுகுறித்த ஆரம்பப் பேச்சுக்குக் கூட இடமளிக்காமல் அவர் மன்மோகன் சிங்கை பிரதமராக்க என்னிடம் கோரினார். அன்று நான் மிகவும் வியப்படைந்தேன்.

இந்த அரசியல் நிகழ்வில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. அதை அரசியலாக்கத் தேவையில்லை,” என்றார் கலாம்.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி

கலாமின் புத்தகம் வெளியான போது அதிருப்தி தெரிவித்திருந்த பாஜக, இப்போது செய்தியாளர்களிடம் வெளிப்படையாக அவர் சோனியா குறித்து பேசியதை கண்டித்துள்ளது.

கலாம் மீது தாங்கள் வைத்த மரியாதை, நம்பிக்கை குறைந்துவிட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவும் கலாமின் இந்தக் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மகிழ்ச்சி

ஆனால் காங்கிரஸ் கட்சி கலாமை பாராட்டியுள்ளது. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோதே, சோனியாவின் சட்டத் தகுதிகள் குறித்து பிரதமர் தேர்வின் போது விவாதிக்கவில்லை என்று 2004-ல் விளக்கம் தெரிவித்ததையும், அதை பாஜகவினர் மறைத்துவிட்டு, ஊடகங்களில் சுஷ்மா ஸ்வராஜின் கேவலமான ஒப்பாரியை பெரிதுபடுத்திவிட்டதாகவும் கூறியுள்ள அக்கட்சி, கலாம் தன் நிலைப்பாட்டில் தொடர்ந்து உண்மையாக இருப்பது, அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.

-என்வழி செய்திகள்




4 thoughts on “இந்தியப் பிரதமராக சட்டப்படி தகுதியானவர் சோனியா காந்தி! – அப்துல்கலாம் பளிச் பேட்டி!

  1. தேவராஜன்

    இப்போது என்ன செய்வார்கள் சோனியா எதிர்ப்பாளர்கள்?

  2. kumaran

    மேடம் காந்தி பிரதமராக வந்தால், இது வரை இருந்த இந்திய பிரதமர்களிலேயே மிக சிறந்த பிரதமராக போற்றபடுவார்.

  3. Ganesh Shankar

    நாட்டின் மீது உள்ள பற்றெல்லாம் சட்டத்தை வைத்து மட்டும் ஏற்று கொள்ளாமல் இருப்பது நல்லது.
    நாம் பிறந்த ஊரில் நமக்கு இருக்கும் பற்று,மற்ற எந்த ஊரின் மேலும் வருவது மிகவும் கடினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *