BREAKING NEWS
Search

‘கலகத்துக்கு’ முடிவு கட்டினார் கலாம்! – குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை!!

‘குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மனசாட்சி இடம்தரவில்லை’- அப்துல்கலாம்

டெல்லி: நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை…, என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட மனசாட்சி இடம் தரவில்லை என தன்னை முன்னிறுத்த முயன்ற தலைவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நண்பர்களே, குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக நடந்து வரும் நிகழ்வுகளை அறிந்திருப்பீர்கள். மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாகும் விருப்பம் எனக்கு இல்லாவிட்டாலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மற்றும் சில கட்சிகள் என்னை குடியரச் தலைவர் பதவிக்கான வேட்பாளராக களமிறக்க விரும்பினர்.

அது அவர்கள் என்மீது வைத்த அன்பு மற்றும் மரியாதை. மக்களின் விருப்பத்தை அவர்கள் பிரதிபலித்தார்கள். பொதுமக்கள் பலரும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர். இந்த ஆதரவு உண்மையிலேயே என்னை திக்குமுக்காட வைத்தது. அவர்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

ஆனாலும் இப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட  நான் விரும்பவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

‘மனசாட்சி இடம் தரவில்லை’

அப்துல்கலாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று கலாமிடம் 3 முறை தொலைபேசியில் பேசியிருந்தார்.

அத்வானியிடம், “இந்தத் தேர்தலில் போட்டியிட என் மனசாட்சி இடம் தரவில்லை…”, என்று கலாம் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

மமதா பானர்ஜியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். பாஜகவின் குல்கர்னி நேரில் சென்று கலாமை சந்தித்துப் பேசினார்.

இருப்பினும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து கலாமை ஆதரிக்கவில்லை. ஜெயலலிதா, நிதீஷ்குமார், நவீன் பட்நாயக், நரேந்திர மோடி போன்றோர் அப்துல் கலாமை ஆதரிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக நின்றனர்.

இன்னொரு பக்கம், அப்துல் கலாமை என்டிஏவோ மமதாவோ நிறுத்தினால், கம்யூனிஸ்டுகள் பிரணாபை ஆதரிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

-என்வழி செய்திகள்
12 thoughts on “‘கலகத்துக்கு’ முடிவு கட்டினார் கலாம்! – குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை!!

 1. தினகர்

  சோனியா இவரை ஆதரிக்க வேண்டும் எதிர்பார்ப்பவர்களில் எத்தனை பேர், தனக்கும் சோனியாவின் நிலை ஏற்பட்டிருந்தால், இவரை மீண்டும் ஆதரிப்பார்கள். மனசாட்சியோடு சொல்லட்டும். அட பக்கத்து வீட்டுக்காரன் ‘ ’கவுன்சிலர்’ பதவிக்கு போட்டியிட்டாலே சின்ன சின்ன பகையை மனசிலே வச்சுகிட்டு, முதல் ஆளா எதிர்த்து தானே வாக்களிக்கிறார்கள்.

  இந்திய குடிமக்களுக்கு மிகவும் பிடித்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு பிடிக்காதவர் ஆகிவிட்டாரே.. அப்படி இருக்கையில் அவர்கள் இவரை மீண்டும் குடியரசு தலைவர் ஆக்குவதற்கு ஆதரிப்பார்களா என்று இவர் முதலிலேயே யோசித்து இருக்க வேண்டாமா?

  காங்கிரசும், பாஜகவும் ஒருமித்த கருத்துடன் வேண்டுகோள் கொடுத்தால் ‘பரிசீலிப்பேன்’ என்று ஒற்றை வார்த்தையில் ‘முதலிலேயே’ சொல்லியிருந்தால், வகித்த பதவிக்கும் அழகு சேர்த்திருக்கும். இப்படி ஒரு அநியாய அரசியல் காமெடிக்கு காரணமாக இருந்திருக்க வேண்டாம்.

  மம்தாவின் கலாம் பாசம் அவரது சொந்த விருப்பு வெறுப்புக்காக மட்டுமே. அதை சரிக்கட்டத்தான் ஃபேஸ்புக் அரசியல் செய்தார்.

  கலைஞருக்காகவது, கூட்டணி தர்மம் இருக்கிறது.. ஜெயலலிதாவுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை, அவர் ஏன் கலாமை முன்னிறுத்த வில்லை… ஓ.. திமுக ஆட்சியை கலைக்க ‘ கலாம்’ உத்தரவிடவில்லை என்ற காட்டமோ?

  தமிழ் சொல்லாடல் என்பது கலைஞருக்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் , பொருத்தமான தமிழ் சொற்களை பிரயோகித்து சுருக்கமாக பதில் சொல்வது தான் அவரது தமிழ் புலமை.

  அந்த ஒரு சொல்லை அரசியல் ஆக்குபவர்களுக்கு, ஜெயலலிதா ஏன் கலாம் பெயரை முன்னிறுத்தாமல் சங்மா என்ற முகம் தெரியாத நபருக்கு கேன்வாஸ் செய்ய வேண்டும் என்பது உரைப்பதே இல்லை. அப்படியானல் ‘ கருணாநிதி எதிர்ப்பு’ என்ற அரசியல் விளையாட்டிற்கு தான், இவர்கள் கலாம் கலாம் என்று பாசமழை பொழிகிறார்களா?

  கலாம் மிகச்சிறந்த மனிதர், மனித நேயம் உள்ளவர், எளிமையானவர், இந்தியாவின் நீண்டகாலம் குறித்த கவலை, ஆவல் கொண்டவர், இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக இருப்பவர். மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும், 2012 குடியரசுத்தலைவர் தேர்தலில் அவர் சற்று சறுக்கிவிட்டார் என்பதே உண்மை. எவ்வளவு பெரிய மனிதருக்கும் ஏதாவது ஒரு சறுக்கல் ஏற்படத்தான் செய்யும். இதை அப்படியே எடுத்துக்கொள்வோம். டாக்டர். கலாம் தொடர்ந்து தனது பணிகளை தொய்வில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.

 2. பாவலன்

  ///மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும், 2012 குடியரசுத்தலைவர் தேர்தலில் அவர் சற்று சறுக்கிவிட்டார் என்பதே உண்மை. எவ்வளவு பெரிய மனிதருக்கும் ஏதாவது ஒரு சறுக்கல் ஏற்படத்தான் செய்யும். //// (தினகர்)

  டாக்டர் கலாமிற்கு இரண்டாம் தடவை குடியரசுத் தலைவர் மீது
  ஒரு எண்ணம் இருந்தது சென்ற வார நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது.
  அப்படிப் பட்ட எண்ணம் தவறல்ல! அதை முன்பே சொல்லி இருக்கலாம்.
  இல்லை, எனக்கு அப்படிப் பட்ட எண்ணம் இல்லை என ஒதுங்கி இருக்கலாம். (ஒதுங்கி இருக்க வேண்டும் என நினைப்பவர்களில் நானும்
  ஒருவன். நமது அரசியல் அப்படி. கிருஷ்ணா, குமரன் மன்னிக்கவும்!)

  ஒரு திருக்குறளை நன்கு அறிந்து செயல்பட்டிருக்கலாம். (டாக்டர்
  கலாம் திருக்குறளை நன்கு கற்றவர்). அந்த குறளை மட்டும் இந்த
  வலையில் வைக்கிறேன். நான் மிகவும் மதிப்பும், மரியாதையும்
  வைத்துள்ள டாக்டர் கலாம் அவர்களை விமர்சனம் செய்யும் அளவிற்கு
  எனக்கு ஞானமும், அனுபவமும் இல்லை.

  திருக்குறள்:
  எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
  திண்ணியர் ஆகப் பெறின். – (குறள் : 666)

  மு.வ உரை:

  எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக
  இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

  -பாவலன்

 3. தினகர்

  “டாக்டர் கலாமிற்கு இரண்டாம் தடவை குடியரசுத் தலைவர் மீது
  ஒரு எண்ணம் இருந்தது சென்ற வார நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது.
  அப்படிப் பட்ட எண்ணம் தவறல்ல! ”

  அவர் அப்படி ஆசைப் பட்டிருக்க கூடாது என்பதே எனது கருத்து. ஒரு வேளை அவரது ‘கருத்துக்கள்’ ’ ஆசை’ என்ற ரீதியில் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்க் கூடும். ஆனால் அதற்கும் இடம் கொடுத்திருக்க் கூடாது தான் எனது நினைப்பு. பெரிய மனிதரை சிறுமைப்படுத்துவது போல் தான் மம்தா நடந்து கொண்டார். அதுவும் மூன்று சாய்ஸில் ஒருத்தர் என்ற அள்வுக்கு சிறுமைப்படுத்தி விட்டார். அதில் இருந்தே மம்தாவின் சுயரூபம் தெரிந்து விட்டது.

  கலாம் மாபெரும் மனிதர், மிகப்பெரிய சக்தி. அது சரியான வழியில் பயன்படுத்தப்படவேண்டும்.

 4. Krishna

  எனக்கு பிரணாப் அறிவிக்கப்பட்டதே ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக குடியரசு தலைவர் பதவிக்கு காங்கிரசின் பார்வையில் இரண்டு தகுதிகள் வேண்டும் – ஒன்று ஜெயில் சிங் போல் வீடு பெருக்க தெரிந்திருக்க வேண்டும் (இதை அவரே இப்படி பெருமையாக சொன்னார் – இந்திராஜி ஆணையிட்டால் அவர் வீட்டை கூடி பெருக்குவேன்) அல்லது இப்போது இருக்கும் பெண்மணி போல் சமையல் செய்து பத்து பாத்திரம் தேய்க்க தெரிந்திருக்க வேண்டும் (இதை ராஜஸ்தான் காங்கிரஸ் MLA ஒருவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு உண்மையை விளம்பியதற்காக வாங்கி கட்டி கொண்டார்) அல்லது குறைந்த பட்சம் நமது பிரதமர் போல் எஸ் மேடம் என்று சொல்லவாவது தெரிந்திருக்க வேண்டும். இதில் எந்த தகுதியும் இல்லாத கலாம், சங்கமா போன்றவர்கள் இதற்கு ஆசை படக்கூடாது. பிரணாப் தேர்ந்தேடுக்கபட்டதே ஒரு உலக மகா அதிசயம் என்று தான் சொல்லவேண்டும்.

 5. enkaruthu

  //டாக்டர் கலாமிற்கு இரண்டாம் தடவை குடியரசுத் தலைவர் மீது
  ஒரு எண்ணம் இருந்தது சென்ற வார நிகழ்வுகளில் இருந்து தெரிகிறது.
  அப்படிப் பட்ட எண்ணம் தவறல்ல! அதை முன்பே சொல்லி இருக்கலாம்.//

  இந்த ஒரு கருதைதை வைத்துதான் உங்களுக்குகாக பேசும் நம்மை போன்ற நண்பர்களுக்கு என் பதிலை தந்தேன். அப்துல் கலாம் அவர்களே நல்ல முடிவு.மீண்டும் நீங்கள் ஒரு gem என்று இந்த பதிலால் அரசியல் கழகத்திற்கு ஆட்படாமல் விலகிவிட்டீர்கள்.

  நாட்டுக்கே பல ஆராச்சி மூலம் பெருமை தந்த கலாம் அவர்களே அந்த வழியில் நடை போடுங்கள்.என்னை பொறுத்தவரை இந்த ஜனாதிபதி பதவி என்பது உங்களை போன்ற அறிவாழிகளுக்கு ஒரு தடை கல்தான்.உங்களை இந்த தேசமே உச்சி முகரும் நேரம் இந்த பதிலால் உங்களுக்கு நாளை கிடைக்கபோவது நிச்சயம்.

 6. Krishna

  ////கலைஞருக்காகவது, கூட்டணி தர்மம் இருக்கிறது.. ஜெயலலிதாவுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் இல்லை, அவர் ஏன் கலாமை முன்னிறுத்த வில்லை… ஓ.. திமுக ஆட்சியை கலைக்க ‘ கலாம்’ உத்தரவிடவில்லை என்ற காட்டமோ?//
  கலாம் குடியரசு தலைவராக இருந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் ஜெ தான் முதல்வர். கடைசி ஓர் ஆண்டு தான் திமுக ஆட்சி செய்தது. ஜெயலலிதா கடந்த திமுக ஆட்சியில் ஒரு முறை கூட திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொல்லவே இல்லை (1996-2001 திமுக ஆட்சியில் கோவை குண்டு வெடிப்புக்காக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொன்னார் என்பது வேறு விஷயம்). ஒரு குடியரசு தலைவர் தன்னிச்சையாக எந்த அரசையும் கலைக்க முடியாது என்பது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும் – அது ஜெயலலிதாவுக்கு தெரியாதா என்ன? எனவே இது ஒரு அபத்த வாதம்.

  //தமிழ் சொல்லாடல் என்பது கலைஞருக்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் , பொருத்தமான தமிழ் சொற்களை பிரயோகித்து சுருக்கமாக பதில் சொல்வது தான் அவரது தமிழ் புலமை.//

  ஆனால் ஒருவரின் பெயர் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி பேசுகிறேன் என்று ஒருவர் சொன்னால் அவருக்கு நாகரிகம் தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

  //அந்த ஒரு சொல்லை அரசியல் ஆக்குபவர்களுக்கு, ஜெயலலிதா ஏன் கலாம் பெயரை முன்னிறுத்தாமல் சங்மா என்ற முகம் தெரியாத நபருக்கு கேன்வாஸ் செய்ய வேண்டும் என்பது உரைப்பதே இல்லை. அப்படியானல் ‘ கருணாநிதி எதிர்ப்பு’ என்ற அரசியல் விளையாட்டிற்கு தான், இவர்கள் கலாம் கலாம் என்று பாசமழை பொழிகிறார்களா?//

  ஜெயலலிதா சங்மா பெயரை அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னரே அப்துல் கலாம் பெயரை சுஷ்மா ஸ்வராஜ் பாஜக சார்பில் முன்மொழிவதாக சொன்னார். அதற்கு சரத் யாதவும் முஸ்லிம்களை வெறுக்கும் சிவ சேனாவின் பால் தாக்கரேயும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அடுத்த நாளே தான் சொன்னதை வாபஸ் பெற்றார் சுஷ்மா ஸ்வராஜ். இதிலிருந்து கலாமுக்கு NDA கூட்டணியிலேயே ஆதரவு இல்லை என்று தெளிவாக தெரிந்து விட்டது. எப்படியும் UPA விலுள்ள எந்த கட்சியும் ஆதரிக்காது என்பதும் சிறு குழந்தைக்கும் தெரியும். அதனால் தான் அதற்கு பிறகு சங்மா பெயரை ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் முன் மொழிந்தார்கள். எந்த ஒரு கட்சிக்கும் எதிர் கட்சியின் வேட்பாளர் தோற்கடிக்க பட வேண்டும் என்பது தான் குறிக்கோளாக இருக்க முடியும். இதை மனதில் கொண்டு தான் சங்மா வை ஆதரிக்க ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் முடிவு செய்தார்கள். இதில் ஜெயலலிதாவையோ கூட்டணி தர்மத்தை முன்னிட்டு UPA வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்த கருணாநிதியையோ குறை கூற முடியாது. இன்று அப்துல் கலாம் வேட்பாளராக முடியவில்லை என்றால் அதற்கு முழு காரணம் காங்கிரஸ், நிதீஷ் குமார் மற்றும் பால் தாக்கரே தான் – வேறு யாரும் அல்ல.

  கருணாநிதியின் ஒரு சொல்லை அரசியல் ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் ஏற்கனவே கூறியது போல் தமிழகம் கண்ட மிக சிறந்த முதல்வரான கர்ம வீரரையே அவரது நிறத்தை கேலி செய்வது போல் அண்டன்க்காக்காய், அமாவாசை இருட்டு என்று இவர் சொன்னதை விட கலாம் என்றால் கலகம் என்ற வார்த்தை அநாகரீகமானது அல்ல.

 7. சேனா

  கிருஷ்ணா, கணேஷ் சங்கர் ஆகியோரது கருணாநிதி விரோதமும், என்னமோ இந்திய அரசியலுக்கே இவர்கள்தான் அத்தாரிட்டி என்ற ரீதியில், எந்த வித ஆதாரமில்லாமல் பேசும் போக்கும் மிகுந்த அறுவெறுப்பைத் தருகிறது. எதற்கும் ஒரு எல்லை உள்ளது. மக்கள் விரோத ஆட்சியாளர்களை எதிர்க்கும் திராணியற்ற இவர்கள், தொடர்ந்து கருணாநிதியை விமர்சிப்பது நியாயமற்றது. அதற்கான தகுதியும் இவர்களுக்கு இல்லை.

 8. Krishna

  //கிருஷ்ணா, கணேஷ் சங்கர் ஆகியோரது கருணாநிதி விரோதமும், என்னமோ இந்திய அரசியலுக்கே இவர்கள்தான் அத்தாரிட்டி என்ற ரீதியில், எந்த வித ஆதாரமில்லாமல் பேசும் போக்கும் மிகுந்த அறுவெறுப்பைத் தருகிறது. எதற்கும் ஒரு எல்லை உள்ளது. மக்கள் விரோத ஆட்சியாளர்களை எதிர்க்கும் திராணியற்ற இவர்கள், தொடர்ந்து கருணாநிதியை விமர்சிப்பது நியாயமற்றது. அதற்கான தகுதியும் இவர்களுக்கு இல்லை.//

  இதில் தனிப்பட்ட விமரிசனம் வேண்டாமே. கருணாநிதியின் கடந்த கால தரக்குறைவான பேச்சுக்களை பற்றி எல்லோருக்கும் தெரியும் – இதற்கு என்று தனியாக ஆதாரம் தேட வேண்டியதில்லை – அந்த கால கட்டங்களில் அவரது அறிக்கைகள் சில website link – களில் இருக்கிறது. website link கொடுப்பது சரியாக இருக்காது என்பதால் அவற்றை தவிர்த்து வருகிறேன். கடந்த ஆட்சியில் திமுக செய்து விட்டு போன குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து 10 ஆண்டுகளாவது திமுக தொடர்பு இல்லாத ஆட்சி இருக்க வேண்டும் (அதிமுக ஆட்சி தான் என்று இல்லை – தேமுதிக ஆட்சி வந்தாலும் நன்று தான்) ஜெயலலிதா மட்டுமின்றி விஜயகாந்த், ராமதாஸ், வைகோ என்று யார் முதல்வராக இருந்தாலும் நிச்சயமாக அந்த ஆட்சி திமுக ஆட்சியை விட மோசமாக இருக்க முடியாது. அந்த அளவுக்கு அமைச்சர்கள் புகுந்து விளையாடியது மட்டுமின்றி ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள் போல் நடந்து கொண்டதை திமுக ஆதரவு பத்திரிகையாளர் காலம் சென்ற சோலை அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் வார நக்கீரன் இதழ்களில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் – (முடிந்தால் நக்கீரன் வெப்சைட்டில் பார்க்கவும்)

 9. தினகர்

  “ஓ.. திமுக ஆட்சியை கலைக்க ‘ கலாம்’ உத்தரவிடவில்லை என்ற காட்டமோ?// – எனவே இது ஒரு அபத்த வாதம் ”

  நண்பர் சரியாக சொன்னார். கலாம் மீது ஜெ.க்கு காழ்ப்புணர்ச்சிக்கோ, வருத்தப்படுவதற்கோ எந்த ஒரு காரணமும் இல்லை என்பதற்காக குறிப்பிட்டது தான் அந்த வார்த்தைகள்.

  ஜெயலலிதாவுக்கு எதிராக கலாம் எந்த நிலையிலும் செயல்படாத நிலையில் கூட அவரை மீண்டும் முன்னிறுத்தாமல், எங்கேயோ உள்ள, அரசியலில் காணாமல் போன ஒருவரை கண்டு பிடித்து குடியரசு தலைவராக கேன்வாஸ் செய்கிறார். உண்மையில் தமிழர்கள் கண்டிக்கவேண்டியது ஜெயலலிதாவின் இந்த செயலைத் தான்

  ஆனால் வலையாளர்கள் வசைபாடுவது கலைஞரைத்தானே.. அதற்கும் பொறுத்தமாகத்தான் ’வாழ்க வசவாளார்கள்’ என்று அழகான தமிழில் ஏற்கனவே சொல்லியிருக்கிறாரே.

 10. Krishna

  //ஜெயலலிதாவுக்கு எதிராக கலாம் எந்த நிலையிலும் செயல்படாத நிலையில் கூட அவரை மீண்டும் முன்னிறுத்தாமல், எங்கேயோ உள்ள, அரசியலில் காணாமல் போன ஒருவரை கண்டு பிடித்து குடியரசு தலைவராக கேன்வாஸ் செய்கிறார். உண்மையில் தமிழர்கள் கண்டிக்கவேண்டியது ஜெயலலிதாவின் இந்த செயலைத் தான்//

  கலாமை ஆதரிக்க முடியாது என்று சரத் யாதவ் சொன்ன பிறகு தான் ஜெயலலிதா சங்கமா பெயரை முன்மொழிந்தார். சோனியாவுக்கு எப்படி தன் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ, அப்படி தான் ஜெயலலிதாவுக்கும் மற்ற காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளுக்கும் – காங்கிரஸ் வேட்பாளர் எக்காரணத்தை கொண்டும் வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். சோனியா மட்டும் கலாமை ஆதரித்திருந்தால் karunanindhi and JJ would have fallen in line. ஆக நேரடியாக குத்திய சோனியாவும் முதுகில் குத்திய ஐந்தாம் படை நிதீஷ் குமாரும் தான் இதற்கு பொறுப்பு.

 11. குமரன்

  ///ஆனால் வலையாளர்கள் வசைபாடுவது கலைஞரைத்தானே.. அதற்கும் பொறுத்தமாகத்தான் ’வாழ்க வசவாளார்கள்’ என்று அழகான தமிழில் ஏற்கனவே சொல்லியிருக்கிறாரே.///

  கருணாநிதிதான் கலாமை முதலில் வசை பாடினார். அதனால்தான் அவரை விமரிசிக்க வேண்டி வந்தது. கலாமை கருணாநிதி கலக்கம் என்று விஷமத்தனமாகவும் விஷம் கலந்தும் பேசா விட்டால் இந்த விஷயத்தில் அவரைப் பற்றி என் விமரிசிக்கப் போகிறோம்.

  உண்மையில் கருணாநிதி அடிக்கடி கூறும் ” வாழ்க வசவாளர்கள் ” என்ற தொடர் அவருக்கே மிகவும் பொருந்தும்!

 12. யாரோ

  //இந்திய குடிமக்களுக்கு மிகவும் பிடித்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் தான். //
  அதை நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி? உண்மை என்னனு தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க..சும்மா பொத்தாம்பொதுவா பேசிட கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *