BREAKING NEWS
Search

‘பார்த்தா பார்த்த இடத்திலேயே அழிச்சிடுங்க, திருட்டு வீடியோவை!’ – கலைப்புலி தாணு

‘திருட்டு வீடியோவைப் பார்க்காதீங்க.. ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள்!!’

 

13707568_1426023717424025_6954889399323323813_n

சென்னை: கபாலி பற்றி திருட்டு வீடியோவாக எந்தக் காட்சி வந்தாலும் உடனே அதைப் பார்த்து பகிர்வதைத் தவிருங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கேட்டுக் கொண்டுள்ளார்.

கபாலி படத்தின் ஒரு நிமிட திருட்டு வீடியோ நேற்று இரவு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தலைவர் ரஜினிக்கு நேற்று போடப்பட்ட சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் இந்த கேவலமான காரியத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.

thalaivar-tickets -1

ஆனால் அந்த வீடியோவை பலரும் சமூக வலைத் தளங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து பரப்பி வருகின்றனர். சதிகாரர்களின் சூழ்ச்சி புரிந்தோ புரியாமலோ ரசிகர்களும் இதனை பல்வேறு குழுக்களில் பரப்பி, இது உண்மையா… எனக் கேட்டு கடுப்பேற்றி வருகின்றனர்.

அதே நேரம் படத்தின் வேறு காட்சிகள் எதுவும் வெளியாகாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் கலைப்புலி தாணு.

13669517_1242650092426157_106081791879756566_o

இந்த திருட்டு வீடியோ குறித்து தாணு கூறுகையில், “கபாலி படம் திருட்டு வீடியோவாக வராமல் தடுக்க வேண்டிய ஏற்பாடுகளை டெல்லி வரை சென்று செய்துவிட்டோம். மத்திய அரசு திருட்டு வீடியோவைத் தடுப்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினி சாருக்கு போடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது ஒரு நிமிடக் காட்சியை பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அந்த நபரை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்.

ரசிகர்களுக்கு எனது வேண்டுகோள்… என்னதான் திருட்டு வீடியோ வெளியானாலும், தலைவர் ரஜினி படத்தை, அவரது அறிமுகக் காட்சியை தியேட்டரில் காணும் அனுபவம் கிடைக்குமா? எனவே இதுபோன்ற வீடியோக்கள் எதையும பார்க்காதீர்கள், சமூக வலைத் தளங்களில் பகிராதீர்கள். இதுபோன்ற வீடியோக்களை யார் உங்களுக்கு அனுப்பினாலும் அதனை அழித்துவிடுங்கள். நாளை கபாலி திருநாள். ரசிகர்கள் பங்கேற்று பரவசமடையுங்கள்,” என்றார்.

-என்வழி




2 thoughts on “‘பார்த்தா பார்த்த இடத்திலேயே அழிச்சிடுங்க, திருட்டு வீடியோவை!’ – கலைப்புலி தாணு

  1. murugan

    saami kumbuda kovilukku porom
    valiyila yaaraavadhu saami photova pocket size la print pottu kuduththa adhukkaaga adha thookki podradhilla
    adhaiyum kannula oththikittu purse la vetchikkittu kovilukku povom
    ovvoru thalaivaroda rasiganum adhey mana nilai dhaan indha irukkaanga indha Whats App video release pannadhukku apparamum
    thalaivarin dharisanathukkaaga kaaththirupom – velliththiraiyil
    KABALI Count down starts…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *