BREAKING NEWS
Search

கபாலியில் பாட்டெழுத வாய்ப்புத் தராததால் வைரமுத்துவுக்கு வந்த கடுப்பு இது! – கலைப்புலி தாணு

 

கபாலியில் பாட்டெழுத வாய்ப்புத் தராததால் வைரமுத்துவுக்கு வந்த கடுப்பு இது! – கலைப்புலி தாணு பதிலடி

thalaivar-tickets -1

பாட்டெழுத வாய்ப்புத் தராததாலேயே தான் தயாரித்த ரஜினியின் கபாலியைப் பற்றி மோசமாக விமர்சித்துள்ளார் வைரமுத்து என்று கலைப்புலி தாணு பதிலடி கொடுத்துள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள கபாலி பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி மக்களின் அமோக வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது.

இந்தப் படம் குறித்து சாதகமான விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அரிமா சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, கபாலி குறித்து கிண்டலடித்ததோடு, அந்தப் படத்தை தோல்விப் படம் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

கபாலிக்கு முன்னாடி கோட் போட்டது நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களைப் பாரத்துதான் ரஜினிக்கு கோட் போட்டு ரஞ்சித் கபாலியை எடுத்துட்டாரு. நான் புரிந்து கொள்கிறேன் ஒவ்வொருவரையும், இந்தக் கூட்டத்தை, வந்திருக்கிற பெருமக்களை, அரசியலை, விஞ்ஞானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, தொலைந்து போன விமானத்தை, கபாலியின் தோல்வியை (இரு முறை)….

-இப்படிப் போகிறது அவரது பேச்சு.

வைரமுத்துவின் வீடியோ பேச்சு சமூக வலைத் தளங்களில் வைரவலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து வைரமுதத்துவைக் கண்டித்து பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக பல பத்திரிகையாளர்களே வைரமுத்துவைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் வைரமுத்துவின் விமர்சனம் குறித்து கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த தாணு, வைரமுத்துவுக்கு ஏன் இத்தனை கோபம் என்பது புரிகிறது. அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார். ஆனால் வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

விஜய்யை வைத்து சச்சின் படத்தை நான் எடுத்தபோது, அஜீத் படத்தில் எவனா இருந்தா எனக்கென்ன என்று பாட்டெழுதி, விஜய் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துவிட்டேன். எனவே சச்சினில் ஒரு வாய்ப்புக் கொடுங்கள். விஜய் ரசிகர்களை குளிர்விக்க விரும்புகிறேன் என்று கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கொடுக்க முடியாத நிலை.

அடுத்து துப்பாக்கி தயாரித்துக் கொண்டிருந்த போதும் கேட்டார். முடியவில்லை.

கபாலியில் வாய்ப்புத் தர முடியாத சூழல். இதெல்லாம் புரியாமல் அவர் விஷம் கக்கி இருக்கிறார்.

கபாலியை தோல்விப் படம் எனும் இவர்தான், அந்தப் படத்துக்கு முதல் நாளில் 4000 டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றார். ஒரு நயா பைசா நான் வாங்கவில்லை…

யார் என்ன சொன்னாலும் கபாலி வெற்றியைத் தடுக்க முடிந்ததா.. இன்று அது மாபெரும் வெற்றிப் படம். மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி இது, என்றார்.

-என்வழி

 
9 thoughts on “கபாலியில் பாட்டெழுத வாய்ப்புத் தராததால் வைரமுத்துவுக்கு வந்த கடுப்பு இது! – கலைப்புலி தாணு

 1. Rajagopalan

  Edharkuthan arambathileye sonnen. Aadi masam vemdam endru…
  Everything was positive for the movie. but somewhere somehow negative reactions raising.

 2. Raghul

  Thanu Sir,

  Thank You!

  We expect full page advt with Thalvar’s thanks giving letter by tomorrow…. Please Sir..

 3. yaseenjahafar

  வைர முத்துவின் கேவலமனா செயல்

  கால் நூற்று ஆண்டு கால கற்பனையீல் இப்படி ஒரு கேவலமான செயல் செய்த வைரமுத்துவா இது. இந்த பாடலை நீ தானே எழுத்தினை கொன்று ஏழுதீனாய் உண்மை ஒரு நாள் வெல்லும் இந்த உலகம் உன் பேரை சொல்லும் என்று நீயும் பணத்துக்கு அடிமை என நிரூபித்து விட்டாய் அச்சம் இல்லாமல் பேசியே வார்த்தையை கொட்டி இருக்கிறீர் கபாலி படத்தில் உஙகள் பாடல் இடம் பெற வில்லை என எரிச்சல் இப்படி பேசியே வார்த்தை 35 காண்டு நற்பு இதுவா கேவலம் இருக்கிறது கவின்ஞர் கூட இப்படி நாக்கை திருப்பி போட்டு பேசுவார்கள் ஒரு படம் கொடுக்க வில்லை என்று

 4. குமரன்

  வைரமுத்து ….
  …. வய்யிரமுத்து …
  திக்கெட்டும் பரவுதய்யா உமது புகழ்
  டிக்கெட்டால் ..
  கபாலி பட டிக்கெட்டால்
  திக்கெட்டும் பரவுதய்யா உமது புகழ்.
  காலாயிரம் கண்டதய்யா உமது கண்கள் ..
  கண்களுக்கு வெகு அருகில்
  காலாயிரம் கண்டதய்யா உமது கண்கள்…
  அவற்றில் அண்மையில் கண்ட
  கால்கள் இரண்டு தாணுவுடையதாமே?
  நாலாயிரம் டிக்கெட்டு கையை எட்டக்
  கால்கண்டால் என்ன போச்சு?
  குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
  டிக்கெட்டுக் கைவிட்டுத் தீர்ந்தவுடனே
  கைகண்ட கலையின் வீச்சு
  வாய்க்கு வந்தபடிப் பேச்சு
  அதனால் என்ன …..
  இருக்கவே இருக்குதய்யா நட்பெனும் பூச்சு!
  நூலாயிரம் படித்த அனுபவம் இருந்தென்ன
  பாவாயிரம் பாடுகின்ற புலமை இருந்தென்ன
  நாவாயிரம் பேசிவிடும் என்ற அச்சம் வேண்டும், இன்றேல்
  ஊராயிரம் ஒன்றுகூடி உலையில் போடும் – உம்மை
  உட்கார்ந்த இடத்திலேயே கட்டிப் போடும்
  உணருவீரா ? ஆணவத்தை உதறுவீரா ? …………….. குமரன்

 5. மிஸ்டர் பாவலன்

  I always wondered why “Mastero” Raja stopped Vairamuthu in his movies.
  This news item on Vairamuthu gives a good pointer plz. Thanks!

 6. srikanth1974

  திரு.குமரன் சார் அவர்களுக்கு வணக்கம்’
  ஒரு நாறக் கவிஞனுக்கு உங்களுடைய கவிதை மூலம்
  தக்க பதிலடி கொடுத்துள்ளீர்கள். பலே!.
  உண்மையிலேயே நீங்கள் ஓர் வீர கவிஞன்.

 7. srikanth1974

  திரு.குமரன் சார் அவர்களுக்கு வணக்கம்’
  ஒரு நாற கவிஞனுக்கு உங்களுடைய கவிதை மூலம்
  தக்க பதிலடி கொடுத்துள்ளீர்கள். பலே!.
  உண்மையிலேயே நீங்கள் ஓர் வீர கவிஞன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *