BREAKING NEWS
Search

மணிவண்ணனுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல்!

மணிவண்ணனுக்கு திமுக தலைவர் கலைஞர் இரங்கல்!

01-manivannan-karuna2-300சென்னை: திறமையான ஒருவர் திடீரென்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய மறைவு குறித்து வருந்துகிறேன் என்று இயக்குநர் மணிவண்ணனுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிவண்ணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த சில ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்து இன்று காலையில் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய ‘பாலைவன ரோஜாக்கள்’ என்ற படத்தினை இயக்குனர் மணிவண்ணன் மிகவும் திறம்பட இயக்கி, அந்தப் படம் வெற்றிகரமாக தமிழகத்திலே ஓடிய நேரத்தில், அவருடன் நான் நெருங்கிப் பழகியதால், எப்படிப்பட்ட திறமையாளர் அவர் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அண்மையில் நான் திரைக்கதை, உரையாடல் எழுதிய ‘இளைஞன்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போதே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை என்னிடம் தெரிவித்தார்.

திறமையான ஒருவர் திடீரென்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடைய மறைவு குறித்து வருந்துவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்பட உலகைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *