BREAKING NEWS
Search

ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை!

‘காலா மாநாடு’… இது தலைவரின் அரசியலின் பிரமாண்ட டீசர்தான் கண்ணா!

ந்தக் கட்டுரை கொஞ்சம் லேட்தான்… ஆனால் நிதானமா படித்து ரசிக்க ஏற்றது. அதனால் தொடருங்கள்…

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தலைவர் ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இசை வெளியிட்டு விழாவில் கட்சியின் பெயர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியானதால், ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் ஆர்வலர்கள் இந்த விழாவை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மையதானத்தில் ‘காலா’ இசை வெளியிட்டு விழா தொடங்கியது.

அண்ணாசாலையில் இருந்து விழா அரங்கம் வரை தலைவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மாலை 5.30 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கூட்டத்தால் விழா நடந்த மைதானம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் முழக்கமிட்டப்படி இருந்தனர்.

7.10 மணிக்கு கருப்பு உடையில் அரங்கத்திற்கு வந்தார் தலைவர். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். காலா தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் காலா படம் குறித்து பேசினர்.

பின்னர் விழாவில் தலைவர் பேசினார், “இது ஆடியோ வெளியீட்டு விழா போலவே தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா போல இருக்கு. இது படத்தின் வெற்றி விழாதான். சிவாஜி பட வெற்றி விழாவில்தான் கடைசியாக நான் பங்கேற்றேன். அதன் பிறகு எந்திரன் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அந்த வெற்றி விழா கொண்டாட நினைக்கும்போது எனக்கு உடல் நலம் சரியில்லை. சிங்கப்பூர் சென்றேன். உங்களின் வேண்டுதலால் நான் மீண்டு வந்தேன். கால தாமதம் ஆகி விட்டது. அந்த படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட முடியவில்லை.

நான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது சிலர், குணமாக வேண்டும் என்றால் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். உடலும், மனதும் நன்றாக இருக்க வேண்டும். உடல் கெட்டுப் போனால் மனசு கெட்டுப் போய் விடும். உங்களுக்குப் பிடித்தமான வேலையை செய்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். நமக்கு நடிப்பை தவிர வேறு வேலை தெரியாது. ராணா படம் பண்ணும்போது உடல் நலம் சரியில்லை. கொஞ்சம் மாற்றி, அனிமேஷன் படம் பண்ணலாம் என்று நினைத்தேன். என்னுடைய மகள் சௌந்தர்யா அனிமேஷனில் எக்ஸ்பர்ட். அந்த படத்தில் 7, 8 நாட்கள் நடித்தால் போதும் என்றார்கள். சரி என்றேன். எடுக்கவிருந்த ராணா படத்தைத் தான் சற்று மாற்றி கோச்சடையான் என எடுக்க ஆரம்பித்தோம்

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கே அந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை. மேலும் பணம் செலவாகும் என்று சொன்னார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் அதி புத்திசாலிகள். செலவு அதிகம் ஆகும் என்பதால் இத்துடன் படத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்றேன். அந்த படம் சரியாக போகவில்லை. அதில் இருந்து ஒன்றைத் தெரிந்துகொண்டேன்.

புத்திசாலிகளுடன் பழக வேண்டும், ஆலோசனை செய்யலாம், ஆனால் அதி புத்திசாலியுடன் பழகக் கூடாது. அவர்கள் பல திட்டங்கள், யோசனை வைத்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் பல ஜன்னல்கள் இருக்கும், பல கதவுகள் இருக்கும். எல்லாம் மூடி இருக்கும். நேரம் வரும்போது எந்த ஜன்னல் என்றும், எந்த கதவு என்றும் தெரியாமல் ஓடிப் போய் விடுவார்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நேரம் வரும் போது கதவுகள் தானாக திறக்கும்.

அதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமாரை கூப்பிட்டு ஒரு படம் பண்ணலாம் என்று அழைத்தேன். லிங்கா கதை பிடித்து இருந்தது. தண்ணீர் பஞ்சம், நதி என்று சொன்னாலே என்னையே அறியாமல் அதில் எனக்கு ஈடுபாடு வந்து விட்டது. இமயமலைக்கு நான் போகிறதே கங்கையைப் பார்க்கத்தான். சில இடங்களில் ஆர்ப்பரிப்புடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், சில இடங்களில் மௌனமாக, அமைதியாகச் செல்லும்.

நதிகள் இணைப்பு என் வாழ்க்கையில் இணைந்த ஒன்று. என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான். அப்படி நடந்து, அடுத்தநாளே கண்ணை மூடினாலும் பரவாயில்லை.

லிங்கா கதாபாத்திரம் அருமையானது. இந்த படம் நெனச்ச அளவுக்கு போகவில்லை. அந்த படத்தில் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். நல்லவனாக இருக்கனும், ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது. ரொம்ப நல்லவனாக இருந்தால் ஆபத்து, கோழைன்னு நினைத்து விடுவார்கள். லிங்கா ஓடவில்லை. ரஜினி கதை முடிஞ்சு போச்சுன்னாங்க. இதைத்தான் 40 வருஷமாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. என்னடா இந்த குதிரை ஓடிக்கிட்டே இருக்கு அப்படின்னு நினைத்தார்கள், 10 வருஷம் பார்த்தாங்க, 20 வருஷம் பார்த்தாங்க, 30 வருஷம் பார்த்தாங்க, 40 வருஷமாக பார்க்கிறாங்க. வயிறு எரியத்தானே செய்யும். நானாக ஓடவில்லை. நீங்கள் ஓட வச்சிருக்கீங்க, ஆண்டவன் ஓட வைத்துள்ளான்.

எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஏற்கெனவே சொன்னதுதான். 4 தவளைகள் மலையேறி போகலாம் என்று நினைத்து போகத் தொடங்கியது. அப்போது எல்லாரும் அந்த பாதையில் செல்லாதீர்கள், பாம்பு, தேள் இருக்கும் என்று பயம் காட்டினார்கள். ஆனால் அதில் 3 தவளைகள் போகாமல் நின்று விட்டது. ஒரு தவளை மட்டும் மலையேறியது. ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்காது. அதேபோல தான் யார் என்ன சொன்னாலும் என் பாதையில் நான் போய் கொண்டே இருப்பேன். யாரைப் பற்றியும் கவலைப்படமாட்டேன்.

நாம் வயதுக்கு தகுந்ததாவாறு மாற்றம் செய்ய வேண்டும். லிங்காவில் என் மகள் வயதுப் பெண் சோனாக்சி ஹீரோயின். எனக்கே கூச்சமாக இருந்தது. காலத்திற்கேற்ப மாற்றிக் கொண்டோம். கபாலி படம் செய்தோம். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. ரஞ்சித் திறமையானவர் மட்டுமல்ல.நேர்மையானவர், சந்தர்ப்பவாதி அல்ல. அவருடைய நடை உடை பாவனையிலேயே அவரை புரிந்து கொள்ள முடிந்தது. உடன் இருப்பவர்கள் பற்றி சிந்திக்கிறார். சமூதாய சீர்கேடுகள் பற்றி வேதனைப் படுகிறார். நிச்சயம் அவர் திரைத்துறையைத் தாண்டி பெரும் சாதனை படைப்பார் என்றார்.

இப்போது காலா. நான் இத்தனை வருடம் நடித்ததில் 2 வில்லன்களைப் பார்த்து இருக்கிறேன். பாட்ஷாவில் ஆண்டனி (ரகுவரன்), படையப்பாவில் நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்). அதன் தொடர்ச்சியாக இப்போது காலாவில் ஹரிதாதா (நானா படேகர்).

இந்த படம் அருமையான படமாக இருக்கும். வெற்றி அடையும். காலா அரசியல் படம் அல்ல, படத்தில் அரசியல் இருக்கு. கபாலி ரஞ்சித் படம், காலா என்னுடைய படம். அதாவது உங்க (ரசிகர்கள்)படம். ரஞ்சித்திடம் சொல்லிட்டேன். காலா என் படமாக இருக்கனும்ன்னு. அவரும் சரின்னு சொல்லி சூப்பர்பா எடுத்துருக்கார். அவரு டீமே சூப்பர் டீம். முரளி கேமராமேன் மட்டுமல்ல ஒரு இணை இயக்குனர். ரெண்டு பேரும் கண்ணுலேயே பேசிக்கிடுவாங்க. போரடிச்சா நான் ராமலிங்கத்தை பேசச் சொல்லி கேட்பேன். அவர் எல்லாத்தையும் படித்து வச்சிருக்கிறவர். ரொம்ப நல்லா என்னை பார்த்து கிட்டாங்க. படம் நிச்சயம் உங்க எல்லாருக்கும் பிடிக்கும். சூப்பர் ஹிட் ஆகும் என்றார்.

தாய், தந்தை நமக்கு தெய்வம். அவர்களின் மனதை நோகடிக்காமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பம் சின்ன கோட்டை. இது மோசமான உலகம். நம்மை காப்பாற்ற குடும்பத்தை கைப்பிடித்து கொள்ளுங்கள். ஒரு மரம், செடி வளர மண், உரம் போடணும். நாம் வளர யோசனைகள் வைத்து கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க, கெட்ட சிந்தனை வந்தால் இடம் கொடுக்காதீர்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் கலர், எடை இருக்கிறது. சந்தோஷமான சிந்தனையை வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் வைக்காதீர்கள்.

மீடியா ஆட்கள், நம்முடைய ரசிகர்களும் என்னடா இன்னும் மேட்டருக்கு வரவில்லையே என்று நினைப்பார்கள். இங்கே வந்திருக்கும் நமது ரசிகர்களும் அப்படித்தான் நினைப்பீர்கள். நான் என்ன பண்றது கண்ணா… இன்னும் தேதி வரலை.

கடமை இருக்கிறது. நேரம் வரும். நேரம் வரும் போது ஆண்டவன் ஆசீர்வாதத்தினால், மக்கள் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்,” என்று தலைவர் கிட்டதட்ட மாநாட்டு உரை போல் பேசி முடித்தார். ஆம்… 30 நிமிடப் பேச்சு.

காலா வெறும் இசை வெளியீட்டு அல்ல. காலா ரசிகர்களின் மாநாடு என்பதே உண்மை. தலைவரின் அரசியல் டீசர் என்றும் சொல்லலாம். காலாவுக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அரசியல் கட்சிகள் அரண்டு போயுள்ளார்கள். அதைவிட அவர்களை மிரளச் செய்திருக்கும் விஷயம், இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துக் கொண்டும் அரசியல் பேசாத ரஜினியின் கட்டுப்பாடு. நிச்சயம் இப்படி ஒரு மனக் கட்டுப்பாடு வேறு எந்த அரசியல் தலைவரிடமும் தமிழகம் இதுவரை கண்டதில்லை.

– என்வழி
2 thoughts on “ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை!

  1. sks

    Miga sariya sonenga sir, thalaivar kaala audio launchla arasiyala pathi pesiruntha achariyamila ,pesama irundhar parunga adhan gethu , function arambikaradhuku munnadoye avlo vivadhangal tv channels la but thlaivar avangalukku sema ya rply kuduthar

  2. yasin

    Mr. Dhanus please post pone kala release 7th June instead of release eid because of Muslim fans during of Ramadan difficult to watching movie
    please send the dhanus mobile no also
    Mr. vinodth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *