BREAKING NEWS
Search

நெருப்புடா… கபாலிடா… தலைவர்டா.. புல்லரிக்க வைத்த கபாலி டீசர்!

நெருப்புடா… கபாலிடா… தலைவர்டா…!

20160430230156

கபாலி… உலகெங்கிலும் பல கோடி ரசிகர்கள் தவமிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி படம் இது. இந்தப் படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டீசர் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று வெளியானது.

வெளியான கையோடு யுட்யூப் இணையதளமே திணறும் அளவுக்கு பார்வையாளர்கள் குவிந்தனர் இந்த டீசருக்கு.

ஒரு நிமிடம் ஏழு நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் தலைவர் ரஜினி இரு வேறு தோற்றங்களில் வருகிறார்.

நெருப்புடா…. என்று ஓங்கி ஒலிக்கும் பின்னணி குரலும் வெறியேற்றும் அதிஉச்ச இசையும் ஒலிக்க கோட் சூட் அணிந்த வயதான கபாலி மகா ஸ்டைலாக நடந்து வருகிறார். அடுத்த காட்சியில் ‘ஆமா.. நீங்க ஏன்ணே கேங்ஸ்டர் ஆனீங்க?’ என்று ஒரு கூட்டத்தில் ஒருவர் கேட்க.. அதற்கு தனக்கே உரிய பாணியில் சிரிப்பை பதிலாகத் தருகிறார் ரஜினி.

அடுத்த காட்சியில் ‘யார்றா அந்த கபாலி… கூப்புட்றா அவனை’ என்று டான் கிஷோர் எகிற, அப்போது வரும் ரஜினி, “தமிழ்ப் படங்கள்ல இங்க மரு வச்சிக்கிட்டு மீசைய முறுக்கிக்கிக்கிட்டு லுங்கி கட்டிக்கிட்டு, நம்பியாரு (அதே மேனரிசம் காட்டி) ‘ஏ கபாலி’ அப்டீன்னு சொன்ன உடனே, குனிஞ்சி ‘சொல்லுங்க எஜமான்’ அப்டி வந்து நிப்பானே… அந்த கபாலின்னு நினைச்சியா…” என்று கேட்டு நிறுத்தி… “கபாலிடா…” என்று கம்பீரமாகச் சொல்லிக் காட்டுவார் ரஜினி.

அந்தக் காட்சிக்கு தியேட்டரே கதிகலங்கப் போவது உறுதி.

20160430224904

இந்த டீசரில் ரஜினியின் இளவயதுத் தோற்றமும் சில விநாடிகள் வந்து போகிறது. அது 80களில் மிக இளமைத் துள்ளலுடன் ரஜினி நடித்த அடுத்த வாரிசு போன்ற படங்களை நினைவூட்டுகிறது.

மொத்தத்தில் இந்த கபாலி டீசர், ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளதை, டீசர் வெளியான பிறகு குவியும் கமெண்டுகள் மூலம் தெரிகிறது.

யுட்யூபே திணறும் அளவுக்கு பார்வையாளர்கள் குவிந்ததால், பார்வை எண்ணிக்கைகையை சரியாகக் காட்ட முடியவில்லை யுட்யூப் நிர்வாகத்தால். டீசர் வெளியான 1.30 மணி நேரத்தில் 97 ஆயிரம் லைக்குகள் குவிந்தன இந்தப் டீசருக்கு. எத்தனை லட்சம் பார்வையாளர்கள் என்பது விரைவில் தெரியும்.

கபாலி டீசர்

-என்வழி




5 thoughts on “நெருப்புடா… கபாலிடா… தலைவர்டா.. புல்லரிக்க வைத்த கபாலி டீசர்!

  1. மிஸ்டர் பாவலன்

    கபாலி படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!

    உலக நாயகன் கமல் அவர்களும் பல்ராம் நாயுடுவாக “சபாஷ் நாயுடு” என்ற படத்தில் களம் இறங்குகிறார். இது வெளிநாட்டில் படமாக இருக்கிறது. நகைச்சுவைப் புயல் பிரமானந்தமும் கமல் ஹாசனும் கலக்க இருக்கிறார்கள். இசை மேஸ்ட்ரோ இளையராஜா!

  2. kabali

    //இந்த டீசரில் ரஜினியின் இளவயதுத் தோற்றமும் சில விநாடிகள் வந்து போகிறது. அது 80களில் மிக இளமைத் துள்ளலுடன் ரஜினி நடித்த அடுத்த வாரிசு போன்ற படங்களை நினைவூட்டுகிறது.

    close up il paarkka kaathirukkirom 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *