BREAKING NEWS
Search

கபாலி அமெரிக்க உரிமை: பெரும் விலைக்கு வாங்கியது சினி கேலக்ஸி!

கபாலி… அமெரிக்க உரிமை வித்தாச்சு!

12042850_536602076498885_1066673022324406774_n

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் கபாலி படப்பிடிப்பு இன்னும் பாதி கூட முடியவில்லை. அதற்குள் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்க நான் நீ என மோத ஆரம்பித்துவிட்டனர்.

முதல் கட்டமாக படத்தின் அமெரிக்க உரிமை பெரும் விலைக்கு கைமாறியுள்ளது. இதனை சினி கேலக்சி நிறுவனம் வாங்கியுள்ளது. வட அமெரிக்கா முழுவதும் இந்த நிறுவனம்தான் கபாலியை வெளியிடுகிறது.

கபாலியின் தெலுங்குப் பதிப்பு உரிமையையும் இந்த நிறுவனமே பெற்றுள்ளது.

ரஞ்சித் இயக்கிவரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இன்னும் சென்னையில்தான் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் மலேஷியாவுக்குக் கிளம்புகிறது கபாலி படப்பிடிப்புக் குழு. ரஜினியும் அவர்களுடன் புறப்படுகிறார்.

-என்வழி
10 thoughts on “கபாலி அமெரிக்க உரிமை: பெரும் விலைக்கு வாங்கியது சினி கேலக்ஸி!

 1. மிஸ்டர் பாவலன்

  கபாலி வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

  கமல் ஹாசன் “தூங்காவனம்” ட்ரைலர் வெளியிட்டும் இந்த படத்தை
  பற்றி அதிகம் பேச்சில்லை.. கமல்-த்ரிஷா இணைந்து நடித்துள்ள
  இந்தப் படத்தில் த்ரிஷா ஹாலிவுட் ஹீரோயின் போல் உள்ளார்.
  கமல் கெட்-அப் சரியில்லை. கதை வெளிநாட்டுப் படம் போல் உள்ளது.
  நம்ம ரசிகர்கள் டேஸ்டுக்கு செட் ஆகுமா தெரியல.. கமல் ரசிகர்கள்
  தூங்காவனத்தை த்ரிஷாவிர்காக ஒரு தடவை பார்த்து வைப்போம்..

  -== மிஸ்டர் பாவலன் ==-

 2. S.dhinesh kumar

  Vino anna thinamalar cinema news la thalaivar news ellam konjam negative kalanthea iruku neenga ennanu parunga kelunga

 3. Lingaa karthi keyan

  என்னுடைய கணக்கு சரியா இருந்தா தலைவர் சூப்பர் ஸ்டாரின் கபாலி படம் தமிழ் தொலைக்காட்ச்சி உரிமை 40 கோடிக்கு மேல் விலைபோகும். கபாலி படம் தொலைக்காட்ச்சி உரிமையை பெருவதற்க்காக சன்டிவியும் ஜெயாடிவியும் கடும் போட்டியிடும் இதில் வெல்லப்போவது யாரென்று பொருத்திருந்துதான் பார்ககவேண்டும்.
  How is it

 4. srikanth1974

  நமது மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்கள்
  தினமலர் பத்திரிகைக்கு ஏற்கனவே
  தினமலம் என்று பெயரிட்டுள்ளதை
  நினைவூட்ட விரும்புகிறேன்.

 5. raghul

  ” கமல் ரசிகர்கள்
  தூங்காவனத்தை த்ரிஷாவிர்காக ஒரு தடவை பார்த்து வைப்போம்.”

  What a predicament !!!

  It needs some extra brilliance to match the original “sleepless night” with the star cast Thoo.. has created.. Prakash as the drug mafia is cliched like Sampath as the drug peddler, Trisha as the under cover cop, Kishore as a corrupt cop…. ohhhh.

 6. jegan N

  கமல் #Kamal சார் இவங்க கிட்டையாவது இனி நன்றியோட இருக்கணும் 🙂

  What’s is Mr pavalans stand?…..sarath Kumar has helped Kamal s uthamavillian release….but Kamal is a trohi…

 7. குமரன்

  /// கமல் ரசிகர்கள் தூங்காவனத்தை த்ரிஷாவிர்காக ஒரு தடவை பார்த்து வைப்போம்..///

  மிஸ்டர் பாவலனை ரசிகராகப் பெறக் கமலஹாசன் எத்தனை புண்ணியம் செய்திருக்கிறாரோ?!!!!

  கமலுக்காக இல்லாவிட்டாலும் திரிஷாவிற்காக ஒரு தடவை பார்க்கும் ரசிகர்கள் கிடைப்பது பெறற்கரிய பெரும்பேறே ஆகும்.

 8. மரபின் மைந்தன்

  தலைவர் ரஜினியின் புகழ், செல்வாக்கு உலகம் அறிந்த ஒன்று.

  தமிழ் நாட்டையே தாண்டாத ஒருவன் உலக நாயகனாம் !!!. ஒரு வேளை, உலக படங்களை காப்பி, பேஸ்ட், செய்வதால் அவனுக்கு அந்த பெயர் வந்ததோ !!!

 9. மிஸ்டர் பாவலன்

  //தமிழ் நாட்டையே தாண்டாத ஒருவன் உலக நாயகனாம் !!!.///

  உலக நாயகன் விரைவில் ஒரு ஆங்கிலப் படத்தை இயக்க இருக்கிறார்..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 10. S VENKATESAN, NIGERIA

  சினிமாவிலும் சினிமாவுக்கு வெளியிலும் கமல் நன்றாக நடிக்கிறார். பொறாமை நெருப்பு அழியாமல் இருக்கிறது.

  1. நெய்வேலி போராட்டம் நடந்த பொழுது எப்படிப்பட்ட பேச்சு பேசினார்கள். கமல் எதாவது தலைவருக்கு ஆதரவாக பேசினாரா?

  2. தனியாக தலைவர் உண்ணாவிரதம் இருந்த பொழுது கமல் அடித்த கமெண்ட் (அவர் முகத்தில் தெரிந்தது பொறாமைதான்). தலைவர் யாரையும் கூப்பிட வில்லை. நெய்வேலிக்கு சென்று அடித்து நொறுக்குவோம் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம் என்று வீர வசனம் பேசியவர்களை தான் இருந்த இடத்திற்கே வர வைத்தது தலைவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு.

  3. தலைவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கமல் ஒரு வார்த்தை கூட பேசியதே இல்லை. (ஏதாவது பிரச்சனையில் தலைவர் தோற்க வேண்டும் என்று கமல் நினைத்து இருக்க கூடும்). ஆனால் கமலுக்கு பிரச்சனை என்றவுடன் கவலை பட வேண்டாம். நான் உங்களுக்காக ஒரு படம் செய்து தருகிறேன் என்று சொன்னவர் அல்லவா.

  4. சில நேரங்களில் பிரச்சனைக்கு காரணமே கமல்தான். நடிகர் சங்க தேர்தல் சம்பந்தமாக தலைவர் ஏன் தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற சொன்னார் என்று எல்லாருக்கும் தெரியும். அவரை டார்கெட் வைக்க நிறைய பேர் இருக்கின்றனர். எல்லாம் தெரிந்தும் வேண்டும் என்றே அவர் பேசியதை எதிர்த்து பேசி தலைவருக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டார். கமல் முதலில் கருத்து சொல்லி இருந்தால் நமது தலைவர் நண்பருக்காக முரண்பாடான கருத்தை சொல்லவே மாட்டார். நிறத்தில் ஒன்றாக இருந்தாலும் தங்கமும் பித்தளையும் ஒன்றாகுமா?

  5. எந்திரன் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த கமல் செய்தியார்களிடம் சொன்ன கமெண்ட் என்ன? கமல் என்பவர் பொறாமையின் உச்சகட்டம்.

  போட்டி பொறாமை எங்குதான் இல்லை என்று சமாதானம் சொல்லகூடும். தலைவர் எத்தனையோ வெற்றிகளை குவித்து விட்டார். ஆனால் அவரால் (எத்தனை அன்பை கொட்டி கொடுத்தாலும்) கமலின் பொறாமையை வெல்லவே முடியாது என்பது சோகமான உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *