ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஒரு கபாலி ஸ்பெஷல் ஷோ காட்டிய ரஜினி ரசிகர்கள்!
உற்சாகம், ஆர்ப்பாட்டம், தான தர்மம், ஈகை, மனிதாபிமான செயல்கள் இவை அனைத்திலுமே ரஜினி ரசிகர்கள் வேற லெவல்!
‘தலைவர்’ படம் ரிலீசாகுதுன்னா தமிழ் நாட்டையே தெறிக்க விடும் இவர்கள்தான், அந்த திருவிழாவையொட்டி எளியவர்கள், முதியோர்கள், ஆதரவற்றவர்களுக்கு ஏராளமான நல உதவிகளையும் செய்வார்கள்.
இதோ கபாலி ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே பல ஊர்களில் இலவச உணவு வழங்குதல், ஆதரவற்றோருக்கு உடைகள் வழங்குதல் என தரும காரியங்களிலும் தீவிரம் காட்டினர்.
நேற்று கபாலி ரிலீசான பத்தாவது நாள். படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. எந்த அரங்கிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஏதோ நேற்றுதான் வெளியான மாதிரி அலைமோதிக் கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.
இந்த சூழலில் வியாசர் பாடியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கபாலி படத்தைத் திரையிட்டுக் காட்டி, படத்தின் பிரமாண்ட வெற்றியைக் கொண்டாடினர் ஆர்பிஎஸ்ஐ ரஜினி ரசிகர்கள்.
இந்த நிகழ்வு குறித்து இந்த ரசிகர் குழுவை நடத்தி வரும் கார்த்திக் கூறுகையில், “தலைவர் படத்தின் மெகா வெற்றியை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. Seers Girls Home என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் உள்ள மொத்தக் குழந்தைகளுக்கும் ஆல்பட் தியேட்டரில் கபாலி சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களை நாங்களே இரண்டு வேன்களில் வியாசர்பாடியிலிருந்து ஆல்பட் அரங்குக்கு அழைத்து வந்தோம்.
அனைவரும் சிவப்பு நிற சீருடையில் குட்டி தேவதைகள் மாதிரி வந்தார்கள். அவர்களுக்கு ரோஜாக்களையும் தலைவர் படத்தையும் கொடுத்து வரவேற்றோம். கபாலியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். காட்சிக்குக் காட்சி கபாலி, ரஜினி அங்கிள் என்று சத்தமாகக் கூவியபடி படம் பார்த்தனர். மனசுக்கு நிறைவாக இருந்தது,” என்றார்.
குட்!
மேலும் படங்கள்…
-என்வழி
Yesterday went to Chrompet Vetri for one more time.
Theatre was brimming fully & semma mass as if the movie is released only 2 days back.
lot of Family & repeat audience.
HATS OFF TO THALAIVAR FANS
MAGILCHI