BREAKING NEWS
Search

கபாலி பாடல்கள்… ஒரு ரசிகனின் பார்வையில்!

b0a639ff-4be1-4be0-97aa-6fc7c8facc2c

நெருப்புடா, வீரதுறந்தரா, உலகம் ஒருவனுக்காக மூன்றும் அக்மார்க் தலைவர் ரஜினி பாடல்கள்.

யார் படமாயிருந்தாலும் ரஜினிக்காக காட்சியமைத்துதான் ஆகவேண்டும்.

மணிரத்னம் தளபதியில் அப்படி செய்யவில்லை என்று நிறைய பேர்கள் சொன்னது உண்மையெனில் ஏன் இறுதிக் காட்சியில் ரஜினி சாகாமால் மம்முட்டி செத்தது போல காட்சியை மாற்றினார்கள் என்ற உண்மையை யாரேனும் அவதாரமெடுத்து வந்தா சொல்வார்கள். ரஜினி ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று காட்சி மாறும் போதே அங்கே அது ரஜினி படமாகி விடுகிறது.

யார் செய்தாலும் அது ரஜினி படம்தான் என்பது ஒன்றும் பிரம்ம ரகசியமில்லை என்றாலும் வாதத்திற்காக நாம் ஏதாவது பேசிக் கொள்ளலாம். என்ன ஒன்று அதற்கு நேரம் வேண்டும்.

கபாலியில் நெருப்புடா பாடலுக்கு ட்யூன் போட்ட சந்தோஷ் நாரயணின் விரல்களுக்கு ரஜினி ரசிகனாய் எனது முத்தங்கள். ரஜினியின் குரலோடு இப்படி ஒரு அதிர்வான பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கையில் அடுத்த பாடல்களை கேட்க முடியாத ஒரு பேரவஸ்தைக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்பட்டுப் போய் விடுகிறது. சூப்பர் வேகத்தில் துப்பாக்கியிலிருந்து விடுபடும் தோட்டாவும் இந்தப் பாடலும் ஒன்று.

4fa8b431-c8d8-4363-aed8-e13ceb9185de

வீரத் துரந்தரா… ட்யூனில் ஆரம்பித்து மனதுக்குள் தாளம் போட வைக்கும் அதே நேரத்தில் உலகம் ஒருவனுக்காக என்னும் பாடலில்தான் ரஜினி +ரஞ்சித் ஃப்யூசன் தொடங்கி அதிர வைக்கிறது. இந்தப் பாடலைப் பற்றி ரஜினி ரசிகனாய் மட்டும் சிலாகித்து விட்டு அது சொல்லும் அரசியலை விட்டு விலகி விடவே எனக்கு விருப்பம் ஏனென்றால் தலைவர் பேசும் அரசியலே ரஜினி ரசிகர்களின் அரசியல் என்பதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.

இந்த மூன்று பாடல்களையும் தவிர்த்து வானம் பார்த்தேன் மற்றும் மாய நதி பாடல்கள்தான் எனக்கு ரொம்பவே புதியது. இந்த இரண்டு பாடல்களிலும் சந்தோஷ் நாரயணனின் தனித்தன்மை என்னவென்று சரியாய்ப் புரிகிறது. புதுமையான ஒரு ஸென் டைப்பில்தான் அவரது இசை மிதமாகவும் பாடல் வரிகள் தூக்கலாகவும் எப்போதும் இயங்கும் அதிலும் மாய நதி பாடலில் அனந்துவும் பிரதீப் குமாரும் சேர்ந்து பாடும் இடங்கள் எல்லாம் மனதை ஏதோ செய்கிறது…

eec94ef0-56fa-4a4e-9391-716e03626ef0 (1)

ரஜினி இளம் வயதில் ராகிகா ஆப்தேவைப் பிரிந்து மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு வேறு சூழலில் மீண்டும் காணும் போது இந்த பாடல் வரும் என்று நினைக்கிறேன். அது எப்படியான பிரிவு, மீண்டும் அந்தக் காதல் எப்படி ஒருவரை ஒருவர் எதிர்கொள்கிறது என்பதை எல்லாம் தலைவரின் நடிப்பில் பார்த்து ரசிக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி ரஜினி அவ்வளவுதான் என்று லொச்சா பேச்சு பேசிய கத்துக்குட்டி பாய்ஸும், ரஜினிக்கு எதிராய் ஒரு அரசியலை நிகழ்த்தி அவரது திரை வெற்றியைத் தடுத்து விடலாம் என்று திட்டம் தீட்டிய சோ கால்ட் பாலிட்டிக்ஸ் பேபிகளும்…

கபாலிக்கு பிறகு ட்ரவுசரில் உச்சா போகப்போவது என்னவோ நிச்சயம்…!!

#கபாலிடா…!

தேவா சுப்பையா…
11 thoughts on “கபாலி பாடல்கள்… ஒரு ரசிகனின் பார்வையில்!

 1. Rajagopalan

  Pullarikudhu boss neruppuda keta piragu…
  ore padalil ella music composers carrier gali seidhu vitar Santosh.
  Magizchi…

 2. Raghul

  Yes. Nice review. Finally we all want to see Thalaivar in yet another new avatharam and we should be prepared to see some unexpected alongwith the trademark thalaivar punch scenes and songs. The intro(?) is a mesmerizing tune and Neruppuda is hard Rock Music spitting FIRE..

  Vaazhthukkal SaNa…

 3. Jp

  I dont agree your point regarding thalapathi. Its different than any Rajini movies then. Indeed its Maniratnam movie with superb acting from thalaivar. All kabali songs r good.

 4. Rajagopalan

  Songs are quite good n interesting.
  But My personal opinion is for opening song, still SPB is required.
  Imagine the lines metukudiyin kupadu, eni natukulla kekadhu in SPB voice….
  SaNa almost satisfoed the expectations other than the opening song.
  Also a point to be noted is, the Ulagam Oruvanuka is a mix of Enga ooru Madrasu from Madras and Maro Maro from Boys.

 5. Raghul

  “Ulagam oruvanukkaa”… repeated listening adds value.
  Especially GanaBala’s voice here and there in that song with his trademark style, superb to listen…

 6. babu

  இதையெல்லாம் தாண்டி ரஜினி அவ்வளவுதான் என்று லொச்சா பேச்சு பேசிய கத்துக்குட்டி பாய்ஸும், ரஜினிக்கு எதிராய் ஒரு அரசியலை நிகழ்த்தி அவரது திரை வெற்றியைத் தடுத்து விடலாம் என்று திட்டம் தீட்டிய சோ கால்ட் பாலிட்டிக்ஸ் பேபிகளும்…

  கபாலிக்கு பிறகு ட்ரவுசரில் உச்சா போகப்போவது என்னவோ நிச்சயம்…!!

  #கபாலிடா…!
  SUPER !!

 7. மிஸ்டர் பாவலன்

  கமல் ஹாசன் – ப. ரஞ்சித் காம்பினேஷனில் ஒரு படம் அனைவரும் எதிர்பார்க்கிறோம்.. இதையும் கலைப்புலி தாணு தயாரிக்கலாம். கதை வசனம் இவற்றை கமலே அமைத்து விடுவார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *