BREAKING NEWS
Search

ரசிகர்களே உருவாக்கிய டிசைன்கள்… புதிய சாதனைப் படைத்த கபாலி!

ரசிகர் உருவாக்கிய டிசைன்களில் தனி சாதனைப் படைத்த கபாலி!

kabali-1
மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கிறார் என்ற செய்தி கசிய ஆரம்பித்ததிலிருந்தே ரசிகர்களின் உற்சாகம் கரைபுரள ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக இணையத்தில் சதா இயங்கி வரும் ரசிகர்கள், படத்தின் தலைப்பு தெரியும் முன்பே வித விதமான டிசைன்களை உருவாக்கி வெளியிட்டு அசத்தினார்கள்.

படத்துக்கு தலைப்பு கபாலி என்பது உறுதியானதும், இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு நாளுமொரு புதிய டிசைன்களை உருவாக்கி வருகின்றனர்.

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டிசைன்களில், கபாலி உலக சாதனையே படைத்துவிட்டது என்றால் மிகையல்ல. அத்தனை டிசைன்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினியும் இயக்குநர் ரஞ்சித்தும் தயாரிப்பாளர் தாணுவும் வியந்துபோகும் அளவுக்கு ரசிகர்களின் கற்பனை அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய், ரஜினியின் தோற்றம் அந்தப் படத்தில் எப்படி இருக்கும் என்பதை பிரபல ஓவியர் ஒருவரை வைத்து வரைந்து வெளியிட்டனர். அந்த ஓவியமும் அற்புதமாக வந்திருந்தது.

படத்தின் அதிகாரப்பூர்வ வடிவமைப்பும் தலைவரின் முதல் தோற்ற போஸ்டரும் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதோ.. ரசிகர்கள் உருவாக்கிய டிசைன்களிலிருந்து சில…!

-என்வழி ஸ்பெஷல்




3 thoughts on “ரசிகர்களே உருவாக்கிய டிசைன்கள்… புதிய சாதனைப் படைத்த கபாலி!

  1. ரேவதி

    அனைத்து படங்களும் சூப்பராக உள்ளது.
    தலைவரின் கபாலி படம் மாபெரும் வெற்றி படம் தான். இதில் சந்தேகம் இல்லை. மீண்டும் சரித்திரம் படைக்கப்போகும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. srikanth1974

    நூறு முகங்கள் மாறி வந்தும்
    ஏறு முகத்தில் இருக்கும் வீரனே!
    வீறு கொண்டு எழுந்து வா!
    ‘கபாலி’ சிங்கமே! – எங்கள்
    கருப்பு தங்கமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *