கபாலி எப்போ ரிலீஸ்?
யுட்யூபில் 12 மில்லியன் பார்வைகளைத் தொடப் போகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர். இதன் மூலம் அனைத்து இந்தியப் படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
அடுத்து படம் எப்போது வெளியாகப் போகிறது என்று ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்தப் படத்தை எந்த சிக்கலுமின்றி பாதுகாப்பாக வெளியிட வேண்டும் என்பதில் தாணு கவனமாக இருக்கிறார்.
முன்பு மாதிரி இந்தப் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் தியேட்டர்களுக்கு தரப்போவதில்லையாம். வேறு யாருக்கும் விற்கும் திட்டமும் இல்லையாம். தன் நம்பிக்கைக்கு உகந்த விநியோகஸ்கள் மூலம் தாணுவே நேரடியாக வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது.
சென்னை உரிமை மட்டும் எஸ்பிஐ சினிமா (சத்யம்) வுக்குக் கொடுத்திருக்கிறார் தாணு.
இதன் மூலம் லாபம் நஷ்டம் எதுவாக இருந்தாலும் அது தாணுவோடு நின்றுவிடும், தேவையின்றி ரஜினி பெயரை இழுக்க மாட்டார்கள் என்பதால் இப்படி ஒரு முடிவு என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.
ஜூலை மாதம்தான் வெளியிடப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இப்போது ஓரிரு வாரங்கள் முன்பாக, ஜூன் இறுதி வாரத்தில் படம் வெளியாகப் போவதாக தியேட்டர் வட்டாரத்தில் பரபரக்கிறார்கள். சில தியேட்டர்கள் இந்தப் படத்துக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
மே மாத இறுதியில் மலேசியாவில் கபாலி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிகிறது.
-என்வழி
I dont know, you will reply to me…
But one clarification required…
What is the hits for Bahuballi?…
We will beat it also….
Magizchi
NICE