BREAKING NEWS
Search

கபாலி ரிலீஸ் எப்போ? ஜூலை 1-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கபாலி ரிலீஸ் எப்போ?

7239f4a2-cba2-48ef-b657-db87af3a80c1

ரண்டு சினிமாக்காரர்களோ அல்லது சினிமா ரசிகர்களோ சந்தித்துக் கொண்டால் முதலில் கேட்பது கபாலி ரிலீஸ் எப்போ.. டிக்கெட் அரேஞ்ச் பண்ணியாச்சா? என்ற கேள்விதான். அந்த அளவுக்கு ‘டாக் ஆஃப் தி இன்டஸ்ட்ரி’ ஆக இருக்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி.

ஆரம்பத்தில் ஜூலை முதல் தேதி படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டனர். மீடியாவிலும் இதுதான் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ரம்ஜான் நோன்பு முடிவது ஜூலை 6-ம் தேதிதான். அதற்கு முன்பாக படத்தை வெளியிட்டால் ரஜினியின் இஸ்லாமிய ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள் என்று தயாரிப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மலேசியா, வளைகுடா நாடுகளில் தமிழகத்துக்கு இணையாக ரஜினி படங்கள் கொண்டாடப்படுகின்றன.

எனவே 6-ம் தேதிக்குப் பிறகு வெளியிட்டால் ஓபனிங் இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என்று தாணுவிடம் சொல்லப்பட்டது. எனவே இப்போது ஜுலை 15 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனை உறுதி செய்வதற்காக ஜுலை 1 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு
திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த சந்திப்பில் ரஜினி தவிர்த்து, கபாலி படக்குழுவினர் அனைவரும் ஆஜராகி படத்தைப் பற்றி பேசவுள்ளனர்.

படத்தின் ஆடியோ வெளியீட்டை சிம்பிளாக முடித்துக்கொண்டதால் இந்த ஏற்பாடு. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரிலீஸ் தேதி ஜுலை 15 என்பது அறிவிக்கப்படலாம்.

இந்தத் தேதி (சூலா 15) இன்னொரு வகையில் ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டதுதான். இந்தத் தேதியில்தான் கபாலி முதல் காட்சிக்காக சிறப்பு விமானத்தை பெங்களூரிலிருந்து சென்னைக்கு இயக்கவிருக்கிறது ஏர் ஏசியா.

அப்போ அன்னிக்குதானே கபாலி ரீலீஸ் தேதி!

-என்வழி




3 thoughts on “கபாலி ரிலீஸ் எப்போ? ஜூலை 1-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  1. Rajagopalan

    As per my opinion, July 7th is the correct date…
    Chummave melu vanga media.
    Media will write because of sultan, kabali postponed.
    Avanga vayuku edhuku aval tharanum?
    Hope u understand…

  2. srikanth1974

    விழிகளுக்கு விருந்து படைக்க
    விரைந்து வா கபாலி!

    உலகின் அனைத்துக் கண்களும்,
    உன்னைக் காண்பதற்கே!

  3. Raghul

    The whole world knows… Thalaivar movie release is not at all influenced by anyone’s movies…
    We need not prove it again and again, what big other releases are !!!!
    Let Mr. Thanu take the call….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *