BREAKING NEWS
Search

சில்வர் காரும் சூப்பர் ஸ்டாரும்!

சில்வர் காரும் சூப்பர் ஸ்டாரும்!

kabali007

ந்தப் படங்களைப் பார்த்த பிறகு, ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துபவர் நம்ம தலைவர்தான் என்பது உறுதியாகிவிட்டது.

ஜேம்ஸ்பாண்டின் லேட்டஸ்ட் வர்ஷனான ஸ்பெக்டர் படத்தில் 007 ஆக வரும் டேனியல் க்ரெய்க் கோட் சூட், கையில் துப்பாக்கி சகிதம், ஆஸ்டன் மார்டின் காரில் சாய்ந்தபடி சீரியஸாக பார்த்துக் கொண்டிருப்பார். அந்தப் படத்தில் டேனியல் க்ரெய்க்கின் தலையை எடுத்துவிட்டு, கபாலி ரஜினியின் தலையை மார்ப்பிங் செய்திருக்கிறார்கள்.

kabali007-1

மிகக் கச்சிதமாக அமைந்துவிட்டது இந்தப் படம். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சியை வைத்து இன்னொரு டிசைனும் செய்திருக்கிறார்கள். அதுவும் பக்கா!

ஆரம்பத்தில் இவை கபாலியின் ஒரிஜினல் படங்களோ என்றுதான் பலரும் நினைத்துவிட்டார்கள்.

இந்த நேரம் பார்த்துதான் ஹாலிவுட் நடிகர் ஜான் க்ளீஸ், ஜேம்ஸ்பாண்ட் வேடத்துக்கு டேனியல் க்ரெய்க் பொருத்தமாக இல்லை என்று கமெண்ட் அடித்துள்ளார். இருக்கவே இருக்கார் எங்க கபாலி… ஜேம்ஸ்பாண்ட் தயாரிப்பாளர்கள் முயற்சிக்கலாமே!

 

-என்வழி




4 thoughts on “சில்வர் காரும் சூப்பர் ஸ்டாரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *