BREAKING NEWS
Search

ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படம் கபாலி! – பிரிமியர் ஷோ ரிசல்ட் இது

ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படம் கபாலி! – பிரிமியர் ஷோ ரிசல்ட் இது

Kabali-pos

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப் படம், மிக முக்கியமான படம் கபாலி என்று, படத்தின் பிரிமியர் எனப்படும் சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த ரஜினியின் கபாலி படம் நேற்று சிறப்புக் காட்சி மூலம் வெளியானது.

படத்தின் முதல் பிரிமியர் காட்சி மலேசியாவில் உள்ள பெடரல் ஹாலில் நேற்று இரவு நடந்தது. அதே நேரத்தில் சிங்கப்பூரிலும் சிறப்புக் காட்சி நடந்தது.

தொடர்ந்து சில மணி நேரங்களில் பிரான்ஸின் ரெக்ஸ் அரங்கம், அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் கபாலி சிறப்புக் காட்சிகள் நடந்தன. பிரிட்டனிலும் சிறப்புக் காட்சிகள் நடந்தன.
kabali-pos2
இந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள் படத்துக்கும் படத்தின் நாயகன் ரஜினிக்கும் பாராட்டு மழைப் பொழிந்து வருகின்றனர்.

ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம் கபாலி என்றும், இதுவரை அவர் பார்த்த வெற்றிகளிலேயே மிகப் பெரிய வெற்றி கபாலிதான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சிலர் இந்தப் படத்தை நூறு பாட்ஷா + முள்ளும் மலரும் படங்களுக்குச் சமம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படம் ரஜினிக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தரும் என்பது பல ரசிகர்களின் ஏகோபித்த கருத்து.
kabali-pre-1
ரஜினியின் ஸ்டைல், உடல் மொழி, ஆக்ஷன் எல்லாமே இந்தப் படத்தில் புது மாதிரியாக இருப்பதாகவும், அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனும் அளவுக்கு மிக கம்பீரமாக ரஜினி காட்சியளிப்பதாகவும் பெரும்பான்மை ரசிகர்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் படம் ரஜினி ரசிகர்களையும் தாண்டி, வெகு ஜனங்களுக்கும் மிகவும் பிடித்த படமாக உள்ளதாக ஒட்டுமொத்தமாக தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் ரெக்ஸ் அரங்கில் கபாலி...

பிரான்ஸ் ரெக்ஸ் அரங்கில் கபாலி…

கபாலியின் சிறப்புக் காட்சி மூலம் கிடைத்துள்ள இந்த ரிசல்ட் தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்வைத் தந்துள்ளது.

-என்வழி




2 thoughts on “ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படம் கபாலி! – பிரிமியர் ஷோ ரிசல்ட் இது

  1. Venky

    படம் சூப்பர் …மிக்க மகிழ்ச்சி…எல்லாருக்கும் பிடிக்கும் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *