BREAKING NEWS
Search

மலேசியா புறப்பட்டார் ‘கபாலி’!

மலேசிய ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

rajini-malaysia

பாலி படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக இன்று மலேசியா புறப்பட்டுச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் கபாலி படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் தொங்கி 30 நாட்களுக்கும் மேல் சென்னையில் நடந்தது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கவிருக்கிறது. கோலாலம்பூர், மலாக்கா, பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது.

படப்பிடிப்பு நடைபெற உள்ள அனைத்து இடங்களுக்கும் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் தெருக்கள் செட்போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியான காட்சிகள்தான் இப்போது மலேசியா, தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளன.

இன்று மலேசியா புறப்படும் முன், தந்தை ரஜினியுடன் செல்ஃபி போட்டோ எடுத்துக் கொண்ட மூத்த மகள் ஐஸ்வர்யா, அந்தப் படத்தை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டு, ரஜினி மலேசியா புறப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

இன்னும் ஒரு மாதம் ரஜினிகாந்த் மலேசியாவில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்வார். முதலில் மலாக்காவில்தான் ஷூட்டிங் நடக்கிறது.

மலேசிய ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

-என்வழி




4 thoughts on “மலேசியா புறப்பட்டார் ‘கபாலி’!

  1. anbudan ravi

    Taken என்கிற ஆங்கில படத்தின் தழுவலாக இருந்திடக்கூடாது தலைவரின் கபாலி. இது நானே சந்தேகப்படுவதுதான் எங்கிருந்தும் படித்தது அல்ல…..எனது யூகம் மட்டுமே. Taken -ல் தனது மகள் சுற்றுலா சென்ற இடத்தில் அவரை கடத்தி சென்றுவிடும் மாபியா கும்பல்….அவளை எப்படி மீட்டு வருவார் அவரது retired CIA agent தந்தை என்பதை விறுவிறுப்பாக சிறந்த திரைக்கதையுடன் இருக்கும் அந்த படம்……தலைவரின் விமான நிலையத்தின் stills பார்த்ததும் அந்த படம் நினைவுதான் வந்தது……..தவறான யூகமாக இருக்கலாம்……அப்படி இருந்திட கூடாது என்பதே எனது ஆசை.

    அன்புடன் ரவி.

  2. Ramesh Kanna

    கள்ளம் கபடம் இல்லாத ஒரு குழந்தையின் புன்சிரிப்பை போல உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் புன்சிரிப்பு.
    கடவுள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு மன அமைதி தர வேண்டுகிறேன்.

  3. siva

    அவரை தேடி பட்டம் மட்டும் இல்ல governor இல்ல PM கூட போவார் அது தான் சூப்பர் ஸ்டார் ரஜினி ….. பிரஸ்ட் நில்லு அப்புறம் சொல்லு…. தலைவர் சும்மா இந்த இடத்துக்கு வரலை அவருடைய உழைப்பு பிறருக்கு கொடுக்கும் மரியாதையை எளிமை அவர் பேசும் வார்த்தையில் உள்ள தன்னம்பிக்கை அவர் இத்தனை கோடி வாங்குறாரு சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு அவர் உழைப்பு தெரியலை ஆண்டவன் அவருக்கு கொடுத்த வரம்… அப்படி பார்த்தால் என் உழைப்பு இங்கு ஒரு கூலி அதை வேலையை என் நண்பன் பார்குறான் அயல் நாட்டில் அவனக்கு அதைவிட 2 மடங்கு கூலி அதிகம் இது அவர் அவர் உள்ள கர்ம வினையின் பயன் & முயற்சி விதி எதோ ஒன்று ரஜினி படத்தை மட்டும் அல்ல அவர் இமேஜ் கும் ஒரு சரித்திரம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *