BREAKING NEWS
Search

கபாலி புதிய போஸ்டர்கள்… அதிரும் இணையம்!

கபாலி கலக்கல் போஸ்டர்கள்!

kabali- 1

ணையத்தில் இன்று கலக்கிக் கொண்டிருப்பவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி படத்தின் புதிய போஸ்டர்கள்தான்.

இன்று ஒரே நாளில் மூன்று புதிய போஸ்டர்கள் வெளியானதில் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

லிங்கா படத்தையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இயக்குகிறார்.

kabali-2

ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முரளி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். சென்னையில் தொடங்கிய கபாலியின் படப்பிடிப்பு கோவா, மலேசியா, சிங்கப்பூர் என அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கபாலி படத்தின் ‘டீசர்’ அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கபாலி படத்தின் பாடல்கள் ஜூன் 12 அன்று கபாலி பாடல்கள் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.

kabali-3

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர்களை கலைப்புலி தாணு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.

இந்தப் படத்தின் இந்தி, தெலுங்கு போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்டனர். இன்று கபாலியின் தமிழ் போஸ்டர்கள் மூன்று வெளியாகியுள்ளன. இவை மூன்றிலுமே ரஜினி வயதான கெட்டப்பில் இருந்தாலும், ரசிகர்கள் அவற்றைக் கொண்டாடி வருகின்றனர்.

-என்வழி




4 thoughts on “கபாலி புதிய போஸ்டர்கள்… அதிரும் இணையம்!

  1. Rajagopalan

    Audio release function eruka ellaya?
    Also reports about kabali release postponed to 15th July not good.(
    My humble opinion is let it release on 7th July due to Ramzan.
    Middle east countries had put a cap for release of new films.This i had been telling from the very beginning.
    Hence 7th will be appropriate to release. But 15th means, all these north indian medias as well as our media will write Kabali postponed due to Sultan which i dont like…Hope u understand…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *