BREAKING NEWS
Search

‘கபாலி ரஜினி’யை தேசிய விருதுக் குழு அங்கீகரித்திருக்க வேண்டும்!

கபாலிக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும்!

Cr623E7VMAApmqO.jpg-large

வன் இப்படி நினைக்கிறான்… இவன் இப்படிச் சொல்வான்’ என்றெல்லாம் நினைத்து இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தேசிய விருது கிடைக்காதது கூட சரிதான் என சிலர், குறிப்பாக ரஜினி ரசிகர்களே கூட சொல்லிக் கொண்டிருப்பது, அவரது உண்மையான,  நிகரற்ற உழைப்பை அவமதிப்பதற்குச் சமம்.

மோடி கூப்பிட்டதும் ‘யெஸ் சார்’ என்று கூறி தேடி ஓடுகிற ஆளா ரஜினி? அப்படிச் செய்வதாக இருந்தால் அவர் நரசிம்மராவ், வாஜ்பாய் காலத்திலேயே செய்திருப்பாரே!

ரஜினியை விமர்சனம் செய்பவர்கள் யாராவது அறிவோடுதான் செய்கிறார்களா? மூளையைக் கழற்றி வைத்துவிட்டு, காழ்ப்பு ஒன்றை மட்டுமே அந்த இடத்தில் நிரப்பி வைத்தல்லவா விமர்சனம் செய்கிறார்கள்.

ஒரு சாம்பிள்… எந்திரன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த போது நடந்து ஒரு டிவி விவாதத்தில் பெரிய ஞானி என்று எழுத்துலகம் போற்றிய நபர் இப்படிச் சொன்னார்… ‘எம்ஜிஆர் படங்கள் அவருக்காகவா ஓடின… அவற்றில் நடித்த ஹீரோயின்களுக்காகத்தான்… முத்து படம் ஜப்பானில் ஓடியதே ரஜினிக்காக அல்ல.. மீனாவுக்காக.. அப்படித்தான் எந்திரனும். இது ஐஸ்வர்யாவுக்காக வந்த கூட்டம்’ என்றார். அந்த மாதிரி மொக்கை வாதத்தை ஒப்புக் கொள்ள நீங்கள் தயாராக இருந்தால், கபாலிக்காக ரஜினிக்கு தேசிய விருது கிடைக்காததும் சரிதான் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

கபாலிக்காக ரஜினி உழைத்த உழைப்பும் செலுத்திய அர்ப்பணிப்பும், வெளிப்படுத்திய நுணுக்கமான உணர்வுகளும் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் கூட எந்த கலைஞனுக்கும் சவாலானவை. ஒரு இளம் இயக்குநர், பயமறியாத இளங்கன்று மாதிரி, ரஜினி என்ற சிங்கத்தை தன் இஷ்டத்துக்கு வளைத்து பிரமாதமான நடிப்பை வாங்கியிருப்பார்.

அதற்கான அங்கீகாரத்தை தேசிய விருதுக் குழு வழங்கத் தவறியிருக்கிறது. சமூக வெளியில் அதை நிலை நிறுத்துங்கள்.

அல்ப அரசியல் காரணங்களை நாமே கற்பித்துக் கொண்டிருக்க வேண்டாம்.

– வினோ (எஸ் ஷங்கர்)




One thought on “‘கபாலி ரஜினி’யை தேசிய விருதுக் குழு அங்கீகரித்திருக்க வேண்டும்!

  1. Rajagopalan

    My Honest opinion would be either for thalaivar or Amitabh (PINK), the award should be be given.
    National awards as usual biased.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *