BREAKING NEWS
Search

கபாலி விமர்சனம்

கபாலி விமர்சனம்

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ரஜினிகாந்த், தன்ஷிகா, ராதிகா ஆப்தே, வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், கிஷோர், தினேஷ், ரித்விகா
ஒளிப்பதிவு: ஜி முரளி
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ்
இயக்கம்: பா ரஞ்சித்

ரஜினி… இந்த மூன்றெழுத்து மந்திரத்தின் வீச்சும் பிரமாண்டமும் இந்த நூற்றாண்டின் பேரதியசம் என்றால் மிகையில்லை. மனிதர் வந்து திரையில் முகம் காட்டினாலே அவரது ரசிகனில்லை என்போரும் பரவசப்படுவதைப் பார்க்க முடிகிறது. இப்படியொரு பேரதியத்தை ஒரு பாத்திரமாக ஆட்டி வைக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்திருக்கிறது கபாலி மூலம். அதை அவர் சரியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறாரா? வாங்க, பார்க்கலாம்!

கபாலியின் கதையை ஏற்கெனவே நிறையப் படித்துவிட்டிருப்பீர்கள். திரும்பச் சொல்லி சலிப்பேற்படுத்த விரும்பாததால், படத்தின் நிறை குறைகளுக்குப் போய்விடலாம்.

இந்தப் படம் ரஜினி படமா… ரஞ்சித் படமா என்ற பெரும் விவாதம் படம் வெளியாவதற்கு ஒரு மணி நேரம் வரை கூட சூடாக ஓடிக் கொண்டிருந்தது. இனி மறைத்துப் பேச ஒன்றுமில்லை… நூற்றுக்கு நூறு சதவீதம் இது ரஜினி படம். அந்த ஒற்றை மனிதர் இல்லையென்றால் இது படமல்ல!

இந்த வயதில் அவர் காட்டும் வேகமென்ன… ஸ்டைலென்ன… அதுவும் அந்த வெள்ளைத் தாடி வைத்த ரஜினியின் அறிமுகக் காட்சியில் வரும் முதல் சண்டை.. வாவ். சரக்கென்று இரும்பு ராடை கையில் வரவழைத்து வில்லனைத் தாக்கும் லாவகம், கோட்டு சூட்டும் கூலர்ஸுமாய் நடை போடும் கம்பீரம்.. சான்சே இல்லை!

80களில் வரும் இளமை ரஜினி நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கத்தை நினைவூட்டுகிறார். அவரது தோற்றத்தில் எந்த உறுத்தலுமில்லை. 65 வயது மனிதர் 30 வயது இளமையுடன் மிளிர்கிறார்.

அந்த பாண்டிச்சேரி சண்டைக் காட்சியிலும் க்ளைமாக்ஸ் சண்டையிலும் ரஜினியின் ஆக்ஷனும் வேகமும்  நம்மை சீட்டு நுனிக்குத் தள்ளுகின்றன. ரசிகர்கள் சாமி வந்த மாதிரி ஆடித் தீர்க்கிறார்கள் இந்தக் காட்சிகளில்.

மனைவியை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்ற உணர்ச்சித் தவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கித் துடித்து மகிழ்ந்து நெகிழும் ரஜினி, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத பரவசம்.

‘ஆண்ட பரம்பரைடா நாங்க…. மொத்த மலேசியாவையும் ஆளத் துடிக்கிறியோ? நீ மனுசனா பிறந்திருக்க வேண்டியவனில்லை… நாயா… அதுவும் என் வீட்டு நாயா பொறந்திருக்க வேண்டியவன்’ என்று வில்லன்கள் வின்ஸ்டன் சாவோவும் கிஷோரும் வன்மத்துடன் நஞ்சத் துப்பும் இடத்தில்,

‘மலையாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியா மாத்தினவன் தமிழன். அவன் முன்னேறினா உங்களுக்கு பிடிக்காதா… ஒரு தமிழன் ஆளக் கூடாதா… நான் ஆளப் பிறந்தவன்டா..’, என ரஜினி தரும் பதிலடி ‘நெருப்புடா’ ரகம்.

ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராக எதிர்ப்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமான உழைப்பைத் தந்திருக்கிறார் ரஜினி.

இந்தக் கதையில் ராதிகா ஆப்தேதான் நடித்தாக வேண்டும் என ஏன் இயக்குநர் ரஞ்சித் பிடிவாதமாக இருந்தார் என்று புரியவில்லை. பாபநாசத்தில் கவுதமி எப்படியோ அப்படித்தான் கபாலியில் ராதிகா ஆப்தே, தோற்றம் முக்கியத்துவம் இரண்டிலுமே. பெரும்பாலான காட்சிகளில் கர்ப்பிணியாக ஒரு செட் பிராபர்ட்டி போல நிற்கிறார். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கணவருடன் இணையும் காட்சியில் மட்டும் மனதில் நிற்கிறார்.

ராதிகாவை விட தன்ஷிகா செம க்யூட். ஆக்ஷன் காட்சிகளிலும் அப்பாவை கண்ணும் கருத்துமாக கவனிப்பதும் டிஸ்டிங்ஷனை அள்ளுகிறார்.

படத்தின் சின்ன கலகலப்புக்கு உதவுகிறார் தினேஷ். கபாலியின் கண் பார்வை இலக்கை கற்பூரமாக உணர்ந்து அவர் மின்னலாய் செயல்படும் காட்சிகளில் மெலிதான நகைச்சுவை. அதைத் தவிர மருந்துக்கும் படத்தில் சிரிப்பில்லை.

ஜான் விஜய், ரித்விகா, கிஷோர், நாசர் மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள். அந்த பளபள தைவான் வில்லன் நிஜமாகவே மிரட்டுகிறார்.

இப்போது ரஞ்சித் முன் நாம் வைக்கும் சில கேள்விகள்:

அதான் அம்பேத்கர், காந்தியின் உடை அரசியல் பற்றி வசனம் வைத்துவிட்டீர்களே… அதற்கப்புறமும் படத்தில் ஏகப்பட்ட இடங்களில் அந்த ‘கோட் சூட் குறியீட்டை’ வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

ரஜினி என்ற நடிகரின் பலம் ‘ஆக்ஷன் வித் நகைச்சுவை’ என்பது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே அதை இருட்டடிப்பு செய்யும் வகையில் இந்தப் படத்தை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? நகைச்சுவை இருந்திருந்தால் அப்படி என்ன இந்தப் படம் கெட்டுப் போயிருக்கும்?

உங்கள் சுய விருப்பு வெறுப்புகளை ரஜினி என்ற அனைவருக்கும் பொதுவான மக்கள் நாயகன் மீது திணிக்க வேண்டுமா?

க்ளைமாக்ஸில் வரும் ரஜினியின் தோற்றத்துக்காக இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாமே?

குமுதவள்ளியைக் கண்டுபிடிக்க பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ரஜினியை அலையவிடும் காட்சியெல்லாம் இப்படியொரு படத்தில் தேவையா..?

படத்தின் இன்னொரு பலவீனம் சந்தோஷ் நாராயணன் இசை. பிஜிஎம்மாக வரும் அந்த நெருப்புடா பாடல் தவிர, வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை. மாய நதி ஒன்று பாடல், தென்றல் வந்து தீண்டும்போது… பாடலின் உல்டா என்பதை படத்திலேயே காட்சியாக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலாக துப்பாக்கிக் குண்டுச்சத்தமே ஒலித்துக் கொண்டிருப்பதால், எது பின்னணி இசை என்றே புரியவில்லை!

80களின் மலேசியா, பளபளக்கும் இன்றைய மாடர்ன் மலேசியா இரண்டையும் அழகாக வித்தியாசப்படுத்தியிருக்கிறது முரளியின் காமிரா.

ரஜினி என்ற பலமிக்க சிங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கும் சர்க்கஸ் மாஸ்டர் மாதிரிதான் இந்தப் படத்தில் தெரிகிறார் இயக்குநர் ரஞ்சித்.

மீண்டும் சொல்கிறேன்… இந்தப் படத்தை ரஜினி என்ற அற்புதமான நடிகரின், அபார உழைப்புக்காக, அவரை ரசிப்பதற்காக என்றால் ஒரு முறையல்ல, பலமுறைகூடப் பார்க்கலாம்.. நிச்சயம் ரஞ்சித்துக்காக அல்ல!

நன்றி: ஒன்இந்தியா
12 thoughts on “கபாலி விமர்சனம்

 1. நா. கணேசன்

  என்ன தான் ரஞ்சித் தன் படமாக உருவாக்கி இருந்தாலும் அறிமுகமாகும் காட்சியிலேயே தலைவர் இது அவரது படமாக மாற்றுகிறார்.

  மகிழ்ச்சி.

 2. KUMARAN

  idhu oru nalla padam, radika apte nalla nadippu,ellorum nalla nadipu, THALAIVAR SUPERSTAR RAJINIKANTH KABALI SUPER NADIPU

 3. rajagopalan

  Padathil ellam nanragathan erukiradhu. All characterisation were very good especially John Vijay, dhashika, radhika n dinesh.
  Y r telling movie is not good.
  Already so many so called intellects spreading negative remarks.u also?

 4. MARIRAJ

  PADAM. SUPER. RANJITH DIRECTION IS ALSO SUPER. SUPER STAR NADIPU IS SUPER. ALL ARE SUPER.

 5. yaseenjahafar

  This film is very good story first Half Second half little bite slow results movie Mass + Slow this movie running sucessfuly

 6. Fahurudeen Ali Ahamed

  Dear Shankar,

  The movie is really good. Ranjith has give a class movie with thalaivar. I’m not finding any faults with Ranjith. The problem here is the Rajini hating social media group only.

  I just found in You tube that the movie has got more than 95% liking in kerala Fans feedback, and mostly postive feedback from telegu fans. Only Rajini haters in TN spreading negativity for the film to pull it down.

  https://www.youtube.com/watch?v=RxKZSVK-NEQ — Kerala Response
  https://www.youtube.com/watch?v=-YsInG9dnDg — Andhra Response

 7. KK

  A lot of negative reviews on Kabali. Folks who are happy about the bad reviews, stop right here and remain happy. Others, read on.

  This is not such a bad movie as people portray. I agree overall that something is missing which is not making us relate well with the story. Aside from that there are several positives.

  1) No vulgarity and clothes-starved women.
  2) No cheap comedy.
  3) No graphics gimmicks.
  4) No gravity-defying fight sequences.
  5) Lead artists aren’t portrayed as musical geniuses who can compose like Ilayaraja, sing like SPB/Janaki and dance like Prabudeva.
  6) 65 year old Hero doesn’t run around trees flirting with a 20 something heroine.
  7) No over dramatization.
  8) No loud bgm that make your head pop out.
  9) songs that gel well with the story.
  10) No lengthy dialogues that even a dying patient delivers for 10 min in usual Tamil movies.
  11) No scene glorifies drinking and talking cheap about women.
  12) Doesn’t project gangs (good/bad) as a solution to a problem in society.
  13) Excellent performance from every character.

  If these do not make a movie worth it, I dunno what will. Can anyone list a single recent movie that has the same set of positives listed here?

 8. BP

  most of the non-rajini fans didn’t like it. In my office – non tamil people booked with interest but they didn’t like the movie. big disappointment for them.

  as fan – we will watch more than once…

  thalaivar movie is meant for all… at least once. they feel money is wasted.

  want to see more movies from him.. but will less violence.. good story.

  Linga & Kabali – climax fights are big let down.

  this is first movie i see thalaivar with so much of violence gun shots..

 9. Rathinakumar

  Dear Sankar,

  Yesterday i saw this kabali film in Dharmapuri D.N.C Theatre among 150 peoples only. But Really i told that, The Kabali Movie is Average only. No repeat Audi ans. The Mass of Rajini is let down slowly in this film.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *