BREAKING NEWS
Search

கபாலி… இன்னொரு சந்திரமுகி!

ரஜினி ரசிகன்டா!

CkryjhXVEAAo0Qa

பாலி – வழக்கமான ரஜினி ஃபார்முலாவை விட்டு விலகி, ரஜினி தனது திரையுலக வாழ்க்கையில் “ரிஸ்க்” எடுத்து நடித்துள்ள படம். அதுவும் லிங்கா களேபரங்களுக்குப் பின்னர் தனது நிஜ வயதையொட்டிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தது, பா.ரஞ்சித்தை இயக்குநராக தேர்ந்தெடுத்தது என மிகப் பெரிய ஆச்சர்யங்களை வழங்கினார்.

21/07 அன்று நான் இந்தப் படத்தினைப் பார்த்தது Vlaardingen,  Netherlandsல்.
ஆம்ஸ்டர்டாமில் இருந்து கிட்டத்தட்ட 1.5 மணி நேரம் ரயிலில் சென்று வந்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. பல தமிழ் முகங்கள் தியேட்டரை நோக்கி… பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

வழக்கம் போல “த்த்த்த்தலைவ்வ்வ்வ்வா” என்று சந்தோஷமாக ஆர்ப்பாட்டத்துடன் படம் தொடங்கியது.

மகிழ்ச்சி என்ற ஒரு வார்த்தையை எத்தனை விதமாக உச்சரிக்கிறார் மனுஷன்!

படத் தொடக்கத்தில் இருந்த ஆராவாரம் அடங்கி அனைவரும் படத்தினில் ஆழ்ந்தனர். ரஜினி ரசிகர்கள் பலருக்கும் அன்று வேறுவிதமான அனுபவம். அதுவும் குமுதவள்ளியைத் தேடி.. தேடிச் செல்லும் போது கபாலி வழக்கமான ரஜினி படம் அல்ல என்பது தெரிந்தது.

maya nadhi-thalaivar

படம் முடிந்து வெளியே வரும் போது சிலருக்கு படம் பிடிக்கவில்லை. என் அருகில் இருந்த சென்னையைச் சேர்ந்தவர் “ரஞ்சித் தலைவரை சரியாக உபயோகிக்கவில்லை, சார்” என்று கூறினார். ( இதுதான் முதல் நாள் படம் பார்த்த பல ரசிகர்களின் எண்ணம்). அவரிடம் நான் சொன்னது.. மற்றும் whatsAppல் சில நண்பர்களிடம் சொன்னது…  கடைசி வரியில்.

எனக்கு படம் பிடித்திருந்தது.. இருந்தாலும் சில காட்சிகளை ட்ரிம் செய்திருக்கலாமோ எனத் தோன்றியது.

அடுத்தநாள் ஊருக்கு வந்த பின்னர்… 2ம் முறை பார்த்தேன். எந்தெந்தக் காட்சிகளையெல்லாம் ட்ரிம் செய்திருக்கலாமென நினைத்தேனொ… அந்தக் காட்சிகள் அத்தனையும் படத்தின் பலம். பா.ரஞ்சித் ரஜினியை மிக அற்புதமாக உபயோகப்படுத்தியுள்ளதையும் உணர்ந்ந்தேன்!

அடுத்த நாள்.. மீண்டும் 3ம் முறை கபாலி. ஒவ்வொரு முறையும் பார்க்கப் பார்க்க.. படத்தின் தாக்கமும், ரஜினியின் நடிப்பும் உள்ளே ஆழமாக பாதித்தது. தலைவர் படம் பார்த்து கண்கலங்கியது என்றால்…. அது கபாலி மட்டுமே!

2 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை… இதுவரை 4 முறை பார்த்தாகிவிட்டது.

படம் – க்ளாஸ் & மாஸ்.

ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் நடிப்பு அற்புதம். ஓவர் ஆக்டிங் இல்லாமல், முக்கி முனகாமல்… சிறு  அசைவுகளாலேயே நடிப்பினை வெளிப்படுத்தும் பாங்கு…. ஹேட்ஸ் ஆஃப் தலைவா!. ரஜினியின் நடிப்பு என்று தொடங்கினாலே… சிலர் ஏளனமாகவே பார்ப்பார்கள். இதெல்லாம் என்ன நடிப்பு என்று சொல்பவர்களுக்கு கமல் போன்ற நடிகர்கள் செய்யும் ஓவர் நடிப்பு மட்டுமே தெரியும். கமலை விட தேர்ந்த அளவான நடிப்பினை வழங்க ரஜினியால் (மட்டுமே )முடியும். ஒரு வட்ட்த்திற்குள் சிக்கியுள்ளோம் .. வெளியே வர முடியாது என்ற அவநம்பிக்கையில் இத்தனை நாட்கள் இருந்துள்ளார்.

90களில் சூப்பர் ஹீரோ ரஜினி படங்களைப் பார்க்கத் தொடங்கியவர்களுக்கு ரஜினி என்ற நடிகனை அடையாளம் காட்டிய படம் கபாலி

ஜெயிலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் குமுதவள்ளியின் நினைவினால் ஒவ்வொரு அறையாக செல்லும் போது.. மாறும் முகபாவம். அது நிஜமல்ல என்ற உண்மை உணர்ந்து ஆயாசமாக பெருமூச்சு விடுவது..

‘நல்லா சாப்பிடுங்க மார்த்தாண்டம், அட ஏன் எந்திரிச்சுட்டீங்க….. நாம நல்லாத்தான் இருப்போம்,’ என்று சொல்வதெல்லாம் புது ரஜினி ஸ்டைல் நக்கல்

லோகா.. தனது மனைவியைப் பற்றி கீழ்த்தரமான எண்ணத்தில் சொல்லும் போது ஒரு அங்குலம் கூட நகராமல்.. நின்ற இடத்திலிருந்தே சிக்ஸர் அடித்தது போல “மகிழ்ச்சி” என்ற ஒற்றைச் சொல்லில் தனது கோபத்தினை வெளிப்படுத்தும் அந்தக் காட்சி… அலுக்காது

வீரசேகரன் பூஜை போட்டுட்டான்ணே என அமீர் சொல்லும் போது.. அதைக் குறித்து சிறிதும் கவனிக்காமல், “எனக்கு என்னவோ யோசனையாவே இருக்கு, அமீர்…” என்று குழப்ப மனநிலையில் சொல்லும் போதும்…

அந்த பொண்ணு என்ன அப்பானு சொல்லுச்சுல்ல…

Free Life Schoolல்  ஃப்ளாஷ் பேக் காட்சியை சொல்லும் போது லேசாக “மூக்கை உறிஞ்சுவது, உங்களுக்கு உங்க மனைவின்னா அவ்வுளவு பிடிக்குமா? என்ற கேள்விக்கு கையை அகண்டு விரித்து முகத்தில் பிரகாசத்தினை காட்டும் காட்சி, சிரிப்பு பற்றிய கவிதைக்கு “பிரமாதம்பா” என சொல்வது…

குமுதவள்ளி – பேரே ரொம்ப அழகா இருக்குல்ல… என்று சிறு குழந்தை போல சிரிப்புடன் சொல்வது..

அதனைத் தொடர்ந்து வெளியே வரும் போது மீனா .. கபாலியை நோக்கி திட்டும் போது… ரஜினி முகத்தில் வெளி கொண்டுவரும் உணர்ச்சிகள்…

தாய்லாந்தில் நடக்கும் துப்பாக்கி சண்டையின் போது… யோகி தன்னை வாங்கப்பா போகலாம் எனும் போது.. “சட்” டென ( இந்த “சட்” எனும் வார்த்தையை  100 முறையேனும் அடிக்கோலிட்டுக் கொள்ளுங்கள்) முகம பிரகாசமடைந்து தன்னை மறந்து மகளின் கையைப் பற்றிக் கொண்டு அவள் பின்னால் செல்லும் போதும்..
மகள்/ பெண் காப்ப்ற்றினாள் என்று சொல்வார்களே என்ற  பயம் துளியுமின்றி, சூப்பர்ஸ்டார் இமேஜை கடாசிவிட்டு, இயக்குநரின் நடிகனாக அற்புதமாக கதையின் ஓட்டத்திற்கு எவ்வுளவு தேவையோ அதற்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகன்…

சங்கிலிமுருகனிடம், “அய்யா, ஃபோன் எடுத்திட்டாங்க.. பேசுங்க…” என்று படபடப்புடன் சொல்லும் போது…

யோகியிடம், “இங்கதான் எங்கேயோ பக்கத்துல இருக்கா… அவ என்னைப் பார்த்தா என்ன செய்வா, இப்ப என்ன நினைச்சுக்கிட்டுருப்பா.. இதெல்லாம் நினைக்கும் போது ‘திக்குதிக்குங்குது’ என்று சொல்லிவிட்டு… மகளிடம் பேசுகிறோமே என்ற நியாபகம் வர “நீ போய்த் தூங்கு தூங்கு” என்று லைட்டாக வெட்கத்துடன்  சொல்லும் போது,
குமுதவள்ளியைப் பார்க்கச் செல்லும் போது தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது
சந்தித்த மகிழ்ச்சியில் பெருகி வரும் கண்ணீரை அடக்க முயன்று .. அதில் தோற்று… கம்பீரமாக மகளை அறிமுகப்படுத்தும் போதும்….

Thalaivar-Don

என ரஜினியின் நடிப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.

கபாலி – ரஜினி ரசிகர்கள் கர்வமாக காலரைத் தூக்கிக் கொண்டு சொல்லலாம்… ‘ரஜினி ரசிகன்டா..’

தனது திரையுலக வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தில் கதை மற்றும் மக்கள் ரசனையை நம்பி படங்களை தேர்ந்தெடுத்து ஜெயித்தும் காட்டியிருக்கிறார் ( 2005ல் சந்திரமுகி.. 11 வருடங்களுக்குப் பிறகு கபாலி)

ரஜினியை மீண்டும் நடிக்க வைத்த பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துகள் & நன்றி. சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும் கதையோடு ஒட்டி வருகிறது. பின்னணி இசையும் அருமை.

Vlaardingen-ல் நான் சொன்னது –

‘பாஸ், சந்திரமுகி படம் முடிஞ்சு வந்த போது பல ரசிகர்கள் நினைத்தது இதே போலத்தான்.. ஆனால், சந்திரமுகியை ரசிகர்கள் அல்லாதோரும் கொண்டாடினார்கள்… கபாலி  இன்னுமொரு சந்திரமுகியாக மாறும்!’

-ராம்
6 thoughts on “கபாலி… இன்னொரு சந்திரமுகி!

 1. Muru

  Thats 200% true. I had the same feeling after watching Kabali! When i watched Chandramukhi , i was thinking , this is not regular Thalaivar movie and may be thalaivar got old…etc…But , the truth is , Kabali is bigger than Chandramukhi.

  Awesome comments and observation!!!

 2. Raghul

  super… super…

  One big plus in Kabali: All stars have given stellar performance… We should acknowledge..
  weekend watched Basha in TV. Could not avoid comparison..
  Kabali is a class (70%) + mass (30%) movie…

 3. Rajagopalan

  Same thing i was telling to all my friends. This is another Chandramukhi.
  I had given the same comment in my previous post also in this site.

 4. arul

  nanellam padam thokkam illamal kalaiyil 4 manikku parthuvittu(yenendral naangal salethil arrs multiplex anaithu 5 theatre koottam pona level veru)vanthavudan naan ranjithai thittatha vaarthagai illa.aanaal indru mathiyam thaniyaga poi padam parthen.padam arumai.enna sila scenegalai avoid drim pannirukkalam utharanam dinesh sagum scene)aanal thalaivarin marupatta konagalin nadippai velikondu vanthu avarin aramba kaala rasigargali thirupti paduthi irukkiraar.well done ranjith.aanal irunthalum ranjith engal thalaivarai kuruvaga ninaikkum ennai pondrorgal thalaivarai yow vaya poya endru pesuvathum padamaga irunthalum othukka mudiyavillai.

 5. ganes

  ithu than original thalaivar nadippu nam avrai commercial aga use panrom .thalaivarin nadippu super.padam arumai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *