BREAKING NEWS
Search

11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி!

கபாலி ரூ 500 கோடி!

Kabali-Movie-HD-Stills (10)

சென்னை: வெளியான பதினோரு நாட்களில் ரூ 500கோடியை கபாலி திரைப்படம் வசூலித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், இந்திய அளவில் இந்த சாதனையை குறுகிய காலத்தில் செய்த ஒரே படம் என்ற பெருமை ரஜினியின் கபாலிக்குக் கிடைக்கும்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி எக்கச்சக்க சாதனைகளைப் படைத்து வருகிறது. குறிப்பாக வசூலில் கபாலிக்கு அருகில்கூட எந்தப் படமும் வரமுடியாத நிலை. இதனால் கோடிகள் என்பதே சர்வசாதாரண வார்த்தையாகிவிட்டது மீடியாவில்.

சில தேசிய நாளிதழ்களில் கபாலி ஏற்கெனவே ரூ 700 கோடியைக் குவித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முந்தைய வர்த்தகங்கள், பிராண்டிங், ஸ்பான்சர்கள், தொலைக்காட்சி உரிமை, ஆடியோ விற்பனை மூலம் மட்டும் ரூ 220 கோடி வந்துள்ளதாகவும், திரையரங்குகளில் நேரடி வசூல் மூலம் மட்டுமே ரூ 500 கோடி வந்துள்ளதாகவும் பிடிஐ, The Financial Express போன்றவை செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன்பு ரூ 500 கோடிக்கு மேல் குவித்த இந்தியப் படங்கள் பாகுபலி மற்றும் பிகே. இந்தத் தொகையைக் குவிக்க அவற்றுக்கு கிட்டத்தட்ட 4 வாரங்கள் தேவைப்பட்டன. அதுவும் பிகே சீனாவில் வெளியாகி அந்தத் தொகையும் சேர்ந்த பிறகுதான் பெரிய வசூலைக் குவித்தது.

பாகுபலி கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக் கொண்டது.

கடந்த மாதம் வெளியான சுல்தான் படம் இன்னும் ரூ 500 கோடி க்ளப்புக்குள் நுழையவில்லை. ரூ 490 கோடியை அந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்து வரும் ரஜினியின் 2.ஓ தவிர வேறு எந்தத் தமிழ்ப் படமும் இப்படி ஒரு வசூலை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்பதே உண்மை.

இந்த நிலையில் நேற்றுடன் கபாலி ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. வார நாட்களிலும் 60 சதவீதத்துக்கு மேல் ரசிகர் கூட்டம் குவிவதால், கபாலியின் சாதனைகள் மேலும் தொடரும் என்று தெரிகிறது. குறிப்பாக வரும் வார இறுதி முக்கியமானது. அந்த மூன்று நாட்களிலும் கபாலி ஹவுஸ்ஃபுல்லாக ஓடினால், இந்திய அளவில் எந்தப் படமும் நினைத்துப் பார்க்காத வசூல் கபாலிக்குக் கிடைக்கும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள்.

-என்வழி
6 thoughts on “11 நாட்களில் ரூ 500 கோடியைக் குவித்த முதல் இந்தியப் படம் கபாலி!

 1. arul

  kabali thalaivarukku meendum oru raghavendrar.naan fdfs parthuvittu vanthavudan enna padam eduthitukkan endru sema kobamaga ranjith mel irunthen.aanal indru mathiyam padam parthen ore family crowd.first class muluthum second class paathiyum full.salethil athanai theatreum munbu potta padam enthiran atharkku piragu kabali.sathiyamaga solgiren naan yerkanave padam paarthathaal indru athanai audience mugathai parthen athanai sentiment athanai magilchi.ennai poruthavarai selathil padam super hit.

 2. குமரன்

  ///அடுத்து வரும் ரஜினியின் 2.ஓ தவிர வேறு எந்தத் தமிழ்ப் படமும் இப்படி ஒரு வசூலை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்பதே உண்மை.///

  அட போங்க…. எழுதி வச்சுக்கங்க…. அடுத்து “சொறி” ந்னு ஒரு படம் வரும். அது கபாலி வசூலை முறியடிச்சுடுச்சுன்னு காசு கொடுத்து எழுத வைப்பாங்க.

  அதுக்கடுத்து அதே நடிகரின் இன்னொரு படமும் வரும். அதுவும் கபாலி வசூலைத் தாண்டிடுச்சுன்னு எழுத வைப்பாங்க.

  காசு வாங்கி எழுத நிறைய ஆளுங்க இருக்காங்க.

  யுடியூபில் விமரிசனம் சொல்லும் ஆளுங்க திருட்டு விசிடில தான் பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். இனிமே அவனுங்களை அவனுங்க வாங்கிப் பார்த்த டிக்கட்டைத் தனது விமரிசனத்துக்கு முன்னால சென்சார் சர்ட்டிஃபிகேட் போலக் காட்டச் சொல்லி யாராவது உத்தரவு போடணும்.

 3. அனானி

  உளராதிங்க குமரன்.. டிக்கெட்ல பேரா இருக்கும்? ஃபிரெண்டு யார்கிட்டயாவது டிக்கெட்டை வாங்கிக் காட்டிட முடியாதா? நெட்ல வந்தப்பறம் அவனவன் பார்க்கதான் செய்வான். அப்லோடு பன்ற 4 பேரைப் பிடிக்கனுமே தவிர டவுன்லோட் பன்ற 40 ஆயிரம் பேரைப் பிடிக்க முடியாது. விமர்சகர்களின் வேலை படத்த எப்படியாவது சீக்கிரமா பார்த்து விமரிசனம் எழுதனும்கிறதுதான். இதில நெட்லயோ டிவிடியிலயோ பார்த்தா பார்க்கட்டுமே. எங்களைப் போன்ற சாதாரண ரசிகர்கள் அவர்கள் சொல்லும் விமரிசனைத்துக்காக வெயிட் பண்ணித்தான் படம் பார்ப்போம். பின்ன? ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் ஆகிறதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *