BREAKING NEWS
Search

நடிக்க வந்த இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்!- ராதிகா ஆப்தே

‘மிக இனிய மனிதர் ரஜினி!’

டிக்க வந்து இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிகாந்த்தான் என்று கபாலி நாயகி ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
thalai-ml-1a
ரஜினியுடன் ‘கபாலி` முதல்ஷெட்யூல் முடித்துவிட்டு மும்பை திரும்பியிருக்கும் ராதிகா ஆப்தேவின் குறும்பேட்டி இதோ:

என்னுடன் பணியாற்றும் இயக்குநர்களில் சிலருக்கும், சில நடிகர்களுக்கும் நான் திருமணமானவள் என்பது ஏனோ சங்கடமானதாக இருக்கிறது. அதை வெளியில் சொல்லாதே என்றும் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்பதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லவே இல்லை.

நம்பர் ஒன் நடிகையாவதும் எனக்கு லட்சியமில்லை. மனதுக்குப் பிடித்த படங்களில் நடித்தது போக நாடகங்களில் நடித்தால் போதும்.

4 வருடங்களாக நாடக நடிகையாகவே நான் வலம் வருகிறேன். அது எனக்கு திருப்தியாக இருக்கிறது.

நான் மிகவும் செக்ஸியாக நடிப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. கதை பிடித்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன். அயிட்டம் பாடல்களுக்கு ஆடுவதும் கூட அந்த வகையில்தான்.

‘கபாலி’யில் நடிப்பதற்கு முன் ரஜினிகாந்த் குறித்து எனக்கு எவ்வித கருத்தும் இல்லை. ஆனால் அவருடன் நடித்து முடித்த பிறகு யோசித்தால் கடந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த அருமையான மனிதர் (“He is the nicest human being I’ve worked with) என்று அவரையே சொல்வேன்.
rajini-feat
கடுமையான உழைப்பாளி. செப்டம்பர் 18 லிருந்து தொடர்ச்சியாக ‘கபாலி`யில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு சமயம் கூட அவர் சோர்ந்து இருந்ததை நான் பார்க்கவில்லை. அதே போல் அவரது ஷாட் முடிந்ததும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து புத்தகம் ஏதாவது படிக்க ஆரம்பித்துவிடுகிறார்.  மொத்தத்தில் ஆச்சரியமான மனிதர் ரஜினி,” என்று வியக்கிறார் ராதிகா ஆப்தே.

-என்வழி




3 thoughts on “நடிக்க வந்த இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்!- ராதிகா ஆப்தே

  1. kumaran

    mugathil deiviga amsam , seyalil vegam, vivegam, karunai ullam,matrum vetri kandu veeru kolvadho tholvi kandu thuvalvatho illai idhal ellam parkum bothu avar THALAIVAR KRISHNARIN AVADHARAM endru thondrugirathu!

  2. srikanth1974

    “He is the nicest human being I’ve worked with.

    thank you thank you thank you uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *