BREAKING NEWS
Search

கபாலி… தலைவா, இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!

கபாலி… தலைவா, இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!

CPB57_xU8AEBH6r.jpg large
லைவரின் கபாலி முதல் தோற்ற போஸ்டர்கள் இரண்டு வெளியானபோது நான் கமலின் தூங்கா வனம் பட ட்ரைலர் வெளியீட்டில் இருந்தேன்.

கபாலி டிசைன்கள் வெளியாகி, உலகெங்கும் ரசிகர்கள் பரவசத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்ததை மொபைலில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். செய்தியாளர்களில் பலரும் ரஜினியை ‘தலைவா’ என அழைத்து மகிழும் ரசிகர்கள்தான்.

ஒரு திருவிழா மனநிலையுடன் ஓடி வந்து என்னிடம் மொபைலில் கபாலியில் தலைவரின் கம்பீர டிசைன்களைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் வாட்ஸ் ஆப்பில் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

என் நண்பர் ஜூனியர் விகடன் குணா, தலைவர் ரஜினியை இன்று நேரில் போய்ப் பார்த்து, வாழ்த்துகள் தெரிவித்த பரவச நிமிடங்களைச் சொல்லச் சொல்ல, சொக்கிப் போய் கேட்டுக் கொண்டிருந்தேன்.

உடனடியாக என்வழியில் இவற்றை பதிவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும், இன்று ரசிகர்களுக்கு மாற்று ஊடகங்கள் ஏராளமாய் வந்துவிட்டதால்.. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

வீடு திரும்பிய பிறகு பார்த்தால், இணையப் பக்கங்கள் கபாலி டிசைன்களால் நிரம்பி வழிந்தன.

என் மகிழ்ச்சியெல்லாம்… ‘ரஜினிக்கு இணையத்தில் ரசிகர்கள் குறைவு…’ என்று பினாத்திக் கொண்டிருந்த சிலரின் மனம் பட்ட பாட்டை நினைத்துத்தான். பாவம், அவர்களின் அறியாமை அது.

இணையம் இந்தியாவில் அறிமுகமான காலகட்டத்தில், முதல் ரசிகர் இணையதளம் (Rajinifans.com) ஆரம்பமானதே ரஜினிக்கு மட்டும்தான். அடுத்து எனது ப்ளாக் மற்றும் என்வழி. அடுத்து பல இணையதளங்கள், ப்ளாக்குகள்.

பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப், டெலிகிராம் என சமூக வலைத் தளங்களின் வடிவம் மாற மாற, அவற்றிலெல்லாம் முதல் குழு ஆரம்பித்தது ரஜினி ரசிகர்களான நாம்தான். இந்த உண்மை தெரிந்தும் தெரியாத மாதிரி, ‘இவருக்குதான் இணையத்தில் அதிக ரசிகர்கள்’ என தகிடுதத்தம் செய்து வரும் சிலரை வெட்கித் தலை குனிய வைத்தது, உலகளாவிய கபாலி ட்ரெண்டிங்! அது ‘பெரும் மகிழ்ச்சி’!!

இதற்கு முன் வந்த எந்திரன், கோச்சடையான், லிங்காவெல்லாம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெளியாகின. ஆனால் கபாலி தமிழ் – தெலுங்கில் மட்டும்தான். வட இந்தியாவில் சிவாஜி மாதிரி நேரடி தமிழ்ப் படம்தான், ஆங்கில சப்-டைட்டில்களோடு!

இந்தப் படம் அறிவிக்கப்பட்ட போதும், அதற்கான நடிகர் நடிகை, கலைஞர்கள் தேர்வின்போதும் ரஞ்சித் வரம்பு மீறுகிறாரோ என்ற கோபம் எனக்கிருந்தது உண்மைதான். அதை மறைக்க முயலவில்லை.

ஆனால்,

இந்த கபாலியின் முதல் தோற்ற டிசைன்களைப் பார்த்த பிறகு, இந்தப் படம் பெறும் பிரமாண்ட வெற்றியை என்னால் யூகிக்க முடிகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன் எந்தப் படமும், எந்த நடிகரின் ரசிகர்களும் அனுபவிக்காத பெரும் வெற்றி, ரஜினி ரசிகர்களான நமக்குக் காத்திருக்கிறது.

கபாலி என்ற சாமான்ய பெயரை, விளிம்பு நிலை சமூகத்தின் அடையாளமாக இருந்த ஒரு பெயரை, சரித்திரப் பெயராக மாற்ற உதவிய தலைவர் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ்ச் சமூகம் காலம் முழுக்க கடன்பட்டிருக்கிறது.

இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.

வாழ்த்துகள் தலைவா!

-வினோ
20 thoughts on “கபாலி… தலைவா, இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!

 1. rajagopalan

  Thalaiv!ஆஆஆஆஅ
  வாழ்த்துகள்.
  நண்பர்களே இனிதான் நம்ம aatam arambam

 2. Rajesh

  ‘ரஜினிக்கு இணையத்தில் ரசிகர்கள் குறைவு…’ என்று பினாத்திக் கொண்டிருந்த சிலரின் மனம் பட்ட பாட்டை நினைத்துத்தான். பாவம், அவர்களின் அறியாமை அது.

  above lines 100% true.

 3. Sk

  Excellent article…total social media was shattered last night …goosebumps
  Wishing the best for Thalaivar and team…I hope ranjith understands the magnitude
  Of responsibility and ensures his team is sincere in this journey..
  Please convey whenever u happen to meet him. This is once in lifetime opportunity.
  And I hope he and his team understand that….am sure he would have got a sense of it
  When he just released 2 posters of Thalaivar and the worldwide response.
  Thoonga vanam trailer is good but 2 stills overshadowed everything else..
  Someone said there wAs some puli poster release..did anyone knew ??

 4. arulnithyaj

  நிச்சயமாக தலைவரின் “கபாலி” மிக பெரிய வெற்றி பெரும். இந்த பெயரை வைத்ததர்காவே மாபெரும் வெற்றி பெரும். நன்றி அண்ணா ..தலைவர் ஸ்டில் …supppppppppppppperrrrrrrrrrrrrr

 5. கிரி

  “கபாலியின் முதல் தோற்ற டிசைன்களைப் பார்த்த பிறகு, இந்தப் படம் பெறும் பிரமாண்ட வெற்றியை என்னால் யூகிக்க முடிகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன் எந்தப் படமும், எந்த நடிகரின் ரசிகர்களும் அனுபவிக்காத பெரும் வெற்றி, ரஜினி ரசிகர்களான நமக்குக் காத்திருக்கிறது.”

  இதே தான் நானும் நினைத்தேன் வினோ. அதோட தாணு ரஞ்சித் பேட்டி படித்த பிறகு என் நம்பிக்கை அதிகரித்து விட்டது.

  தலைவர் அவ்வளவு தான் என்று கனவு கண்டு கொண்டு இருந்தர்வர்களுக்கு நேற்றைய நாள் தலையில் இடியை இறக்கியது போல இருந்து இருக்கும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகமில்லை.

  கபாலி மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.

 6. srikanth1974

  உருட்டல் பேர்வழிகளைப்
  புரட்டியெடுக்க வரும்
  மிரட்டல் சிங்கம்! எங்கள்
  கபாலி தங்கம்!

 7. R O S H A N

  சூப்பர் ஜி….மற்றும் ஒரு அருமையான பதிவு……உண்மை தான் இப்ப எல்லாம் மாற்று ஊடகங்கள் மூலமா சுலபமா கெடைசுருது……பட் உங்க பதிவுகள் எப்போவுமே சூப்பர் படிக்கறதுக்கு……ஒரு ரஜினி ரசிகனின் பார்வையில் நாம சொல்ல முடியாம இருக்கறதா, அழகா சொல்லிடறீங்க……

  //இணையம் இந்தியாவில் அறிமுகமான காலகட்டத்தில், முதல் ரசிகர் இணையதளம் (Rajinifans.com) ஆரம்பமானதே ரஜினிக்கு மட்டும்தான். அடுத்து எனது ப்ளாக் மற்றும் என்வழி. அடுத்து பல இணையதளங்கள், ப்ளாக்குகள்.//

  fact fact fact fact……social media la பிள்ளையார் சுழி போட்டதே நாம தான், நம்மள போயி என்ன பேச்சு பேசுனாணுக, bloody…..எல்லாரும் இந்நேரம் கதி கலங்கி போயி கெடப்பானுங்க…….தலைவர் யானை இல்ல குதிரை, சும்மா டக்கனு எழுந்துடாறு \m/

 8. jegan N

  Thalaivar majic nu oru word iruku……..ore oru still ……thalaivara pathi linga issue pathi, haters urucaki vacha oru image …elam tavidu podi ayduchu….ini kabali oda success news kekrathuku aaavaloda wait panren….thalaivar as said earlier ill make us proud forever

 9. S.Karuppasamy

  one சூரியன் , one நிலா ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் கிங் maker of சினி industry

 10. S.Karuppasamy

  எத்தனை பேர் வந்தாலும் நம் thalavaikkur nichayamaha inaiyagamudiyathu

  by லிட்டில் ஜப்பான் SKS

 11. Revathi

  தலைவரின் வெற்றி இன்றே உறுதி செய்யப்பட்டு விட்டது.
  தமிழர்களின் காவலாளி எங்கள் கபாலி.

 12. குமரன்

  ///என் மகிழ்ச்சியெல்லாம்… ‘ரஜினிக்கு இணையத்தில் ரசிகர்கள் குறைவு…’ என்று பினாத்திக் கொண்டிருந்த சிலரின் மனம் பட்ட பாட்டை நினைத்துத்தான். பாவம், அவர்களின் அறியாமை அது///

  ரஜினி ரசிகர்கள் இல்லாத இடம் எது?

  இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன், எப்படித் தவறவிட்டேன்? வாட்ஸப் படங்களையே பார்த்த நாட்கள் அது!

 13. மிஸ்டர் பாவலன்

  ரஜினி ரசிகர்களும், கமல் ரசிகர்களும் இல்லாத இடம் இல்லை எனலாம்!

  தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள கமல், ரஜினி இருவரின்
  Get-Up, நடிப்பு இரண்டும் நிகர் அற்றவை..

  நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வலையைப் படிக்கையில், பேரறிஞர்
  குமரன் அவர்களும், நண்பர் “என் கருத்து” அவர்களும் தொடர்ந்து
  எழுதி வருவது சிறப்பாக உள்ளது. இவர்கள் இருவருக்கும் ஒரு ‘Debate ‘
  படித்தும் வெகு நாளாகி விட்டது.. கலைஞர், ஸ்டாலின் என ஏதாவது
  எழுதி விடலாம் என பாவலன் யோசிக்கிறார்..

  -==மிஸ்டர் பாவலன ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *