BREAKING NEWS
Search

எட்டுத்திக்கும் முரசு கொட்டும் கபாலி!

கபாலி டீசர்!

ChV86gtWkAAoBkg.jpg large

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பும் பரபரப்பும் கபாலிக்கு கிடைத்துள்ளது.

அதுவும் படத்தின் டீசர் எனப்படும் சிறு முன்னோட்டப் படத்தைக் காண ரசிகர்கள் காத்திருக்கும் விதமும், அதற்கான விசேஷ ஏற்பாடுகளும் வெகு ஜனங்களையும் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் கபாலி போஸ்டர்கள் மயம். தேர்தல் நேரத்தில் இந்த சாதனையை நிகழ்த்த கலைப்புலி தாணுவால்தான் முடியும்.

ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப் என எங்கும் கபாலி போஸ்டர்கள், டீசருக்கான வரவேற்பு வாசகங்கள்தான்…

பல வெளிநாட்டு ரசிகர்கள் அதிகாலையிலிருந்தே கபாலி டீசர் பற்றி ட்விட்டரில் #KabaliTeaserCelebrationBegins #Kabali #KabaliTeaser என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர்.

20160430204803 (1)

கபாலி டீசர் உலகளாவிய சாதனைப் படைக்க வேண்டும் என்ற வெறித்தனமான வேகத்தை அவர்களிடம் பார்க்க முடிகிறது.

இதை உணர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு திருவேற்காடு கோயிலில் கபாலி டீசருடன் போய் பிரார்த்தனை செய்தார். சரியாக காலை 11 மணிக்கு டீசர் வெளியாகிறது.

டீசரைக் காண அதிகாரப்பூர்வமான யுட்யூப் பக்கம்:
https://www.youtube.com/c/KalaippuliSThanuOfficial

-என்வழி ஸ்பெஷல்




7 thoughts on “எட்டுத்திக்கும் முரசு கொட்டும் கபாலி!

  1. srikanth1974

    டீசெர் அசத்தலோ அசத்தல் இன்னும்,ஒரு நிமிடம் நீடிக்கக் கூடாதா?.

  2. Mydeen

    I seen it
    wooow…. superb
    Flashback walk….. no chane…. a mass scene
    expecting a teaser review soon

  3. Rajagopalan

    karporram adichu sathiam panalam…
    padam emalaya vetri…
    magichi….
    Kabali daaaaaaaaaaaaaa….

  4. muthu

    ketta pasanga sir naanga intha rajni fans,,,,,,,thalaivaa rendu naalaa thoongala thalaivaa,teasarukkaaga,,,,marana mass teaser thalaivaa ,,,,,,,,thalaivar varum varai thaan naanga silent…vanthuttaa naanga violent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *