BREAKING NEWS
Search

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சூப்பர் ஸ்டாரின் கபாலி!

உங்கள் வீட்டு வரவேற்பறையில் கபாலி!

  kabali-stills-01
டந்த ஜூலை மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் வசூலைக் குவித்து வெற்றிப் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

ஆனால் தமிழில் அல்ல… மலையாள தொலைக்காட்சியில்.

ஆசியா நெட் தொலைக்காட்சியில் கபாலி படத்தை தீபாவளியன்றே ஒளிபரப்புவதாக அறிவிப்பு வெளியாகிவருகிறது. பிறகுதான் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகுமாம்.

மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும், கபாலியின் தமிழ் பதிப்பைத்தான் ரசிகர்கள் பார்க்கவிருக்கிறார்கள். காரணம் கபாலி கேரளாவில் நேரடித் தமிழ்ப் படமாகத்தான் வெளியானது.

இதுவரை கேரளாவில் வேறு எந்தப் படமும் குவிக்காத பெரும் வசூலைக் குவித்தது கபாலி.

மீண்டும் கபாலியை, அதுவும் தங்கள் வீட்டு வரவேற்பறையிலேயே காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது தமிழ், மலையாள ரசிகர்களுக்கு.

-என்வழி




3 thoughts on “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சூப்பர் ஸ்டாரின் கபாலி!

  1. srikanth1974

    நம்முடைய அரசு கேபிள் டீவியிலும்,ஏசியா நெட் சேனல் தெரிகிறது.எனவே தீபாவளி அன்று தமிழ் நாட்டு ரசிகர்களும்,
    தலைவரின் கபாலியை கண்டு களிக்கலாம்.மகிழ்ச்சி!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *