BREAKING NEWS
Search

மகிழ்ச்சி…. அனைத்தையும் அடித்து நொறுக்கி புதிய வரலாறு படைத்தது கபாலி!

புதிய வரலாறு படைத்தது கபாலி!

kabali - record

ந்திய சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர்.

இந்த டீசர் வெளியாகி முழுசாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் (50 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது கபாலி.

இந்திய சினிமாவில் இதுவரை எந்தப் படத்தின் டீசர் அல்லது ட்ரைலருக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை.

பெரிய பட்ஜெட் படங்களின் டீசர் அல்லது ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெறுவதே கடினம் என்ற இன்றைய சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீசர் வெளியான பத்து நிமிடத்தில் 1 லட்சம் பார்வைகளையும், ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளையும் பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் கபாலி 4 மில்லியன் பார்வைகள் மற்றும் 2 லட்சம் விருப்பங்களைப் பெற்று மிகப் பெரிய சாதனைப் படைத்திருப்பதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்தார்.

22 மணி நேரத்துக்குள் இந்த டீசர் 5 மில்லியன்களை சர்வசாதாரணமாகக் கடந்துவிட்டது. இதனை கலைப்புலி தாணு உறுதி செய்துள்ளார்.

இந்திய சினிமா என்றல்ல.. சர்வதேச அளவிலும் கூட இந்த எண்ணிக்கை அசாதாரணமானது. மிகப் பெரிய சர்வர், வசதிகளைக் கொண்ட யுட்யூப் இணைய தளமே ஸ்தம்பித்து, 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பார்வை எண்ணிக்கையை அப்டேட் செய்யும் அளவுக்கு கபாலி டீசர் கலக்கியுள்ளது.

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழிப் படமும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது கபாலி டீசர்!

தனி அலுவலகம் போட்டு, சம்பளத்துக்கு ஆயிரக்கணக்கில் ஆட்கள் வைத்து லைக்ஸ் போட்டிருந்தால் கூட கபாலி சாதனையில் கால் பங்கை நெருங்க முடியாது என்கிறார்கள் விமர்சகர்கள்!

-என்வழி ஸ்பெஷல்




2 thoughts on “மகிழ்ச்சி…. அனைத்தையும் அடித்து நொறுக்கி புதிய வரலாறு படைத்தது கபாலி!

  1. jegan N

    இந்த வருடம் மே 1 ஆம் தேதி அன்று ரஜினியின் ‘கபாலி’ டீஸர் வெளியானதால், வழக்கமாக மே 1 அன்று அமர்க்களப்படும் அஜித்தின் பிறந்தநாள் ஆரவாரம் கூட அமுங்கிப்போனது. மே 1 அன்று வருடா வருடம் டுவிட்டரில் அஜித்தின் பிறந்தநாள் டிரெண்டிங்கில் இருக்கும். இந்த வருடமோ,#KabaliTeaser#Magizhchi#kabalida#KabaliTamilMovie#Thalaivar#padhmavibhusan#neruppuda#மகிழ்ச்சிஎன முழுக்க முழுக்க கபாலி படத்தின் டீஸர் குறித்த ஹேஸ்டேக்குகளே டிரெண்டிங்கில் அதிகளவில் இடம்பிடித்திருந்தன.கபாலி டீஸர் வெளியீட்டில் அஜித் பிறந்தநாளே அமுங்கிப்போய்விட்டபோது, சிம்பு எல்லாம் எம்மாத்திரம்? அஜித் ரசிகர்களின் ஆதரவை தன் பக்கம் திருப்பவுதற்காக தன்னை அஜித் ரசிகராக காட்டிக்கொள்கிறவர் சிம்பு. அஜித்தின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது புதிய படத்தின் டைட்டிலை அறிவிக்கவிருப்பதாக ட்விட்டரில் அறிவித்த சிம்பு, படத்தின் பெயர் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் என்று ட்விட்டர் மூலம் அறிவிப்பு செய்தார். அய்யோ.. பாவம்… கபாலி பரபரப்பில் சிம்புவின் புதிய படம் அமுங்கி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *