BREAKING NEWS
Search

பாகுபலியை முறியடித்தது கபாலி… ரஜினி என்றுமே வசூல் சக்கரவர்த்தி!

பாகுபலியை முறியடித்தது கபாலி… ரஜினி என்றுமே வசூல் சக்கரவர்த்தி!

Kabali-one crore

பிரிமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் வசூலில் பாகுபலியை வீழ்த்தியுள்ளது ரஜினியின் கபாலி திரைப்படம்.

கபாலி படம் ‘பூமியை அதிர வைக்கும்’ ஓபனிங்குடன் நேற்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். ரஜினி ரசிகர் அல்லாதோரும் ரஜினியின் புது முயற்சி… ரஞ்சித்தின் வித்தியாசமான படம் என்று பாராட்டி வருகின்றனர்.

ஊடகத்தில் இந்தப் படத்துக்கு பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் சிலர் படம் குறித்து எதிர்மறைக் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இதையெல்லாம் சினிமா ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. படத்துக்கு குவியும் கூட்டமும் வசூலும் அதை நிரூபிக்கின்றன.

உலக அளவில் வசூலில் பெரும் சாதனைப் படைத்த பாகுபலியின் ஆரம்ப வசூலை முதல் நாளிலேயே கபாலி முறியடித்துள்ளது.

வட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வெளியான படம் பாகுபலி. அந்தப் படம் 300 திரைகளில் திரையிடப்பட்டது. ஆனால் கபாலி 430 அரங்குகளில் வெளியாகி அதிர வைத்தது. அதேபோல ரிலீசுக்கு முந்தைய பிரிமியர் காட்சிகளில் 1.4 மில்லியன் டாலர் வசூலித்திருந்தது பாகுபலி. அதையும் கபாலி உடைத்துவிட்டது.  இனி வேறு எந்தப் படமும் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு 2.3 மில்லியன்கள் வசூலித்துள்ளது.

முதல் நாளில் உலக அளவில் அதிகபட்சமாக ரூ 55 கோடியை பாகுபலி குவித்திருந்தது. கிட்டத்தட்ட இதைவிட இரண்டு மடங்கு வசூலை அதாவது ரூ 104 கோடிகளை வசூலித்து ரஜினிதான் என்றும் இந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்துள்ளது கபாலி!

-என்வழி




3 thoughts on “பாகுபலியை முறியடித்தது கபாலி… ரஜினி என்றுமே வசூல் சக்கரவர்த்தி!

  1. Ravi

    கபாலி சூப்பர் படம். நன்றாக உள்ளது. குடும்பத்தோடு பார்க்கும்படி உள்ளது.

  2. yaseenjahafar

    இவனை யார் என்று தெரிகிறதா இவன் செய்யும் தமிழ் டக்கிஸ் சினிமா விமர்சனம் செய்யுபவன் இவனுக்கு வேண்டியவர்கு மட்டும் விமர்சனம்
    செய்யுபவன் எப்போ பார்த்தாலும் ரஜினி படத்தை குறீப்பாக கிண்டால்
    செய்து கொண்டு இருப்பவன் அவன் அவன் கோடி கணக்கில் பணம் போட்டு
    படம் எடுக்கிறான் இவன் பாட்டுக்கும் வாயில் வந்ததை போட்டு விமர்சனம் செய்து கொண்டு இருப்பவன் இவன் தயவு இவன் விமர்சனம் செய்யமால் பொறக்கணிக்கவும் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் மனது ரொம்பவும் கஷ்டப்பட்டு இவன் விமர்சனத்தை பார்த்து இது மாதிரீ இப்படி இல்லாதது விமர்சனத்தை சொல்கிறீர்கள் என வேதனை உடன் இப்படி இனிமேல் விமர்சனத்தை பண்ணாத எவ ளவு தைரியம் உனக்கு அதுவும் சென்னைல இருந்து கொண்டு என்று இன்னும் இது மாதிரீ செய்தால் ரசிகர் இடம் அடி வாங்கீ
    அழிந்து விடுவாய் என்று கபாலி திரை விமர்சனம் கமல் படம் பாபநாசம் படத்தை பத்தீ பேசுகிரான் இவனது இமேஜ் நான் அனுப்புகிரேன்

    வினோத் இதற்கு ஒரு முற்று புள்ளி வையுஙகள்

    yaseenjahafar
    July 25, 2016 at 1:11 pm
    Your comment is awaiting moderation.

    இந்த நாய் ஒரு பொறாமை பிடித்த நாய் தமிழ் டாக்கீஸ் blue கலர் shirts போட்டு கொண்டு இருப்பான் இவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *