BREAKING NEWS
Search

ஒரே நாளில் ரூ 104 கோடி… வசூலில் தனி வரலாறு படைத்தது ரஜினியின் கபாலி!!

வசூலில் தனி வரலாறு படைத்தது ரஜினியின் கபாலி!!

Kabali-Movie-Stills-2

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ 104 கோடிகளைக் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இனி இப்படியொரு சாதனையை வேறு எந்த இந்தியப் படமாவது நிகழ்த்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் நேற்று உலகெங்கும் வெளியானது. இதுவரை உலக சினிமா பார்த்திராத ஆர்ப்பாட்டமான ஓபனிங்குடன் வெளியான கபாலி, பிரிமியர் காட்சிகள் மூலம் மட்டுமே ரூ 25 கோடி வரை குவித்துவிட்டது.

இப்போது முதல் நாள் காட்சிகள் மூலம் வசூலான தொகை விவரங்கள் கிடைத்துள்ளன.

இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ 24.8 கோடியைக் குவித்துள்ளது. இதுவும்  இதுவரை எந்தப் படமும் செய்யாத சாதனைதான்.
box
இந்தியாவில் மட்டும் ரூ 58 கோடிகள் வசூலாகியுள்ளது. உலகளவில் நடந்த பிரிமியர் ஷோக்கள் மற்றும் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் சேர்த்து ரூ 104 கோடிகளை இந்தப் படம் அள்ளியுள்ளது.

இந்திய திரைப்பட வரலாற்றில் இப்படியொரு வசூலை இதுவரை எந்தப் படம் குவித்ததில்லை. முதல் வார முடிவில் கபாலி வசூல் 200 கோடிகளைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கபாலி படம் குறித்த விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தியேட்டர்களில் கட்டி ஏறுகிறது மக்கள் கூட்டம். எனவே அடுத்த வாரம் வரை படத்தின் வசூல் அமோகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

-என்வழி




6 thoughts on “ஒரே நாளில் ரூ 104 கோடி… வசூலில் தனி வரலாறு படைத்தது ரஜினியின் கபாலி!!

  1. தளபதிசுபாஸ்

    Vijay 60 நா வந்துட்டேன்னு சொல்லு

  2. Fahurudeen Ali Ahamed

    Dear Shankar,

    The movie is really good. Ranjith has give a class movie with thalaivar. I’m not finding any faults with Ranjith. The problem here is the Rajini hating social media group only.

    I just found in You tube that the movie has got more than 95% liking in kerala Fans feedback, and mostly postive feedback from telegu fans. Only Rajini haters in TN spreading negativity for the film to pull it down.

    https://www.youtube.com/watch?v=RxKZSVK-NEQ — Kerala Response
    https://www.youtube.com/watch?v=-YsInG9dnDg — Andhra Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *