BREAKING NEWS
Search

மகா சிம்பிளாக நடந்த கபாலி இசை வெளியீடு… சௌந்தர்யா, தாணு, ரஞ்சித் பங்கேற்பு

கபாலி இசை வெளியீட்டு விழா

20160611164118_IMG_7078

லகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தலைவர் ரஜினியின் கபாலி படத்தின் இசை வெளியீடு, மிக எளிமையாக நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சி ஒரு அடையாள நிகழ்ச்சிதான் என்றும், நாளைதான் மக்களுக்கு கபாலி படப் பாடல்கள் கேட்கக் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

Kabali audio 4

சத்யம் சினிமா வளாகத்தில் இன்று நடந்த எளிய இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் மகள் சௌந்தர்யா கலந்து கொண்டு முதல் சிடியைப் பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட படக்குழுவினர் மட்டும் கலந்து கொண்டனர்.

kabali-audio-2

உண்மையில் படத்தின் இசை நாளைதான் வெளியாகிறது. நல்ல நேரம் பார்த்து சம்பிரதாயத்துக்கு ஒரே ஒரு சிடியை மட்டும் இன்று வெளியிட்டுவிட்டார் கலைப்புலி தாணு.

பிரமாண்ட விழா ஏதுமில்லாமல் சாதாரணமாக இசை வெளியீட்டு விழாவை நடத்துங்கள், வெற்றி விழாவில் ரசிகர்களைச் சந்திக்கலாம் என ரஜினி கூறிவிட்டதாலேயே கபாலி விழா எளிமையாக முடிந்துவிட்டது.

 

-என்வழி




3 thoughts on “மகா சிம்பிளாக நடந்த கபாலி இசை வெளியீடு… சௌந்தர்யா, தாணு, ரஞ்சித் பங்கேற்பு

  1. srikanth1974

    இசை கானம் கேட்க ஆவலாய்
    இங்கே காத்திருக்கும் செவிகளோடு- நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *