BREAKING NEWS
Search

கபாலி இசை, ட்ரைலர்… இணையத்திலேயே வெளியிட முடிவு?

ஜூன் 12-ல் கபாலி இசை… ஆனால்?

kabali-audio-launch
சிகர்கள் மட்டுமல்ல, திரையுலகினரும் கூட ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி பட இசை வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

வரும் ஜூன் 12ம் தேதி கபாலி இசை வெளியீடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்காக பிரமாண்ட விழா எதுவும் நடக்காது என்று தெரிகிறது.

இந்த நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது ஒய் எம் சி ஏ வளாகம், குறைந்தபட்சம் சத்யம் திரையரங்கில் நடக்கும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல், அமைதியாக ஆன்லைனிலேயே கபாலி பாடல்களையும் புதிய ட்ரைலகரையும் வெளியிட்டு விடலாம் என்பதே அது.

கபாலியின் டீசர் வெளியீடும் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் அமைதியாக யுட்யூபில் வெளியாகி உலக சாதனைப் படைத்தது. அதே போல இசை வெளியீட்டையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

கபாலி டீசர் வெளியீடு மாதிரியே காலை 10 மணிக்கு இசை வெளியீட்டையும் நடத்திவிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் ட்விட்டரில் கபாலி இசை வெளியீடு குறித்த #KabaliAudioFromJune12 ஹேஷ்டேக் இப்போதே ட்ரெண்டாகி வருகிறது.

-என்வழி




3 thoughts on “கபாலி இசை, ட்ரைலர்… இணையத்திலேயே வெளியிட முடிவு?

  1. jegan N

    Thalaivar film audio launch ellame grand ah irukum…..thalaivar speech Ku response semaya irukum…..expecting this audio function in a grand manner as like that of previous films

  2. Rajagopalan

    why? we are expecting a small function atleast if not a big one…

    Not good sign…(

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *