BREAKING NEWS
Search

கபாலி…. ராஜாதிராஜாவும் ஆறு தளபதிகளும்!

இது கபாலியின் படை!

12814478_1172651652760026_5536387901966143967_n
ரம்பாகிறது கபாலி ஃபீவர். ரஜினி படம் என்றாலே எதிர்பார்ப்பு கூடும்.

கோச்சடையான், லிங்காவுக்குப் பிறகு, கே. எஸ். ரவிகுமாரா ஷங்கரா என்றெல்லாம் பேச்சு. படாரென்று அடுத்த ரஜினி பட இயக்குநர் பா.ரஞ்சித் என்று அறிவிப்பு வெளியாகிறது.  இசை சந்தோஷ் நாராயணன். அவ்வளவுதான். இளைஞர் கூட்டத்துக்கு குஷி தொற்றிக் கொள்கிறது. இரண்டே படத்தில் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு. ஸ்டில்ஸ் வெளியாகி, டான் கெட்டப்பில் வயதான வெள்ளைத் தாடியுடன் ரஜினியைப் பார்த்ததும் ‘டைரக்டரே.. சபாஷ்’ என்கிறார்கள் ரசிகர்கள்.

இப்போது கபாலி குழுவில் இருக்கும் ஆறு பேர்கள்…

‘அட்டகத்தி’ தினேஷ்

அட்டகத்தி Fவருக்கு முதல் படமல்ல. 2006 ஆம் ஆண்டு வெளியாகி, ஜீவா நயன்தாரா நடித்த ‘ஈ’ படத்தில் சின்னவேடத்தில் நடித்திருக்கிறார். அதன்பின் எவனோ ஒருவன், ஆடுகளம், மௌனகுரு ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் 2012 இல் வெளியான அட்டகத்தி அவருக்கான வாழ்நாள் அடையாளமாகிவிட்டது.  இப்போது கைவசம் ஒருநாள்கூத்து, உள்குத்து ஆகிய படங்கள் இருந்தாலும் ரஜினியின் கபாலி படத்தில் முக்கிய வேடமேற்றிருப்பது அவரது வாழ்நாள் சாதனை.

‘மெட்ராஸ்’ கலையரசன்

நந்தலாலா, அட்டகத்தி, முகமூடி, மதயானைக் கூட்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், மெட்ராஸ் படத்தின் மூலம் இவர்மேல் பெரிய கவனம் விழுந்தது. அதன்பிறகு உறுமீனில் வில்லனாய் வெரைட்டி காட்டியிருந்தார். மெட்ராஸ் படத்தில் இவருக்குக் கிடைத்த பெயர் மட்டுமின்றி அநத்ப்படத்தில் ரஞ்சித்தோடு ஏற்பட்ட நட்பும் கபாலி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இவருக்குக் கொடுத்திருக்கிறது. கபாலியில் ரஜினிக்கு மிகவும் நம்பிக்கையான நண்பராக இவர் நடித்திருப்பதால் ரஜினியின் ரசிகர்களுக்கும் இவர் பிடித்த நடிகராக மாறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

தன்ஷிகா

கதாநாயகியின் தோழி, ஐந்து கதாநாயகிகளில் ஒருவர் என்று தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய தன்ஷிகாவுக்கு இதுவரை தனிநாயகியாக குறிப்பிடத்தக்க இடம் கிடைக்கவில்லை. கபாலி படத்தில் அவருடைய வேடமும் தோற்றமும் அவருக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருமென்று நம்புகிறார். அதனால்தான் முடியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் உடனே அதற்கு ஒப்புக்கொண்டு பாப் கட்டிங்கோடு வந்து நின்ற இவரது அர்ப்பணிப்புக்கு, நல்ல எதிர்காலம் உண்டு.

ராதிகா ஆப்தே

கண்ணழகி. மாராத்தியின் மேடைநாடகக் கலைஞராக நன்கு அறியப்பட்டிருக்கும் இவர், இந்தி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ஏற்கெனவே தோனி, ஆல்இன்ஆல்அழகுராஜா, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அந்தப்படங்கள் அவருக்கு எவ்வித மரியாதையையும் கொடுக்கவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய அறிந்ததெல்லாம் வேறு வகையில்தான். கடந்தஆண்டு அவர் நடித்து வெளியான அகல்யா குறும்படம், இதுவரை நடித்த அவர் படங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் அவருக்கு மிகப்பெரிய நற்பெயரைக் கொடுத்தது. அதனாலேயே இந்தப்படத்தில் ரஜினிக்கு இணையாக அவர் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

ஜான் விஜய்

வெர்சடைல் கலைஞன். நகைச்சுவையாகட்டும், குணச்சித்திர நடிபாகட்டும், வில்லன் வேடமாகட்டும் சொல்லி அடிக்கும் கில்லி. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உடல்மொழி காட்டும் கலைஞன். எவ்வளவு சின்ன வேடத்திலும் தன்னுடைய நடிப்பால் அடையாளம் பெறுவதில் தேர்ந்த இவர், கபாலி படத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தியிருப்பார் என்று சொல்லவே வேண்டியதில்லை.

கிஷோர்

சமீபகாலத்தில் தவிர்க்கவே முடியாத நடிகர். கன்னட நடிகரான கிஷோரை தன்னுடைய பொல்லாதவன் படத்துக்காக தமிழகத்துக்கு அழைத்து வந்தார் வெற்றிமாறன். அதன்பின் தமிழிலும் அவருக்கு நிறைய படங்கள். கிஷோருடைய தோற்றமும், வேடத்துக்குப் பொருத்தமான மிக இயல்பான நடிப்பும்தான் அவருக்கான பலம். அஜித் (ஆரம்பம்) கமல் (தூங்காவனம்) ஆகியோருடன் கைகோர்த்த இவர் ரஜினியுடன் கபாலியிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கிறார்.  .

இந்த தளபதிகளுடன், ரஜினி என்ற ராஜாதிராஜாவும் சேர்ந்து கலக்கப்போகும் கபாலிக்காக ரசிகர்கள் வெய்ட்டிங்!
14 thoughts on “கபாலி…. ராஜாதிராஜாவும் ஆறு தளபதிகளும்!

 1. jegan N

  எதார்த்தம் பேசவேண்டிய நேரம்!

  முகநூலிலும் சரி, பேச்சுவழக்கிலும் சரி நாம் ஒரு தரமற்ற செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றோம் என்பதை விளக்கவ
  நாம் என்று குறிப்பிடுவது பொதுவாக நம்மில் எல்லாவரையும் குறிக்கப்போவதில்லை! நம்மில் அறியாமையின் உச்சத்தில் இருக்கக்கூடிய சில தலைவரின் ரசிகளையேதான் குறிப்பிடுகிறேன்!
  முதலில் அவர்கள் தலைவரின் ரசிகர்கள்தானா என்பதை ஆராய 11 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்றுகூட எனக்கு யோசனை தோன்றுகிறது!

  சரி என்னதான் அந்த அறியாமை???

  யார்தான் அந்த நம்மில் சிலர்???
  என்ற உங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் கேளுங்கள்!

  வேறொன்றுமில்லை! இந்த சிறிய விசயத்துக்காகவா என்று நம்மை ஆச்சரியப்படவைக்க கூடிய ஒரு பெரிய விசயம்தான் நான் விளக்கப்போகும் இந்த விசயம்!

  பொதுவாகவே நீங்கள் முகநூலில்[ஃபேஸ்புக்] பரவலாகப் பார்த்திருப்பீர்கள்!

  விஜய்[Like] – ரஜினி[Comment]

  அஜித்[Like] – ரஜினி[Comment]
  என்று போட்டு போட்டோக்களை அப்லோடு செய்வது,

  பிறகு,
  தலைவரோடு மற்ற நடிகர்களை ஒப்பிட்டு

  *யாருக்கு இதில் ரசிகர்கள் அதிகம்

  *யார் இதில் ஸ்டைலாக இருப்பது

  *இவர்களில் யாருக்கு வேட்டி கட்டினால் அழகாக இருக்கும்

  *யாருக்கு சிகரெட் நல்லா பிடிக்கத்தெரியும்

  இதுபோன்று இன்னும் பல மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பதிவை பார்த்திருப்பீர்கள்!
  இவர்கள்தான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அறியாமையின் உச்சத்தில் இருக்கக்கூடியவர்கள்!

  இதில் வருத்தப்படவேண்டிய விசயம் என்னவென்றால் இதை செய்பவர்கள் தலைவர் ரசிகர்களாக இருக்கிறார்களே என்பதுதான்!

  இதெல்லாம் என்ன?

  இதெல்லாம் எதற்காக?

  இதனால் என்ன பயன்?

  தலைவர் 1975-ம் ஆண்டு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைக்கும்போது நடிகர் அஜித்துக்கு வயது 4, தம்பி விஜய்க்கு வயது 1, சூர்யா எனும் குழந்தை அப்பொழுது பிறக்கவே இல்லை!
  இப்படி இருக்க இவர்கள் நம் தலைவருக்கு ஈடாவார்களா?

  வான்மதி படத்தில் அஜித் “அகிம்சையை எங்களுக்கு கத்துக்கொடுத்தவர் எங்க தலைவர் ரஜினி” என்று குறிப்பிட்டு தன்னை ஒரு ரஜினி ரசிகனாக காட்டிக்கொண்டு திரைத்துறையில் செல்வாக்குகள் பெற்று முன்னேறினார்!

  விஜய் பற்றி சொல்லவே வேண்டாம்! குருவி படம்வரை விஜய்யை பிடிக்காத ரஜினி ரசிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! அவ்வளவு புடிக்கும் விஜய்யை! ஆரம்பகட்டத்தில் பிரியமுடன் படத்தில் “இவன் காதல் போரில் கஜினிடா, இவன் பார்த்தா சின்ன ரஜினிடா” என்று ஒயிட்டுலகான் கோழி பாடலில் குறிப்பிட்டது முதல் லேட்டஸ்டாக வந்த குருவியில் “என் வாத்தியார் சூப்பர் ஸ்டார்” என்று பல்லானது பாடலில் குறிப்பிட்டது வரை நாம் விஜய்யை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்!

  சூர்யா அயன் படத்தில் “தலைவருக்கு என்ன சாதா குத்து குத்துற, போடுறா கொத்துப் புரோட்டா” என்று குறிப்பிடுவார்! இன்னும் நான்கு படம் ஹிட்டாகினால் இவர் என்ன செய்ய காத்திருக்கிறாரோ அது ஆண்டவனுக்குதான் தெரியும்!

  இப்படி இருக்க இந்த சுள்ளான் நடிகர்களை நம் தலைவரோடு ஒப்பிடலாமா???

  தலைவரோடு இன்னொரு நடிகரை ஒப்பிட்டு இதுல யார் மாஸ் என்று கேட்கிறீர்களே? இதுல யார் மாஸ் என்று உங்களுக்கு தெரியாதா?

  தெரியுமல்லவா?

  பிறகு ஏனய்யா இந்த வேலையத்த வேலை?
  இல்ல அப்பப்ப மண்டையில ஏதாவது கோளாரு வருமா உங்களுக்கு?
  இல்ல இன்னும் ஒரு பக்குவத்துக்கு வராத சின்ன பாப்பாக்களா நீங்கள்?

  நம்ம ஆளுகளே இப்படி பன்னுறிங்களேப்பா? என்று வடிவேலு சொன்ன காமெடி வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது!

  ஒருவேளை நம் தலைவன் ஃபேஸ்புக்கில் எவ்வளவு பலத்தில் இருக்கிறார் என்பதை அறிவதற்கு செய்த சோதனையா இது?

  அப்ப நான் தெரியாமதான் கேக்குறேன்! நம்ம தலைவரோட செல்வாக்க உறுதி பன்னுறதுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் யாரு?

  ஃபேஸ்புக்குல எடுக்கப்படுற கணக்கெடுப்புகள் அனைத்தும் உண்மையானவையா?

  சத்தியமாக இல்லை!

  ஒருவேளை ஃபேஸ்புக்கில் நடத்தப்படும் கணக்கெடுப்புகள் உண்மையானவை என்றால், தேர்தல் வாக்கெடுப்புகளையும் ஃபேஸ்புக் வாயிலாகவே எடுக்கலாம் அல்லவா!

  அது சாத்தியமா?

  சத்தியமாக சாத்தியமில்லை! ஏனென்றால் 70 சவீதம் மக்களுக்கு ஃபேஸ்புக் என்றால் என்னவென்றே தெரியாது! அப்படி இருக்கையில் இந்த ஃபேஸ்புக் கணக்கெடுப்பு சரியானது இல்லை!
  அதே ஈனவெங்காயத்ததான் நாங்களும் சொல்றோம், ஃபேஸ்புக் என்றால் என்னவென்றே தெரியாமல் 50 சதவிகித ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள்!

  ஆனால் விஜய், அஜித் ரசிகர்களில் ஃபேஸ்புக் பற்றி தெரியாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!

  இப்பொழுது தெரிகிறதா?

  தலைவருக்கு வோட் செய்யுங்கள் மிகவும் பின்தங்கியுள்ளார் என்று சில ரசிகர்கள் அவ்வப்போது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற இணையதளங்களில் கதறும் கதறலுக்கு அர்த்தம் இப்பொழுது புரிகிறதா??
  ஆனாலும் நம் தலைவர் வெறியர்கள் அப்பொழுதும் விடுவதில்லை! எதையாவது செய்து எப்படியாவது முன்னேறி நம் தலைவரை முன்நிறுத்தி விடுகிறார்கள்! அதனால்தான் நாம் வெறியர்கள்!

  ஆக இப்படியெல்லாம் ஃபேஸ்புக்கில் மாஸ் காட்டி, டுவிட்டரில் ட்ரென்டு செய்து நம் தலைவரின் புகழை நிரூபிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை!

  நம் தலைவரின் புகழ் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தின் அட்மின்களுக்கே தெரியும்! அப்படி இருக்கும்பொழுது அப்பன் காசில் ரீசார்ஜ் செய்து பொழுதுபோக்கிற்காக அக்கவுன்ட் ஓபன் செய்து! வழிப்போக்கில் விஜய், அஜித் ரசிகர்களானவர்களுக்கு, மாதக்கணக்கில் வரிசையில் நின்று அடி உதை வாங்கி டிக்கெட் எடுத்து படம் பார்த்த வெறியர்கள் நாமெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை!

  இந்த விளக்கங்கள் அனைத்தும் குறிப்பாக இந்த லைக் கம்மென்ட் விளையாட்டு விளையாடும் அந்த அறியாமைவாதிகளுக்குதான் பொருந்தும்!

  ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிச்சைக்காரர்கள் அடித்துப் புரண்டுகொண்டிருந்தால் அதை பார்ப்பவர்கள் யாரும் ஒரு பொருட்டாக எடுக்கப்போவதில்லை!
  மாறாக ஒரு பிச்சைக்காரனுடன் அந்த நாட்டு மன்னன் கட்டிப்புரண்டுகொண்டு இருந்தால் அதை ஊரே நின்று வேடிக்கை பார்த்து கைகொட்டி சிரிக்கும்!
  இது அந்த மன்னருக்கு தெரியும் அதனால் அந்த மன்னர் ஒதுங்கி சென்றுவிடுவார், இதனால் மன்னர் கோழையென்று அர்த்தமில்லை!
  ஆனால் அந்த பிச்சைக்கார நாயோ அந்த மன்னனுடன் சண்டைபோட ஆவலுடன் அலைவான், காரணம் மன்னனின் புகழைக்கெடுத்து அவன் பிரபலமடையவேண்டும் என்பதற்காக! இதனால் அந்த பிச்சைக்கார நாய் வீரனென்று ஆகிவிடாது!

  இதில் நான் நாட்டு மன்னன் என்று குறிப்பிட்டது தலைவர் “ரஜினி” அவர்களை!
  பிச்சைக்காரக் கபோதி என்று குறிப்பிட்டது தலைவரின் இடத்தை பிடிக்க நினைக்கும் நடிகர்களை!

  நம் தலைவர் வெறியர்கள் இனி புரிந்து நடந்துகொள்ளவும்!

  நன்றி!!!

  விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகிறது!

 2. Raghul

  Jai gun comments….
  No blockbuster movie of these heroes could even match half of what Lingaa collected..
  Thalaivar live in our social conscience and let’s not worry abt the social comedies (media)..

 3. srikanth1974

  என் அன்பு சகோதரர் திரு.ஜெகன் அவர்களுக்கு நன்றி.
  தங்களின் கோபமும்,ஆதங்கமும்,நியாயமானதே தயவு
  செய்து இந்த பதிவை முக நூலிலும்,போடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

  அன்புடன்
  ஸ்ரீகாந்த்.ப

 4. Rajagopalan

  Boss electionala Kabali release thalli poguma?
  June month school college ellam open ayidum…

 5. Badru

  விஜய் சூர்யா, அஜீத்த முந்துவதோ இல்ல அஜித் சூர்யா,விஜய முந்துவதோ,
  இல்ல சூர்யா விஜய், அஜீத்த முந்துவதோ பெரிய விஷயம் இல்ல ஏன்னா இவங்க எல்லாருமே பெரிய வித்தியாசம் கிடையாது…equally talented (but some unique difference is there)
  ஆனா நீங்க உங்க போட்டியாளரா கமல யோசிச்சி பாருங்க…Highly talented…
  Best actor in Indian Cinema..
  Best Dancer, Singer & Everything…
  கமல ரஜினி முந்தினது தான் உண்மையான வெற்றி அதனால தான் ரஜினி இன்றும் சூப்பர் ஸ்டார்

 6. SEBASTIAN S

  WELL SAID MR. JAGAN. GREAT POST. I 100% AGREE WITH YOU. HE HIS NOT ONLY SUPER STAR IN TAMILNADU, HE IS SUPERSTAR OF THE WORLD. OTHER THAN TAMIL NADU AND FEW SOUTHERN STATES, NO BODY EVEN NO WHO IS VIJAY, AJITH ETC., ETC.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *