BREAKING NEWS
Search

அடடடா.. இந்த அறிவுஜீவி கொசுத் தொல்ல தாங்கலப்பா!

அடடடா.. இந்த அறிவுஜீவி கொசுத் தொல்ல தாங்கலப்பா!
064d3a55-5cda-487d-b327-d998a43953e0
தான் நடித்து, தனக்காகப் பார்க்கப்பட்டு, மாபெரும் வெற்றியடைந்த சந்திரமுகியை ‘இது என் படம் அல்ல.. இயக்குநர் வாசுவின் படம்’ என்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிவாஜியும் எந்திரனும் யாருக்காக ஓடின..? ஆனால் அந்த இரு படங்களையுமே.. ‘இது ஷங்கர் சாருக்குக் கிடைத்த வெற்றி’ என்றார்.

வெற்றி தோல்விகளைத் தாண்டிய ஒரு மனநிலைக்கு எப்போதோ வந்துவிட்டவர் ரஜினி.

இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் சில புத்திசாலிகள் இருக்கிறார்கள். அதாவது, தங்களைப் பற்றி தாங்களே ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு, பிதற்றிக் கொண்டிருப்பவர்கள். நல்லது கெட்டது தெரியாத ‘அறிவுஜீவிகள்’!

இவர்களுக்கு ரஜினி என்ன செய்தாலும் குற்றம்தான்.  ரஜினிக்கு தன்னிச்சையாக வந்து குவியும் புகழைக் கண்டு புழுங்கும் புழுக்கள்.

எந்திரன் வெளியான சமயத்தில் ஒரு புத்திசாலி இப்படிப் பிதற்றியது.. ‘முத்து படம் ஜப்பானில் ஓடியதே மீனாவுக்காகத்தான்.’  எப்படி!

ரஜினி படங்கள் ரஜினிக்காக மட்டுமே பார்க்கப்படுபவை. கதை உள்ளிட்ட மற்ற அம்சங்கள் எப்படியிருந்தாலும், அவற்றுக்கு அடுத்தடுத்த இடங்கள்தான். தலைப்பு என்னவாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும். பார்வையாளர்களுக்கு அது ரஜினி படம். ரஜினிக்காக மட்டுமே பார்க்கப்படும் படம்.

இன்று கபாலி டீசர் இப்படி வெறித்தனமாகப் பார்க்கப்பட்டு உலக சாதனைப் படைத்ததற்கு காரணம், அது ரஜினியின் படம் என்பதற்காகத்தான். இந்த அடிப்படை உண்மை ரஜினியை வைத்து படம் எடுக்கும் அத்தனை இயக்குநர்களுக்கும் தெரியும், கபாலியின் இயக்குநர் ரஞ்சித் உள்பட.

கபாலிக்கு சில அறிவுஜீவி அரைவேக்காடுகள் சாதிச் சாயம் பூச முயல்கின்றனர்… இன்னும் சில காமெடி பீஸ்கள் இந்தப் பெருமையெல்லாம் ரஞ்சித்துக்கே என்று கூப்பாடு போட்டு வருகின்றன.

இவர்களுக்கு ஒன்று தெரிய வாய்ப்பில்லை… அல்லது புரிந்து கொள்ளத் திராணியில்லை.

இந்த கபாலி வெற்றியில், வசூலில், பாராட்டுகளில் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது.

அந்த வெற்றி விழாவில் தலைவர் ரஜினி என்ன சொல்வார் தெரியுமா?

“இது முழுக்க முழுக்க இயக்குநர் ரஞ்சித்தின் படம். இந்த வெற்றி அவருக்குத்தான்!” என்று ரொம்ப சர்வசாதாரணமாகக் கடந்து போய்விடுவார்.

எனவே சிண்டு முடிவதை நிறுத்திவிட்டு, ஏதாவது டிவி விவாதங்களில் டீ வடை சாப்பிட்டுவிட்டு, நாலு காசை தேத்தற வழியைப் பாருங்க So called intellectuals!

-என்வழி16 thoughts on “அடடடா.. இந்த அறிவுஜீவி கொசுத் தொல்ல தாங்கலப்பா!

 1. srikanth1974

  வயத்துவலி மூலம் வேறு வெயிலின் தாக்கம் அலறாம பாவம் என்ன செய்வான்?

 2. Rajagopalan

  Crossed “I” Lifetime achievement of 11.3 Million…n still counting…
  Kabali Da….

 3. கிரி

  செம செம 🙂

  இவங்க இப்படித்தான் வினோ.. எதையாவது உளறிட்டே இருக்க வேண்டியது.

  ஆனால், இவர்கள் எழுதுவதை சத்தியமா ஒருமுறை கூட முழுசா படித்தது இல்லை.. படித்தது இல்லை என்றால்.. படிக்க முடியவில்லை.

  என்னென்னமோ இலக்கியம் அது இதுன்னு போடுறாங்க.. என்ன கருமமோ.

  நாலு நாள் தொடர்ந்து இவர்கள் எழுதுவதை எல்லாம் படித்தால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் தான் இருக்கணும்.

  ______________

  இதுங்களே அங்க இருக்க வேண்டிய கேசுங்கதான் கிரி.

  -வினோ

 4. ANAND.KG

  Dear Vino,

  Please do not waste your time and energy on these Kosu !
  And it is not necessary sir..
  They will die on their own..

  Keep it up please

 5. ashokkarthik

  one and only super star in the cine world rajini by rajini pitthan rajini bakthan rajini adimai rajini thambi rajini thalabathy rajini uyir

 6. அப்பாஸ் தாம்பரம்

  தலைவர் புகழின் உச்சத்தையெல்லாம் கடந்து விட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது
  இதெல்லாம் ஜுஜுபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *