BREAKING NEWS
Search

கபாலி 100!

ஹேப்பி ‘கபாலி தீபாவளி’!

ckryjhxveaao0qa

ன்று நூறாவது நாள் விழா காண்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி.

இது சாதாரண வெற்றி அல்ல… இமாலய வெற்றி என்றால் இம்மியளவும் மிகையல்ல.

பா ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான கபாலியின் தலைப்பு தொடங்கி, அதில் நடித்த, அதற்காக பணியாற்றிய கலைஞர்கள் வரை அனைவருமே ஒரு ரஜினி படத்துக்கு உரியவர்கள் இல்லை. ஆனால் ரஜினி என்ற ஒற்றைப் பெயர் அத்தனைப் பேருக்கும் நட்சத்திர அந்தஸ்து தரப் போதுமானதாக இருந்தது.

படமும் அப்படித்தான். ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தப் படம் என்னவாகியிருக்கும் என்பதை பலரும் சொல்லிவிட்டார்கள்.

ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான கதைக் களம், அதற்கேற்ப திரைக்கதை அமைத்த ரஞ்சித்துக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்கிருக்கிறது.

கபாலியின் வெற்றி உலக சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. உலகின் எங்கோ ஒரு மூலையில் தயாரான தமிழ்ப் படம் ஒன்று, உலக அளவில் பேசப்படக் காரணமானவர் தலைவர் சூப்பர் ஸ்டார். அவரால் தமிழ் சினிமா, தமிழ் மொழி, தமிழர் என்ற இனம் இன்று உலகம் முழுவதும் மிகவும் பரிச்சயமான விஷயங்களாகிவிட்டன.

கபாலியின் நூறாவது நாளுக்கு இன்னொரு விசேஷம்… நீண்ட நாட்களுக்குப் பிறகு உண்மையாகவே திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய படம் என்ற பெருமை.

ஹேப்பி ‘கபாலி தீபாவளி’!

-என்வழி




2 thoughts on “கபாலி 100!

  1. Rajagopalan

    Still no proper updates about the collections officially.
    Reason known only to God n Mr Dhanu.
    All the Hindi movies collection are officially declared but why for tamil, they are not doing it?
    This is the reason people in north india are not recognising tamil movies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *