BREAKING NEWS
Search

கபாலியின் இன்னும் ஒரு சாதனை… 200 நாட்களைத் தாண்டியது!

C39clepWYAAbLa2

மிழ் சினிமாவில் கடைசியாக வெளியான சில்வர் ஜூப்ளி அல்லது 200 நாள் படம் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்…. ம்ஹூம்.. சட்டென்று நினைவுக்கு வராது.

காரணம் அப்படி எந்தப் படமும் ஓடவில்லை. 2007-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படம் 200 நாளைத் தொட்டது. அதன் பிறகு வெளியான அவரது படம் எந்திரன் 175 நாட்கள் ஓடியது. பின்னர் வெளியான கோச்சடையான், லிங்கா போன்றவை 100 நாட்களைத் தொடத் தவறின.

இப்போது ரஜினியின் பிரமாண்ட வெற்றிப் படமான கபாலி 200 வது நாளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது இந்தப் படம். மதுரை மணி இம்பாலா திரையரங்கில் கபாலி இன்னும் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டிக்கிறது. இப்போதும் 50 சதவீத பார்வையாளர்கள், வார இறுதியில் 80 சதவீதத ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது கபாலி.

மணி இம்பாலா தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தலைவர் படத்தின் இந்த சாதனையை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

-என்வழி




4 thoughts on “கபாலியின் இன்னும் ஒரு சாதனை… 200 நாட்களைத் தாண்டியது!

  1. ஸ்ரீகாந்த்.1974

    மிக்க மகிழ்ச்சி’ கபாலியின் சாதனை
    மேலும்,தொடரட்டும்.

  2. ஸ்ரீகாந்த்.1974

    கோச்சடையான் பற்றித் தெரியாது.
    ஆனால் லிங்கா 100வது நாளை
    எட்டியது.

  3. Rajagopalan

    Please confirm this news.
    Ticketnew Madurai website doesnt show Kabali.
    Really it is true?
    May be you will delete this post also…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *