BREAKING NEWS
Search

ஹலோ.. நான் வெட்டி இணைய போராளி பேசுகிறேன்!

ஹலோ.. நான் வெட்டி இணைய போராளி பேசுகிறேன்!

rajini-young-7

பொதுவாக ரஜினி படம் ரிலீஸ் ஆகப்போற சமயத்துல தமிழ்ப் போராளிகள் பொங்கி எழுறதும், அதுக்கு நம்ம பதில் எழுதுறதும் காலங்காலமா நடந்துகிட்டு வர்ற ஒண்ணு தான். அந்த மாதிரி பதிவுகளப் பாக்கும் போது முன்னாடிலாம் ரொம்ப கோவம் வரும்.  ஆனா அதுவே போகப் போக, அவிங்க அறிவாளித்தனமா கேக்குற கேள்விகள்லாம் சிரிப்பதான் வரவழைக்குது. இந்த தடவ அந்த நாயிங்கள கண்டுக்காம சைடு வாங்கி போயிருவோம்னுதான் ரொம்ப நாள அதப் பத்தி எதும்  பொங்காம இருந்தேன். திடீர்னு துப்பாக்கி பட வசனம் ஞாபகம் வந்துச்சி. வயித்தெரிச்சல்ல பொங்கி, வாய்க்கு வந்தத உளருற அந்த நாயிங்களே திரும்பத் திரும்ப ஒரு விஷயத்த சொல்ல வெக்கப்படாதப்ப நமக்கு என்ன?

பட ரிலீஸூக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. நாளையிலருந்து பாருங்களேன். ஒரு லிட்டர் பால குடுத்தா எத்தனை நைஜீரியா குழந்தைங்களோட பசியப் போக்கலாம், முதல் ஷோ டிக்கெட் எடுக்குற ஐநூறு ரூவா காசுல எத்தனை குடும்பங்களோட பசியப் போக்கலாம்னு நிறைய பேர் சர்வே எடுத்து போடுவாய்ன்க. அதாவது கட்டவுட்டுக்கு ஊத்துற அந்த பால வச்சித்தான் பலபேரு பசிய போக்கலாம்னு இருப்பானுங்க. ஆனா பாருங்க இந்த பாழா போன ரசிகருங்க அத எடுத்து கட்டவுட்டுக்கு ஊத்தி வேஸ்ட் பன்னிடுறாய்ங்க.

மிஸ்டர் போராளீஸ்… நீங்க 50 ரூவா குடுத்து முருகன் இட்லி கடையில ஒரு செட்டு இட்லி சாப்புடுறதுக்கு பதிலா ஒரு சாதாரண ஹோட்டல்ல ஒரு செட்டு இட்லி பத்து ரூவான்னு சாப்டீங்கன்னா ஒரு 40 ரூவா சேவ் பன்னி அத வச்சி நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி போடலாம். மாசம் ஒரு தடவ எவன் மண்டையாவது கழுவி ட்ரீட்டுன்னு ஒரு பாருக்கு அழைச்சிட்டு போய் பத்தாயிரம் இருவதாயிரம்னு செலவு பண்ணி, மூக்கு எது வாயி எதுன்னு தெரியாத அளவுக்கு குடிக்கிறீங்களே.. அத நிறுத்துனா மாசம் பத்து குடும்பங்களுக்கு சாப்பாடு போடலாம். இவ்வளவு ஏன்.. நியூ இயர் அன்னிக்கு.. அதுவும் ஆங்கிலப் புத்தாண்டு அன்னிக்கு நீங்க மெரினா பீச்சுல உடைச்சி போடுற பீர் பாட்டில்களை கம்மி பன்னாலே அந்த காச வச்சி ஒரு ஊருக்கே சாப்பாடு போடலாம்.

ரஜினி படத்துக்கு செலவு பன்ற காச வச்சோ, கட்டவுட்டுக்கு ஊத்துற பால வச்சோதான் அவங்க பசியப் போக்கனும்னு இல்லை. இதே மாதிரி நீங்க புடுங்குற ஒவ்வொரு தேவையில்லாத ஆணியையும் கம்மி பன்னாலே நைஜீரியா மட்டும் இல்ல.. உலகத்துல உள்ள அனைத்து ஏழைங்க பசியையும் வறுமையையும் போக்கிடலாம்.

வெள்ள நிவாவரணத்துக்கு அவர் கொடுத்த பணமும் நிவாரண பொருட்களையும் சாமி கணக்குல சேத்துட்டீங்க. ரைட்டு. இப்ப உங்க கணக்குப்படி அவர் எதுவுமே குடுக்கலன்னு வச்சிக்குவோம். வெள்ளத்துக்கு ஒண்ணும் குடுக்காத ரஜினி படத்த ஒழிக்கணும்.  அதான உங்க பாலிசி. ஒழிக்கலாம். அப்ப நாலு நாள் தூங்கமா முழிச்சி வேலை பாத்த சித்தார்த் படத்த நீங்க மெகா ஹிட்டாக்கிருக்கனுமே. தமிழன் அல்லாத ரஜினி படத்த ஓடவிடக் கூடாது . கரெக்டா சொன்னீங்க. அப்ப மூச்சுக்கு மூச்சி “நான் தமிழன்ய்யா.. தமிழன்ய்யா” ன்னு சொல்லிக்கிட்டு திரியிர டி.ஆர் படத்தையும் சீமான் படத்தையும் சரித்திர வெற்றி பெற வச்சிருக்கனுமே…

இதெல்லாம் பரவால்ல.. நீங்க எப்பவும் பண்றது. பழகிப்போச்சு. ஆனா கபாலிய ஒழிக்கிறதுக்காக திருட்டு விசிடி குரூப்புக்கு உங்க ஆதரவ குடுத்தீங்க பாத்தீங்களா? அக்காவ வச்சி கடைய வாங்குன வீரபாகுவெல்லாம் உங்க ராச தந்திரத்துக்கிட்ட தோத்து பொய்ட்டாண்டா.. இதுல அந்த வெளக்கு புடிக்கிற வேலைய பெருமையா வேற சொல்லிக்கிறீங்க.

எதுக்காக இந்த விளக்கு புடிக்கிற வேலைன்னு கேட்டா, கபாலி படத்துக்கு டிக்கெட்  விலை ஏத்திட்டாங்களாம். அதுக்காக சார் கோவப்பட்டுட்டாராம். நண்பர் ஒருத்தர் சொன்ன மாதிரி  டாஸ்மாக்க ஒழிக்கனும்னு கள்ளச்சாராயம் காய்ச்சி விக்கிறவய்ங்களுக்கு ஆதரவு குடுக்குற மாதிரி இருக்கு.

சரி மொதல்ல ஏன் இந்த டிக்கெட் விலையெல்லாம் இப்டி எக்குதாப்பா ஏறுச்சி? பத்து வருஷத்துக்கு முன்னால இப்படி ஒரிஜினல் டிக்கெட் விலைய விட ஐந்து மடங்கு பத்து மடங்கு ஏத்தியா வித்தாய்ங்க? என்னிக்கு இந்த திருட்டு விசிடி காலம் ஆரம்பமாச்சோ அப்பவே டிக்கெட் விலையும் அதிகமாக ஆரம்பிச்சிது. உங்களுக்கு தெரிஞ்சி கடைசியா நூறு நாள் ஓடுன படம் எது? அம்பது நாள் ஓடுன படம் எது? இப்பல்லாம் ஒரு புதுப் படம்னா அதுக்கு மவுசு ஒரே வாரம் தான். ரெண்டு நாள்ல ஆண்ட்ராய்டு ஃபோன் வச்சிருக்கவன் எல்லார் கையிலயும் படம் போய் சேந்துருது. ஒரு வாரத்துக்குள்ள தயாரிப்பாளர் போட்ட பணத்த எடுக்கணும். வேறென்ன வழி.. இது தான்!

இணையத்துல திருட்டு ப்ரிண்ட் ரிலீஸ் ஆனா என்ன…படம் நல்லாருந்தா எல்லாரும் தியேட்டருக்கு போவான்ங்குறான் ஒருத்தன். இதே வாய வச்சிக்கிட்டுதான் இந்த நாயிபோன மாசம் பூரண மதுவிலக்கு வேணும்னு கேட்டுச்சி. எதுக்கு பூரண மதுவிலக்கு? இவன் லாஜிக்படி குடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறவன் குடிக்க மாட்டான்ல?

சரி… டிக்கெடி விலை ஏறுறது உனக்கு புடிக்கல. நீ பாக்காத. இல்லையா அடுத்தவனையும் பாக்காதன்னு சொல்லு. அதென்ன திருட்டு ப்ரிண்ட்ல பாருன்னு சொல்றது. அவர வெறுக்குற உங்களாலயே அவர் படத்த பாக்காம ஒதுக்க முடியாதப்ப.. ஏண்டா நொன்னை.. இத்தனை வருஷமா அவர் ரசிகர்களா இருக்கவங்க எத்தனை ரூவா வேணாலும் குடுத்து பாக்கணும்னு நினைக்கிறதுல என்னடா தப்பு? எங்க காசு.. எங்க தலைவர் படம்.. உனக்கென்னடா நோகுது?

எதோ இவய்ங்க மட்டும்தான் குடும்பம் குட்டியெல்லாம் நல்லா பாத்துக்குற மாதிரியும், ரசிகர்களெல்லாம் அவங்கள நடுத்தெருவுல விட்டுட்டு வேலைவெட்டி இல்லாம நடிகருங்க வீட்டு வாசல்லயே காத்துக்கிட்டு இருக்க மாதிரியும் நினைச்சிட்டு இருக்காங்க. குருட்டு நாயே.. வீட்டுக்குள்ள லாப் டாப்புலயே உக்காந்துட்டு இருக்காம அக்கம் பக்கம் பாரு. இந்த மாதிரி ரசிகனா சுத்திக்கிட்டு இருக்கவன்லாம் உன்னவிட நூறு மடங்கு அவன் ஃபேமிலிய சந்தோஷமா வச்சிருப்பான்.

என்னோட நெருங்கிய நண்பர் ஒருத்தருக்கும் எனக்கும் முந்தாநாளு செம வாக்குவாதம். ஆடி, பென்ஸ், Rolls Roys ன்னு மூணு கார் ஃபோட்டோ, நாலாவதா ஒரு லாரில ஒரு கும்பல் தொங்கிட்டே போறத போட்டு, நடிகர்கள் கார்ல போறாங்க… ஆனா ரசிகர்கள் அவங்க படத்த பாக்க இப்படி தொங்கிட்டு போறாங்கன்னு.

இது என்ன பணத்துக்காகவா? நமக்கு புடிச்ச ஒரு விஷயத்த, அடுத்தவங்களுக்கு தொல்லை இல்லாத ஒரு விஷயத்த (வயித்தெரிச்சலை தவிற) நம்மாள முடிஞ்ச ஒரு விஷயத்த, யாரோட கட்டாயப்படுத்துதலும் இல்லாம நாமளே சந்தோஷமா செய்யிறோம். இதுல பணம் எங்கருந்து வந்துச்சி?

பட ரிலீஸான முதல்நாள் கொண்டாட்டங்களையும், கட்-அவுட் பாலாபிஷேகங்களை மட்டுமே பாக்குற இந்த முட்டாள் போராளிக் கூட்டம் அதே மன்றங்களால மக்களுக்கு செய்யிற உதவிகள எங்கயாவது சொல்றாய்ங்களா? ரசிகர்கள், ரசிகர் மன்றங்களெல்லாம் முதல்ல என்ன? ஒரே ரசனையுடைய மக்களோட குழுமம். தனிப்பட்டு நாம ஒரு விஷயத்த செய்யிறதுக்கும் நாலு பேர் சேர்ந்து செய்யிறதுக்கும் வித்யாசம் இருக்கு.

“எனக்கு இன்னிக்கு பொறந்த நாளுங்க.. நா இன்னிக்கு நாலு பேருக்கு உதவி செய்யிறேன்.. நீங்களும் நாலு பேருக்கு உதவி செய்யிங்க” ன்னு ஒருத்தன்கிட்ட கேட்டா…”உன் பொறந்த நாளுக்கு நான் ஏண்டா உதவணும்”ன்னு காரித் துப்பிட்டுப் போயிருவான்.

அதே, “பாஸூ… இன்னிக்கு தலைவர் பர்த்டே… வாங்க எதாவது பண்ணலாம்ம்” ன்னு கூப்டா அப்ப அவனுக்கும் உதவுற ஒரு எண்ணம் இருக்கும். போரூர்ல கட்டிடம் இடிஞ்சி விழுந்தப்ப முதல் முதலா ஒரு ரஜினி ரசிகர் மீட்புக் குழுவினருக்கு ஜூஸ் வாங்கி கொடுக்க ஆரம்பிச்சிதான் எல்லாரும் சேந்து உதவி செய்ய ஆரம்பிச்சாங்க. சென்னை வெள்ளத்தின் போது அதே மன்றங்கள் மூலமாகத்தான் பல கோடிரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அதெல்லாம் அம்னீஷியா வந்து நீங்க மறந்துட்டீங்க. ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் எத்தனை நலத்திட்ட உதவிகள், எத்தனை ரத்த தானங்கள்? இது ரஜினி மன்றங்களை மட்டும் சொல்லல. பெரிய நடிகர்கள் சிலரின் மன்றங்கள் எல்லாத்துலயுமே இந்த செயல்பாடுகள் நடந்துக்கிட்டு தான் இருக்கு. உங்களை மாதிரி பொறாமை பெரு நோயாளிகளுக்கு கண்ணும் தெரியல, காதும் கேக்கல…

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள எதுக்கு கொண்டாடுறோம்? நரகாசுரன் கதைகள்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பண்டிகைங்குறது மக்களை ஒண்ணு சேர்க்கவும், மகிழ்ச்சியா இருக்கவும்தான். எனக்கெல்லாம் முன்னாடி தீவாளிக்கு மட்டும்தான் புது ட்ரஸ்ஸே கிடைக்கும். அடுத்த ஒரு வருஷத்துக்கு எந்த ஊருக்கு போனாலும் எந்த கல்யாணத்துக்கு போனாலும் அந்த ஒரு ட்ரஸ்ஸ போட்டு தான் அழைச்சிட்டு போவாங்க. என்னைப்போல தீபாவளிப் பண்டிகை இல்லைன்னா நிறைய பேருக்கு புதுத் துணிங்குற வேலையே இருக்காது.

இந்த தீபாவளி பொங்கல் மாதிரி ரஜினியும் மக்கள் கூட்டத்த ஒண்ணும் சேக்குற ஒரு பண்டிகை மாதிரி. தமிழ்நாட்டுல ரஜினி படம் வந்தா மட்டுமே தியேட்டருக்குப் போற எத்தனையோ குடும்பங்கள் இருக்கு. வேற எந்த படத்துக்கும் நம்பி  குடும்பத்த அழைச்சிட்டு போகவும் முடியல. அப்டி வேற படங்களுக்கு கூப்டா வர அவங்களுக்கும் பிடிக்கிறது இல்லை.

new-1

வழக்கமா நீங்க ரஜினி படங்களை குறை சொல்ல என்ன சொல்லுவீங்க? வயசாயிருச்சி.. இனிமே அமிதாப் மாதிரி வயசான கெட்டப்புல நடிச்சாதான் நல்லாருக்கும்பீங்க. அப்டி இந்த படத்துக்கு சொல்ல முடியல. படம் ரிலீஸாகுறப்போ அரசியல் பேசி படத்த ஓட வைப்பார்ம்பீங்க. இதுவரைக்கும் அவர் வாயவே திறக்கல.  பி.வாசு, ரவிக்குமார் போன்ற இயக்குநர்கள குறை சொல்லுவீங்க. ரஞ்சித்த ஏற்கனவே போராளி குரூப்ஸ் accept பண்ணிட்டாதால இந்தப் படத்துல ரஞ்சித்தையும் குறை சொல்ல முடியல. பாட்டு மொக்கைன்னு சொல்லுவீங்க. ஆனா மக்கள் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன நீங்க ஓட்ட மாட்டீங்க. அதுனால பாட்டையும் குறை சொல்ல முடியல.

வேற என்னதான் செய்வீங்க. எதாவது சொல்லியே ஆகனும்ங்குற frustration ல திருட்டு வீடியோ இணைய தளத்துக்கு விளக்கு புடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே பையா… கண்ணு அது திருட்டு ப்ரிண்ட் கண்ணு.. அவனுங்க திருடனுங்க.. நம்ம போராளிங்க…. அதயெல்லாம் ஆதரிக்கலாமா? பக்கத்து வீட்டுக்காரன் நகைய ஒரு நாயி திருடிட்டு ஓடிருச்சின்னா ஓடிப்போய் புடிச்சி நாலு அடி அடிக்காம இருந்தாலும், இன்னும் நாலு பேர் வீட்டுல சேத்து திருடுன்னு ஊக்கப்படுத்தக் கூடாது.

இதுல இன்னொரு வித்யாசமான பொங்கிகள் ஏன் கபாலி படத்துக்கு மட்டும் கேக்குறீங்க.. ஏன் மத்த படத்துக்குலாம் இந்த திருட்டு விசிடி கும்பல எதிர்த்து கேக்க வேண்டியது தானே?ன்னு எதிர்கேள்வி கேட்டு அவய்ங்கள நியாயப் படுத்திக்கிறாய்ங்க.  யாருக்கு தலை வலிக்குதோ அவன் ஆஸ்பத்திரிக்கு போறான். ஏன் நீ தான் ரொம்ப தைரியமான ஆளாச்சே.. மத்த படத்துக்கெல்லாம் நீங்க போராடுறதுதானே? ஒரு தப்பை எப்போதாவது தட்டிக்கேட்கிறார்கள் என்பதற்காகவும், அந்த தப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்காகவும் அது சரியாகிவிடாது.

ரஜினி தமிழ் சினிமாவின் ஒரு அடையாளம். தமிழ்ப் படங்களை ‘முதன் முதலாக’ என உலகத்தின் பல மூலைக்கும் எடுத்துச் சென்றவர்.  போன வருஷம்தான் ஒருத்தன் இவரப் பாத்து ‘உங்களுக்கு மார்க்கெட் இல்லை’ ன்னான். இன்னிக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் அவர் பட ரிலீஸூக்கு official holiday விடுற அளவு இருக்கு. இப்ப அவர் மார்க்கெட் என்னன்னு உலகத்துக்கே தெரிஞ்சிருக்கு!

ஆக போராளிகளே.. இன்னும் ரெண்டு நாள்ல தமிழ் சினிமாவோட ஒரு முக்கியாமான நாள். ஒண்ணு வந்து எஞ்ஜாய் பன்னுங்க. இல்லைன்னா பேயாம இருங்க. கொண்டை தெரியிற மாதிரி கேவலமா பொங்காதீங்க. நீங்க கேக்குற கேள்விக்கெல்லாம் சிரிப்புதான் வருது!

முத்து சிவா
6 thoughts on “ஹலோ.. நான் வெட்டி இணைய போராளி பேசுகிறேன்!

 1. Venky

  It is just reflecting all the fans’ mind voice..kudos to the writer.
  Lets celebrate our festival..2 more days to go 🙂

 2. Rajagopalan

  boss namma kabaliya celebrate pannalam.
  evanugala kanduka vendam…

  _________

  அப்படி விட்டதனாலதான் நாய்ங்க கண்டதையும் பேசுதுங்க
  விட்டு வெளுக்கணும் இனி!

  -Vino

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *