BREAKING NEWS
Search

காலா.. கரிகாலன் ஆட்டம் ஜூன் 7-ல் ஆரம்பம்!

காலா கரிகாலன் ஆட்டம் அதிரடி ஆரம்பம்!


ஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படம் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘காலா’ என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். ‘கரிகாலன்’ என்ற தலைப்பின் சுருக்கமே ‘காலா’.

‘காலா’ படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருக்குமே ரஜினியுடன் இதுதான் முதல்படம்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

இதனிடையே ‘காலா’படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய அதிகாரிகள், ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்தனர். தற்போது தமிழ் சினிமா வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் ‘காலா’ திரைப்படம் ஜூன் 7-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்று தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.




3 thoughts on “காலா.. கரிகாலன் ஆட்டம் ஜூன் 7-ல் ஆரம்பம்!

  1. Prssad

    Release must be postponed by a week by taking into consideration the huge Muslim fan base thalaivar has, how a producer failed to take note of this? It will have an impact in the world wide Collection.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *