BREAKING NEWS
Search

உயர்நீதி மன்ற அழப்பிதழில் திரு போய் ஸ்ரீ வந்தது ஏன்? எப்படி? – கி வீரமணி கேள்வி

உயர்நீதி மன்ற அழப்பிதழில் திரு போய் ஸ்ரீ வந்தது ஏன்? எப்படி? – கி வீரமணி கேள்வி

சென்னை : 150 ஆண்டு காணும் சென்னை உயர் நீதி மன்ற விழா அழைப்பிதழில் ‘திரு’ என்ற தமிழ்ச் சொல் போய் ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருத் சொல் வந்தது வந்தது ஏன்? எப்படி ? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை உயர் நீதி மன்றத்திற்கு 150 ம் ஆண்டு விழா இன்று தலைநகர் சென்னையில் மிகவும் சிறப்புடன் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு நமது நல்வாழ்த்துக்கள்.

100 ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் காணப்படாமல் இருந்த சமூக நீதிக் கொடி இன்று தான் பட்டொளி வீசிப் பறக்கின்றது. தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதன் கருத்துச் செறிந்த தன்னலமற்ற போராட்டங்களும் தான் அந்த சமூக நீதிக் கொடி ஏற்றப்பட்டதற்கும், அது தலை தாழாமல் பறப்பதற்கும் காரணம் என்பதை, பலனை அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாய வழக்குரைஞர்கள், நீதிபதிகள் எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளனர் என்பது
கேள்விக் குறியே என்ற போதிலும், “எம் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற மூதுரைக்கேற்ப, நன்றி என்பது பயன் பெற்றோர் காட்டவேண்டிய பண்பு. உதவியோர் எதிர்பார்த்தால் அது சிறுமைக்குணம் என்பதே தந்தை பெரியார் தம் அறிவுரை.

இந்தியாவின் இதர மாநிலங்களில் உள்ள உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றத்திலும் இன்னமும் சமூக நீதிக் கொடிகள் – இங்குள்ளதைப் போல் கம்பீரமாகப் பறக்கவில்லை என்பது கவலைக்குரிய, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதொரு செய்தியாகும்.

இன்னமும் ஏராளமான வழக்குகள் ஏன் தேங்கி உள்ளன? (மற்ற மாநிலங்களின் நீதிமன்றங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்பது ஒரு ஆறுதல் என்றாலும் கூட) தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா.

அது மட்டுமல்லாமல், அரசுகளின் அதீதச் சட்டங்கள் – நடவடிக்கைகளிலிருந்து அப்பாவி மக்களையும், நிறுவனங்களையும், ஜனநாயக மரபுகளையும் காப்பாற்றும் மக்களின் கடைசி நம்பிக்கையாக உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் (சில நேரங்களில் மாறுபட்டும் இருக்கலாம்) தான் என்பதால் வழக்குகளும் பெருகிடும் நிலை உள்ளது.

அழி வழக்குகள், அக்கப்போர் வழக்குகளைத் தடுத்து, அவை உண்மையான பொதுநல வழக்குகள் அல்ல என்றும் நம் நீதியரசர்கள் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூட வரவேற்கத்தக்கதே.

தற்போதுள்ள, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி மாண்பை இக்பால் அவர்கள் மட்டும் தேர்ந்து உணர்ந்து நீதி பரிபாலனம் செய்வது, நமது நீதியரசர்களும் அந்த மாண்பை உயர்த்துவதும் மிகவும் சிறப்பான அம்சங்கள் ஆகும்.

ஸ்ரீ  நுழைந்தது எப்படி?

இந்தப்படி நடக்கும் பொன் விழா அழைப்பிதழில் “ஸ்ரீ” (sri) என்பது எப்படி நுழைந்தது ? திரு என்பது தான் தமிழக அரசின் ஆணைப்படியான நடைமுறை. அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக வந்தவுடன் போட்ட ஆணைகளில் இது முதலாவது ஆகும்.

தமிழ்நாடு அரசு நிதி உதவி செய்து, தமிழக முதல் அமைச்சரும் கலந்து கொள்ளும் ஒரு முக்கிய விழாவில் ஏன் தமிழ் புறக்கணிக்கப்பட வேண்டும் ? புரியவில்லையே. இதற்கு மூல காரணம் யார்?

தலைமை நீதிபதி அவர்கள் இதனை விசாரித்து இனி வகுக்கும் நிகழ்ச்சிகளில் இது போன்று நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-என்வழி செய்திகள்
8 thoughts on “உயர்நீதி மன்ற அழப்பிதழில் திரு போய் ஸ்ரீ வந்தது ஏன்? எப்படி? – கி வீரமணி கேள்வி

 1. குமரன்

  ///தற்போதுள்ள, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி மாண்பை இக்பால் அவர்கள் மட்டும் தேர்ந்து உணர்ந்து நீதி பரிபாலனம் செய்வது///

  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முதலமைச்சரை (ஜெயலலிதாவை) நேரில் சென்று அழைத்தது குறித்து தில்லியிலும் மும்பையிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் இருக்கும் வழக்கறிஞர்கள் “தலைமை நீதிபதி இப்படிச் செய்வது மரபை மீறிய செயல், நீதிபதிகளின், தலைமை நீதிபதியின் மான்புக்குக் குந்தகம் விளைக்கும் செயல்” என்று வருந்துவதுதான் உண்மை. வீரமணிக்கு இது தெரியாதது விந்தை.

 2. குமரன்

  இப்போது இந்த நிகழ்ச்சி லைவாக webcast ஒலிபரப்பு செய்யப் படுகிறது.

  http://www.hcmadras.tn.nic.in/

  தற்போது ஹிந்தியில் “முசாபிரு ஹு யாரோ ” பாடலை பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடிக் கொண்டிருக்கிறார் (!) (இவர் விஜய் டி.வி. நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி என் கடவுள் என்று கூறியவர்)

 3. மிஸ்டர் பாவலன்

  ‘தமிழ், தமிழ்’ என எழுதுகிறார்கள் .. பாராட்டுகிறேன்.
  ஆனால் இவர்கள் நடத்துவது English Medium schools,
  colleges, universities. பிள்ளைகள் படிப்பது convent schools,
  America போன்ற வெளிநாடுகளில். (வீரமணியின் மகளை
  அமெரிக்காவில் ஒரு FeTNA மாநாட்டில் பார்த்திருக்கிறேன்.)

  வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

  -=== மிஸ்டர் பாவலன் ==-

 4. தினகர்

  “We understand in English than Tamil” இது யாருக்காக சொன்னாரோ தெரியவில்லை, ஆனால் அவரது ஆங்கில புலமைமையை விட தமிழ்ப்புலமை நன்றாக இருக்கிறது என நினைக்கிறேன். வீடியோவில் 1.57:00 முதல் கேட்டு பாருங்கள்.

 5. குமரன்

  நமது மதிப்பிற்குரிய அரசுத் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் சொன்னதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அவர் பேசும் தமிழ், ஆங்கிலம் இவற்றை “வெகு எளிதாகப்” புரிந்து கொள்ளலாம். ரசித்துச் சிரிக்கலாம்!!!

  நிகழ்ச்சியின் இறுதிப்பகுதிகளில் அவர் தன இருக்கையில் அமராமல், யாருக்கெல்லாம் மாலை மரியாதை செய்யப் படுகிறதோ அவர் பின்னால் போய் நின்று போட்டோவுக்குப் போஸ் கொடுக்கும் காட்சிக்கு மொழியே தேவை இல்லை!

  சில இடங்களில் “இஸ்கூல் பிள்ளைகள்” போல தனது காற்சட்டையை இழுத்து விட்டுக் கொள்ளும் காட்சிக்கும் மொழி ஒரு பொருட்டல்ல! (காண்க: 4 :10 :56 )

 6. மிஸ்டர் பாவலன்

  குமரன் அவர்களே:

  இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?

  வீடியோவில் நீங்கள் இருந்தால் அந்த நேரத்தைத் தரவும். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ==-

  PS : ‘என் கருத்து’ ஆட்சேபிப்பதால் உங்களுக்கு title, intro தரவில்லை, sorry.

 7. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவுக்கு நான் பெரியவன் இல்லை!

  திருவிளையாடல் படைத்துத் தருமி நக்கீரனைப் பார்த்துக் கூறுவார்:
  சிலர் பாட்டெழுதிப் பெயர் பெறுவார்,
  சிலர் குற்றம் கண்டு பிடித்தே பெயர் பெறுவார்,
  நீர் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் !

  ஆக….
  நான் எந்த வகையைச் சேர்ந்தவன் என்பது எனக்கே தெரியும்!!
  உங்களுக்கும் அது தெரியும்!!!

 8. enkaruthu

  கீ.வீரமணி அவர்கள் மையமாக கேட்ட கேள்வியே திரு விற்கு பதில் ஸ்ரீ என்று சரியா என்றுதான்.அந்த கேள்விக்கு பதில் சொல்வதை விட்டு விட்டு இக்பால் பற்றியும்(இவர் கெட்டவராகவே இருந்தும் வீரமணி அவர்கள் சொல்லிவிட்டு போகட்டுமே) எதற்காக பேச வேண்டும்.சரி வீரமணியை விடுங்கள் ஒரு தமிழனாக நான் கேட்கிறேன் எதற்காக திரு விற்கு பதில் ஸ்ரீ போட்டார்கள்.அதற்கான பதிலை தாருங்கள்.அதை விட்டு தருமி நக்கீரன் போன்ற திசை திருப்பும் வேலை எதற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *